Saturday, September 27, 2014

சாயி சரணம் சாயியே சரணம்

சாயி சரணம்  சாயியே சரணம்
வரணும் வரணும் பேரருள் தரணும்
சாயி சரணம்  சாயியே சரணம்
வரணும் வரணும் பேரருள் தரணும்
சிர்டியில் வந்துதித்த ஸ்ரீமானே - இந்த
சிருஷ்டியை காக்க வந்த பெருமானே
உம்கிருபையில் வாழ்கின்ற உயிர்தானே
உமைப்போற்றி பணிந்திடுவேன் தினம்நானே

வரும் நாளிலும் எந்தன் துணை நீயே
வரும் துயர்களை எல்லாம் களைவாயே
எடுத்த கருமங்கள் ஜெயம் பெறவே
கொடுப்பாயே எமக்கு  ஒரு வரமே 

மஞ்சள் நிறமாலை அணிந்திடுவேன்- உமக்கு
மங்கள வாழ்வு அளிப்பாயே
கொஞ்சும் தேன்தமிழில் உரைப்பேனே
உம்புகழ் தனையே இவ்வுலகினிற்கு

விந்தைகள் புரியும் வல்லவனே- இந்த
வையம் முழுவதும் உம் வசமே
சிந்தை தெளியவைக்கும் சீராளன் - நீ
சேர்ப்பாய் நலம்மனைத்தும் கூறாமல்

திருவிளக்குதனை  ஏற்றி வைக்க -அணையா
தொளிரு மெங்கள் குலவிளக்கு
நினைபோற்றி பாடிடவே எமை  
என்றும் புகழும் இந்த பூவுலகு

நாடியுமை  நின்றால் சாயி
ஓடிவிடும் நமை சூழும் கேடு   
கூடியுமை  தொழுதால் என்றும்
கோடி நன்மைகள்  தேடி வரும்    

மருவி யுமை  நின்றால் சாயி-  நின்
அருள் அருவி எனப்பாயும் - நின்
பெருமை தனை பேசிடவே 
பெரும் பேறுகளும் கூடும்

நற்கவிகள் நல்கிடுமே சாயி
நாமணக்க உமை பாடிமகிழ்ந்திடவே - என்
நாவினில் வந்தமரும் சாயி - எடுப்பாய்
நல்லெதுகையும் மோனையும் பெற்றிடவே

கற்பனை மிகவே கைப்பொருள்
வேண்டும் காருண்யனே-நயம்பெறவே  
நின் பொற்பதங்கள் தனை
புகழ்ந்து பாடிடவே
.
பீடும் பிணியும் விலகிடுமே
சாயி  நாமம் என்றும் நவின்றிடவே
நாடும் வீடும் நலம் பெறுமே
கூடும் என்றும் கோடி நன்மையுமே 
25 comments:

 1. சாய் சரண பாடல் அருமை அருமை தோழி.
  தமிழில் அழகாய் பொழிகிறீர்கள். உங்கள் நாவில் வந்தமர்ந்த தமிழ் வார்த்தைகளாய் கொட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 2. சாயி பாமாலை அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 3. வணக்கம் தோழி!

  சங்கடம் தீரச் சரணடைந்தீர் சாயியை!
  மங்களம் யாவும் வழங்கவே! - திங்கள்
  நிகர்த்தோன்! தெளிவருள் நேசன் வரமே!
  தகர்த்திடும் தீமையைத் தான்!

  அற்புதமான சாயி பாமாலை!
  ஒவ்வொரு வரிகளும் உளம் நிறைத்தது தோழி!..

  மிக அருமை! உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 4. அற்புதமாக இருக்கிறது கவிதை ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 5. சாய்பாபா பாமாலை அருமை.
  எமது பதிவு My India By Devakottaiyan

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete

 6. "பீடும் பிணியும் விலகிடுமே
  சாயி நாமம் என்றும் நவின்றிடவே" என்ற
  அடிகள் கூறும் உண்மையை
  ஏற்றுக்கொள்வோம்!

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 7. வணக்கம்
  அம்மா.
  சாயி பற்றி மிக அழகானவரிகளில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன் ! இனிய கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 8. //சிந்தை தெளியவைக்கும் சீராளன்//
  உண்மைதான்! நான் தங்கள் கருத்தினோடு முற்றிலும் உடன்படுகிறேன் சகோ.
  //மருவி யுமை நின்றால் சாயி- நின்
  அருள் அருவி எனப்பாயும்//
  தங்களின் கவிமழை சேர்ந்து அருவி யெனப் பாய்ந்திடவும் காரணம் அறிந்து கொண்டேன்.
  இசைப்பாடல் அருமை!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வாருங்கள் புலவரே! பயந்து கொண்டே போட்டேன் தங்கள் கருத்து நிம்மதி தருகிறது. மிக்க மகிழ்ச்சி சகோ !
   நன்றி நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 9. சகோதரி! என்ன இனிய சாய் பாமாலை! சொக்கிவிட்டோம்! ஸ்ரீ சாயி சரணம்!

  ReplyDelete
  Replies
  1. mikka nanri !sako varukaikum karuthukkum .

   Delete
 10. பக்திப் பாமாலை மிக நன்று.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. mikka nanri tholi ! varukikum karuthukkum.

   Delete
 11. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். வார இறுதி நாட்கள் கொஞ்சம் பிஸியாக செல்கிறது. வலைப்பக்கம் வர இயலவில்லை.

  சாய் பாமாலை மிகவும் அருமை.

  விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரும் நலம் தானே.

  ReplyDelete
  Replies
  1. vanka sako mikka makilchi athanaal enna paravaai illai busy mudiyaddum neenkal neram irukkum pothu vanthal sari than ok va sako mikka nanri valthukkal .

   Delete
 12. வணக்கம் சகோ...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பூத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா! வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு
   வாழ்க வளமுடன் ....!.

   Delete
 13. மேடம் நல்ல இருகிங்களா? செல்லம் அடுத்த பதிவு போடுவிங்க, வந்து பேசலாம்னு பார்த்தா இப்படி சாயி யை விட்டு விலக மாட்டேங்குரிங்களே :(( சரி சாயி உங்களுக்கு எப்பவும் துணை இருக்கட்டும்:)

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.