Friday, April 25, 2014

சாயி நாதா சாயி நாதா சர்வமும் நீயே

             


சாயி நாதா சாயி நாதா
சர்வமும் நீயே
ஷ்ரிடி சாயி ஸ்ரீ சாயி -எம்
சித்தம் எல்லாம் நீயே   ( சாயி )

சாயி நாமம் சொல்ல சொல்ல
சந்தன மணமே கமழும் எங்கும்
சீரும் சிறப்பும் விரும்பி சேரும்
சிந்தையில் தெளிவு காணும்   ( சாயி )

சாயி நாமம் செய்யும் மாயம்
சான்றோர் சகவாசம் கிட்டும் 
சீறும் சர்ப்பம் சாந்தம் கொள்ளும்
சீக்கிரம் சிரசில் ஞானம் சிந்தும்  ( சாயி )

பாழும் வாழ்வும் மீளும் வாழும்
வீழும் போதும்அவர் கரங்கள் நீளும்
சாயிபாதம் பற்றிட பாப நாசம்
பேசும் பேச்சில் வாசம் வீசும்     ( சாயி )

அவர்கருணை முழுதும் நம்வசம்
நம் மனது கொள்ளும் பரவசம்
நம் விதியும் செல்லும் அவர்வசம் -அஞ்சி
எமனும் கொள்ளான் தன்வசம்    ( சாயி )


 


நோய் பிணிகள் நலிந்து போகும்
சேதம் யாவும் சிதைந்து போகும்
இன்னல் யாவும் இடிந்து போகும்
இயற்கையும் இசைந்து வாழும்  ( சாயி )

ஜென்மம் முழுதும் இன்பம் தங்கும்
வன்மம் முழுதும் வடிந்து போகும்
வெந்த புண்ணை வருடிப்போகும்
சொந்த மண்ணும் சிந்து பாடும்   ( சாயி )
       


வேழமுகத்தான் வளைய வருவான்
இளையமுகத்தானும் இணைந்து கொள்வான்
ஆதி சக்தி அன்பை பொழிவாள் -பிறைசூடிய
பெருமான் வேதநாயகனும் வாழ்த்திச் செல்வான்  ( சாயி ) 

திருமாலும் நீரே திருப்பார்வை பாரும்
விருப்போடு ஏழைஎம்மை காரும் 
அடைக்கலம் புகுந்தோம் ரட்சிப்பீரே -இத்
திருக்கதை கேட்டபவர் திளைப்பார் பாரே      (சாயி)  


22 comments:

 1. சாயி நாதனுக்கு
  காவியக் கவியின்
  கவி வரிகள்
  அருமை
  சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன்.
   நன்றி சகோதரா ! வாழ்க வளமுடன்...!

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா !
   வாழ்க வளமுடன்...!

   Delete
 3. https://www.youtube.com/my_videos?o=U

  heartening Sayee Song. Listen here

  subbu thatha
  www.subbuthatha.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தாத்தா! பாடல் கேட்டேன் தாத்தா மிக அருமை !என் பாடலுக்கு உயிர் அல்லவா கொடுத்திருக்கிறீர்கள். எப்படி நன்றி சொல்லப் போகிறேன் தெரியவில்லையே. இனிய குரலில் வழங்கிய பாடல் அற்புதம் தாத்தா நன்றி ....நன்றி....நன்றி....
   பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தாத்தா...!

   Delete
 4. https://www.youtube.com/my_videos?o=U
  heartening sayee song.
  you may listen here.
  subbu thatha.

  ReplyDelete
  Replies
  1. Sorry, thatha I couldnt listen i get a message like this.

   Sorry, it appears you don't have adequate permissions to view this page. or
   no videos were found.

   Delete
 5. உங்களுடைய இந்த கவிதையை படிக்கும்போது, இங்கிருக்கும் சாய் பாபாவின் கோவிலில் பாடும் பஜன் தான் நியாபகத்துக்கு வருகிறது சகோதரி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 6. சிறந்த பக்தி கவி/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 7. இன்னல் யாவும் இடிந்து போகும்
  இயற்கையும் இசைந்து வாழும்//
  வரிகள் அனைத்தும் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ ! தங்கள் வருகை கண்டு.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர வேண்டுகிறேன்.

   Delete
 8. சாயி நாமம் சொல்ல சொல்ல
  சந்தன மணமே கமழும் எங்கும்
  சீரும் சிறப்பும் விரும்பி சேரும்
  சிந்தையில் தெளிவு காணும்!..

  சாயிநாத குருவே சரணம்!..

  மனம் நிறைந்த கவிதை..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ ! மிக்க நன்றி!வருகைக்கும் கருத்துக்கும். சாயி அருளால் எல்லா நலன்களும் உண்டாகட்டும்.

   Delete
 9. வணக்கம்
  அம்மா
  சொற்சுவைகவிச்சுவை நிறைந்த சாயி நாமம் பற்றி கூறுகிற (பா) மகிக அருமையாகஉள்ளது.. வாழ்த்துக்கள் அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆஹா மீண்டும் வந்தாச்சா !வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக..! நீண்ட நாளைக்கு பின் அல்லவா அது தான் இந்த வரவேற்பு. சாயி தயவில் சகலதும் சிறக்கும் என்றும்.
   மிக்க நன்றி ரூபன் ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 10. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 11. பாடல் அருமை உமையான பக்தியுடன் எழுதி இருகிறீர்கள். மாதம் ஒருமுறை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு செல்வதுண்டு

  ReplyDelete
 12. மிகுந்த பக்திப் பரவசம் ஊட்டும் அழகிய பா மாலை வாழ்த்துக்கள்
  தோழி .குருவே சரணம் !

  ReplyDelete
 13. அன்பு சகோதரிக்கு வணக்கம்
  அற்புதமான பக்தி உணர்வு வெளிபடும் வகையில் அமைந்த கவிதை கண்டு மிகவும் மகிழ்கிறேன். ஒவ்வொரு வரியும் இறைவனுக்கு சூட்டப்படும் பா(பூ)மாலை. வேழமுகத்தானையும் சாய்பாபாவையும் இணைத்திருக்கும் தங்கள் சிந்தனைக்கே உங்களே பாராட்ட வேண்டும். அழகான பாடல் சிறப்பான வரிகள். படித்து அகம் மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.