கடல் தானும் அழகு என்று
எண்ணி ஆடிப்பார்க்கும்
அலைஆளை பழகிமெல்ல
மெல்ல கொல்லப் பார்க்கும்
வித்தை தெரிந்த கத்தும் கடலும்
முத்துப் பவளம் சேர்த்து வைக்கும்
மூச்சடக்கி முக்குளித்தால்
முகமன் பார்த்து பரிசில் வழங்கும்
நீந்திச் செல்லும் கப்பல் தன்னை
ஏந்திச் சென்று கரையில் சேர்க்கும்
பாசவலையை வீசுவோர்க்கு
நேசமாக நிதிகள் நல்கும்
துள்ளி ஓடும் புள்ளி மான் போல்
நீந்தி மகிழும் மீன்கள் -கடல்
நெஞ்சணைத்து தாயைபோல
கொஞ்சி விளையாடும்
காற்றும் மழையும் இல்லையென்றால்
கட்டுப்பட்டு சொல்லுக் கேட்கும் .-மனம்
மகிழ்ச்சியான தருணங்களில் கொந்தளிக்கும்
வீழ்ச்சியினை கண்டுகொண்டால் கொக்கரிக்கும்
ஆலிலை மீதமர்ந்து ஆள்பவனை
நீர்திவலைகள் தூவி பாராட்டும்-தன்மடியினில்
போட்டு தாலாட்டுப்பாடும் தூங்காமல் வாழும்
மேலோட்டமாக பூங்காற்று வீசும்
வானவில் வந்து வளைக்கரம் நீட்டும்
வரைந்திட எண்ணி நிறங்கள் தீட்டும்
ஊறுகள் இன்றி உயிர்களை காக்கும்
உண்மையை சொல்லி உயர்வினைச் சேர்க்கும்
வெள்ளிப் பனிமலைகள் விண்ணில்
விளைவதையே பார்த்து ரசிக்கும்-அதில்
அந்த வெண்ணிலவு துள்ளி மகிழ்ந்தாட
சேர்ந்து சிரிக்கும் கடல் தன்னைமறந்து