Sunday, April 6, 2014

கண்களில் கனவிருக்கும் கவலையில் மூழ்கடிக்கும்

 
Parrot graphics




 animated nature photo: Animated waterfallandgirl.gif


மகாபாரதத்தில் சகுனியின் வஞ்சக எண்ணமும் எகத்தாளமான சிரிப்பும்
எரிச்சல் மூட்ட அத் தருணம் தோன்றியதே இவ் வாரம்ப வரிகள். மேலும் நிஜ வாழ்க்கையிலும் அடுத்தவர் குடியை கெடுக்க நினைக்கும் நபர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்." தீ "தீபம் எரியும் போது கிடைக்கும் ஒளியும் அதன் அழகும் தனி தான் அதுவே தீபிழம்பாய் எரியும் போது தானும் எரிந்து அதன் அண்மையில் உள்ள அனைத்தையும் எரித்து சாம்பல் ஆக்கிவிடும். 
                                                 இது போலவே தீய எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் அடுத்தவரைப் பார்த்து பார்த்து எரிவது மட்டுமல்லாது அவரை அழிக்க திட்டமிடுவதிலும் நேரத்தை வீணாக்கி விட்டு தன் வாழ்வின் நலனை பற்றி சிந்திக்கவோ செயல்படவோ முடியாது வருந்தி அழிவர்.
இவர்களால் வஞ்சம் சூழ்ச்சிக்குள் அகப்படுபவர்களும் வருந்தி அழிய நேரிடும்.
மொத்தத்தில் இருபாலாருடைய வாழ்வும் அழிவையே நோக்கி பயணம் பண்ணும்.

எண்ணங்கள் தாழவைக்கும்
எகத்தாளம் போடவைக்கும்

தீய எண்ணங்கள் (வஞ்சம் நினைப்பவரும் அதற்கு ஆளாகுபவரும்) இருபாலாரையும் அழிக்கும்


கண்களில் கனவிருக்கும்
கவலையில் மூழ்கடிக்கும்

கவலையில் உள்ள மனிதன் போதையில் இருப்பவன் போல் தான் எப்போதும் கவலயில் மூழ்கி இருப்பான் கனவை நோக்கி பயணிக்கவோ  தன்னுள் இருக்கும் திறமைகளையோ அறியாதவனாய் இருப்பான் முன்னேற முடியாமல் சிந்திக்கவோ செயல் படுத்தவோ இயலதவ னாகிறான்.


உண்ணாமல் உருக்குலைக்கும்
உயிருக்கும் உலை வைக்கும்

கவலையில் உண்ணாமல் உறங்காமல் இருப்பர்.  பாண்டவர்கள் போல் வலிமை எல்லோருக்குமா உள்ளது தளர்ந்து தற்கொலையும் செய்வர்

உண்மைக்கும் விலை வைக்கும்
ஊருக்குள் சிலை வைக்கும்

வலிமையுள்ளவர்கள் உண்மையை மறைத்து நல்லவர்களாக ஊருக்குள் நடமாடுவர்( மிரட்டியோ,லஞ்சம் கொடுத்தோ எதையும் சாதிப்பர்)

விண்ணையும் தோற்கடிக்க
மண்ணினில் போர் தொடுக்கும்

போராட்டமான வாழ்வு தான், பேராசை கொண்டு போராடுவர் தினமும் அனைவருடனும்,  நிம்மதியில்லாத வாழ்வு. விரலுக்கு ஏற்ற வீக்கம் இல்லாமை. கௌரவர்களும் பாண்டவரும் கொண்டபகை போல்.

பெண்ணையும் பெயர்த்தெடுக்கும்
பித்தனாய் உருவெடுக்கும்

இராவணன் பெண் பித்தனாகி சீதையை கடத்திவிட்டான் அல்லவா, இன்றும் பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் அளவுக்கு பித்தர்கள் உள்ளார்களே.

உண்டவரே  வாழ்வில்
ஊட்டிடுவர் நஞ்சை

இது பகையாளிகள் எப்போதும் வெளியில் இருந்து வருவதில்லை நம்மோடு இருந்து ஒட்டி உறவாடிய உறவுகளும் நட்புகளும் தான் அவர்கள் எதையும் செய்யவும்  துணிவர் பகை கொண்டு.

புண்ணாகும் நெஞ்சே
புலனாய்வு செய்யும்

வேதனை, வலிகளை அனுபவித்தவர்களில் ஒரு சாரார் தாம் பட்ட  வேதனை வலியை மற்றவர்களும் பட வேண்டும் என்று நினைப்பவர்கள். மறு சாரார் எனக்கு வலித்தது போல் தானே அவர்களுக்கும் வலிக்கும் என்று உணர்ந்து புரிந்து உதவ முன் வருவார்கள். நல்லது கெட்டதை பகுத்து ஆராய்வார்கள். இப்படி நேராமல் எப்படி தடுப்பது, எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று சிந்திப்பார்கள்.

வண்டில்கட்டி வரும்துன்பம்
வருத்திடும் வாழ்வை

தொடர்ந்து கொண்டிருக்கும் துன்பம், பல சமயங்களில். இதை பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள்

மன்றாடும் போதும் 
கொண்டாடும்  ஊரு

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு வாசி என்பது போல், துன்பத்தில் நொந்து நூலாகிப் போய் இருக்கும் ஒருவரை பார்த்து எள்ளிநகை யாடுவது

திண்ணங்கள் குலையாமல்
வன்மங்கள் கலையாது

உறவுகளுக்கிடையில் நீர்மேல் ஏற்பட்ட பிளவு போல் இருக்க வேண்டுமே யன்றி கன்மேல் (கல்லின் மேல்) ஏற்பட்ட பிளவு போல் இருத்தல் ஆகாது.
மன்னிப்போம் மறப்போம் என்று இல்லாவிட்டால் உறவுகள் நிலைக்காது, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லையல்லவா.

மண்ணில் மனிதமின்றி
விண்புகழ் வழங்காது

மனிதாபிமானம் இழந்தால் ஆண்டவனின் அருள் புகழ் நிச்சயம் கிடைக்காது.

புன்னகை இல்லாமல்
பொன்னகை மின்னாது

அழகான ஒரு பெண் எவ்வளவு நகை அணிந்திருந்தாலும் புன்னகை இல்லை என்றால் எல்லாமே வீண் தான் பொன்னகையால் மட்டும் ஒரு பெண் அழகுறுவது இல்லை

மண்ணில் விளையாது 
மழைமுகம் காணாது

மழை இல்லவிட்டால் ஒரு உயிரினமும் வாழமுடியாதே.

31 comments:

  1. சகோதாரிக்கு வணக்கம்
    மனிதம் மரிக்கும் போது இயற்கை நம்மை வஞ்சிக்கத் தான் செய்கிறது. நல்லோர்கள் இருக்குமிடம் மழை பெய்யும் என்பார்கள். ஆனால் இன்று நாம் மரங்களை வெட்டி. கரியமில வாயுவைக் கட்டவழ்த்து விட்டு தீயோர்களாய் திரிகிறோம். இந்நிலை மாற வேண்டும் எனும் கருத்தை மறைமுகமாகச் சொல்லும் உங்கள் கவிதை அனைவரையும் சிந்திக்க வைக்கும். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  2. வார்த்தைகள் மளமள என்று விழுந்திருகின்றன
    கருத்து ப்லோட்டிங் பேப்பரில் விழுந்த இன்க் போல பல திசையிலும் விரவியிருகிறது...
    அதை கூர்மையாக்கினால் (எளிமையாக புரியும்படியாக்கினால்) இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரா நீங்கள் சரியாகவே சொல்லி யிருக்கிறீர்கள்.
      ஒன்றோடொன்று பெரிதாக தொடர்பு இல்லை ஹைக்கூ மாதரியே வந்துள்ளது என்றும் சொல்லாம் என்று நினைக்கிறன்." ண் "ஐ மையமாக வைத்து சொல்லிக்கொண்டு போகும் போது வந்து விழுந்தவையே இவை என்ன எண்ண ஓட்டம் இருந்ததோ (பொருள்) அதை தனித் தனியாக இட்டு விடுகிறேன். சகோதரா இதை இடுவதா விடுவதா என்ற குழப்பத்தில் தான் இருந்தேன்.
      என்ன தான் சொல்கிறீர்கள் பார்க்கலாம் என்றே இட்டேன் மிக்க நன்றி என்னை வழிநடத்திச் செல்வீர்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

      Delete
    2. கூடிய விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன். மிக்க நன்றி!

      Delete
  3. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று முடிந்துள்ளது போல தோன்றுகிறது! இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பானதாக மாறியிருக்கும்! நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும். மிக்க மகிழ்ச்சி! இன்னும் கற்றுக்குட்டி தானே தங்கள் கருத்துக்கள் என்னை மிளிர வைக்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  4. எதுகையும் மோனையும் நன்றாய் விழுந்திருக்கின்றன... கொஞ்சம் வரிகளைக் குறைத்தால் பரவாயில்லை... படிப்பதற்க்கும் எளிமையாய் இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி ! இனிமேல் அப்படி வராமல் பார்த்துக் கொள்கிறேன். வருகையும் கருத்தும் ரொம்பவே மகிழ்வளிக்கிறது.
      மிக்க நன்றி! தொடர வேண்டுகிறேன்....! வாழ்த்துக்கள் ....!

      Delete
  5. பாருங்க தோழி என் கஸ்தூரி (மது) சொன்னது தான் எனக்கும் தோணுச்சு!!!
    அட்டகாசமான கருத்துக்கள் ஆனால் கதம்பம் போன்ற அமைப்பில் இருக்கிறது! அழகு தான் என்றாலும் ஒரு சில கருத்துக்களை எடுத்துக்கொண்டு இன்னும் கூர் தீட்டி இருக்கலாம். எதுகையும், மோனையும் கொஞ்சி விழையாடும் உங்கள் நடை அழகு:))

    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்திடலாம் தோழி ! விபரம் போதாது இன்னும் கத்துக்குட்டி தானே அதுதான் போகப் போக சரியாயிடும் எல்லாம் தங்கள் கைவண்ணத்தில் தான் நான் மிளிர வேண்டும். சரி தானே தோழி நான் சொல்வது. டீச்சர் அம்மா இருக்கும் போது எனக்கு என்ன பயம்.மிக்க மகிழ்ச்சி என் அருமை தோழியே.
      நன்றி !வாழ்காவளமுடன் ...!

      Delete
  6. பாருங்க விளையாடும் என்பது தவறுதலாய் ழை வந்துவிட்டது இனியா. திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. சிந்திக்க வேண்டியவை...

    படங்களும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா!
      தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சியே ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  8. வணக்கம் சகோதரி,
    எல்லோரும் சொல்லுவது போல், கவிதை கதம்பமாக இருக்கிறது.

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

    "//கண்களில் கனவிருக்கும்
    கவலையில் மூழ்கடிக்கும்//"
    - உண்மை தான் கண்களைத் திறந்து கொண்டு நாம் கனவு காணும்போது, அக்கனவினை எவ்வாறு நினைவாக்கப்போகிறோம் என்று கவலை தோன்றும்.

    "//தொண்டுகள் செய்யாது
    தொலையாது பாவம்//"

    - நாம் பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல், பிரதிபலன் பார்க்காது ஏதாவதொரு சமுகத்தொண்டை நாம் செய்தோமேயானால் பாவங்கள் கழிந்து புண்ணியங்கள் சேரும்.

    "//திண்டாடும் போதே
    தேடும் ஆண்டவனை
    வேண்டிடுவர் வரம்
    மீண்டும் வாழ்வுற//"
    - உண்மை,உண்மை, நாம் கஷ்டத்தில் இருக்கும்போது தான் இறைவனை மனமுருக நினைக்கத் தோன்றும்.

    வாழ்த்துக்கள் சகோதரி. படங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு விடயத்தை மையமாக வைக்கவில்லை.அதனால் கவிதையாக அமையவில்லை தீய எண்ணங்கள், கஷ்டங்களையும்" ண் "ஐயும் மையமாக வைத்து சொல்லும்போது விழுந்தவையே கதம்பமாகத்தான் வந்துவிட்டது.சகோதரர் மது சொன்னது போலவே. இங்க் தெளித்து போல்,ஹா ஹா ஒரு முயற்சி தானே. தங்கள் கருத்துக்கள் புடம் போட்டு மிளிர வைக்கும் நம்பிக்கை ஊட்டும் என்று நம்புகிறேன். வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி! வாழ்க வளமுடன்....!

      Delete
  9. இப்போ தெளிவாயிடுச்சு ! நான் சரியான ட்யூப் லைட்டு தான் தோழி!

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா இப்போ தான் நிம்மதியாக இருக்கிறது தோழி. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது செல்லம் அதுவும் ஒரு டீச்சர் அம்மா. அது என் தவறு தானே நான் நினைப்பதை எப்படி நீங்கள் கண்டு கொள்ள முடியும். என் தோழி படுசுட்டி இல்ல ம்..ம்..ம் நன்றி.. நன்றி.. நன்றி !.....

      Delete
  10. வணக்கம் சகோதரி
    கதையும் சொல்லி கவிதையும் சொல்லியிருக்கிறீர்கள். அருமை சகோதரி. நண்பர்களின் கருத்தை உள்வாங்கி கவி வரிகளுக்கு உயிரூட்டும் விதமாக விளக்கம் தந்தது உங்கள் பெருந்தன்மையையும் உயர் குணத்தையும் காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா மாப்பிள்ளை ஆகப் போகிறவர் ரொம்ப busy யாக இருப்பீர்கள், இருந்தும் நேரம் எடுத்து பெருந்தன்மையோடு வந்து கருத்து இட்டமைக்கு நன்றி! மிக்க மகிழ்ச்சி சகோதரா!
      வாழ்க வளமுடன்...!

      Delete
  11. வலைப்பூ என்பது நமது படைப்பை நமக்கு பிடித்தமாதிரி வெளியிடக் கிடைத்த ஒரு தளம்...(வாய்ப்பு)
    இப்படி எல்லோர் கருத்துக்கும் உடனடியாக நீங்கள் பதிவை மாற்றிக்கொண்டு இருந்தீர்கள் எனில் உங்களால் ஒரு பதிவை தாண்டி போக முடியாது..
    இவ்வளவு தூரம் மெனக்கெடுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை வாழ்த்துக்கள்.. நன்றாக இருக்கிறது ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் இருந்தாலும் கேள்விகளும் கருத்தும் என்னை மேலும் சிந்திக்கவும் மேலும் வளரவும் உதவும் அல்லவா இல்லையேல் முயற்சிக்காமல் அல்லவா இருந்துவிடுவேன். இன்னமும் கற்றுக்குட்டி தானே அது தான். நியாயமான தங்கள் கருத்தை ஏற்கிறேன் மிக்க மகிழ்ச்சி சகோதரா நன்றி! வாழ்த்துக்கள்...!

      Delete
  12. இருவரியில் கவிதை
    இயல்பான விளக்கங்கள்
    உருகும் சிந்தனையில்
    உதித்திட்ட உண்மைகள்...!

    அத்தனையும் அழகு ரசித்தேன் ,உணர்ந்தேன்
    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீராளா !
      தங்கள் வருகை தரும்
      பெரும் உவகை
      இடும் கருத்தும்
      தரும் ஊக்கம் என்றும் ! மிக்க நன்றி !
      சீராளா உன் சிந்தனைகள்
      சிறகடித்து பறக்கட்டும்
      சேரட்டும் இன்பங்கள்
      உனை வந்து சீராய்! வாழ்க வளமுடன்!



      Delete
  13. கவிதையும் விளக்கமும் மிக மிக அற்புதம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி! ஐயா மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகை கண்டு.
      மிக்க நன்றி தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  14. விளக்கங்கள் இன்றியே எழுதலாம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வணக்கம் சகோ.
    விளக்கங்கள் எல்லாம் கொடுத்து அசத்திவிட்டீர்கள். நான் தான் கொஞ்சம் தாமதமாக பார்த்திருக்கிறேன் போல.

    "//கண்களில் கனவிருக்கும்
    கவலையில் மூழ்கடிக்கும்

    கவலையில் உள்ள மனிதன் போதையில் இருப்பவன் போல் தான் எப்போதும் கவலயில் மூழ்கி இருப்பான் கனவை நோக்கி பயணிக்கவோ தன்னுள் இருக்கும் திறமைகளையோ அறியாதவனாய் இருப்பான் முன்னேற முடியாமல் சிந்திக்கவோ செயல் படுத்தவோ இயலதவ னாகிறான்.//"

    அட, இது தான் உண்மையான விளக்கம். நான் என்னோட சிற்றறிவிற்கு ஏத்த மாதிரி வேற அர்த்தம் புரிந்து கொண்டேன்.
    எல்லா விளக்கங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா! நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் உள்ளதே. இரண்டு கருத்துகளும் பொருந்தும் வண்ணமே உள்ளது.

      Delete

  16. வணக்கம்!

    எண்ணம் சிறக்கும் எழுத்தைப் படைத்துள்ளீா்!
    உண்ணும் விருந்தாய் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. சிந்தை மகிழ வென
      செதுக்கிய செந்தமிழால்
      சிறகடித்து பறக்கு தெந்தன் உள்ளம்.
      சீர்பெற்று சிறந்திடுவை இன்னும்!

      Delete
  17. வணக்கம்
    அம்மா.

    கவிதை நன்றாக உள்ளது.... வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.