Saturday, October 25, 2014

திருடுவது தப்பில்லையா இதயங்களே ஆனாலும்

     
நிலைக்குமா இம்மகிழ்ச்சி 
நிலைத்தால் எதுவரை ?

நீ அழத் தொடங்கும் வரை

crying gif photo: Crying Fairy cartoon_354.gif
வாழ்வு ஏது வெந்து போனால்
தாழ்வு நீளும் நொந்து போனால்
அழவைப்பவரை 
அலட்சியம் செய் லட்சியம் வெல்ல



நகைப்பதற்கே நகைசுவைகள்  
நெஞ்சம் புகைந்தால்
சுவைக்காது பகைக்கும் 


   
 

உதிருங்கள் வார்த்தைகளை 
நெருடும்படியாக இல்லாமல் 
வருடும்படியாக 
அவை
வளர்க்கும் நல்லுறவுகளை 



 திருடுவது தப்பில்லையா 
இதயங்களே ஆனாலும்






49 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக அவை
    வளர்க்கும் நல்லுறவுகளை
    அழகியபடங்களுடன் அழகிய வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக அவை
    வளர்க்கும் நல்லுறவுகளை
    அழகியபடங்களுடன் அழகிய வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன் !

      Delete
  3. வாழ்வு ஏது வெந்து போனால்
    தாழ்வு நீளும் நொந்து போனால் ///

    குட்டிகளின் படங்களும் குட்டிக் குட்டிக் கவிதைகளும் இனிமை, இனிமை.

    திருடுவது தப்பில்லையா
    இதயங்களே ஆனாலும்..//

    என மறைமுகமாக இக்காலகடத்தின் நிகழ்வுக்கும் ஒரு இதுவாக( ம்.. எதுவாக ?)முடிக்காமல் விட்டிவிட்டீர்கள். அழகு இனியா நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி திருடுவது தப்புத் தான் இருந்தாலும்.... என்ன இருந்தாலும் ... இதயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்கிறீர்களா? சரி சரி பொழைச்சுப் போங்க நான் சொல்லி யாராவது கேட்கப் போகிறார்களா என்ன? எதையாவது செய்து தொலைங்க....... ஹா ஹா ...ஆனா வாழ்வே மாயம் பாடாம இருந்தா சரிதான். சும்மா தமாசுக்கு சொல்கிறேன் உமா ok வா dont worry
      மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  4. அருமையான குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோ!

      Delete
  5. இப்படி அருமையாக கவிதைகளை இயற்றி, நீங்களும் தானே எங்களின் இதயங்களை திருடுகிறீர்கள் சகோ. இது நியாயமா?

    அருமையான வரிகள், அதற்கேற்ற தலைப்பு, படங்கள். அருமை. வாழ்த்துக்கள். சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா எத்தனை இதயங்கள் இதுவரை சேர்த்து வைத்துள்ளீர்கள் சகோ பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருப்பிக் கேட்டால் கொடுக்க வேண்டுமல்லவா.....ம்...ம்..
      மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
      பதிவர் திருவிழா நேரடி ஒளி பரப்பு பார்த்தீர்களா என்ன.

      Delete
    2. நேரடி ஒலிபரப்பை பார்க்க முடியவில்லை சகோ.
      பார்க்க வேண்டும் தான் என்று நினைத்தேன், ஆனால் வார இறுதி நாட்களில் கணினி முன்பு வருவதற்கே முடியாமல் போகிறது. தாங்கள் பார்த்தீர்களா ?

      Delete
    3. ஊமைப் படம் போல பார்த்தேன் முழுவதும் பார்க்க முடியவில்லை இரவு 2 மணி வரை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கணினி திடீரென்று கையை விட்டு விட்டது அதனால் தொடர முடியவில்லை சகோ. இருந்தாலும் இதையாவது பார்த்தேன் என்று திருப்தி அடைகிறேன்.

      Delete
  6. சிறந்த பா(கவிதை) வரிகளெனப் படித்தேன்.
    சிறந்த வழிகாட்டல் வரிகளெனப் புரிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  7. உதிர்கிறேன் சகோதரி நீங்கள் சொன்னபடி..

    ஷாஜகான் அவர்களின் வேள்வி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ பதிவர் திருவிழா ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தேன் சவுண்ட் இல்லாமல். சிறிது நேரத்தில் கணினி கைவிட்டு விட்டது. எனினும் சிறிது அளவாவது பார்த்ததில் திருப்தியே.

      Delete
  8. குட்டீஸ் சிரித்தாலும் அழுதாலும் அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். வரவுக்கு நன்றி சகோ !

      Delete
  9. திருடுவது தப்பில்லையா
    இதயங்களே ஆனாலும்!..

    கேள்வியும் - பதிலும் நியாயம் தான்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும். நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகையில் மிகவும் மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் ....!

      Delete
  10. "ஏமாற்றுவதும் ஒரு கலைதான்" ஒரு மேதை வலையுலகில் நெறைய அத்தியாயங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார். நம்ம என்ன அவரை கொலையா பண்ண முடியும்?

    "திருடுவது கலை! எல்லாராலையும் திருட முடியாது! எவன் திருடலை?" னு சொல்றவங்க நெறையப்பேரு "பெரிய இடத்தில்" இருக்காங்க. என்ன செய்றது, இனியா? :(

    ReplyDelete
    Replies
    1. திருடனாய் பார்த்து திருந்தட்டும் என்று விட வேண்டியது தான் இல்லையா வருண்.\\\\ "திருடுவது கலை! எல்லாராலையும் திருட முடியாது! எவன் திருடலை?" னு சொல்றவங்க நெறையப்பேரு "பெரிய இடத்தில்" இருக்காங்க.//// முற்றிலும் உண்மையே. பெரிய இடத்தில ஆடம்பர வாழ்க்கைக்காக திருடுகிறார்கள் கௌரவமாக வாழ்கிறார்கள். மற்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக திருடி வாழ்வையே இழந்து விடுகிறார்கள். வேதனைப் பட வேண்டிய விடயம் தான். மிக்க நன்றி வருண்! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!

      Delete
  11. அன்புச் சகோதரி,

    இதயங்களே...!திருடுவது தப்பில்லையா...
    இதயத்தின் உண்மை உணர்வுகளைக் கொட்டி
    மனிதம் செழித்து... மகிழ்ச்சி பிறக்கவே
    மானுடம் சிறக்க... ஊர்வலம் விட்ட
    ‘வாழ்வு ஏது வெந்து போனால்?
    தாழ்வு நீளும் நொந்து போனால்..!’
    இனிய பகிர்வை இதயத்தில் இருத்த வேண்டும்...

    பிள்ளை...
    சிரித்தாலும்...அழுதாலும்...மழலை பேசினாலும் அழகுதான்...
    பெரியவர்கள் பிழை செய்தால் இழுக்குதான்...!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! இனிய கருத்துகளை ஈந்து ஊக்கத்தை வழங்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன். மிகுந்த மகிழ்ச்சி சகோ வாழ்க வளமுடன் ...!

      Delete
  12. எனக்கென்னமோ இதயங்களைத் திருடுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது சகோதரி..!
    எங்கள் இதயங்களைத் திருடும் பதிவுகளைத் தந்துகொண்டிருக்கும் நீங்கள் செய்வது தப்பாய் இருக்காது என்கிற நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.
    சரிதானே?
    தாமதமாய்த் தான் வருகிறேன்.
    தங்களின் புதிய பதிவு பற்றிய செய்தியை நண்பர் மணவை ஜேம்ஸ் அவர்கள் சொல்லித்தான் அறிந்து வந்தேன்.

    // நகைப்பதற்கே நகைசுவைகள்
    நெஞ்சம் புகைந்தால்
    சுவைக்காது பகைக்கும் //
    உண்மையில் நகைச்சுவை பற்றிய பதிவொன்றினை இடவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். காலம் கைகூடவில்லை. உண்மையில் உங்களின் இந்த வரிகளைக் காணும் முதற்பார்வையில் வரும் ஐயத்திற்காக
    இந்த வரிகளை இன்னும் விளக்கத்தோன்றுகிறது...
    நகைப்பதற்கே நகைச்சுவைகள்..அது மகிழ்வூட்டுவதுதானே..??
    பின் எப்படி நெஞ்சம் புகையும்??
    இது பொதுவாக முதற்பார்வையில் தோன்றும் ஐயம்.
    ஆனால் நகைக்கப்படுபவரது நெஞ்சத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.
    பிறர் இகழ்ந்து நகைக்கும் போது அந்த இகழ்ச்சிக்குள்ளாகும் நெஞ்சம் எப்படி அந்த நகைச்சுவையை அனுபவிக்கும்?அது புகையத்தானே செய்யும்“!
    நகைச்சுவையைத் தோற்றுவிக்கும் களங்களில் ஒன்று எள்ளல் என்கின்றன நம் இலக்கணங்கள்.
    அதாவது பிறரை இகழ்ந்து கிண்டல் செய்யத் தோன்றும் நகைச்சுவை.
    பருத்த உருவமுள்ளவரைக் கண்டு யானை என்று சோன்னால் கேட்பவர்கள் சிரிக்கலாம்.
    ஆனால் அவ்வுருவம் கொண்டு பரிகசிக்கப்படுபவன் சிரிக்க முடியுமா..?
    வள்ளுவன் சொல்லுவான் “ நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி“ என்று உங்களின் ஒவ்வொரு குறுங்கவிதைகளையும் இப்படி விளக்க வேண்டும்.
    அது உங்கள் தளத்தில் நான் ஆதிக்கம் செலுத்துவது போல ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

    என் தாமத வருகையை மன்னியுங்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.! தமதமாகவேனும் வந்தீர்களே அதுவரை சந்தோஷமே. ஆமா இதயத்தை திருடுவது தப்பில்லை என்கிறீர்களா சரி சரி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் சகோ. தாங்கள் தான் எத்தனை இதயங்களை கொள்ளையடித்து வைத்துள்ளீர்களே அப்புறம் இப்படி சொன்னால் தப்பு தானே .ம்..ம்..ம்.. அது அந்தப் படத்துக்காக நகைசுவையாக எழுதியது சகோ! இப்போ மகிழ்ச்சி தானே. ஹா ஹா ....
      நகைசுவை பற்றி அழகாக கூறினீர்கள் சகோ. நகைசுவை என்பது
      வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும் அது யாரோட மனதையும் எந்த வகையிலும் புண் படுத்தக் கூடாது. அப்படி புண்படுத்தினால் அது நகைசுவையாகாது. என்று எண்ணுவேன் ஆகையால் தான் இதை எழுதினேன் சகோ.
      \\\உங்களின் ஒவ்வொரு குறுங்கவிதைகளையும் இப்படி விளக்க வேண்டும். அது உங்கள் தளத்தில் நான் ஆதிக்கம் செலுத்துவது போல ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.//// ஒரு போதும் இல்லை சகோ மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறது.
      தங்கள் தங்கள் பாணியிலேயே ஏனையவற்றையும் விளக்கலாம் சகோ கேட்க ஆவலாகவே உள்ளேன். மிக்க நன்றி சகோ! வருகை க்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  13. அன்புத் தோழி!

    திருடியே சேர்க்கத் திரவியம் அல்ல
    உருகிடும் உள்ளத் துணர்வு!

    இதயத்து உணர்வுகளைத் திருட முடியாது!
    உள்ளத்தில் ஒருவரின் குணாதிசயங்கள், உருவம், அவர் செயல்கள்
    வந்து தானாக ஒட்டிக்கொள்ளும். அது திருட்டாகாது!..:)

    நமது நல்ல பண்பினாலும் செயல்களாலும் அடுத்தவர் உள்ளத்தில் புகுந்துகொள்ளலாம்..
    என்றும் என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உங்களுடன்
    இந்த வலையுலக உறவுகள் போல..!

    மிக அருமையான கவிவரிகள்! படங்கள் சிறப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் அன்புத் தோழியே! மிக்க மகிழ்ச்சி.
      இதயத்தை திருட முடியாது அது உள்ளத்துணர்வு தானாக வந்து ஒட்டி கொள்ளும் என்பதை எவ்வளவு அழகாக கூறி யுளீர்கள். எனக்குத் தோன்றவேயில்லையே.யாருக்கு இப்படி தோன்றியிருக்கும் சொல்லுங்கள். இது தான் நம்ம இளமதி.

      எப்பொழுதும் வளர்பிறையாய் வாழ்ந்திடம்மா- நீ
      முப்பொழுதும் பௌர்ணமியாய் பொழிந்திடம்மா !
      வாழ்த்துக்கள்மா.....!

      Delete
  14. வணக்கம் சகோதரி..!
    "உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக"...இயல்பான வரிகள்..ஈர்க்கும் படங்கள் ..!
    மனிதம் சேர்க்கும் வரிகள்..! வாழ்த்துக்கள்..!
    வருகை தாருங்கள் என் வலைக்கும்..!
    நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !
      மிக்க மகிழ்ச்சி சகோ! தொடர்கிறேன் இனி தொடருங்கள் .
      வாழ்க வளமுடன் ....

      Delete
  15. ---உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக
    அவை
    வளர்க்கும் நல்லுறவுகளை ///
    உதிரும் வார்த்தைகள் நல்லுறவை வளர்க்கட்டும் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
      மிக்க மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள் ....!

      Delete
  16. மிகவும் அருமையான வரிகள் எல்லாமே சகோதரி! பிறர் மனதைப் புண்படுத்தாமல் மட்டுமே நல்ல உறவுகளையும், நட்புகளையும் நாம் வளர்க்க முடியும்! நம் ந்ன் நடத்தையும், அன்பும் மட்டுமே பிறர் உள்ளத்தைக் கவரும் எனப்தில் ஐயமில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா என்ன சகோ இந்த முறையும் தவறவிட் டுவிடீர்களா என்ன.
      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ! வரவிற்க்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ....!

      Delete
  17. அருமை. அதிலும் விஜு அவர்களின் விளக்கம் கவிதையை இன்னொரு முறை படிக்கத் தூண்டியது. இதயங்களைத் திருடுவது தப்பென்றால் குற்றவாளிகள் தான் நாம் அனைவரும் ஒருவகையில் .

    ReplyDelete
    Replies
    1. \\\இதயங்களைத் திருடுவது தப்பென்றால் குற்றவாளிகள் தான் நாம் அனைவரும் ஒருவகையில் ./// ஆமா குற்றவாளிகள் தான் அதனால் என்ன இருந்திட்டு போகட்டுமே. நாம் தொடர்ந்து திருடலாம் ok வா அதில ஒன்று பாருங்கள் இந்த ஆண்டவன் எவ்வளவு பெரிய மகா திருடன் எத்தனை உள்ளங்களை திருடி வைத்திருக்கிறான். நல்ல விடயத்திற்கு பொய் சொன்னால் தப்பில்லையாமே so அன்பை வளர்க்க, மகிழ்வு, ஒற்றுமை பேணிட இதயங்களை திருடலாம் தப்பில்லை ok வா......
      ஹா ஹா ... மிக்க நன்றி சகோ! வருகைகும் கருத்துக்கும்.

      Delete
  18. // நிலைக்குமா இம்மகிழ்ச்சி
    நிலைத்தால் எதுவரை ?

    நீ அழத் தொடங்கும் வரை//

    தாய்மையின் அன்பும், மகவுடன் உள்ள உணர்வும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
    அதைக் கவிதைப் படுத்தியிருக்கின்றன உங்கள் மொழி!
    தாய்க்குத் தன்குழந்தைதான் உலகம். அதன் மகிழ்ச்சிதான் தன் மகிழ்ச்சி.அதன் துக்கம் தன் துக்கம்.
    ஒரு நடந்த நிகழ்விது..
    என் நண்பனின் வீட்டில் குட்டிகளுடன் உறங்கிக் கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்.
    நாங்கள் அவன் வீட்டிற்கு வந்ததையும் , ஏற்படுத்திய சப்தங்களையும் கவனிக்கவே இல்லை.அப்படி ஒரு களைப்பான உறக்கம் போலும் அதற்கு.
    சக நண்பன் ஒருவன் அதன் வெள்ளை நிறக்குட்டியொன்றைத் தூக்கினான். அப்பொழுதும் தாய் நாய் அசையவில்லை.
    நாங்கள் ஓசையெழுப்பாமல் நகர முற்பட்ட போது அந்தக் குட்டிநாய், எங்களுக்கே கேட்காத ஒரு சிறு முனகலை எழுப்பியதுதான் தாமதம்.
    என்ன நடந்தது என்பதை உணரவும் முடியாத நொடியின் நொடியில் நண்பனின் காலை அந்தத் தாய்நாய் கௌவிவிட்டிருந்தது.
    உங்கள் வரிகள் இந்தச் சம்பவத்தை நினைவு படுத்துகின்றன.
    மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்தத் தாய்மை குழந்தையின் நலனை மனமாக்கிக் கொண்டதுதான்.
    மீண்டும் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோ! நாயும் ஒரு தாய் தானே. எல்லா ஜீவராசிகளுக்கும் தாய்மை உணர்வு ஒன்றே என்பதை புரிய வைக்கும் அழகான விளக்கம். மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். அதில் பாருங்கள் குழந்தை அழத் தொடங்கியவுடன் தாயினுடைய மகிழ்ச்சியும் குழந்தையின் மகிழ்ச்சியும் சேர்ந்தே போய் விடுகிறது. இல்லையா..... என் வேண்டுகோளுக்கிணங்கி கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி சகோ! வாழ்க வளமுடன் .....! நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது சகோ.

      Delete
  19. //வாழ்வு ஏது வெந்து போனால்
    தாழ்வு நீளும் நொந்து போனால்
    அழவைப்பவரை
    அலட்சியம் செய் லட்சியம் வெல்ல//

    திருக்குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது.
    துன்பத்தில் துன்பப்படாதவரைக் கண்டு துன்பம் நினைக்குமாம்.
    “என்னடா என்ன பண்ணினாலும் இவங்கிட்ட நம்ம வேலையக் காட்டமுடியலையே? என்ன பண்ணலாம் எண்ண பண்ணலாம் “ என நினைத்தே கடைசியில் அந்தத் துன்பமே நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுமாம்.

    “ இடும்பைக்கே இடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்!

    இடும்பை - துன்பம்.
    அதுசரி! எப்படிங்க துன்பத்தில துன்பப்படாம இருக்கிறது? ( இடுக்கண் வருங்கால் நகுறது? ) என்ற கேட்பவரிடம் வள்ளுவன் சொல்லுவான்.

    “இன்பம் வரும் நேரம் அந்த இன்பத்தில் மகிழாவிட்டால் துன்பம் வரும் போது துன்பப்படவும் வேண்டியதில்லையே.“


    “இன்பத்தில் இன்பம் விழையாதான் துன்பத்தில்
    துன்பம் உறுதல் இலன்“

    வள்ளுவரின் மறுசிந்தனையாகப் படுகின்ற உங்களின் இந்த வரிகள்!

    இன்னும்,

    “ வாழ்வது வந்தபோது மனந்தனில் மகிழ வேண்டாம்.
    தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர்?“

    என்னும் விவேக சிந்தாமணி.
    இது எப்படி இருக்கு?

    ( ஆளவுடு ... போதுண்டா சாமி என்று நீங்க சொல்றது கேக்குது.
    நான்தான் அப்பவே சொன்னேனில்ல. !)
    இனிமே விட முடியாது.
    தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. ( ஆளவுடு ... போதுண்டா சாமி என்று நீங்க சொல்றது கேக்குது.
      நான்தான் அப்பவே சொன்னேனில்ல. !)
      இனிமே விட முடியாது.
      தொடரும்.
      ஹா ஹா என்ன சகோ நான் தான் அப்படியெல்லாம் நான் நினைக்கவேஇல்லையே எப்பிடி கேட்டுச்சு ம்..ம்..ம்... சகோ நான் தான் தங்களுக்கு கஷ்டம் கொடுக்கிறேனோ என்று கவலைப் பட்டேன். மிக்க நன்றி சகோ மீண்டும் கருத்து தந்து அசத்துவதற்கு. தொடருங்கள் சகோ தாரளமாக தயக்கம் தேவை இல்லை.

      துன்பம் தருபவர்களை அலட்சியம் செய்யா விட்டால்..... அரசியல்வாதிகள் தங்களுக்கு வருகின்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பி விடுவது போல,
      ஒருவரின் முயற்சிகளை முறியடிக்க சிலர் முரண்பாடாக ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். இதனால் போதையில் இருக்கும் ஒருவன் தன்னையும் தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பது போல் தான் கவலை கொள்பவனின் நிலையும் இருக்கும். இதனால் தன்னையும் தன் திறமைகளையும் உணராது முனேற்றப் பாதையில் செல்ல முடியாது முடங்கிப் போய் விடக் கூடாது என்று எண்ணியே இதை எழுதினேன். அதற்கேற்ப தங்கள் அழகான கருத்து இன்னமும் மேருகேற்றிற்று சகோ. மிக்க நன்றி !

      Delete
  20. // உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக
    அவை
    வளர்க்கும் நல்லுறவுகளை //

    வார்த்தைகளைக் கொட்டுவதற்கும், சொல்வதற்கும், உதிர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
    உதிர்தல் - அரும்பிப் போதாகி மலர்ந்து யாவர்க்கும் மகிழ்ச்சி கொடுத்து இயற்கை நியதியாய் வீழ்ந்து ஓராயிரமாய் பயன்கொடுக்க நிலம் படும் செயல்.
    நம் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் உதிர வேண்டும் கேட்பவர் மனதில் நன்மைகளை மகிழ்ச்சியை விளைவிக்கும் படியாய்!
    உதிர்வது மனநிலத்தை வருடும் படி இருக்க வேண்டும். நெருடும்படி இருக்கக் கூடாது. உதிர்வன வருடுதல் சரி! நெருடுமெனல் எப்படி?
    உதிரும் விதைகளில் கூட நல்ல விதை கெட்ட விதைகள் என்று இருக்கின்றன.
    பார்த்தீனியம் போன்ற செடிகள் தன்னை வளர்க்கும் மண்ணுக்கும் சுற்றுச்
    சூழலுக்கும் தீங்கினை விளைவிப்பவை.
    அவற்றையும் பெற்றுக் கொள்ளவேண்டிய, தன்னில் வைத்துப் பொதிந்து வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் மண்ணுக்கு இருக்கிறது.
    ஆனால் அவை நெருடும் படி இருப்பவை.
    உயிர்களைக் காக்க வேண்டும் என்று சொல்லும் வள்ளுவன்தான் சொல்வான், ““காழ்த்தவிடத்து கைகொல்லும் முள்மரம் இளைதாகக் கொல்க““ என்று.
    ஆகக் கொள்ள வேண்டியவையும் கொல்ல வேண்டியவையும் உதிர்வதில் இருக்கின்றன.
    வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் அப்படித்தான்.
    கொள்ளக் கொல்பவை - நெருடுபவை
    கொள்ள நல்லவை - வருடுபவை.
    ஆகவே தான் வருடுபவை நல்லுறவை வளர்க்கும்.
    நெருடுபவை பற்றிச் சொல்ல வேண்டியது இல்லையே!
    உங்களின் குறுங்கவிகள் குறித்து இன்னும் விளக்கலாம்.
    வருவேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் காத்திருக்கிறோம் தங்கள் வார்த்தை ஜாலங்களை காண ஹா ஹா ......
      ஆஹா அருமை அருமை எவ்வளவு அழகான விளக்கங்கள். மீண்டும் மீண்டும் வாசித்து உள் வங்கிக் கொண்டேன் சகோ. மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. மனிதர்களிலும் எத்தனை வகை இல்லையா சிலர் வாயை திறந்தாலே புண் படும்படியான வார்த்தைகளையே உதிர்ப்பது கண்டு வேதனையில் தான் இதை எழுதினேன். மிக்க நன்றி சகோ தங்கள் ஆதரவிற்கு. ரொம்ப தொல்லை இச் சகோதரியால் இல்லையா .சகோ .....ஹா ஹா

      Delete
  21. அற்புதமான படங்களுக்கு இணையான அற்புதமான
    கவிதைகள்.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருதிற்கும் வாழ்த்திற்கும். நீண்ட நாட்களின் பின் வருகை கண்டு உவகை கொண்டேன்.

      Delete
  22. திருடுவது தப்பில்லையா

    இதயங்களே ஆனாலும்

    இப்படிக் கவிதைகள் மூலம் எங்கள் இதயங்களை திருடுவது தப்பில்லையா ?

    ReplyDelete
    Replies
    1. தப்புத் தான், ஆனாலும் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லையே..... மகிழ்ச்சியனதும் கெடுதல் இல்லாதும் என்றால் மன்னிக்கலாம் ok வா....மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  23. செல்லம்
    எப்டி இருக்கீங்க? கொஞ்சம் நாள் புத்தகம் சரணம் என சோம்பல் காரணமா இருந்துட்டேன். மது தான் "உன் இனியாச்செல்லம் தொல்லை தாங்க முடியலைன்னு, என் கைல இருக்கிற புத்தகத்தை புடுங்கிட்டு இங்க விரட்டினார்னா பாருங்களேன்:))) இதயத்தை திருடுறது தப்பா??? அப்போ இனியாவை தான் உள்ள தள்ளனும். நான் என் மனசுக்குள்ள தள்ளனும்னு சொன்னேன் செல்லம். :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அம்மு வந்தாச்சு ம்..ம்..ம்...மிக்க மகிழ்ச்சிம்மா. பின்ன இருக்காதா எங்கடா இந்தப் பொண்ணைக் காணோமே என்று கவலையாக இருந்தது. அப்புறம் காரணம் தெரிந்தவுடன் நிம்மதியாக இருந்தது. பார்த்தீங்களா அம்மு என் சகோதரருக்கு அது நன்றாக புரிந்து விட்டது அது தான் அவர் அப்படி செய்துள்ளார். ஹா ஹா நன்றி சகோதரரே!
      ஓஹோ அம்மு இனிமே தானா மனசுக்குள்ள தள்ளனும். toobad அம்மு நான் ஏற்கனவே உள்ளே இருப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஓஹோ ஹௌஸ்புல்லா ஹா ஹா சும்மா kidding . மிக்க நன்றிடா அம்மு சிரமத்திற்கு மத்தியில் வந்து கருத்திட்டமைக்கு. மகிழ் நிறை ரொம்ப happy யா இருப்பாங்க இல்ல..அனைவரும் நலம் தானே.?

      Delete
  24. எமது மதுரை விழா காண வருக...

    ReplyDelete
  25. //உதிருங்கள் வார்த்தைகளை
    நெருடும்படியாக இல்லாமல்
    வருடும்படியாக
    அவை
    வளர்க்கும் நல்லுறவுகளை //
    மிகவும் இரசித்த வரிகள்! கவிதை அருமை! தொடர்க!

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.