தாயே நலமா எம்
நினைவே இலையா
நினைவே இலையா
தவிக்கின்றேனே உன்
தளிர்முகம் காணாமல்
தளிர்முகம் காணாமல்
எப் பிறப்பிலும் நீயே
எந்தன் தாயே
எந்தன் தாயே
நிலை மாறும் உடன்
உன் மடிமேல் தலை வைத்தால்
தடம் மாறும் நாடிய
துன்பம் இடம் மாறும்.
துன்பம் இடம் மாறும்.
அன்புடன் புத்திமதிகள்
அள்ளி விதைப்பாள்
ஆசை தீர அணைத்துக் கொள்வாள்
அள்ளி விதைப்பாள்
ஆசை தீர அணைத்துக் கொள்வாள்
ஆறுதல் பெறவே
தினந்தோறும்
தினந்தோறும்
ஆண்டவனை நாம்
பார்த்ததில்லை அவன்
பார்த்ததில்லை அவன்
அருள் மொழி என்றும்
கேட்டதில்லை
கேட்டதில்லை
கருணை முகமோ
கண்டதில்லை
கண்டதில்லை
கற்சிலையில் அன்னை
தெரியவில்லை தாயே
நீயே என்றும் எந்தன் தெய்வம்
தெரியவில்லை தாயே
நீயே என்றும் எந்தன் தெய்வம்
கரு கொள்ளாதிருந்தால்
கவலை கொள்வாள்
கவலை கொள்வாள்
தலை குளிக்காதிருந்தால்
துள்ளிக் குதிப்பாள்
தவமே இருந்து
ஈன்றாள் என்னை
பெற்றதும் பிள்ளையே
பெரிதென நினைப்பாள்
வற்றாத பாசம்
வாரி இறைப்பாள்
துள்ளிக் குதிப்பாள்
தவமே இருந்து
ஈன்றாள் என்னை
பெற்றதும் பிள்ளையே
பெரிதென நினைப்பாள்
வற்றாத பாசம்
வாரி இறைப்பாள்
அல்லும் பகலும்
வருந்தி உழைப்பாள்
ஆசை வார்த்தை
பேசிட மறுக்காள்
வருந்தி உழைப்பாள்
ஆசை வார்த்தை
பேசிட மறுக்காள்
தண்ணீரில் நின்று
தத்தளிப்பாள்
தத்தளிப்பாள்
தலை தடவிடவே
மறந்திட மாட்டாள்
மறந்திட மாட்டாள்
உயரிய குணங்கள்
ஊட்டி வளர்ப்பாள்
தன்னம்பிக்கையும்
சேர்த்தே தருவாள்
சேர்த்தே தருவாள்
தயக்கம் என்பதை
தவிர்த்து விடுவாள்
தவிர்த்து விடுவாள்
ஊன் உறக்கம் மறந்து
பேணி வளர்ப்பாள்
பேணி வளர்ப்பாள்
எண்ணம் முழுதும்
எம்மை சுமப்பாள்
எம்மை சுமப்பாள்
எண்ணிய எண்ணம்
ஈடேற்றி தருவாள்
ஈடேற்றி தருவாள்
உயிரிலும் மேலாய்
எண்ணி வளர்ப்பாள்
எண்ணி வளர்ப்பாள்
உதிரத்தை பாலாய்
ஊட்டி விடுவாள்
ஊட்டி விடுவாள்
அழுதாலும் ஆறுதல் தருவாள்
அடைமழை போல்
அன்பை பொழிவாள்
அன்பை பொழிவாள்
தவறு செய்தால்
தண்டனை தருவாய்
தவறி விழுந்தால்
நொந்து விழுவாய்
நொந்து விழுவாய்
நோயில் விழுந்தால்
கதறி அழுவாய்
கதறி அழுவாய்
கனவுகள் பலவும்
கண்டிடுவாய்
கண்டிடுவாய்
கல்வியினை நன்கு
புகட்டிடுவாய்
புகட்டிடுவாய்
கண் மூடிப் போனாய்
எங்கே- நான்
எங்கே- நான்
கண்ணீரில் தானே இங்கே
விண் மீன்கள்
ஆனால் நானும்
ஆனால் நானும்
கண்டிடுவேனோ உன்னை
மழைநீர் ஆகியேனும்
மறுபடி வீழ்வேனோ
உன் மடியினில்
தவழ்வேனோ
மறுபடி வீழ்வேனோ
உன் மடியினில்
தவழ்வேனோ
எத்தனை பிறவி
எடுத்தாலும்
எடுத்தாலும்
எப்படி ஈடு செய்வேனோ
இணையில்லா
உன் அன்பிற்கு
உன் அன்பிற்கு
மறு பிறப்பினிலேனும் தாயே
என்தன் மகளாய்
ஆவாய் நீயே
ஆவாய் நீயே
தாயே உந்தன்
காலடியை
காலடியை
தொழுதால் சூழும்
நலம் யாவும்
நலம் யாவும்
நடமாடும் தெய்வம் அம்மா
நீ அதியுயர்ந்த
செல்வம் அம்மா
செல்வம் அம்மா
தாய்க்குச் சேயாய் பிறக்க வேண்டும். பெற்ற கடனைத் தீர்க்க வேண்டும். அருமையான கவிதை. அன்னையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் தோழி ! நீண்ட நாட்களின் பின் முதல் வருகை மிக்க மகிழ்ச்சி அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி ....!
Deleteமிக்க நன்றி ! வருகைக்கும் தருத்துக்கும்.
எத்தனை பிறவி எடுத்தாலும்
ReplyDeleteஎப்படி ஈடு செய்வேனோ!..
இனிய கவிதை..
வாழ்க நலம்!..
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
அன்னையர் தின வாழ்த்துக்கள் என் தோழியே .
ReplyDeleteமிக்க நன்றி தோழி !உங்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழி.
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteஇன்றைய நாளில் - எம்மை
ஈன்ற அன்னையைக் கொஞ்சம்
மீட்டுப் பார்ப்போம்!
அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post_11.html
மிக்க நன்றி சகோதரா ! வாழ்க வளமுடன்....!
Deleteஅருமை, அருமை சகோதரி.
ReplyDeleteதாயை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
"//கரு கொள்ளதிருந்தால்//" - இந்த இடத்தில் கொள்ளாதிருந்தால் தான் சரியான வார்த்தையா?
வாருங்கள் சகோ! மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில். என்ன சந்தேகம் இது வழமையாக எல்லா பெண்களுக்கும் உள்ள கவலை தானே. அதுவும் இல்லாமல் என்னை தவம் இருந்து அல்லவா பெற்றார் எனவே நிச்சயமாக வருந்தி இருப்பார் அல்லவா. அதுவும் இல்லாமல் அதை அவரே எனக்கு சொல்லியுள்ளாரே. அவசரமாக எழுதி போடும் போது சில வரிகளை தவற விட்டமையும் உங்களுக்கு சரியோ என்று சந்தேகம் எழுந்துள்ளதோ தெரியவில்லை. உங்களுக்கு கேட்ட பதில் தான் நான் தந்துள்ளேனா? அல்லது வேறு பதிலை எதிர் பார்த்தீர்களா? சரியான பதில் கிடைக்கவில்லை, என்றாலும் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலும் தெரிவியுங்கள். அப்பொழுது தானே திருந்தலாம் தங்கள் கேள்வி எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது சகோ. நன்றி வருகைக்கும் கரு த்துக்கும்.
Deleteவாழ்த்துக்கள் ....!
எழுத்துப் பிழையை தான் சொன்னேன் சகோ. படித்துக்கொண்டே வரும்போது, திடீரென்று பிரேக் போட்டமாதிரி நின்று விட்டேன், அதனால் தான் சொன்னேன்.
Deleteஎனக்கும் தெரியும் குழந்தையில்லா வேதனை சகோ. எங்களுக்கும் ஓவியா ஓவியமாக பிறந்தவள் (10 வருடங்கள் கழித்து) அதனால் தான், ஓவியா என்று அவளுக்கு பெயர் வைத்தோம்.
ஓஹோ அப்படியா சகோ! நான் கருத்தில் ஏதாவது சந்தேகமோ என்றல்லவா நினைத்து நீண்ட விளக்கம் தந்து விட்டேன்.ஹா ஹா ... அடடா ஒவியாக்குட்டியும் தவப் பிள்ளை தானா நல்லது மிக்க மகிழ்ச்சி சகோ. வாழ்த்துக்கள் ....!
Delete"//மறு பிறப்பினி லேனும் தாயே
ReplyDeleteஎன்தன் மகளாய் ஆவாய் நீயே//"
- ஒவ்வொருவரும் இதைத்தானே இறைவனிடம் வேண்டுகிறோம்!!!
அருமை சகோ. வாழ்த்துக்கள். தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
http://unmaiyanavan.blogspot.com.au/2014/05/blog-post_11.html
ReplyDeleteஅந்த சிறுகதையை நான் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன் சகோ.
4 பாகங்களின் இணைப்பையும் இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
மிக்க நன்றி! சகோ கூடிய விரைவில் பார்த்து கருத்து இடுகிறேன் சகோ.
Delete
ReplyDeleteவணக்கம்!
இறையின் உருவென ஈன்றவளை எண்ணி
நிறையும் நினைவுகளால் நெஞ்சு
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஅன்னையர் தினத்தின் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரி பாசம் மேலிட்டத்தில் அன்னயின் முகம் தளிர் முகமாகிட்டதே... நல்ல கற்பனை...
வாருங்கள் சகோ ! ஹா ஹா அம்மா என்றால் சும்மாவா அது தான்.
Deleteமிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும் . வாழ்த்துக்கள் ....!
வணக்கம் சகோதரி
ReplyDeleteதாய் பாசத்திற்கு உங்கள் வைர வரிகளால் மகுடம் சேர்த்திருப்பதும், தங்களின் உணர்வும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த படைப்பு மூலம் தங்கள் தாய்ப்பாசம் உணர்ந்தேன். தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் சகோதரி. தாயின் அன்பிற்கு இந்த உலகையே கொடுத்தாலும் ஈடாகுமா! ஆம் சகோதரி
//எத்தனை பிறவி எடுத்தாலும்
எப்படி ஈடு செய்வேனோ
இணையில்லா உன் அன்பிற்கு//
பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் சகோதரா ! தாய் பாசம் எல்லா உயிர்களுக்கும் ஒன்று தான். பிரதி பலனை எதிர்பார்க்காத சுயநலமில்லாத தூய அன்பு. இதற்கு நிகர் ஏது இல்லையா. மிக்க நன்றி சகோ ! வருகைக்கு. தங்கள் அன்பும், பண்பும், கருத்தும் மிக்க மகிழச்சியையும் ஊக்கத்தையும் வழங்கும் வழமை போலவே. வாழ்த்துக்கள் சகோ ....!
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
தாயின் நினைவை சுமந்த வைர வரிகள்
என் நெஞ்சை அள்ளி எடுத்தது மிக அருமையாக உள்ளது .
இனிய அனையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் ! ஏன் சுணக்கம் வாழ்த்துதற்கு.
Deleteகவிதையில் வாழ்த்தலாம் என்று வரிகள் தேடிக் கொண்டு இர்ந்தீர்களா என்ன ஹா ஹா ...மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!
அம்மா மூன்றெழுத்து கவிதை.மறக்க முடியாத உறவு.சிறந்த கவிதை .மனதை தொட்டது .வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteமிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
தடம் மாறும் நாடிய
ReplyDeleteதுன்பம் இடம் மாறும்.
தாயின் மடி பற்றி அருமையான கவிதை ..பாராட்டுக்கள்.!
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
அன்னையின் ஏக்கம் அகிலத்தில் எந்நாளும்
ReplyDeleteஎன்புருக்கி வாட்டும் எனக்குள்ளும் -உன்போல
ஓயாமல் வாட்டுமே ஓண்மையவள் தேடுகின்ற
தாயிழந்த எந்தன் தவிப்பு
அழகிய கவிதான் ஆனாலும் ஏக்கங்கள் அதிகமாய்
எனக்குள்ளும் ஆயிரமாயிரமாய் !
இனிய வாழ்த்து சகோ
வாழ்க வளமுடன்
வாருங்கள் சீராளா நீண்ட நாட்களின் பின் நலம் தானே. மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில்.
Deleteஅன்னையின் அருமையை அகிலமே அறியும் இருந்தாலும் இழப்பின் கொடுமையை சகிக்க முடியாது என்பதை நான் அறிவேன். தங்கள் மன நிலையையும் புரிகிறது. என் சொல்லி ஆற்றுவேன் சீராளா. விதியை வெல்லும் சக்தி யாருக்குண்டு.
இணையற்ற அன்பு , ஈடில்லா இழப்பு,...
தீராத ஏக்கங்கள் நீங்கி வாழ ஆண்டவன் அருள வேண்டுகிறேன்.
மிக்க நன்றி ! கருத்துக்கும் வாழ்த்திற்கும்.
எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ...! என மனமார வாழ்த்துகிறேன்...!