சர்வதேச மகளிர் தினம் வாழ்க
மகத்தான பெண்ணினமே வாழ்க
சரித்திரங்கள் படைத்திடவே விளைக
சாந்தமும் சிந்திடவே வளர்க
பெண் அடிமை போக்கிடவே எழுக
பொல்லாமை கொன்றிடவே துணிக
கல்லாமை வேண்டாம் என்க
கொடுமை இனி வேண்டாம் சொல்க
போற்றிப் புகழ்ந்திட போராடு
நேற்றைய நினைவினை நீராடு
புதிய சரித்திரம் படைத்திடு
புதுமைகளைநீ புகுத்திடு
மனிதய நேயம்
வளர்த்திடவே பெண்கள்
அவர் மகத்துவங்கள்
புரியவைக்கு முன்னர்
மண்ணையுமே பெண்மை
என்றே சொல்வர்
விண்ணையுமே
பெண்ணெனவே புகழ்வர்
கங்கையும் காவிரியும் பெண்ணே
கண்ணெனவே கருதிடுவர் முன்னே
கற்ற பின்னும் இன்னும் ஏன்புண்கள்
கங்கை இன்னும் காண்பதேன் கண்கள்
பாரதி கண்ட புதுமை பெண்
புலம்புவது இன்னும் ஏன்
போற்றிடும் பெண்ணை
தூற்றிடும் மண்ணே காண்
அன்னை யற்ற வாழ்வு
அனல் போல அன்றோ
காதல் அற்ற வாழ்வும்
கசந்து போகும் அன்றோ
அன்பும் அமுதும்
ஊட்டி வளர்ப்பவள்
கண்ணெனவே அன்னை
எண்ணி வளர்ப்பவள்
மனைவி காதலை
கண்களில் கருதி
வளர்ப்பவள் கருத்துடன்
கடமை காத்து நிற்பவள்
சக்தியும் யுக்தியும்
கொண்டவரே சரித்திரம்
படைத்தும் நின்றவரே
சித்திகள் யாவும் கண்டவரே
ஆட்சியில் அமர்ந்தாள்
அன்பினை சொரிந்தாள்
பெண் ஆயுதம் ஏந்தி
போர்க்களம் புகுந்தாள்
விண்ணிற்கும் விஜயம்
விரும்பியே செய்தாள்
வண்ணமாய் வீட்டிலும்
வளையவே வந்தாள்
சிவமும் சக்தியும் சரிபாதி
இதுவே உலகின் பொது நீதி
ஆடவர் உறு துணைஅருள்நீதி
ஆற்றிடும் சேவையில் வரும் நீதி
அறிவினை ஊட்டிடிட்ட ஔவையும்
இதுவே உலகின் பொது நீதி
ஆடவர் உறு துணைஅருள்நீதி
ஆற்றிடும் சேவையில் வரும் நீதி
அறிவினை ஊட்டிடிட்ட ஔவையும்
அன்பினை தந்திட்ட அன்னை
தெரசாவும் கண்ணான காரிகைகள்
தன்னலம் இல்லா தாரகைகள்
மண்ணும் பொன்னும் மின்ன
பெண்ணே வேண்டும் கண்ணே
கண்ணை குத்து முன்னம்
எண்ணிபாரு முன்னே
மங்களம் பொங்கும்
மங்கை மனம் கோணாத
வாழ்வில் திங்களை
போலவே திகழ்வாள் என்றும் !
சர்வதேச மகளிர்
தினத்தை முன்னிட்டு
அனைத்து பெண் மணிகளுக்கும் என்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....!
தன்னம்பிக்கையுடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான மகளிர் தின
சிற்ப்புக் கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் கவிஞரே! நீண்ட நாட்களின்பின்.
Deleteதங்கள் வருகையில் பெரு மகிழ்ச்சியடைதேன்.வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்....!
மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி.அருமையானகவிதை.
ReplyDeleteவாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நணெய் தோழி....!
Deleteவாழ்க வளமுடன்....!
மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeletehttp://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_7.html
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா....!
Deleteசிறப்பான கவிதை...
ReplyDeleteசர்வ தேச மகளிர் தின வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி...! சகோ வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.....!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபெண்ணினத்திற்கு பெருமை சேர்த்தும், விழிப்போடு நடை போட தன்னம்பிக்கை விதைகளைத் தூவியிருக்கும் உங்கள் கவிதை தங்கள் சிந்தனையின் உச்சம். பன்முகம் கொண்ட பெண் இனம் மண்ணில் மகிழ்வோடு நடை போடும் காலம் பெண்ணின் துணிச்சலில் தான் உள்ளது. பெண்ணினத்திற்கு ஆண்களும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதை உறுதி மொழியாக கொண்டால் நலமாக இருக்கும்.. தன்னமில்லா தாரகைக்கு (என் சகோதரிக்கு) இந்த அன்பு சகோதரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி..
வணக்கம் சகோதரா!
Deleteவழமை போலவே தன்னம்பிக்கையையும்
ஊக்கத்தையும் தந்து வளர்ப்பதில் பெரும் பங்கு உங்களுக்கு உண்டு சகோதரா! நன்றி சொல்ல வார்த்தையே இல்லை சகோதரா.பெண்களை மதிக்கும் பெருங் குணம் கொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர் என் சகோதரர் என்பதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையுமே. மிக்க நன்றி !எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்....!
இதோ வந்துவிட்டேன் கவியக்கவியே!
ReplyDeleteமகளிர் தினத்தில் எல்லோரும் வெளிநாட்டுப்பெண்களின் படங்களை போட நம் கவியக்கவி வழக்கம்போல வித்யாசமாய் ஒரு தமிழ் பெண் படத்தோடு தொடங்குகயிலேயே கவிதை களைக்கட்ட தொடங்குகிறது!
ஒவ்வொரு வரியையும் படிக்கும் போதும் பெண்ணாய் பிறந்ததைஎண்ணி மனம் பெருமை கொள்கிறது! வாழ்த்துக்கள் தோழி!!
வாருங்கள் தோழி !
Deleteநீங்கள் வராமல் எப்படி களை கட்டும்தோழி. கண்டதும் களிப்படைந்தேன்.மிக்க நன்றி !
மங்களகரமாக நம்நாட்டுப் பெண்களை இடுவது சிறப்பே. எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இந் நன்னாளில் நம் பெண்கள் எல்லாவற்றிலும் சிறப்படைய வேண்டும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் தைரியம் பெற வேண்டும் உரிமைகளை பெறவேண்டும் என்று வாழ்த்தவே தோழி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ! வாழ்க வளமுடன்....!
மிகவும் சிறப்பான கவிதை. பெண்ணினத்தை இன்னும் மேல தூக்கி நிறுத்திவிட்டீர்கள் தங்களின் கவிதை மூலம்.
ReplyDelete"//அன்பினை தந்திட்ட அன்னை
தெரசாவும் கண்ணான காரிகைகள்//"
அன்னை தெரேசாவின் புகைப்படத்தை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள் சகோதரி
வாருங்கள் சகோதரா!
Deleteதங்கள் விருப்பம் போல் அன்னை தெரேசா ஆஜராகி விட்டார்.
யோசனைக்கு மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
வாழ்க வளமுடன்....!
மிகச் சிறப்பான இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய
ReplyDeleteவாழ்த்துக்களும் அன்புத் தோழியே .
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி!
Deleteவாழ்க வளமுடன்....!
நல்ல கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் மூலம் என்ன சொல்ல வருகிறீர்
பெண்கள் இன்னும் கோலமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றா?
கணியில், விண்ணில், அறிவியலில், பெண்களைக் காட்ட விருப்பம் இல்லையா?
வாருங்கள் சகோ!
Deleteஅப்படி இல்லை சகோ அவசரமாக இந்தப் பதிவை இட்டமையால் சரியான படம் உடனே கிடைக்கவில்லை. அத்துடன், கோலம் போடுவது ஒன்றும் தப்பில்லையே. நாட்டுக்கே ராணியாக இருந்தாலும் வீட்டில் சாதாரண பெண்ணாக தாயாக மனைவியாக நளினமாக இருப்பது தனியழகு தான். அதாவது கோலமும் போட வேண்டும் தேவைப்பட்டால் கொந்தளிக்கவும் தான் வேண்டும். என்பதே.
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
வாழ்க வளமுடன் ...!
தாய்மைகள் மண்ணில்
ReplyDeleteதவிக்கும் நாளல்ல - இன்று
வாய்மையில் வென்ற
வரலாறு பலவுண்டு !
போற்றிப் புகழும்
புலவர்கள் கோடி - பெண்ணை
ஏற்றித் தொழுகின்றோம்
எந்நாளும் கூடி !
வலிகள் தவிர்த்திங்கே
வாழுங்கள் நாளும் - புதிய
கவிகள் படைத்திங்கே
காத்திடுவோம் தாளும் !
இனிய கவிதை சகோ
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளம்பெற்றே எந்நாளும்
வணக்கம் சீராளா! மிக்க மகிழ்ச்சி !
Deleteதாய்மையை போற்றும் உள்ளம்
கவிஞர்க்கு மட்டுமே உள்ளது.
கவிஞனாய் போற்றிப்பாடு உன் அன்னையை
உத்தமமான பிள்ளை பெற்றெடுத்தமைக்கு...!
மிக்க நன்றி சீராளா! வருகைக்கும் கருத்துக்கும்.
கோடி நன்மை கூடி வர வாழ்த்துகிறேன்....!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
ஆண்டுக்கு ஆண்டு வரும்
பார் எங்கும் வாழும் தையளவல்
மடமையைப் போற்றும்-எழுச்சி மிக்க வரிகளில் புனைந்த கவிதை என் மனதை நெகிழ வைத்தது.....சிறப்புக்கவிதை படைத்தமைக்கு.....வாழ்த்துக்கள் அம்மா
தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் !
Deleteமிக்க மகிழ்ச்சி ரூபன் ஒரு வழியா வந்து கருத்து போட்டாச்சு.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !
ஒளிமயமான வாழ்வு பெற வாழ்த்துகிறேன்....!
படங்கள் மாறியிருப்பது மகிழ்வே...
ReplyDeleteநன்றி சகோ! எப்பவும் தங்கள் அறிவுரையை எதிர்பார்க்கிறேன் வரவேற்கிறேன். இப்போது திருப்தியாக இருக்கும் என்று நினைக்கிறன். இல்லாவிட்டால் சொல்லிவிடுங்கள். நொடியில் மாற்றிவிடுகிறேன் சகோ. சரியா! எனக்கு சகோதரர் மேல் கோபமே வராது ஆகையால் யோசிக்கவே வேண்டாம். நன்றி!
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...