Thursday, March 27, 2014

கேக்கும் வரங்களை ஈந்திடவே


   



 

நாமகளே உனைதுதி பாட
நல்வரம் எனக்கு நல்கிடம்மா
நற்கவி மாலைநான் தொடுக்க
நாவினில் நின்றுநீ நடமாடு

மரகத வளைக்கரங்கள் விளையாட
மாணிக்கவீணை மடியினில் தவழ்ந்தாடும்
ஏழுஸ்வரங்கள் அதில்ழுந்தாடும்
எதிரினில் நின்றே சதிராடும்

ஏகவீணையில் எழும் நாதம்
ஏழுகடல் தாண்டி எதிரொலிக்கும்
பூத்தபடி உம் புகழ் பாட -இந்த
புவனம் முழுவதும் அசைந்தாடும்

பொருந்திடும் கவிகள் புனைந்திடவே-தினம்
பேரருள் கிட்டிட வகை செய்வாய்
நின்தயவில் எம்தன் நலம் பேண
நித்தமும் பணிவேன்நின் பொற்பதங்கள்

கல்வியும் கலைகளும் மிளிர்ந்திடவே
கவனம் முழுவதும்  எம்மீதே வை- உம்
கை பொம்மை ஆவேன் என்பேன்
கைகூடிடவே என் எண்ணங்கள்


.


காற்றாட கார்குழலும் சேர்ந்தாட
கண்மலர்கள் ஆட கனவுகள் மெய்பட
தண்டை கொலுசு தகதக வென்றாட-நம்
தரித்திரங்கள் யாவும் தறிகெட் டோட

மரகத பதக்கம் உம்மார்பினில்ஆட-எம்
மனமதும் செம்மையாய் மகிழ்வினில்ஆட
இடையினில் செருகிய ஒட்டியாணம்-காண
இம்மையில் இன்ப வெள்ளம் பெருகிட

கைவளை குலுங்க அபிநயிக்கும்
கரம் அபயம்என்றே அடைக்கலம்நல்க
அக்கணமே ஆவிபிரிந்திட எண்ணும்
அகமும்புறமும் ஆனந்தக் கூத்தாடும்

உச்சி ப்பட்டம் நெத்திக் குங்குமம்
உள்ளங் கவரும் கொள்ளை யழகு
கள்ளம் அற்ற புன்னகை கண்டு
கொள்ளை கொள்ளும் உள்ளம் முழுதும்


சாந்தம் பொங்கும்  சந்தன முகமும்
சிந்திடும் கருணை நாம் சிறந்திடவே
குண்டலம் ஓதும் பாமகள் காதினில்-நாம்
கேக்கும் வரங்களை ஈந்திடவே

வெள்ளை பட்டும் வேதங்கள் ஓதும்
வீணையின் நாதம் நல்வழி காட்டும்
வீற்றிருக்கும் வெண் தாமரையும்
வெற்றிகள் கிட்டிட வழி வகுக்கும்

வாணிசரஸ்வதி வாக்கினில்  உறைய
வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதி
வேதனை சாதனை வேடிக்கை எல்லாம் 
வல்லகவியாய் வளர்ந்திட அருள்வாய்.

23 comments:

  1. என்னே சிறப்பான வரிகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உடன் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. இத்தனை சந்தங்கள் போதாதோ இனித்திடும் கவி வடிக்கும்
    தோழியே?..அத்தனை வார்த்தையும் பொன் என்பேன்
    அகத்தினைக் காத்திடும் கண் என்பேன் !! வாழ்த்துக்கள் என்
    தோழியே மேலும் மேலும் இன்பக் கவிதை மழை பொழிய .

    ReplyDelete
    Replies
    1. இனிய கருத்து ஈந்த இனிய தோழியே நீ என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்......! மிக்க நன்றி!தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. கலைமகள் போற்றி அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்...!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. "//வாணிசரஸ்வதி வாக்கினில் உறைய
    வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதிர//"

    உண்மை தான், உங்களின் எழுத்தில் அந்த சரஸ்வதியே புகுந்து விளையாடுகிறாள் சகோதரி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! பயணக் களைப்பையும் பார்க்காது பதிவுகளை பார்த்து கருத்து இடுவதற்கு. வழமை போலவே ஊக்கப்படுதும் வகையில் கருத்தினை இடுவதும் பெரு மகிழ்ச்சி சகோ....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. பாட்டும் , படமும் நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தோழி என்ன ரொம்ப களைப்பாக இருப்பது போல் உணர்கிறேன். அப்படியா! மிக்க நன்றி! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
    2. இல்லை தோழி. உண்மையில் வாணிசரஸ்வதியில் எல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது! ஆனாலும் நான் வந்து சென்றேன் என உங்களுக்கு தெரிவிக்க விரும்பினேன். நீங்க கண்டுபிடுச்சுடீங்களே?!

      Delete
    3. மல்லிகையை மறைத்து வைத்தாலும் வாசனை தான் காட்டிக் கொடுத்துவிடுமே.அப்புறம் கண்டு பிடிப்பதா கஷ்டம். அதேபோல வாணி சரஸ்வதியில் ஈடுபாடு இல்லை என்றாலும், அவள் வாக்கில் மிகுந்த ஈடுபாடு உள்ளதே தோழி ஹா ஹா அதனாலேயே அருமையாக கவிதை வடிக்கிறீர்கள் தோழி. ஆகையினால் எனக்கு அது மகிழ்ச்சியே தான் என் அருமை தோழியே!

      Delete
  6. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களின் இந்த பக்தி பாமாலையை என்னவென்று வர்ணிப்பது! ஒவ்வொரு வரியிலும் உங்கள் ரசனை வெள்ளமென கரை புரண்டு ஓடுவதைக் காண முடிகிறது. நாமகள் உங்களுக்கு இன்னும் இன்னும் அற்புதமான கவியை ஈனும் ஆற்றலைத் தருவாள். உங்கள் வேண்டுதல் யாவும் பலிக்கட்டும், என் அன்பு சகோதரியின் வளர்ச்சியில் என் உள்ளம் உவக்கட்டும். சிறப்பான கவிக்கு அன்பான நன்றிகள் சகோதரி. (பத்தாம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பணியினால் வலைப்பக்கம் முழுக்கு போட்டாச்சு அதுதான் தாமதம் வேறொன்றும் இல்லை சகோதரி)..

    ReplyDelete
  7. வாருங்கள் பாண்டியரே!
    ஓஹோ அதுவா விடயம் அப்படியானால் சரி சகோதரா இதற்கு மன்னிப்பு உண்டு. மாணவர்கள் விடயத்தில் விளையாடல் ஆகாது, எனவே என் சகோதரரின் கடமை உணர்வை நான் மெச்சுகிறேன். பொறுப்பான ஆசிரியர் என்பதை யிட்டு ஆனந்தம் கொள்கிறேன். தங்கள் அன்புக்கும் வாழ்த்திற்கும் தலை வணங்குகிறேன்.வழமை போல் உற்சாகமூட்டும் கருத்துக்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ ....!
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  8. நல்லருள் கிடைத்தே நலமுற வேண்டுகிறேன்
    வல்லவன் அடிகள் தொழுதே

    அருமை சகோ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நயம் படும் உரையும்
      நலம் தரும் வாழ்த்தும்
      நன்மையே பயக்கும் என்றும்
      நறுமலர் போலவே சூழும்
      இன்பம் என்றும் உமை!
      வருகையில் உவகை கொண்டேன்!
      கருத்தினில் நிறைவு கண்டேன்! மிக்க நன்றி சீராளா!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. சிறப்பு மிகு வரிகள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. சிறப்பு மிகு வரிகள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  11. வாணிசரஸ்வதி வாக்கினில் உறைய
    வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதிர
    அருள்வாய்.
    வாணிசரஸ்வதி வாக்கினில் உறைய
    வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதிர
    வேதனை சாதனை வேடிக்கை எல்லாம்
    வல்லகவியாய் வளர்ந்திட அருள்வாய்.
    Vetha.Elangathilakm.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும் .
      பயணக் களைப்பு நீங்கி விட்டது போல் . வாழ்க வளமுடன்....!

      Delete
  12. மிக மிக அற்புதமான வரிகள்! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! நாமகள், கலவாணி தங்களுக்கு இன்னும் பல கவி புனைய தங்களுக்கு எல்லா அருளும் நல்கட்டும் சகோதரி! தமிழ் விளையாடுகின்றது!

    உங்களிடம், சகோதரிகள் அம்பாளடியான் அவர்களிடம், ராஜேஸ்வரி அவர்களிடம் எல்லாம் , தமிழ் ஊற்று வைத்திருப்பீர்கள் போலும்! வற்றாத ஊற்று! வாழ்த்துக்கள்!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே ! தங்கள் கருத்து ஊட்டச் சத்து போல் நிறைந்த ஊக்கம் தருகிறது தங்கள் வருகையும் கருத்தும் மேன் மேலும் வளர்க்கும். என்றும் தங்கள் ஆதரவு தேவை .மிக்க நன்றி வாழ்க வளமுடன்....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.