நெற்றிக் கண்ணனே வெற்றித் திருநாளை
காண வழியின்றி தட்டுத் தடுமாறுதே
வெற்றிக் களிப்போடு வீதி
வலம்வர வேளை வரவில்லையோ
சுற்றிப் படர்கின்ற கோடி மக்களின்
கேடு காணவில்லையோ
பற்றி கொண்டு உன்பாதம்
பணிகின்றோம் காதில் விழவில்லையோ
பற்றி எரியுதே பாழும் மனசுகள்
வித்தை காட்டவிலையோ
ஆனைபலம் கொண்டு சேனை பல
கண்டு வெற்றி கொள்ளுவதோ
இரத்தம் சிந்தாது கத்தி ஒங்காது
காண வழி இல்லையோ
பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்பவில்லை
பள்ளி கொண்டு அங்கு பாலியல் வதை பாரும் கேட்கவில்லையே
அன்னை தந்தையும் அற்ற பாலகர்
அலையும் உலகிலே அன்பைத் தேடியே
ஆலமரம் சுற்றி அரச மரம் பற்றி
பெற்ற பிள்ளையை காண வழியில்லையே
ஊரில் பலபேசி தேடி பொருத்திய துணை
தெரு முனையிலும் இல்லையே
கட்டிய தாலி கண்ணில்
ஒற்றிக் கொண்டு காத்திருக்கிறாரே
தீர்க்கமான ஒரு முடிவு வேண்டுமே
திரும்பிப் பார் சங்கரா
ஆவி அழியாது கூடும் அழியாது
கோபம் கொண்டு நின்றால்
கண்கள் மூடாது கனவு பலியாமல்
காண வா சங்கரா
பாதகங்களும் பழிகளும் நீங்க
சாபம் இடு சங்கரா
வீடுமனை இன்றி வாழ வழியின்றி
காலம் கழிகின்றதே
மதியும் சரியில்லை விதியும் சரியில்லை
மனித மனம் கெடுகுதே
விடையும் தெரியாது
படையும் கிடையாது வா சங்கரா
சங்கடம் தீர்த்து சதிகளை நீக்கி
கார் சங்கரா அருள் தா சங்கரா
மோதல்கள் இன்றி சாதல்கள் இன்றி
வாழவே வா சங்கரா
வறுமையில் வாடி வதனமும் மாறி
வருத்தமும் கொள்ளுதே
கொடியவர் ஆட்சி கண்டு கண்டு
தினம் உள்ளம் குமுறுதே
கடல் அலையில் ஆடுகின்ற கொடிகள்
போலவேஅல் லாடுகின்றோமே
நீதியில்லை அங்கு நியாயம் இல்லை
அந்த நீதி தேவதை எங்கே
கொடுமைகள் காண துணியாமல் அவள்
தன்னை கொன்று போட் டாளோ
பகைவர் என்ற ஒரு பகுதி இல்லை
என்ற நிலை வேண்டுமே
காகம் குருவிகளும் கரைகின்றதே
கவலை கொண்டு தானே
கொண்டாட வில்லையே
காதல் புரியாமல் கவலை கொள்ளாமல்
காவல் காத்தவர் எங்கே
காண சகியாமலே
ஆடு புலியாட்டம் ஆடுகின்றாரே
நாடு நலம் இல்லையே
கூடி மகிழாது கோடி துன்பங்கள்
நாடி வருகின்றதே
வீறு கொண்டு நீ வேதனைகளை
வேரறுக்க வா சங்கரா வா சங்கரா
அருளவா சங்கரா மகிழவா சங்கரா- நலம்
முகிழவா சங்கரா நீ முழுமுதல் அல்லவா
அருமை... அருமை...
ReplyDeleteபடங்கள் பிரமாதம்...
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
அருள வா சங்கரா.. மனம் மகிழ வா சங்கரா!..
ReplyDeleteநலம் முகிழ வா சங்கரா.. நீ முழுமுதல் அல்லவா!..
நம்பிக்கை எந்நாளும் வீண் போகாது!..
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
கடவுளை நம்பினார் கைவிடப்படார் அருமையான வேண்டுதல் பா வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி இனியா .
மிக்க நன்றி! தோழி வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
"//வீறு கொண்டு நீ வேதனைகளை
ReplyDeleteவேரறுக்க வா சங்கரா வா சங்கரா//" - கண்டிப்பாக அந்த சங்கரன் வருவான்.
அருமை.. அருமை .. வாழ்த்துக்கள் சகோதரி.
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
மதியும் சரியில்லை விதியும் சரியில்லை
ReplyDeleteமனித மனம் கெடுகுதே
விடையும் தெரியாது
படையும் கிடையாது வா சங்கரா
முழுமுதல் பொருளே அருளவா....!
அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி! தோழி வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
அருமை! சங்கரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
"ஆடு புலியாட்டம் ஆடுகின்றாரே
ReplyDeleteநாடு நலம் இல்லையே" என்ற
அடிகளை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
அடுத்தவர்காக அழும் கண்கள் மிக அழகானவை !
ReplyDeleteதோழி உங்கள் பிரார்த்தனைகள் தான் எவ்வளவு பறந்து விரிந்து இருக்கிறது!!! படங்களும் கொள்ளை அழகு!! அருமை தோழி!!
என்ன தோழி இப்படி சொன்னால் நான் எப்படி அழுவேன். ஆமா எப்படி இவ்வளவு கரக்டா கண்டு புடிச்சீங்க என் கண்ணு ரொம்ப அழகு என்று ஹா ஹா சும்மா...
Deleteநன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்...!
கூடி மகிழாது கோடி துன்பங்கள்
ReplyDeleteநாடி வருகின்றதே-----முற்றிலும் உண்மை. கண்டிப்பாக தங்கள் வேண்டுதல் பலிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்.
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்....!
வேண்டும் வரங்கள் விரைவாகி
ReplyDeleteவிடியல் காணும் ஈழத்தில்
தாண்டிச் செல்வோம் தடைவிலக்கி
தரணி ஆழ்வோம் எம்மண்ணில்
அருமை அருமை படித்தேன் ரசித்தேன்
இனிய வாழ்த்து சகோ வாழ்க வளமுடன்
வரவேண்டும் வரவேண்டும் சீராளா ரொம்ப நாளைக்கப்புறம் மிக்க மகிழ்ச்சி!
Deleteஉங்கள் பொன் வாக்கு பலிக்கட்டும்
விரைவில் விடியல் காண.!
மிக்க நன்றி! சீராளா ! வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
வாழ்க வளமுடன்....!
மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்....!
கவிதை அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
Deleteவெள்ளை மயில் கொள்ளை அழகு எங்கே பிடித்தீர்கள் சகோதரீ?
ReplyDeleteஆஹா என்ன வளர்க்கிறேன் என்று நினைத்தீர்களா? இல்லை இல்லை கூகிள் இல் எடுத்த படம் தான்.வெள்ளை மயிலை பார்த்தவுடன் வளர்க்கும் ஆசை வந்துவிட்டதோ. ஹா ஹா
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
விடியலைத் தேடி புறப்படும் ஒரு இனத்துக்கு உத்வேகம் கொடுக்கும் கவிதை சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் அம்மா.
சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்நலம் தானே ! வாழ்த்துக்கள் ! என்ன யோசனை மீண்டும் வருகை தொடர்வதற்குத் தான் ஹா ஹா... மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரூபன் .....!
Deleteவாழ்க வளமுடன்...!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
என்பக்கம் கவிதையாக
எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-