வரும் நாளெல்லாம் வளமாக
வலையுல நண்பர்கள் வெகுவாக
வல்லுனர்களாய் உருவாக
வருவாய் புத்தாண்டே நிறைவாக!
வல்லபுகழும் வாய்த்திடவே
வித்தகராய் சிறந்திடவே
வெற்றிகள் வந்து குவிந்திடவே
வருவாய் புத்தாண்டே மகிழ்வோடு!
அன்பும் அறமும் தளைத்திடவே
ஆண்டவன் அருளும் ஒங்கிடவே
அற்புதங்கள் பல நிகழ்ந்திடவே
வருவாய் புத்தாண்டே மலர்ந்திடவே!
மஞ்சள் குங்குமம் நிலைத்திடவே
மங்கல மங்கையர் மகிழ்ந்திடவே
மண்ணின் பெருமைகள் பாடிடவே
வருவாய் புத்தாண்டே வாழ்த்தோடு!
ஈன்ற நாட்டை ஏந்திடவேண்டும்
இன்பம் எங்கும் சூழ்ந்திட வேண்டும்
ஈனப்பிறவிகள் ஒதுங்கிடவேண்டும்
இல்லை ஒருதுயர்இனி என்றநிலை வேண்டும்
விட்டுப் போன உறவுகளும்
தட்டு கெட்டு போகாது தடுத்திடவும்
திக்கெட்டும் நம் மக்கள் சிறந்திடவும்
வருவாய் புத்தாண்டேஇனிமை தர
தேன் தமிழும் திகட்டாது
தெள்ளு தமிழ் பேசிடவும்
வள்ளுவனார் விதைத்தபடி
வழி நடந்து தேறிடவும்
பாலும் பொங்கிட பழமும் மிஞ்சிட
பஞ்சம் அஞ்சி அரண்டே ஓடிட
கெஞ்சும் பகைவர்கள் மிரண்டேஓடிட
வஞ்சம் அனைத்தும் வரண்டே போய்விட
எங்கும் கலைகள் எழுந்து ஆடிட
ஏற்ற கல்வி எவரும் கற்றிட
ஏழை வாழ்வும் நனிசிறந்திட
வருவாய் புத்தாண்டே கனிவோடு!
காற்றும் மழையும் கனக்காமல்
காரிருளில் நாம் மிதக்காமல்
கண்ணீர் தினமும் வடிக்காமல்
காத்திடவே நீ வருவாயே!
கற்றவரை என்றும் கனிவோடு
காட்டிட வேண்டும் காய்க்காமல்
கொடுங்கோல் ஆட்சி செய்யாத
கொற்றவன் வேண்டும் வரமாக
கோட்டையை பிடிக்கும் எண்ணங்கள்
கொள்ளாதிருக்கவும் வருவாயே!-அவர்
கடமை உணர்வு கைபிடியேனும்
கொண்டிடவேண்டும் வருவாயே!
நிம்மதியான வாழ்வு வேண்டும்
நித்திரை தினமும் பற்றிட வேண்டும்
உற்றவர் உறுதுணை பெற்றிடவேண்டும்
நற்றவம் எங்கும் நல்கிடவேண்டும் வருவாயே!
வாழ்த்திட வாழ்த்திட வருவாயே
வள்ளல் ஆக வருவாயே
பொன்னும் மணியும் தருவாயே
மின்னும் புன்னகை அருள்வாயே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தேன்தமிழ் கவிதையால் பாடிய தோழியே! நன்றி நன்றி! புத்தாண்டு என் நண்பர்களுக்கு நலமும், வளமும் சேர்க்க இனியாவோடு இணைந்து சொல்கிறேன் வாழ்த்து! இனியாவிற்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹை தோழி.....முதல் வருகை wow சந்தோஷம்மா.
Deleteமிக்க நன்றி! தோழி வருகைக்கும் வாழ்த்துக்கும்.
வாழ் நாள் முழுதும் நலமாக
இனிய புத்தாண்டு இசைத்திட
வேண்டும் நல்லாண்டு
நீ வாழ்ந்திட வேண்டும் பல்லாண்டு!
நலமே விழைய வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தோழி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உரித்தாகட்டும்!
மஞ்சள் குங்குமம் நிலைத்திடவே
ReplyDeleteமங்கல மங்கையர் ஓங்கிடவே
மண்ணில் பெருமைகள் பெருகிடவே
வருவாய்.. வருவாய்.. புத்தாண்டே!..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி வருகைகும் வாழ்த்திற்கும் . இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!
Deleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteதங்களுக்கும் தங்கள் குடுபத்தாருக்கும் என் இனியா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!
அருமையான கவிதைப் பகிர்வு!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா சீரும் சிறப்பும் பெருகிட எங்கள் இதயம் கஃபிந்த நல்வாழ்த்துக்கள்!
துளசிதரன், கீதா
அருமையான கவிதைப் பகிர்வு!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா சீரும் சிறப்பும் பெற எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
துளசிதரன், கீதா
வருக வருக மிக்க மகிழ்ச்சி இருவரும் ஒன்றாகவே வாழ்த்துகிறீர்களா! எல்லா நாள்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இந்த இனிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன்...!
Deleteமிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும்...!
சகோதரி! பின்னூட்டங்களும் சரி, இடுகைகளும், வாழ்த்துக்கள் எல்லாமே இருவரும் சேர்ந்துதான் எழுதுவது! இரண்டு ஐடிக்களில் எது திறந்துள்ளதோ அதிலிருந்து வெளி வந்துவிடும்! பெரும்பாலும் ப்ளாகர் உள்ள ஐடியிலிருந்து வெளிவரும்...இன்று இந்த ஐடி என்பதாலும், வாழ்த்து என்பதாலும் இருவர் பெயர்களையும் தந்துள்ளோம் அவ்வளவே! சகோதரி!!!....
Deleteஅடடா அப்போ இதுவரை அவரை கருதாமல் எழுதியது .......ம்..ம்...ம் கோபம் இல்லை யல்லவா தோழி.எனக்கு இது வரை தெரியாது அல்லவா இனி மேல் இருவருக்குமாக எழுதுகிறேன். மிக்க நன்றி அறியத் தந்தமைக்கு. மேலே நலன்களுக்கு பதிலாக நாள் என்று விழுந்து விட்டது மாற்றி வாசியுங்கள்.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா சீரும் சிறப்பும் பெற எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=RRpltdJRwq0
subbuthatha
www.wallposterwallposter.blogspot.in
மிக்க நன்றி தாத்தா பாட்டி ! இனிமையாக பாடி அசத்திவிட்டீர்கள். நெஞ்சமும் குளிர்ந்தது. அருமை அருமை பெருமையாகவே உள்ளது தங்களை நினைத்தால். இனிய புத்தாண்டை இனிமையாய் வரவேற்றுள்ளீர்கள் . எல்லோருக்கும் நன்மை பயக்கட்டும்.
Deleteஇன்பம் எல்லாம் பெருக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....! உரித்தாகட்டும்.
கவிதை சிறப்பாக இருக்கிறது சகோதரி. ஆனாலும்,
ReplyDelete“ஓம்சக்தி ஓம்சக்தி என்றேன் - இது
....உயர்ந்த கவிவார்த்தை என்றார்,
ஓங்குக புரட்சியெனச் சொன்னேன் - இது
...உளறல் வெறும்கோஷம் என்றார்” எனும் நவகவி பாடல்பற்றி யோசிக்க வேண்டுகிறேன். உங்களுக்காகவே நான் ஒரு பதிவுக்கட்டுரை தாயரித்து வருகிறேன். விரைவில் பதிவேற்றுவேன்.
அன்பு கூர்ந்து இந்தப் பதிவை அமைதியாகப் படிக்க வேண்டுகிறேன்-
http://thamizhoviya.blogspot.in/ நன்றி.
கவிதை தொடரவும் கருத்தும் சிறக்கவும் என் வாழ்த்துகள்.
வாருங்கள் சகோதரரே ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
Deleteநீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை நவகவி பாடல் எங்கே பார்ப்பது அதன் விபரம் தெரியவில்லையே,சிறிது விபரமாக சொன்னால் புரிந்து கொள்வேன் சகோ. நீங்கள் கூறியபடி சென்று பார்த்தேன். அமைதியாக படிக்க வேண்டிய பதிவே எனவே திரும்பவும் சென்று பார்க்கிறேன்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!
கவிதை சிறப்பாக இருந்தது. வாழ்வில் வளம் செழிக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் சகோ ! முதல் வருகை மிக்க மகிழ்ச்சி !
Deleteமிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் .....!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!
தொடர வேண்டுகிறேன் .
புத்தாண்டு தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்வினைக்
ReplyDeleteகொடுக்க என் மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே .
இனிய தோழியே ! என்றும் ஆனந்தம் பொங்கும் நல் வாழ்வு காண என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...! மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும்...!
Deleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDelete"//வலையுல நண்பர்கள் வெகுவாக
வல்லுனர்களாய் உருவாக//" - தங்களின் இந்த வாழ்த்துப்பாவிற்கு மிக்க நன்றி.
வாருங்கள் சகோ ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் சகோ ...! மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும்...!
Deleteஇனிய புத்தாண்டு நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாருங்கள் தோழி மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteதங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!
வணக்கம் சகோதரி
ReplyDeleteஎங்களின் மனமெல்லாம் மகிழும் வண்ணம் மதுரமான தமிழில் வாழ்த்தியமைக்கும் தங்களின் இறை வேண்டலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரி. வேலவனின் அண்ணனை வணங்கி இப்புத்தாண்டு நமக்கெல்லாம் புதிய திருப்புமுனை ஆண்டாக அமைய கவி வடித்த என் சகோதரிக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி சகோதரி..
வணக்கம் சகோதரா !
Deleteமிக்க மகிழ்ச்சி சகோ இந்த வருடம் தங்களுக்கு நிச்சயமாக புதிய திருப்பம் தான் ஹா ஹா புது மாப்பிளை அல்லவா. இந்த ஆண்டு அமோக வெற்றிகள் கிட்டட்டும்.புதிய உறவுகளோடும் நிறைந்த பொருளோடும் இன்பமாய் வாழஇப் புத்தாண்டு வகை செய்ய வாழ்த்துகிறேன்.....! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்....!
ReplyDeleteவணக்கம்!
சித்திரைத் திங்களைச் சீருடன் வாவென்று
முத்திரை இட்ட மொழிகண்டேன்! - இத்தரையில்
எங்கும் தமிழா் இணைதோங்க, நம்வாழ்வில்
தங்கும் இனிமை தழைத்து!
தோழி இனிய அவா்களுக்கு
என் வலையில் இன்று நீங்கள் எழுதிய கருத்து
மிக அருமை! தேன் இனிமை!
கனி விருத்தம் நுால் ஆக்கம் பெறும்பொழுது
உங்கள் கருத்தும் நுாலில் இடம்பெறும். நன்றி
வணக்கம்!கவிஞரே!
Deleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கருத்தும் இப் புத்தாண்டில் மிகுந்த மகிழ்ச்சியை தந்தன. இனிய செய்தியும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி ! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....!
வானவில் போன்று
வண்ணக் வண்ணக்
கவிதைகளை எண்ணத்தில்
ஏற்றி ஊற்றும்
பற்றி கொள்ளும் உலகு
போற்றும் என்றும் உமை !
பெற்றுக் கொண்டு நானும்
கற்று கொள்வேன் நாளும்
இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவாருங்கள் சகோ ! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் ....!
Deleteதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டில் இன்பம் பொங்க எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்....!
வரவேற்கிறேன் தங்களுடன் சேர்ந்து நானும் புத்தாண்டை.
ReplyDeleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி சகோதரா! தங்கள் வரவு நல்வரவாகுக! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
Deleteதங்கள் அறிமுகத்திற்கு நன்றி! தொடர்கிறேன் இனி !
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவிதையின்வரிகள் என் மனதில் தித்திக்குது..... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கே இருக்கிறீர்கள் இப்போது...
ReplyDeleteநலம்தானா ?