நான் தனிமை தேடி வந்தேன். இயற்கையை ரசிக்கத் தான் ஆனாலும் உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை கலைந்து விடுங்கள் சீக்கிரம் சீக்கிரம்.
கொஞ்சம் பொறு ஸ்ஞானம் செய்துவிட்டு வருகிறேன்.
நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா.
ஏன் தண்ணீரை ஆட்டுகிறீர்கள் நான் என் அழகை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியமாகவும் காவியமாகவும் படைக்கும் என்னை
நான் ரசிக்கக் கூடாதா என்ன.
அம்மாடியோ எம்புட்டு தண்ணி
எப்பிடியம்மா இதைக் கடந்து வருவேன் .
என்ன பார்க்கிறீங்க இவை உங்களுக்கு தரப் போறது இல்லை. இது எனக்கு
மட்டும் தான் சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க. என்னோடு பழகலாம் ஆனால் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
வட்டமிடும் பட்டாம் பூச்சி மகிழ்ச்சியில் கிட்டவில்லையே எமக்கு.
கூட்டுக்குள் நாம்
.
உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே.
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கற்பனைக்கடல் வரிகளுக்கு உரிய வகையில் படங்கள் அழகு இறுதியல் சொல்லி முடித்த விதம் சிறப்பாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteகவியும் படமும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஒ! படக்கவிதையா!!!
ReplyDeleteசூப்பர் செல்லம்:) முதலில் நான் குழம்பி போய்ட்டேன்:) இப்போ புரியுது:)நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா. ** நல்லபடியா போய்ட்டு சீக்கிரம் வந்திருங்க:)) நான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் மறந்துராதீங்க:))
**ஆனால் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.** ச்சே !! ச்சே!! நான் எதிர்பார்க்கலைப்பா:)))
**உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே# அட! எனக்கும் அப்படிதான் தோணுச்சு:)).
ஹா ஹா ... என்ன அம்மு நான் நினைச்சேன் ஏமாந்திட்டீங்களே அம்மு. ஆமா என்னை கலாய்கிறீங்களா? கலைக்கிறீங்களா? ம்..ம்..இன்னும் நான் தங்கள் அன்பு மழையில் நனைய வேண்டும். ஆகையால் இப்போதைக்கு உங்களையெல்லாம் பிரிந்து எங்கேயும் போவதாக இல்லை அம்மு ஹா ஹா.. அது .நானில்லை அதோ அந்த பறவை தான் சொல்லிக் கொண்டு போகிறது. சும்மா வித்தியாசமாக ட்ரை பண்ணினேன்மா . ஒரு changeக்கு தான் எப்படி இருக்குமோ என்று பயந்திட்டே போட்டேன். மிக்க நன்றிம்மா உடனும் கருத்திட்டு வயிற்றில் பால் வார்த் தமைக்கு.
Delete**உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே# அட! எனக்கும் அப்படிதான் தோணுச்சு:)).//
Deleteஅவ்வ்வ்வ்...:( நீங்களுமா?...!..:))
படமும்..கவிதையும் நயம்
ReplyDeleteதண்ணீரை ஆட்டவில்லை... அம்மா...
//ஏன் தண்ணீரை ஆட்டுகிறீர்கள் நான் என் அழகை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியமாகவும் காவியமாகவும் படைக்கும் உன்னை ...// ஆட்டாமல் தான் கமண்ட் பண்ணினேன் சரியா...
இளய நிலா மேல்...சூப்பர்...
நீங்கள் நிலவோடு சங்கமிக்கலாம்...எங்களுக்கு ஆட்சேபனையில்லை...
ஆஹா..எனவென்று சொல்வது..இனியாவின் படத்தயும் கவிதையையும்...ஒரு ஓ போடு இனியாவுக்கு...
நன்றி தோழி சூப்பரான பதிவு.
ஹா ஹா உண்மை தானே. என்ன no no நான் போக மாட்டேனே உங்களை எல்லாம் விட்டு, அங்கு போனால் திரும்பி வரமுடியாதே அங்கிருந்து வாழ்த்த தான் முடியும். பரவாய் இல்லையா naughty girl அப்புறம் என்னை அனுப்பிட்டு .......என்ன செய்வதாக உத்தேசம் . ம்...ம்.... ஹா ஹா மிக்க நன்றிம்மா இப்படி கமெண்ட் வரும் என்று எதிர்பார்க்கலை ரொம்பவே பயந்திட்டேன் மிக்க மகிழ்ச்சிம்மா.
Deleteஅடடே நீங்கள் வேறு விதமாக புரிந்து கொண்டீர்கள் என்பது உங்கள் கமண்டை பார்த்தபின் தான் புரிந்தது. ஐய்யையோ..உங்களை நான் அப்படி நினைப்பேனா சகோதரி.
Delete// நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா. ..//..என்று நீங்கள் சூரியைப் பார்த்து கேட்டீர்கள் என நினைத்தேன். இரவில் வரும் நிலவை ரசிக்க (சூரியனுக்கு) ஆட்சேபனை உண்டா என நீங்கள் (படம்) கேட்பதாக நினைத்தேன். அதனால் இரவில் வரும் நிலவை ரசிக்க நானும் தொந்தரவு செய்யாமல் நீங்கள் ரசிக்கலாம் ஆட்சேபனை இல்லை (ரசிப்பதை மனம் சங்கமிப்பதை) என்ற அர்த்தத்தில் கருத்திட்டேன். இப்படி ஒரு அர்த்தம் நீங்கள் நினைப்பீர்கள் என கனவிலும் நினைக்கவில்லை. நானும் பயந்து விட்டேன் சகோதரி.
சா ச் சா உமா குட்டி பயந்திட்டீங்களா அப்பிடியெல்லாம் ஒண்ணுமே இல்லை நான் தான் சும்மா கலாய்க்கடா dont worry மேல பாருங்க அம்முவுக்கும் அதை தான் சொல்லி இருக்கேன். எனக்கு தெரியாதா உங்களை எல்லாம்.
Delete// இப்படி கமெண்ட் வரும் என்று எதிர்பார்க்கலை ரொம்பவே பயந்திட்டேன் மிக்க மகிழ்ச்சிம்மா. // இது சொன்னது என் பதிவுக்கு நல்ல கருத்து வருமோ வராதோ என்று பயந்தேன் ஆனால் நீங்கள் ரசித்து நல்ல கருத்து இட்டது மிக்க மகிழ்ச்சி என்று தான் சொன்னேன் அந்த naughty girl சொன்னது சந்தோஷத்தில் ok வா
அந்த பறவை கேட்பதாக தான் நான் எழுதினேன்மா ஒரு முறை படத்தை பாருங்கள்மா. இன்னும் அதை விபரித்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. படம் புரிய வைக்கும் என்று நினைத்தேன் புதிய முயற்சி தானே. அது தான் போலும். கருத்தையும் சரியாக எழுதாமல் குழப்பிவிட்டேன் இல்லைடா.
கூல் கூல் ok வா மிக்க நன்றிம்மா! மீண்டும் வந்து கருத்து இட்டமைக்கு.
வணக்கம் இனிய இனியா!
ReplyDeleteகாட்சியும் கானமும் காட்டிக் கவருகின்றீர்!
ஆட்சியைச் செய்வீர் அமர்ந்து!
அற்புதமான காட்சிகளும் அதற்கேற்ப எண்ணத் தூரிகையால்
எழுதிய கவியோவியமும் அதி சிறப்பு!
அதுசரி….! திருஷ்டிப் பரிகாரமாக ஒன்று வேண்டுமே!..:)
இளையநிலாவை ஏற்றிவிட்டிருக்கின்றீர்கள்!..:)
இளையநிலா மேல்//.. இருக்கட்டும் இருக்கட்டும்
மேலேயே இருந்துவிடட்டும்..:)
அத்தனையும் அருமை! அன்பொடு என்னை(யும்) நினைத்து
இங்கு இணைத்தமைக்கும், கலாய்த்தமைக்கும்
உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!
வாங்க கவிஞர் அம்மா எப்பிடி இருக்கீங்க ம்..ம்.. அவங்களை நான் ஏத்தலைம்மா அவங்க தானாவே ஏறிட்டாங்கல்ல. அது அவங்களுக்கு உரிய இடம் தான் அங்கிருப்பது தான் அவருக்கு அழகு இல்லையா நான் சும்மா இருந்து அந்த அழகை ரசிக்கிறேன். ஹாஹா ..என்ன நம்ம இளைய நிலா திருஷ்டிப் பரிகாரமா உங்களுக்கு.கிர்ர்ரர்ர்ர்ர் அவங்க மவுசு உங்களுக்கு சரியா தெரியலைன்னு நினைக்கிறன். வேனுன்னா நாலு பெரிய மனுஷங்களை விசாரிச்சு பாருங்க. யாருவா.....அதான் நம்ம சீராளன், சகோதரர் விஜு போன்றோரை த் தான் ஹா ஹா ....
Deleteமிக்க நன்றிடா வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
வாழ்க நலமுடனும் வளமுடனும் .....!
படமும் கவிதையும் அழகு! சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
Deleteபடங்களும் அருமை அதை விட அதற்கு ஈடான கேப்ஷனும் ரொம்ப அழகு...
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வரவுக்கும் வாழ்த்துக்கும்.
DeleteSago,
ReplyDeleteinaya thodarbil undaana pirachanai innum sariyaaga villai.
Porutharrtungal.
Naalai Sariyaagum endu nambugiren.
Vittuponatharkkum vanthu Karuthukkoorugiren.
nandri.
அடடா அப்பிடியா சகோ பரவாய் இல்லை ஆறுதலாக வாருங்கள்.
Deleteபொறுமையாக காத்திருக்கிறேன். \\Vittuponatharkkum vanthu Karuthukkoorugiren//. ஹா ஹா மிக்க நன்றி சகோ தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ. சீக்கிரம் கணினி சரியாக வாழ்த்துக்கள் ஹா ஹா ....!
அழகான படங்களும், அதற்கேற்ற கவிதைகளும் இவ்வளவு சிறப்பாக வரக்காரணம், நீங்கள் சந்தோசமாக இருந்த தருணத்தின் வெளிப்பாடுதான். :)
ReplyDeleteஇந்த பிஸி உலகத்தில் உங்களுக்குனு சில நேரங்கள் செழவழிக்கக் கிடைத்த அதிர்ஷ்டசாலி நீங்கனு தோணுது. :)
ஓஹோ நீங்க அப்பிடி வர்றீங்களா அதெல்லாம் ஒன்னும் இல்ல சகோ இது லாங் வீக் எண்டு அது தான் நீங்க வேற சகோ நேரமே இல்லாமத் தான் ஓடி திரிகிறோம். இருந்தாலும் இதன் மேல் இருக்கிற ஆர்வத்தால் தூக்கத்தை குறைச்சிட்டு இதில உட்காருவேன். மற்றபடி வேலைக்கும் போகணும் வீட்டு வேலையும் செய்யணும் சகோ அதிர்ஷ்டசாலி என்றெல்லாம் சொல்ல முடியாது கனடாவில இல்ல இருக்கிறோம்.ஹா ஹா ...மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteபடங்களும் கவி வரிகளும் அருமை...மா
ReplyDeleteவணக்கம் கவிஞரே! இவ்வளவு பிஸிகுள்ளேயும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிம்மா.
Deleteசகோ. ஒவ்வொன்றும் அருமை சகோ. சூப்பர். சூப்பர்.
ReplyDeleteஆமாம், படத்தை வச்சுக்கிட்டு, கவிதையை எழுதுவீங்களா? இல்லை கவிதையை எழுதிட்டு அதற்கான படத்தை தேடி கண்டுப்பீடிப்பீங்களா?
ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்
வழமையா அப்பிடித் தான் ஆனால் இது அப்படி அல்ல படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதற்காக எழுதினேன்.
Deleteமிக்க நன்றி சகோ! வருகைக்கும்ரசித்து எழுதிய இனிய கருத்துக்கும்.
வந்துட்டோமில்ல...!
ReplyDeleteமுதல் பின்னூட்டமே சகோதரியின் பதிவிற்குத்தான்!
பிரச்சனை இணைய தொடர்பில்..!
நான்குநாட்களுக்குப் பின் தற்பொழுதுதான் வந்து சரிசெய்ய அவர்களுக்கு நேரம் வாய்த்தது போலும்.
முதல் அடிகள் பறவைகள் மனிதனைப்பார்த்துச் சொல்வதுதானே..?!
ஏனோ விலங்குகளும் பறவைகளும் மனிதனை ரசிப்பதில்லை.
அவற்றை ரசிக்கவும் ருசிக்கவும் மனிதனுக்குத்தான் வாய்த்திருக்கிறது.
அடுத்த வரிகளில் ஆட்சேபணை உண்டு..
அந்தப் பறவை நிலவோடு சங்கமிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு சூரியனை நோக்கிப் பறக்கவில்லையே???!!
அடுத்த வரிகள் அஃறிணையிலும் Narcissus .......?!!!!
அடுத்து “ எதையும் எதிர்பார்க்கக் கூடாது..“ இப்படிச் சொல்பவன் நிச்சயம் மனிதனாய்த் தான் இருக்க வேண்டும்.
நிலவின் அருவிக் கண்ணீர்....ஆஹா ஆஹா அருமையான தற்குறிப்பேற்றம்!
அடுத்து கூடுகிழித்து வெளியே சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் குதூகலத்தோடு இணைய வெளியில் பறந்து எங்கள் கண்நிறையும் பலவண்ணங்களாய் உங்கள் கவிதைகள்..!
இறுதியாய்... இளமதியாரின் நலம் புனைந்துரைத்தலில்,
“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி“
வள்ளுவன் குரலின் (குறளின்) எதிரொலிப்பு..!
அவ்வளவுதான்!
மிக்க நன்றி சகோ ! வந்து பதிலிடுகிறேன்..
Deleteஹா ஹா வந்துவிட்டீர்களா வாருங்கள் சகோ! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து அழகாக முத்து முத்தாக கருத்து இட்டுள்ளீர்கள். தங்கள் வருகையில் மட்டற்ற மகிழ்ச்சியே. தங்கள் கருத்து எப்போதும் எனக்கு அவார்ட் கிடைத்தது போலவே தோன்றும்.
Delete\\\அந்தப் பறவை நிலவோடு சங்கமிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு சூரியனை நோக்கிப் பறக்கவில்லையே???!!/// ஆமால்ல எனக்கு தோணவே இல்லை சகோ மிக்க நன்றி இதை தான் நான் தங்களிடம் இருந்து எப்போதும் எதிர்பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ. நான் படத்தை மாற்றி விட்டேன்.
நான் நினைத்தேன்.( நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் என்ன இது தண்மையாய் இல்லியே அடடா பகலா எரிச்சிடுவானே திரும்பிடலாம்) இப்படி எழுதலாம் என்று தான் பார்த்தேன் அப்புறம் அது சரிவராது ஏனெனில் தடுமாற்றம் ஏமற்றம் எல்லாம் மனிதர்களுக்குத் தான் ஏனைய ஜீவன்களுக்கு இல்லை அவை உணர்வுபூர்வமாக சரியாக அறியும் ஆற்றல் மிகுந்தவையல்லவா. சுனாமியின் போது மனிதரை தவிர எந்த ஜீவன்களும் சாகவில்லையாமே. அதனால் படத்தை மாற்றிவிட்டேன். எப்பிடி .. மிகுந்த ஊக்கத்தை வழங்க வல்ல தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சகோ...! மேலும் மேலும் தங்கள் புகழ் ஓங்க என் வாழ்த்துக்கள் ....!
இனியா சகோதரி எப்படி இதை மிஸ் பண்ணினோம்?!!! கையைக் கொடுங்கள்! அடேங்கப்பா! படத்திற்கு கவிதை! அருமை! சகோதரி....அதுவும் மான் பேசுவதும்,
ReplyDeleteவட்டமிடும் பட்டாம் பூச்சி மகிழ்ச்சியில் கிட்டவில்லையே எமக்கு.
கூட்டுக்குள் நாம்//
உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே.// அருமை அருமை.....சகோதரி இளைய நிலா ...ம்ம் அருமை...அருமை...
என்ன சகோ எப்பிடியோ வந்தாச்சில்ல அதுவரை சந்தோஷம் தான். இதுக்கெல்லாம் கருத்து எப்பிடி போடுறது என்று வரலையோ என்று அல்லவா நினைத்தேன். ஹா ஹா... சும்மா சகோ. ...ஆமா உண்மையாகவா சகோ? இனிய கருத்தை கண்டு தாங்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்தேன் நானிதை எதிர்பார்க்கவில்லை.என்னை மேலும் மேலும் ஊக்கப் படுத்தும் வகையில் நல்கும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி கீதா நன்றி சகோ....!
Deleteஇன்னும் நிறய எதிர்பார்க்கிறோம் உங்களிளிடம்...
ReplyDeleteஇந்த முயற்சி அருமை...
வேறு என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள் ?
ஆவலாக காத்திருக்கிறோம்...
வாங்க சகோ நலம் தானே. ம்..ம்...ம் அப்படியா சொல்கிறீர்கள். சரி இனிமே தான் யோசிக்கணும் சகோ. சொல்லிட்டீங்க இல்ல செஞ்சிட்டாப் போச்சு. நான் எதிர்பார்க்கலை சகோ.மிக்க மகிழ்ச்சி சும்மா தோணிச்சு உடனேயே போட்டேன் 20 நிமிடம் ஆகி இருக்குமோ தெரியாது. எனக்கு இப்போ கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது சகோ இனி கடுமையாக முயற்சி செய்கிறேன். தங்கள் தரும் ஊக்கதிற்கு மிக்க நன்றி சகோ.
Deleteவாழ்க வளமுடன் ...!
படங்களும் பாவரிகளும் நன்று
ReplyDeleteதொடருங்கள்
வாருங்கள் சகோ!நலம் தானே நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். கணினி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கிறன். மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஅன்புள்ள திரு.jகாவியக்கவிக்கு,
ReplyDeleteநகரும் படங்களைப் பார்த்து...
வேறெங்கும்-
நகராத மனங்கள்!
குட்டிக் கவிதைகளைக் கொட்டிக்கொடுத்து...
எட்டிப் பிடித்தே இளையநிலாவைக்
கூட்டிக் கொண்டு கொண்டாடி மகழும்...
தங்களின் தமிழ்க்கவிதை!
‘ என்ன கவலையோ கண்களில் நீர் அருவியாய் கொட்டுகிறதே’
படமும்- கவிதைகள் அனைத்தும் அருமை.
வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்!
Delete