Friday, October 3, 2014

ஆழமான எண்ணங்கள் அடி மனதில் கொண்டிருக்கும் - கடல் I

 

ஆழமான எண்ணங்கள் அடி
மனதில் கொண்டிருக்கும்
அறியாத பிள்ளை போல
அலைமோதிக் கொண்டிருக்கும்

ஆதவனை கண்டால்ஆனந்தம் பொங்க
அலைக்கரம் நீட்டி ஆர்ப்பரிக்கும்
விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவு- வந்தால்
கண்கள் மூடாது கதை பலபேசும்

நீலவானின் நிறத்தைக் கொஞ்சம்
 வாங்கித்தன்னை போர்த்திக் கொள்ளும்
வானம் என்தன்  மானம் காக்கும்
என்று தன்னை தேற்றிக் கொள்ளும்

வானம் அழுதால் வையம் சிரிக்கும்
என்று எண்ணி தாங்கிக் கொள்ளும்
தன்னைக்காண விண்ணும் ஒருநாள்
மண்ணில் தோன்றும் என்றுமகிழும்

அடிவானம் தன்னை தொட்டுப்
பார்க்கவலை எம்பிஎம்பிக் குதிக்கும்
முயன்று பார்த்தும் முடியவில்லை
என்றுஎண்ணி ஏங்கித் தவிக்கும்

இருந்தும்கூட ஓயவில்லை 
இன்னும் அந்த அலையும் -தான்
கொண்ட எண்ணம் தன்னில்
நின்றும்  மாறவில்லை என்றும்
 

ஒருதலையாய் காதலிக்கும்-கடல்
ஒற்றுமையாய் வாழ்ந்திருக்கும்
தன்காதல் வெல்லும் என்று
எண்ணி காலம்எல்லாம் காத்திருக்கும்  


32 comments:

  1. வானம் அழுதால் வையம் சிரிக்கும்.
    அனைத்துமே அற்புதமான வரிகள்,
    அருமை சகோதரி எனது பதிவு ''என்உயிர்த்தோழி'' காண்க,,,,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!முதல் வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள்...!

      Delete
  2. https://www.youtube.com/watch?v=Lj5E7__Huas
    your song on SAYEE CHARANAM HERE.

    SUBBU THATHA

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தாத்தா ! தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
      வாழ்க வளமுடன ...!

      Delete
  3. பொங்கி வந்திருகிறது காவியகவியின் கவிதை !!
    கடலுக்கு வான் மேல் காதல் , அதுவும் ஒருதலை காதல் !!!
    அதுவும் காத்திருக்கிறது காதலியென!!! படங்களும், வரியும் வழக்கம் போல் மனதை கொள்ளை கொள்கின்றன:)) இது cruise ட்ரிப் தாக்கத்தில எழுதினது தானே!:)) இனியாச்செல்லம் தொடரட்டும் உங்க கவிவெள்ளம்:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கண்டு பிடித்து விட்டீர்களே. உண்மை தான் அம்மு அமைதியாக ஏனை வரவேற்று பத்திரமாக வழியனுப்பி வைத்த நன்றிக் கடன் தான். ரொம்ப பயந்திட்டே போனேன் இல்ல அதான் அம்மு நன்றிடா செல்லம். வாழ்த்துக்கள் நலம் பல பெற ...!

      Delete
  4. கடலொன்றே ஆழமோ?உன் கற்பனை மேலாம்!
    இடமில்லை யார்க்குமினி இங்கு!

    எத்துணை சிறப்பு மிக்க கற்பனை!
    கவிவரிகள் அற்புதம்!
    தொடருங்கள்!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிஞர் அம்மா எப்பிடி இருக்கீங்க. அப்படியா சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி தோழி!
      உந்துதல்தரும் உம்வார்த்தையில் வரிசையாய்
      வடிப்பேன் ஆயிரம் கவிதைகள்.
      மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!
      வாழ்க வளமுடன் ...!
      கவிதைகள்

      Delete
  5. படமும்,கவிதை வரிகளும் அருமை அருமை. வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. //வானம் அழுதால் வையம் சிரிக்கும்//
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. சகோதரி இனியா!!!
    ஆழமான எண்ணங்கள் அடி
    மனதில் கொண்டிருக்கும்
    அறியாத பிள்ளை போல
    அலைமோதிக் கொண்டிருக்கும்//

    அதுபோல உங்கள் கவி மனதிலிருந்து கவிஅலை வெளியில் வந்து ஆர்பரிக்கின்றது! ஆஹா நாங்கள் அதில் நனைகின்றோம் ரசித்து!

    படங்கள் அருமை சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! ஆழ்ந்து ரசித்தமைக்கும் வருகைக்கும்.

      Delete
  8. அருமையான கவிதை...
    எழுதுகின்ற பாணி மெருகேறியிருக்கிறதே ...
    வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் கருத்து எப்போதும் எனக்கு ஊக்கம் தரும்படியாகவே இருக்கும். வாழ்த்துக்கள் சகோ....!

      Delete
  9. அன்புள்ள கவிஞர் இனியா அவர்களுக்கு,
    வணக்கம். ‘ஆழமான எண்ணங்கள் அடி மனதில் கொண்டிருக்கும்’ கவிதை நன்றாக இருக்கிறது.
    அடிவானம் தன்னை தொட்டுப்
    பார்க்கவலை எம்பிஎம்பிக் குதிக்கும்
    முயன்று பார்த்தும் முடியவில்லை
    என்றுஎண்ணி ஏங்கித் தவிக்கும்

    இருந்தும்கூட ஓயவில்லை
    இன்னும் அந்த அலையும்
    தங்களின் எண்ண அலை எழுத்தில்தெரிகிறது... அருமையான கவிதை
    வாழ்த்துகள்.

    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.
    -மாறத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! தங்கள் வருகைக்கும்இனிய கருத்துக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். தொடர வேண்டுகிறேன். தொடர்கிறேன்.

      Delete
  10. சாயி சரணம் என்று இனியா பாட்டமைத்து
    சுப்பு தாத்தா மோகன ராகத்தில் இசை அமைத்து
    இருக்கும்
    பாடலை,
    இங்கும் கேட்கலாம்.
    www.menakasury.blogspot.com

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத் தாத்தா நலம் தானே. தங்கள் வரவிலும், அழகாக மெட்டிசைத்து பாடி என் பாட்டை மெருகேறவைப்பதையும் இட்டு மிகவும் மகிழ்கிறேன். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை தாத்தா தங்கள் கருணைக்கு அளவில்லை. ஆண்டவன் அருள் நிச்சயம் தங்களுக்கு என்றும் கிட்டும்.மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்!

      Delete
  11. அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். மேலும் தொடர வேண்டுகிறேன். தொடர்கிறேன்.

      Delete
  12. அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! தங்கள் வருகைக்கும்இனிய கருத்துக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். மேலும் தொடர வேண்டுகிறேன். தொடர்கிறேன்.

      Delete
  13. ஒவ்வொரு வரியும் அருமை சகோ. அதுவும் அந்த வரிகளுக்கேற்ப படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! தங்கள் வருகைக்கும்இனிய கருத்துக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். மேலும் தொடர வேண்டுகிறேன். தொடர்கிறேன்.

      Delete
  14. வணக்கம்
    அம்மா..

    ஒவ்வொரு வரிகளும் அற்புதம்... கற்பனைத் திறன் கண்டு அகம் மகிழ்ந்தது...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வந்துவிட்டீர்களா எங்கே காணோம் என்று பார்த்தேன்.
      மிக்க நன்றி ரூபன்! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  15. “நீலவானின் நிறத்தைக் கொஞ்சம்
    வாங்கித்தன்னை போர்த்திக் கொள்ளும்“
    கற்பனை அபாராம்!
    கடலில் சென்றால் மீன் கிடைக்கும் ..
    மூழ்கினால் முத்து கிடைக்கும்...!
    நீங்கள் போய்க் கடலையே கொண்டுவந்து விட்டீர்களே....!
    கவிதையாய்......
    அருமை அருமை
    கவிஞரே.......
    இன்னும் எப்படிப் பாராட்ட......ம்ம்!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!அப்போ ட்ரிப் போனது வேர்த் தான் இல்லையா கடலையே கொண்டு வந்துவிட்டேன் இல்ல.\\ அருமை அருமை
      கவிஞரே.......
      இன்னும் எப்படிப் பாராட்ட......ம்ம்!!! /// இதை விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள். மட்டற்ற மகிழ்ச்சி சகோ எல்லாம் தாங்கள் அனைவரும் தரும் ஊக்கமே. மிக்க நன்றி சகோ இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வளர்கிறது சகோ. பார்க்கலாம் இனி ஆண்டவன் சித்தம் எப்பிடியோ.....அது போல் நடக்கட்டும்.

      Delete
  16. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.