Sunday, November 3, 2013

பொன்னாடை


Paddy_fields : Paddy fields and coconut trees

பொன்னாடை போர்த்தி வந்தேன்
புகழாரம் சூட்டிவிட்டார் அகரமுள்ள
அழகான பட்சியின் பெயரை இட்டு
பாங்காக அழைத்திட்டார்.

நானும் இல்லை என்றால்
வாணாள் இல்லை என்றார்
குடி உயரும் கோன் உயரும்
என்னாலே தானே என்றார்

அட்சய பாத்திரத்தில்
அடங்கா இடமும் தந்தார் எனை
நன்றியுடன் மகிழ்விக்க பொன்னாடை
போக்கி  பொங்கலிட்டு  கும்பிட்டார்.

வாயார வயிறார வாழ்த்தும்
குணம் உண்டு செவ்வாடை
தரித்திருந்தால் கொஞ்சம்
முண்டு செருக்கெனக்கு

வந்தோரை எல்லாம் வாழ வைப்பேன்
பேதம் ஏதுமின்றி காத்திருப்பேன்
முடிதாங்கும் மன்னரும் பணிவரே எனையே
படைத்த இறைவனுக்கும் படியளப்பேன் நானே

விதியற்றோர் வாசலை நான்
நெருங்கவே மாட்டேன் பரந்த
வயல் வெளிகள் எனக்கோ ஏராளம்
நீரும் அருந்திட வேணும் வெகுநேரம்

நோயுற்றோரை நான் நலிந்து காப்பேன்
வறியோரை நான் கரைஞ்சு காப்பேன்
படையுடன் வந்தாலும் விடை பகர்வேன்
விருந்தென்று வந்தாலும்  அகமகிழ்வேன்.

இருந்தாலும் சோகம் எனக்கும் இருக்குதுங்க எடுதியம்பிட தன்மானம் தடுக்குதுங்க. கவலை இன்னா நீங்க தண்ணி   அடிப்பீங்க அதெல்லாம் எனக்கு பழக்கமிலைங்க உங்க கிட்ட சொல்லி ஆறலாமேன்னு உங்களுக்கு மட்டும்தான் சொல்லுகிறேன் ......ஷ்....ஷ்.....ஷ்....யாருக்கும் சொல்லமாட்டீங்க இல்லே.எனக்கு தெரியும் சொல்லமாட்டீங்க.

ஐயகோ அரும்பணி செய்யும் எனை
அரும்பாடு படுத்துகிறார் நன்றி கெட்ட
மானிடவன் நைய புடைகின்றான்
கொத்தடிமை கூட எந்தன் நிலை கண்டதில்லை

நெருப்பில் இட்டு வாட்டி வதைகின்றார்
நொந்து வெந்த பின்பும் வாயினில் போட்டரைப்பர்
வயிற்றிலும் குழைத்தெடுப்பர் கொஞ்சமும்
அஞ்சவில்லை பஞ்சமா பாதகத்திற்கு

என்னை உடுப்பை ஊறவைப்பது போல்
ஊறவைப்பார் அடித்து துவைப்பது போல்
எனை இடித்து அரித்திடுவர் என்ன கோபமோ
வானலியில் போட்டு எனை நன்றாய் வறுத்தெடுப்பர்

கோபம் இன்னமே தீரவில்லை
கொதி நீரில் இட்டு எனை குழைத்திடுவர்
பொல்லாத மனிதர் மர உரலில்
இட்டு மிதித்தே பிழிந்திடுவர்














அடங்கவில்லை இன்னும் ஆத்திரம் போல
ஆவியிலும் போட்டு என்னை அவித்தெடுப்பார்
ஐயகோ எமக்கொரு காந்தியில்லை
என்றென்றும்  சாந்தியில்லை


 


இது மட்டுமா இப்போது என்ன வென்றால்
நோய் நொடிகள் எல்லாமே என்னாலே வந்த தென்பர்
தித்திக்கும் சர்கரையோ வாழ்வினில் இல்லை
என்பர் மெய்யினில் இருக்கு தென்பர்

தொப்பையும் விழுகுதென்பார்
தொந்தரவு என்று  எண்ணி வெறுத்து
ஒதுக்குகிறார் நன்றி கெட்ட மாந்தரை
எண்ணி நான் புலம்புகிறேன்

உழைத்து உண்ணாமல் உட்கார்ந்து
உண்பதானால் இந்நிலை என்றறியாமல்
பேசுவதை என்ன சொல்வேன் நான்
விதியை நொந்திடுவேன்.
Computer_office : A silhouette of a businessman sitting in office chair and working on laptop computer isolated on white background
இது  மட்டுமா வாழ்ந்திருந்து
வதைத்தார்கள் என்றால் வாழ்ந்து மடிந்த
பின்னும் வாய்கரிசி என்று சொல்லி
வாயினில் இட்டிடுவார்





14 comments:

  1. Replies
    1. வணக்கம் சகோதரா.....!
      வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி......! மிக்க மகிழ்ச்சி......! சும்மா fun க் காக எழுதியது.

      Delete
  2. அர்த்தமுள்ள கவிதை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராஜி....!

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!

      தொடர வேண்டுகிறேன்.

      Delete
  3. வணக்கம்
    கோபம் இன்னமே தீரவில்லை
    கொதி நீரில் இட்டு எனை குழைத்திடுவர்
    பொல்லாத மனிதர் மர உரலில்
    இட்டு மிதித்தே பிழிந்திடுவர்

    இனிமையான சொற்கள்
    எம் இளம் நெஞ்சுக்கு விருந்தாக
    கவி ஒன்றை தந்த இனியாவுக்கு
    என் இனிமையான வாழ்த்துக்கள்
    கவிதை அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா....!
      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு ரொம்ப மகிழ்ந்தேன்.
      மிக்க நன்றி.....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. அர்த்தமுள்ள கவிதை

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
      தொடர வேண்டுகிறேன்.

      வாழ்க வளமுடன்...!

      Delete

  5. வணக்கம்!

    இனிக்கும் எழுத்தை எழுதும் இனியா
    மணக்கும் தமிழின் மகள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. வாருங்கள் கவிஞரே....!

    உங்கள் கருத்தும் வரவும் கண்டு உள்ளம் இனித்தது, இன்னும் எழுது என்று துடித்தது.
    ரொம்ப நன்றி...! வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  7. அன்பு சகோதரிக்கு
    வணக்கம். அர்த்தமுள்ள வரிகள் அத்தனையும் உண்மைகள். எப்படி இத்தனை வார்த்தைகள் கவியில் சரளமாய் வந்து விழுந்ததென இமைக்காமல் பார்க்கிறேன். தங்கள் கவி எனக்குள் வியப்பை விதைக்கிறது. அவ்வளவு அருமை. பகிர்வுக்கு நன்றிகள். தொடர வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  8. அன்புச் சகோதரா வருக வருக...!
    கருத்தும் வாழ்த்தும் கண்டு உள்ளம் மிகவும் குதூகலிக்கிறது. நம்பிக்கையும் பிறக்கிறது. மிகவும் ஊக்கம் தரும் உம் வார்த்தைகள் எனை உன்னதம் அடைய செய்யும். ரொம்ப நன்றி...!

    இனியமகள் வாய்க்கப் பெற்று
    இன்பம் எல்லாம் பெற்று இனிமையாய்
    வாழ உளமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. ஆறாய்ப் பல்கிப் பெருகும்
    அற்புதக் கற்பனையுடன் கூடிய
    சொல்லாட்சி அதிக மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    (தமிழ் மணத்தில் தங்கள் பதிவுகளை
    இணைக்கலாமே.அதிகம் பேர்
    தங்கள் அருமையான படித்துப்
    பாராட்ட அது ஏதுவாகுமே )

    ReplyDelete
  10. வாருங்கள் ரமணி சார்...!
    உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
    உங்கள் வாழ்த்தும் கருத்தும் என்னை நிச்சயம் வளர்க்கும்.

    ரொம்ப நன்றி...! வாழ்கவளமுடன்....!
    பதிவு செய்து விட்டேன்.கூடிய விரைவில் இவற்றை இணைத்து விடுகிறேன்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.