கடல் தானும் அழகு என்று
எண்ணி ஆடிப்பார்க்கும்
அலைஆளை பழகிமெல்ல
மெல்ல கொல்லப் பார்க்கும்
வித்தை தெரிந்த கத்தும் கடலும்
முத்துப் பவளம் சேர்த்து வைக்கும்
மூச்சடக்கி முக்குளித்தால்
முகமன் பார்த்து பரிசில் வழங்கும்
நீந்திச் செல்லும் கப்பல் தன்னை
ஏந்திச் சென்று கரையில் சேர்க்கும்
பாசவலையை வீசுவோர்க்கு
நேசமாக நிதிகள் நல்கும்
துள்ளி ஓடும் புள்ளி மான் போல்
நீந்தி மகிழும் மீன்கள் -கடல்
நெஞ்சணைத்து தாயைபோல
கொஞ்சி விளையாடும்
காற்றும் மழையும் இல்லையென்றால்
கட்டுப்பட்டு சொல்லுக் கேட்கும் .-மனம்
மகிழ்ச்சியான தருணங்களில் கொந்தளிக்கும்
வீழ்ச்சியினை கண்டுகொண்டால் கொக்கரிக்கும்
ஆலிலை மீதமர்ந்து ஆள்பவனை
நீர்திவலைகள் தூவி பாராட்டும்-தன்மடியினில்
போட்டு தாலாட்டுப்பாடும் தூங்காமல் வாழும்
மேலோட்டமாக பூங்காற்று வீசும்
வானவில் வந்து வளைக்கரம் நீட்டும்
வரைந்திட எண்ணி நிறங்கள் தீட்டும்
ஊறுகள் இன்றி உயிர்களை காக்கும்
உண்மையை சொல்லி உயர்வினைச் சேர்க்கும்
வெள்ளிப் பனிமலைகள் விண்ணில்
விளைவதையே பார்த்து ரசிக்கும்-அதில்
அந்த வெண்ணிலவு துள்ளி மகிழ்ந்தாட
சேர்ந்து சிரிக்கும் கடல் தன்னைமறந்து
பாசவலையை வீசுவோர்க்கு
ReplyDeleteநேசமாக நிதிகள் நல்கும்...//
கடல் கவிதையில் பயணித்து இறங்கினேன் ..நன்றி தோழி.
மிக்க நன்றிம்மா! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
கவிக் கடலில் மிதந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deletecruise ட்ரிப் கவிதை பாகம் ரெண்டா??? நீங்க கலக்குங்க செல்லம். கூடவே பயணிப்பது போன்ற உணர்வு!
ReplyDelete**
காற்றும் மழையும் இல்லையென்றால்
கட்டுப்பட்டு சொல்லுக் கேட்கும் .-மனம்
மகிழ்ச்சியான தருணங்களில் கொந்தளிக்கும்
வீழ்ச்சியினை கண்டுகொண்டால் கொக்கரிக்கும்**
இந்த வரிகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு செல்லம். நிலவன் அண்ணா விழாவிற்கு கிரேஸ் வந்திருந்தார்கள். அந்த படங்களை பகிர்ந்திருக்கிறேன். என்ன நீங்க இல்லாத குறை தான். ஒரு நாள் நிச்சயம் சிந்திப்போம்:))
வாங்க அம்மு மிக்க சந்தோஷமாக இருக்கிறது கேட்க ஆனால் மிஸ் பண்ணிவிட்டேன் என்று நினைத்தும் ரொம்ப வருத்தமாகவே உள்ளது இருந்தாலும் இன்னுமொரு சந்தர்ப்பம் வராமல் போகாது அப்போ பார்த்துக்கலாம். இல்லையா அம்மு. கிரேஸ் ரொம்ப லக்கி அவருக்காவது இந்த சந்தர்ப்பம் கிடைத்ததே அதுவரை மகிழ்ச்சியே. மிக்க நன்றிம்மா என்னை நினைவு கூர்ந்தமைக்கும் வருகைக்கும் அம்மு. வாழ்த்துக்கள் ...!
Delete**** வானவில் வந்து வளைக்கரம் நீட்டும்
ReplyDeleteவரைந்திட எண்ணி நிறங்கள் தீட்டும்***
வானவில்னா VIBGYOR னுதான் சிந்தனை ஓடுதுச்ரசனியே இல்லாத எனக்கெல்லாம் உங்க கற்பனை உயரத்தை எட்டிப் பிடிப்பது ரொம்ப கஷ்டம்தான்.:)
அப்படியா சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ! வருண் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
கடல் கவிதை அருமை தோழி..மூழ்கி முக்குளித்தேன்.
ReplyDeleteநானும் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததால் இணையம் அதிகம் வரவில்லை..நீங்கள் நலம் தானே?
ஊர் சுற்றியதால் தானா அட டா sorrymma சுற்றுலா நன்றாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். வாழ்த்துக்கள்மா ...!
Deleteசென்ற கவிதையின் தொடர்ச்சி போல் இருக்கிறது. சூப்பர் சகோ.
ReplyDelete"//வித்தை தெரிந்த கத்தும் கடலும்
முத்துப் பவளம் சேர்த்து வைக்கும்
மூச்சடக்கி முக்குளித்தால்
முகமன் பார்த்து பரிசில் வழங்கும்//'
என்ன ஒரு அழகான வரிகள். கஷ்டப்பட்டால் பலன் உண்டு என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி சகோ! busy எல்லாம் முடிந்து விட்டதா என்ன. இல்லை என்றால் தான் தங்களை காண முடியாதே தங்கள் வருகையில் மிகவும் மகிழ்கிறேன் சகோ.
Deleteஅற்புதமான கவிதை . அழகான படங்கள்
ReplyDeleteமிக்க நன்றி தோழி ! வருகைக்கும் தருதுக்கும். தங்கள் வருகைக் கண்டு அளவில்லா மகிழ்ச்சிம்மா.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
ஆர்ப்பரிக்கும் கடலோசையை வெட்டிச் சீரும் வரிகள்..
படிக்கும் உள்ளங்களை கட்டிப்போட்டுவிட்டீர்கள்.. அம்மா
சொல்வதற்கு ஏது......நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ரூபன். ...!
Deleteகடந்து போக முடியாததாய் இருக்கிறது நீங்கள் படைத்த கடல்!
ReplyDeleteபடைத்தது நீங்களல்லவா...
அப்புறம் எப்படிக் கடந்து போக....!!
ம்ம்!
அப்படியே இந்தக் கவிதையை ஓவியமாக்கிக் காண்கிறேன் நான்...!
பிரமிப்பாய் இருக்கிறது.
வாழ்த்துகள்.
அது எப்பிடி கடல் ஆச்சே எப்பிடிக் கடக்கிறது சாதாரண விடயமா என்ன ஹா ஹா... ரொம்ப நன்றி சகோ தங்கள் இனிய கருத்துக்கு. மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் வரவு எப்போதும் ஊக்கப் படுத்தும் வகையில் அமையும் வாழ்க வளமுடன் ...!
Deleteகடல் மௌனப்புதையல் ஆர்பரிக்கும் அலைகளும் ஆழ்கடல் அமைதியும் எப்போதும் நான் விரும்புபவை...அருமை உங்கள் கடல் பதிவு
ReplyDeleteமிக்க நன்றிடா ! வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteவித்தை தெரிந்த கத்தும் கடலும்
ReplyDeleteமுத்துப் பவளம் சேர்த்து வைக்கும்
மூச்சடக்கி முக்குளித்தால்
முகமன் பார்த்து பரிசில் வழங்கும்
நீந்திச் செல்லும் கப்பல் தன்னை
ஏந்திச் சென்று கரையில் சேர்க்கும்
பாசவலையை வீசுவோர்க்கு
நேசமாக நிதிகள் நல்கும்//
அழகிய கடல் பற்றி என்ன ஒரு அழகானக் கவிதை! கடலைக் கண்டு மிகவும் ஆர்பரித்துக் களித்து ரசிப்பவர்கள் நாங்கள்! அருமை! அருமை! அதைச் சொல்லிய விதம்!
ஏதோ நாங்களும் கடலில் நீந்தியது போன்ற உணர்வு....அதுவும் அழ்கிய படங்கள்!
எப்படித் தங்கள் படிவை மிஸ் பண்ணினோம் என்று தெரியவில்லை! இந்த ப்ளாகர் பல சமயங்களில் பதிவுகளை காட்டுவதில்லை. பழைய பதிவுகளை மட்டுமே காட்டுகின்ராது. அதனால்தான் தாமதம் சகோதரி....மன்னிக்கவும்! ஓகேயா! எங்கள் இனிய சகோதரி தாம்தமாக வந்தாலும் உள்ளே அனுமதிபார்களே!ஹஹ்ஹாஹ்ஹ்
ReplyDeleteகடலையே நனைத்த கவிமழை !
ReplyDeleteநன்றி
சாமானியன்