Friday, April 11, 2014

தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்தொண்டுகள் செய்யாது
தொலையாது பாவம்

 எம் பாவங்களின் விளைவுகள் தான் இப்பிறப்பு பாவத்தை தொலை க்கவே பிறப் பெடுத்து இருக்கிறோம் என்று அறியாமல் மேலும் பாவங்களை சேர்த்துக் கொண்டல்லவா இருக்கிறோம் நல்ல கருமங்களை செய்து பாவத்தை தொலைக்க முயல்வோமாக.

பெண்ணும் புளுங்கல்கூடாது
ஆணும் அடங்கல்ஆகாது

பெண்ணுக்கு உரிய சிறப்பையும் மதிப்பையும் வழங்காது அடிமைபடுத்தி சுதந்திரத்தை பறித்து கொடுமை படுத்தி வருத்துதல் கூடாது. அதே போன்று ஆணும் அந்  நிலைக்கு  பணிந்து நடத்தல் கூடாது.

உண்டபின் உறங்கல் ஆகாது 
உலகை வெறுத்லும் கூடாது

உணவை உண்ட உடனே உறங்கக் கூடாது அது போன்று வேதனை வெறுப்பு என்றும் நிரந்தரமாக உறங்க தோன்றும் போதும் உறங்கல் வேண்டாம்.(இறக்க நினைத்தல்)

திண்டாடும் போதே 
தேடும் ஆண்டவனை

துன்பங்கள் வந்துற்ற போது மட்டும்  இறைவனைவணங்குவது


வேண்டிடுவர் வரம்
மீண்டும்  வாழ்வுற

குற்றம் பொறுத்து வேண்டிய   வரம் அருளும்படி உருகி வேண்டுவது.

 

கண்கள் கரையாமல்
கவலைகள் தீராது

அழும் போது கவலைகள்  குறைந்து இலேசாகிவிடும்

கண்டாலும் துன்பம்
களைந்தாலே இன்பம்

பிறர் துன்பப் படும் போது உதவி செய்தால் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும் சாதனை செய்தது போல மகிழ்வடையும் 
நம்உள்ளம்.

விண்டு இறைக்காது
விரைந்து நீர்ஊறாது

கிணற்றை இறைத்தால் உடனேயே நீர் ஊறி பழைய நிலைக்கு வந்துவிடும் .தண்டனை வழங்காது
திருந்தார் வஞ்சகர்

கடுமையான தண்டனை குட்பட்டால் ஒழிய வஞ்சகர்கள் திருந்தமாட்டார்கள். கொடுக்கப் படும் தண்டனை கடுமையானதாக இருந்தால் ஏனையோரும் செய்யத் துணியார்.

தாண்டிடும் தவளைதான்
சேர்ந்திடும் இருப்பிடம்

முயற்சி இல்லாவிடில் நினைத்ததை சாதிக்க முடியாது.


 


கூண்டினில் கிடக்கின்ற
கிளியும் பேசிடும்

அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாலும் கிளி பேசுவதை தடுக்க முடியாது. கிளி சுதந்திரமாகவே பேசும்.வண்ணத்து பூச்சியின்
வாழ்வும் வலியது 

மானிடவர் மட்டும் அல்ல அணைத்து உயிர்களும் கருணையோடு காக்கப் பாட வேண்டியவையே

ஆண்டவரும் புவியில்
மாண்டனரே முடிவில்

அரசர்களும் முடிவில் இறக்க வேண்டியவர்களே.

தாண்டவம் ஆடியே
தணிவார் மாண்டபின்

இறக்கு மட்டும் எந்த ஒரு காரணத்தாலும் மாறவே மாட்டார்கள்.
     
மூண்டிடும் நெருப்பினை 
மூடிஅணைத்திடு தூண்டாது

நெருப்போ அல்லது இருவருக்கிடையில் ஏற்படும் பகையினையோ பார்த்தால் அதிகப்படுத்தாது அணைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும்

23 comments:

 1. தொண்டுகள் செய்யாது
  தொலையாது பாவம்!..

  இப்படி நல்ல கருத்துகளைச் சொல்லுவதே - பெரிய தொண்டு!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகை மிக்க மகிழ்ச்சி சகோ !
   இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
   வாழ்க வளமுடன்...!

   Delete

 2. வணக்கம்!

  நன்னெறி மின்னும் நறுந்தமிழை நம்மினியா
  பண்ணெறிப் பாங்கில் படைத்துள்ளாா்! - மண்ணுயிா்
  யாவும் நலமுறும்! யாழின் இசைபோன்று
  மேவும் இனிமை விரைந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. இன்றைய பாரதி இடும் பாவெல்லாம் ஏந்தி
   பற்றிக்கொண்டு படர்வேன் மிளிர்வேன் பாங்காய்!
   எல்லாம் தங்கள் ஆசியே!

   பூத்துக்குலுங்கும் நந்தவனமாய் உம் வாழ்வு சிறக்கட்டும் என்றும்....!

   Delete
 3. நல்ல விரிவான முயற்சி இனியா! ஆனால் நாங்க கஷ்டபடுத்திடமொன்னு தோணுது! துறை சார் சொல்லற மாதிரி இந்த கவிதையே தொண்டு தான். பல்லாண்டு வாழ்க இனியா!

  ReplyDelete
  Replies
  1. இல்லடா செல்லம் நீங்கள் சரியான வழியைத் தான் காட்டியுள்ளீர்கள். எனக்கு மிகவும் ஆனந்தமே. உள்ளது உள்ளபடி உரைப்பது தானே உண்மை தோழியின் கடமை. அதுதான் எனக்கும் பிடிக்கும். கவலை படுவேனோ கோபப் படுவேனோ என்று உண்மையை மறைத்தல் நல்ல நட்புக்கு அழகல்லவே. ஹா ஹா அப்போ பொய்யா...... அது மட்டுமல்ல கருத்துக்கள் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் அல்லவா ஆகையால் என் கருத்தை இடுவது நன்று என்றே எண்ணுகிறேன் தோழி...! நீங்கள் நன்மையே செய்துள்ளீர்கள். மிக்க நன்றி... நன்றி... நன்றி! நான் இதை வெகுவாக வரவேற்கிறேன். வாழ்க வளமுடன்....!
   இப்போ சிரிங்கோ...! ம்...ம்...ம்.... அது.... குட் கேர்ள்.

   Delete
 4. கவி வரிக்கேற்ற
  விழி வரிகளை
  வரவேற்கிறேன்

  ReplyDelete
 5. கவி வரிக்கேற்ற
  விழி வரிகளை
  வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன் !
   மிக்க நன்றி வரவிற்கும் கருத்திற்கும் !
   வாழ்க வளமுடன்...!

   Delete
 6. அட போங்க... இப்படியா அனைத்தும் ரசிக்கும்படி பகிர்வது - படங்கள் உட்பட...! ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சகோ ரொம்ப சந்தோஷம் ! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
   வாழ்க வளமுடன்....!

   Delete
 7. அருமையான நற் கருத்துக்களைத் தாங்கி வந்த கவிதை வரிகள் கண்டு
  மகிழ்ந்தேன் தோழி உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.
   வாழ்க வளமுடன...!

   Delete
 8. சரி கவிஞரே எங்கே அடுத்த கவிதை..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ புரிகிறது நீங்கள் கேட்ட அடுத்த நிமிடமே வெளியிட்டு விட்டேன் சகோ . மிக்க மகிழ்ச்சி! தங்கள் நட்பு என் பாக்கியம் . மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.
   வாழ்க வளமுடன்....!

   Delete
 9. வணக்கம்
  அம்மா.

  செந்தமிழில் அடி எடுத்து
  சீர் கொண்ட கவி வரிகள்
  சிந்திக் வைக்குது......
  படங்கள் எல்லாம் மிக அழகு.....வாழ்த்துக்கள்..அம்மா

  கட்டுரைப் போட்டிக்கான.
  சான்றிதழ்+பதக்கம்.மிக விரைவில் வந்தடையும்...அம்மா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ரூபன் மிக்க மகிழ்ச்சி! நலம் தானே நீண்ட நாட்களின் பின்.
   கவிதை போட்டியோடு களைத்து விட்டீர்களோ ம் ..ம் ...ம் பறவை இல்லை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் .
   மிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்.
   வாழ்க வளமுடன் ....!

   Delete
 10. ஒவ்வொரு வரிகளும் அதற்கான அர்த்தங்களும் மிக அருமை.

  இந்த விளக்கங்கள் மூலம் ஒரு கவிதாயினி எவ்வாறு கவிதைகளுக்கு பொருள் கொள்ளுவார் என்று தெரிய வருகிறது.

  வாழ்க தங்களது தமிழ் தொண்டு சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கவிதாயினி நல்ல பெயரில்ல ம்.. ம்... இனியா வை மாத்திடுவோமா கவிதாயினி என்று ஹா ஹா .... மிக்க மகிழ்ச்சி சகோ !தங்கள் கருத்து மேலும் ஊக்கப் படுத்துகிறது. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்....!

   Delete
 11. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் வாழ்த்திற்கும்.
   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

   Delete
 12. உங்களுடைய அண்மைய பதிவுகளில்,
  “தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்“தான் என்னைக் கவர்ந்தது. படமும் விளக்கமும் அருமை. அதிலும் ஆண் அடங்கக்கூடாது என்பது சரிதானா சகோதரி? அல்லது பெண் அடங்க வேண்டும் என்பது பொருளா?

  ReplyDelete
 13. வாருங்கள் சகோதரா!
  நல்ல கேள்வி தான் மிக்க மகிழ்ச்சி. இரண்டுமே இல்லை சகோதரா. இருவருமே ஒருவரை ஒருவர் அடக்கி ஆளவோ அடிமை படுத்தவோ கூடாது. பெண்ணும் புளுங்கக் கூடாது அதே போல் ஆணும் புளுங்கக் கூடாதுதானே. பெண்களுக்கு பணிவும் அன்பும் அழகு தான் ஆனாலும் கொடுமைகளை கண்டால் கொந்தளிப்பதில் தவறு இல்லை. அதே போன்று ஆண்களுக்கும் மிடுக்கு அழகு தான், தேவை தான் சரியான முடிவுகள் எடுக்கவும்,குடும்பத்தை வழி நடத்தவும் மிடுக்கு அவசியமே. அதை தவறாக பயன் படுத்தக் கூடாது கோபம் கொள்வதும் கொடுமை படுத்துவதும் தப்பு தான். ஒருவருரை ஒருவர் மதித்து நியாயமாக நடத்தல் அவசியம். என்பதை தான் சொல்ல விரும்பினேன்.
  மிக்க நன்றி ! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
  வாழ்க வளமுடன் ....!

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.