Saturday, October 18, 2014

வாழ்த்திட வாருங்கள் என் வலைதள உறவுகளே




அம்மாடியோ என்னால நம்பவே முடியலீங்க 
நூறு கவிதை போட்டுவிட்டேனா ?


வாழ்த்திட வாருங்கள் என்
வலைதள உறவுகளே
தாழ்ந்திடும் எண்ணம் தோன்றிடு
முன்னர் தடுத்திட வாருங்கள்

இன்னொரு நூறு கவிதைகளை
ஈந்திட வாழ்த்துங்கள்
பொன்னும்பொருளும் பொருந்தியபூமியில்
புன்னகை பூண்டிட வாழ்த்திடுங்கள்

மண்ணில் வளங்கள் செழிப்பது போல
மனமது செழிக்க வாழ்த்திடுங்கள்
கண்களிலே கார்காலம்
கண்டிட வேண்டும் வாழ்த்துங்கள்

பூக்களை போல பாக்கள் எல்லாம் 
சொரிந்திட வேண்டும் வாழ்த்துங்கள்-நல் 
நோக்கங்கள் நிறைந்த ஆக்கங்கள்
நல்கிடவே வாழ்த்துங்கள்

கண்களை போன்ற கருத்துகளை
களிப்புற தாருங்கள்
எண்ணங்கள் இனியது ஏந்திடவேண்டும்
 என்றே வாழ்த்துங்கள்

தேனினுமினிய கவிதைகள்
தெவிட்டாமல் தர வாழ்த்திடுங்கள்
மின்னிட வேண்டும் எண்ணங்கள்
 என்றே மிகையாய் வாழ்த்துங்கள்

புதுமையான கருத்துகளை
புகுத்திட வாழ்த்துங்கள்
பதுமைகள் போல வாழாமல்-அதை
  பரப்பிட வாழ்த்துங்கள்

பண்ணுடன் கூடிய பாடல்களை
தரவே பணித்திடுங்கள்
விண்ணும் என்னை வாழ்த்திடட்டும்- என்
 மண்ணும் மகிழ வாழ்த்திடுங்கள்!

வலைதள உறவுகளுக்கு வந்தனம் என் வரிகளை எல்லாம் ரசித்து நற் கருத்துகளை வழங்கி முழு ஆதரவு தந்து நூறு கவிதைகள் வரை  வளர்த்துவிட்ட பெருமை எல்லாம் தங்கள் அனைவரையுமே  சாரும். பல நாடுகளில் இருந்து பார்வையிடும் உறவுகளுக்கும், ஒத்துழைப்பு நல்கும்  என் குடும்பத்தினர்  அனைவருக்கும், ஊடகங்களுக்கும், முக்கியமாக itr.fm வானொலிக்கும், என்னுடன் பணிபுரியும்  நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்கள் வருகையையும் கருத்தையும் தொடர்ந்து நல்கி ஆதரவு வழங்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.







இழகிய குணங்கள்
அனைத்தையும் தன்னகத்தே
கொண்டவள்நீ 
அழகிய உலகிற்கே அதிபதி நீ 

அப்படி உன்னிடம் இல்லாதது என்ன  எம்மிடம்
இருக்கப் போகிறது என்று பார்க்கிறாய்.
ஓமனிதமா ...அது மரித்துவிட்டதோ
என்று பார்க்கிறாயா இன்னும் இல்லை தாயே
திரு முரளி திரு கரந்தை  ஜெயகுமார்
போன்றோர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறது எனவே நிம்மதி கொள்ளம்மா !
 

நடு நிசியில் இந்த
நிலவுக்கு இங்கென்ன வேலை
  நீர்வீழ்ச்சியை ரசிப்பதாக
 தெரியவில்லையே!
வானோடு தகராறோ
இந்த வண்ண நிலவுக்கு
  வாழ்வை  மாய்க்க
வந்திருக்குமோ என்னமோ



எப்படி அந்த நிலவு
ஆடை அலங்காரம்
இன்றியே இவ்வளவு
அழகாக உள்ளது
நான் ஆடை தரித்தும்
அழகாய்  இல்லையே


இதுக்கெல்லாமா கிளாஸ் 
நடத்துவாங்க 
கடிச்சா என்ன செய்கிறது
திருப்பி கடிக்கவா முடியும்
அதனால இப்படித்
தாங்க சொறியனும் ஆனால்
ஜாக்கிரதைங்க உள்ள இருக்கும்
உறுப்புகள் கையோடு 
 வராம பாத்துக்கங்க. ஆனால் கொஞ்சம்
அப்பப்ப ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.



ஏன் இப்படி ஒளிகிறாய் ஓ ...வெட்கமா 
காதலன் வரும் நேரமா என்ன

பார்த்த விழி பூத்திடவே 
பார்த்திருக்கிறாய் 
வேர்த்திடவே விதி யெனவே 
வாழ்ந்திருக்கிறாய்
 கனியும் இந்தக் காதல் 
என்றா காத்திருக்கிறாய்
பனியிலும் மழையிலும்
தோய்ந்திருக்கிறாய்
தனிமையே துணையாக 
வீற்றிருக்கிறாய்

தவிக்கும் உன் இதயம் தளர்ந்திடும்
தாய்மை உணர்வில் மிதந்திடும் 
உன்தலைவன் வரவே மகிழ்ந்திடும் 
தரணியில் இதுவும் நிகழ்ந்திடும்


பாறைக்குப் பின்னால ஏன் ஒளிஞ்சிருக்கே?

எதிரிகள்  நடமாட்டம் அதிகம் அதனால யாராவது
வர்றாங்களான்னு பார்க்கத் தான் 

எதுக்கு?....
என் நாட்டை சூறையாடப் 
பார்கிறாங்க இல்ல அதனால  
 குண்டு போடத்தான்

57 comments:

  1. மனசுக்குள்ளேயே வாழ்த்திட்டுப் போயிடலாம்னு நெனச்சேன். அப்புறம் உங்களுக்கு கேட்காதேனுதான்...

    உங்க வலைதளம் இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் வாழட்டும். ஒரு கோடி வருடம் முடிந்த பிறகு நான் ஒரு பின்னூட்டமிட கட்டாயம் வருவேன்! கோடியாண்டு பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லத்தான்..:)
    நான் வருவேன்ன்னு சொன்னால் கட்டாயம் வந்துடுவேன்..நம்பமாடீங்களே? :))))))

    I am trying to link your post in TM without your permission!

    ReplyDelete
    Replies
    1. \\\\\ ஒரு கோடி வருடம் முடிந்த பிறகு நான் ஒரு பின்னூட்டமிட கட்டாயம் வருவேன்! ///ஆஹா தங்கமான மனசு வருண் உங்களுக்கு. இல்லையே நீங்க சொன்னதை நான் நம்பிட்டேனே . மிக்க நன்றி வருண் ! முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      link சரிவரவில்லையா TM means தமிழ் மணம் தானே நான் ட்ரை பண்ணி களைத்துவிட்டேன்.

      Delete
  2. வணக்கம் !

    வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !இன்பத் தமிழால்
    இனிக்கும் கவிதைகளை அள்ளி அள்ளித் தருக இனியும்
    அலுக்காமல் .படங்கள் கண்ணை மயக்குகின்றது தோழி
    எங்கிருந்து தான் இவ்வளவு அழகான படங்களைத் தேர்வு
    செய்கின்றீர்களோ !அதற்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி எங்க போயிருந்தீங்க இவ்வளவு நாளும். நலம் தானே. மிக்க நன்றி அன்புத் தோழியே தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும். படங்கள் அனைத்தும் கூகிள் ஆண்டவர் தான் வழமை போலவே தட்டித் தட்டி பார்க்கிறது தான். nature images என்று போட்டு எடுக்கலாம் தோழி.

      Delete
  3. வாவ் !! அருமை !! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நூறு விரைவில் ஆயிரமாக வாழ்த்துகின்றேன் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  4. இன்னும் ஆயிரமாயிரம்
    நற்கவிகள் இயற்றிட
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    கவிப் பயணம் தொடரட்டும

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete

  5. பாபுனைதல் என்பது இலகுவானதல்ல
    காதலித்துத் தோல்வியுற்றால்
    கவிதை வருமென்பதும் பொய்யே
    இறுக்கமான இனிய பா (கவிதை) புனைய
    உள்ளத்தில் பாபுனையும் ஆற்றல் (கவித்துவம்)
    இருக்க வேண்டுமே - அது
    தங்களிடம் இருப்பதால் தானே
    நூறு கவிதை போட்டுவிட
    முடிந்திருக்கிறதே! - ஆயினும்
    பல நூறு கவிதை ஆக்கி
    பெயரும் புகழும் பெற
    சின்னப்பொடியன் யாழ்பாவாணன்
    வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  6. ஆஹா!! நூறாவது கவிதையா?? சூப்பர் செல்லம்:))) நான் என்னென்ன வாழ்த்த நினைச்சேனோ அது அப்படியே பாடலா கொடுத்துடீங்க!! so, பல்லாண்டு, பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு தமிழோடு வாழ்க நீ:))) படக்கவிதை இந்த முறை நகைச்சுவையா இருக்கு டா!! வாழ்க என் செல்லம்:)

    ReplyDelete
    Replies
    1. அம்முவுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது இல்ல அதான் எல்லாம் நானே எழுதிட்டேன். நீங்க வாழ்த்துன்னு சைன் மட்டும் போட்டா போதும். ஹா... ஹா .....அம்முக்குட்டி இப்பிடி வாழ்த்தினா நான் எழுதிட்டே இருப்பேனே. ம்..ம்.. நன்றிடா அம்மு!

      Delete
  7. வாழ்த்துக்கள் சகோதரி...
    மிக்க மகிழ்வு ...
    வாழ்த்துக்கள்
    நண்பர்களின் முகநூல் தகவல்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  8. செம எல்லாமே.. குறிப்பா நிலா கவிதைகள் அனைத்தும் சூப்பர்.. வாழ்த்துகள்..தொடரட்டும் கவிதைகள் ஆயிரமாக..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  9. நிலவுப்பெண் சொல்கின்றாள் இன்னோர் செய்தி
    ............நிதமுங்கள் கவிபடித்து வளர்ந்த செய்தி!
    சிலநேரம் கவியொன்றும் காணா தாகி
    ...........சற்றிளைத்துத் தேய்ந்தொழிந்து போன செய்தி!
    கலைவடிவை கவிப்பெருக்கைக் கண்டுகண்டு
    ...........கதிர்விட்டும் ஒளிசிந்தக் கற்ற செய்தி!
    உலவுமகள் உள்ளன்பால் உரைக்கக் கேட்டேன்!
    ...........உங்கள்கவி உலரிருட்டைக் கொளுத்தும் தீயாம்!
    நூறு ஆயிரம் ஆகட்டும் .
    வாழ்த்த அப்போதும் வருவோம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரரே! என்ன இப்படி எல்லாம் எழுதி கலாய்கிறீங்களா என்ன ம்...ம்.. நிலவு வந்து சொல்லிச்சா அப்பிடின்னு ...இருக்கும் இருக்கும் தங்கள் கவித் திறனுக்கு நிச்சயமாக அனைத்தும் அடிமையாகி பேசினால் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது சகோ! இல்லையா நாங்கள் அனைவருமே கட்டுண்டு தானே கிடக்கிறோம்.
      அப்பாடா ஒரு மாதிரி தங்களிடம் இருந்து அவார்ட் கிடைச்சிட்டுது ம்..ம்.. மிக்க நன்றி சகோ! வாழ்த்திற்கும் வரவிற்கும்.

      Delete
  10. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நூறு விரைவில் ஆயிரமாக வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  11. ஒரு நூறு படைப்பினை
    ஒளிர்வாக படைத்திட்டாய்
    ஓராயிரமாக பெருகி
    ஓங்கி வளர்ந்து
    நிலைபெற்று புகழோங்கி
    இன்புற்று வாழ்ந்திட
    மனமார வாழ்த்துகிறேன்.

    வாழ்க வளமுடன் தங்கை இனியா..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  12. ஓராயிரம் என்ன!.. பல்லாயிரம் என பைந்தமிழ்ப் பாக்களை வடித்திட நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  13. இன்னொரு நூறு கவிதைகளை
    ஈந்திட வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் ....!

      Delete
  14. வணக்கம் இனிய இனியா!

    இனியா எனும்போதே எங்கும் மகிழ்ச்சி!
    பனிமலரே பாடுபல பா!

    நூறு கவிதையொடு நூற்பாயே மேலுமுன்
    பேருடன் ஓங்கப் புகழ்!

    பொங்கும் தமிழுயரப் போற்றி வளர்த்திடுக!
    எங்கெணும் உன்பெயர் இட்டு!

    நூறு பல்லாயிரமாகப் பெருக உளம் நிறைய வாழ்த்துகிறேன் தோழி!
    எழுத எழுத ஏற்றம் பெறும் எழுத்துக்கள்!
    பெருகிடும் சிந்தனைச் சிறப்புடன் படையுங்கள் இன்னும் பல!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி நலம் தானே !

      இனிய கருத்தை ஈந்து
      இனிமை சேர்த்தாய் இன்மகளே
      நிக்குமமென் நெஞ்சில் நின்அன்பு
      நிலையாய் என்றும் !

      வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
      பாவோடு பார் போற்ற!
      மிக்க நன்றிம்மா !வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  15. ஒரு நூறு பலநூறாக வாழ்த்துக்கள்! அனைத்து கவிதைகளும் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  16. ரஜனிகாந்தின் வசனம் நினைவுக்கு வருது சகோதரி! "நான் ஒரு த்டவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி.." என்பது போல்....இனியா சகோதரி 100 கவிதைகள் போட்டுருக்காங்கன்னா....அது பல்லாயிரத்திற்கு சமம் என்பது மட்டுமல்ல அது அதையும் தாண்டி பெருக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தமிழ் கூறும் நல்லுலகம் தங்களை எப்போதும் நினைவு கூறும் அளவிற்கு!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆஹா நன்றி நன்றி சகோ தோழி கீதா !மிக்க நன்றி ! வருகைக்கும், இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  17. சகோதரி 100 கவிதைகளா..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    கவிதை பல்கிப் பெருகி
    கரை புறண்டு ஓடிடவே
    ஆயிரம் ஆயிரம் பாக்கள்
    இனியா புனைய வாழ்த்துக்கள்.

    நன்றி தோழி

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க தோழி மிக்க மகிழ்ச்சிம்மா. மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  18. வாழ்த்துக்கள் சகோ.
    நூறு கவிதைகளா!!!!
    இந்த நூறு இன்னும் பல நூறுகளாக மாறுவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  19. எதற்கு தாழ்ந்திடும் எண்ணம் வரவேண்டும் தோழி? வழியே இல்லை..மேன்மேலும் பல நூறு பல ஆயிரம் கவிதைகள் பாடி எங்களை மகிழ்விக்க கடமைப்பட்டிருக்கிறீர், ஆமாம் சொல்லிட்டேன் :) மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி!
    படங்களும் அவற்றிற்கான கவிதைகளும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நம்பிக்கையோடு கருத்தை வழங்கி ஊக்கப் படுத்தும் போது உற்சாகம் நிச்சயம் வரத்தானே செய்யும். சொல்லிட்டீங்க இல்லம்மா முயற்சி செய்கிறேன். மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  20. இந்த நூறு ஒரு தொடக்கம் மட்டுமே சகோதரி ! எண்ணிக்கையில் மட்டுமல்ல... கவிதையின் தரத்திலும் உயர்ந்த நீங்கள் இன்னும் பல சிகரங்கள் தொடுவீர்கள் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  21. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா !தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் ...!

      Delete
  22. வணக்கம் !

    என் அன்புத் தோழியே தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி !
      தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
      உரித்தாகட்டும் !

      Delete
  23. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
      உரித்தாகட்டும் !

      Delete
  24. வணக்கம்
    அம்மா.

    100 போதது..இன்னும் ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

      Delete
  25. மிக்க நன்றி ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் !

    ReplyDelete
  26. நூறு ஆயிரமாக வாழ்த்துகள் மா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா !

      Delete
  27. கவிதையும் அதற்கான பொருத்தமான படங்களும் மிகவும் அருமைம்மா. அதிலும் பாறைக்குப் பின்னால ஏன் ஒளிஞ்சிருக்கே?

    எதிரிகள் நடமாட்டம் அதிகம் அதனால யாராவது
    வர்றாங்களான்னு பார்க்கத் தான்

    எதுக்கு?....
    என் நாட்டை சூறையாடப்
    பார்கிறாங்க இல்ல அதனால
    குண்டு போடத்தான்“ எனும் வரிகளில் அந்தக் கதிரின் வெப்பம் படிப்பவர் நெஞ்சில் பாய்கிறது.
    நூறு கவிதைகள் பதிவு நிச்சயமாகப் பாராட்டப் படவேண்டிய பதிவுகள்
    விரைவில் இந்தப் பூக்களைத் தொடுத்து ஒரு மாலையாக்கித் தர வேண்டுகிறேன். வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா ரொம்ப நாளைக்கப்புறம் வருகை கண்டு உவகை கொண்டேன் அண்ணா. நலம் தானே! தங்கள் இனிய கருத்து நம்பிக்கை ஊட்டுகிறது மேலும் தங்கள் கருத்தை ஏற்று ஆவன செய்கிறேன் அண்ணா மிக்க நன்றி! பதிவர் திருவிழாவை யொட்டி பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கும் இவ் வேளையிலும் வந்து வாழ்த்தியமை நெஞ்சை நெகிழ வைக்கிறது. நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா!
      எல்லா நலன்களும் கிட்ட வாழ்த்துகிறேன் அண்ணா.....!

      Delete
  28. ரொம்பவே லேட்டா வந்து வாழ்த்துகிறேன். இன்னும் பல நூறு எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ லேட்டாவேனும் வந்தீர்களே ம்..ம்..ம்..
      மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  29. சகோதரிக்கு வணக்கம்..! நான் ரொம்ப லேட் ...அப்பப்பா.. கவிதை ஓவியங்களும்,ஓவியக் கவிதைகளும் அருமை.
    அதிலும் இந்த வரிகள்....சினிமாப் பட்டு போலவே என் காதில் ஒலிக்கிறது..!
    " பார்த்த விழி பூத்திடவே
    பார்த்திருக்கிறாய்
    வேர்த்திடவே விதி யெனவே
    வாழ்ந்திருக்கிறாய்
    கனியும் இந்தக் காதல்
    என்றா காத்திருக்கிறாய்
    பனியிலும் மழையிலும்
    தோய்ந்திருக்கிறாய்"....
    ..வாழ்த்த வார்த்தைகள் இல்லை!
    வாழ்க தமிழுடன்.!
    வாருங்கள் என் "எண்ணப் பறவை"க்கு.

    ReplyDelete
  30. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். இதோ வருகிறேன்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.