Friday, March 7, 2014

கற்பூரமா தமிழ் காணாமல் போவதற்கு

 
    

சூடு கண்ட பூனை
போல சுத்துறது
சுழல் துப்பாக்கி
போலவே கத்துறது

வெட்டி வேலை
தானே பார்க்கிறது
கெட்டுப்போன வாசம்
தானே வீசுறது

காடுமலை எல்லாம்
குடையிறது
கட்டி வைத்த சிங்கம்
போல கர்ஜிக்கிறது

நட்டுவைத்த பிள்ளையை
பார் விண்ணிலே
நலுங்காம செய்யும்
அது நன்மையை

நாட்டுக்கு தலைவன்
என்பர் மண்ணிலே
நசுக்கிடாமல் எண்ணி 
செய்வார் இழிசெயலே

விருந்து வேணு
மின்னு உயிரை
வட்டமிட்டு வருத்து
மொரு பருந்து

கண்இமை போலவே
கண்ணியம் காத்திடு
கடமை உணர்வினை
நன்றே கூட்டிடு

கூடு கட்டும் குருவிகளை பாரு
கூட்டமாக பறந்து செல்லும் ஊரு
தமிழா ஒன்றுபடு
 தமிழை வென்றுவிடு

ஊர்ந்து செல்லும் கட்டெறும்பு பாரு
கட்டுக் குலையாமல் 
சேர்ந்து செல்லும் நேருநீ
உறுதியுடன் சளையாமல் நில்லு

மாங்கனி தீவதனை
மானிடவர் அறியாரே
மாநிலத்தில் இல்லை
இப்போ அறியாதாரே

கற்பூரமா தமிழ்
காணாமல் போவதற்கு
கள்ளிச் செடியா அது
கசக்கும் என்பதற்கு

வாசமுள்ள முல்லையா
வாடி விழுவதற்கு
கூடி வளர்த்திடுவோம்
குன்றாமல் பார்த்திடுவோம்

கொஞ்சும் தமிழ் அல்லவா
மிஞ்சிடும் நெஞ்சில்
வஞ்சம் மிகுபவர்க்கு
கொஞ்சம் விஞ்சும்

பாலொடு தேன் கலந்து
பிஞ்சிலே ஊட்டு.
ஆங்கில மோகம்
வருமுன் அணைத்து

மடை திறந்த வெள்ளம்
போலதமிழ் பரவிக் கிடக்கு
குடத்திலுள்ள விளக்கு
குன்றினில் இருக்கு

ஆலயங்கள்  அகில
மெல்லாம்  அணிவகுத்தீர்
ஆதரிப்பீர் தமிழ் 
வளர்க்க அன்புடையீர்

ஊற்றெடுத்து உலக
மெல்லாம் ஊன்றிவிட்டது
காற்றாய் தமிழ் காசினியில்
கலந்து விட்டது

இனி தரணி எல்லாம்
தமிழ் மணக்கும்
பக்தி வெள்ளம்
      பெருக் கெடுக்கும்


27 comments:

 1. /// கண்இமை போலவே
  கண்ணியம் காத்திடு
  கடமை உணர்வினை
  நன்றே கூட்டிடு ///

  சிறப்பான வரிகள் பல... பாராட்டுக்கள்...

  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரா!
   எல்லோரும் ஆச்சரியப் படும் வகையில். எப்படி சாத்தியம் இது. நிச்சயமாக ஒரு பாராட்டு விழா பெரிய அளவில் வைக்க வேண்டும் சகோதரா! ஏதாவது மந்திர சக்தி இருக்குமோ? இதற்கும் ஒரு பதிவு தாருங்கள் சகோ! ஹா ஹா ம்...ம்...ம்.
   வருகைக்கும் கருத்துக்கும். நன்றி சகோ ! வாழ்க வளமுடன்....!

   Delete
 2. வணக்கம்!

  மூத்த தமிழ்மொழியைக் காத்துக் சிறந்திட்டால்
  பூத்து மணக்கும் புகழ்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞரே! மிக்க மகிழ்ச்சி !
   தங்கள் வருகை எந்தன் உவகை !
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! வாழ்க வளமுடன்....!

   Delete
 3. கற்பூரமா தமிழ்
  காணாமல் போவதற்கு!..
  கள்ளிச் செடியா அது
  கசக்கும் என்பதற்கு!..

  அருமையான வரிகள்.அழகான கவிதை.
  மகளிர் தின நல்வாழத்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரா !வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி....!

   Delete
 4. உண்மை தான் தோழி தமிழுக்கு அழிவேது !!
  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் மனம் கனிந்த
  மகளீர் தின நல் வாழ்த்துக்களும் தோழி .

  ReplyDelete
  Replies
  1. மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி....! அயல் நாட்டில் அந்நிய வாழ்கை அந்நியமொழி தினம் அல்லல் படும் வாழ்கையில் தமிழ் வளர்க்கும் எண்ணம் இருக்க நியாய மில்லை யல்லவா இதை விட பூதாகரமான பிரச்சினைகள் இருந்திருக்கும் மொழியும் பிரச்சினை தான் அல்லவா? இந்நிலையில் இனி மாற்றம் இருக்கும் ஆகையால் இது வரை விட்ட பிழை தொடராமல் இருக்கவே தான் தோழி.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 5. வணக்கங்கள் அன்பு சகோதரிக்கு
  தமிழை வளர்க்கப் பிறந்த தங்கள் எண்ணங்கள் அக்கினியாய் எழுந்து வலைத்தளம் மூலம்தரணியெங்கும் பரவியிருக்கிறது. அஃறிணைகள் ஒற்றுமையாய் இருந்து பணியை முடிக்கும் போது நாம் தள்ளி நிற்பதேன் என்று அழுத்தமாக பதிந்துள்ளீர்கள். பிஞ்சுக்குழந்தைகளுக்கு கொஞ்சு தமிழைப் பெற்றோர்கள் கற்றுத்தந்து அந்த மழலை வயதில் தமிழ்ப்பற்று வளர்த்து விட்டால் தமிழ் தலைத்தோங்கும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. தங்களுக்கு எனது நன்றிகள். சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ !
   புதிய படங்கள் இட்டு இருக்கிறீர்கள். யாரு உங்கள் தம்பியா ? நான் யாரோ என்றல்லவா நினைத்தேன். நாம் இதுவரை வீட்ட பிழை தொடர வேண்டாமே என்பதாலேயே எழுதினேன்.அந்நிய நாட்டில் பாஷையையும் வாழ்க்கையையும் கற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கையில் பல இன்னல்கள் சந்திக்க வேண்டி இருந்திருக்கும்.தமிழ் வளர்க்கும் எண்ணம் இருந்திருக்காது. இனி அப்படி இல்லை யல்லவா. தமிழை வளர்க்க சிந்திக்க வேண்டும் அல்லவா?ஊக்கம்அளிக்கும் தங்கள் கருத்து மிகவும் ஆறுதலாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி சகோ!


   Delete
  2. என் படம் தம்பி படம் போலவா இருக்கிறது? என்னுடையது தான் சகோதரி.

   Delete
 6. அருமை, அருமை சகோதரி. தமிழுக்காக தாங்கள் எழுதிய இந்த கவிதையின் ஒவ்வொரு வரியினையும் ரசித்து ரசித்து படித்தேன்.

  "//ஆதரிப்பீர் தமிழ்
  வளர்க்க அன்புடையீர்//:

  தமிழுக்காக இணையுங்கள் என்று சொல்லும் அந்த இணைந்த கைகள் படம் சிறப்பு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மிக்க மகிழ்ச்சி! சகோதரா !
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 7. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 8. இன்பத் தமிழென்றும் இவ்வுலகில் வாழ்ந்திருக்க
  நன்றுரைத்த நற்கவியே நம்பிடுவாய் - மன்னுலக
  மக்கள் மடிந்தாலும் மீள்பிறக்கும் என்றென்றும்
  மொக்குள் மலர்ந்த மொழி !

  அருமையா இருக்கு சகோ
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வருக வருக இளம் கவியே வருக!
   பொருந்திய சொற்றொடரில்
   பூமாலை தொடுத்திடுவாய் புரிந்து!
   மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றா கொடுக்க வேண்டும்

   சீராளா சேரும் உன்னை
   சீரும் சிறப்பும்
   மெலிந்து வாடும்
   உள்ளமும் மீளும்
   மகிழும் வாழ்வும் விரைவில் காண வாழ்த்துகின்றேன்....!

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 9. கற்பூரமா தமிழ்
  காணாமல் போவதற்கு
  கற்கண்டு தமிழல்லா சுவைப்பதற்கு..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 10. நல்ல கவிதைம்மா வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 11. சில நேரம் நான் இதுபோன்ற கவிதைகளால் குற்றுணர்வுக்கு ஆளாகிறேன்.
  என் மாணவர்கள் கூட கேட்பார்கள் இவ்வளவு நாட்டுப்பற்று ,மொழி பற்று பத்தி பேசுறிங்க, அப்புறம் ஏன் தமிழ் படிக்காமல் ஆங்கிலம் படிச்சீங்க என்பார்கள். நாம் புதுசுபுதுசா இலக்கியம் தெரிஞ்சுக்கலாம் னு ஆர்வத்தில் தான் படிச்சேன். அப்புறம் எத்தனையோ மாணவர்கள் ஆங்கிலம் பிடிபடாமல் போனதாலேயே தற்கொலை வரையோ அல்லது பள்ளியை படிப்பை விட்டோ ஓடிவிடுகிறார்கள். கல்வி முறை மாறவேண்டும், அதுவும் உயர்படிப்புகள் ! மற்றபடி அது பணம் பண்ண, தமிழ் மனம் பண்பட என அதுவரை மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். சரியா தோழி? உங்கள் கவிதை மேலும் சிந்திக்க வைக்கிறது! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா வந்தாச்சா தோழி ! எத்தனை பிள்ளைங்க சமாளிச்சிட்டு வரவேண்டாமா சரி சரி புரிஞ்சு போச்சு. ஆமா எதுக்கு எதுக்கு குற்ற உணர்வு ஆங்கிலம் படிக்கிறது தப்பா இல்லையே. தாரளமாக படிங்க மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கம்மா தமிழ் தெரியாம படிக்காம ஆர்வம் இல்லாமல் இருக்கிறது தான் தப்போ என்று எண்ணுகிறேன்.தாங்கள் தான் கவிதை கட்டுரை என்று அசத்துகிறீர்களே அப்புறம் என்ன. நீங்கள் நினைப்பதும் சரி தானே தற்கொலை வரை போகும் என்றால் நீங்கள் தான் என்ன செய்யமுடியும் அந்நிலையை தவிர்க்க நீங்கள் ஆங்கிலம் கற்றது பெருமையே. கல்வித் திட்டத்தில் ஏதும் மாற்றம் வந்தால் தான் தீர்வு இதற்கு இல்லையா. சரி தோழி இனி மனதை தேற்றிக் கொண்டு சிந்தியுங்கள்.
   எண்ணம் போல் இனிதே வாழ வாழ்த்துகிறேன் தோழி.....!

   Delete
  2. படபட னு பேசுறீங்க.ஊருக்கு வரும்போது சொல்லுங்க. சந்திக்க ஆசையா இருக்கு இந்த ஊசிப்பட்டசை!

   Delete
  3. அப்படியா தோழி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் இதை பல தடவை நினைத்தேன் தெரியுமா? எனக்கும் உங்களை யெல்லாம் பார்க்க ஆசை தான்.பார்க்கலாம் ஆண்டவன் அனுகிரகம் இருந்தால் நிச்சயமாக சந்திக்கலாம்.
   சகோதரர் பாண்டியனின் கல்யாணத்தில் சந்திக்கலாமா?
   அடடே வாய் முகூர்த்தம் பலிக்கப் போகிறதே.ம்...ம்...ம் பார்க்கலாம்.

   Delete
 12. வணக்கம்
  அம்மா.
  கவிதையின் வரிகள்.....
  சிறப்பாக உள்ளது..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ரூபன்!
   எங்கே காணோம் என்று பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி !
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்!
   நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....!

   Delete
 13. அருமை! அருமை!
  தலைப்பு கச்சிதம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் இமா தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி யடைந்தேன்!
   மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் இமா. தொடர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்....!

   Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.