Tuesday, November 26, 2013

தேமொழியின் வரைபடம்


எதுவும் கடந்து போகும் 

http://www.vallamai.com/wp-content/uploads/2013/11/depression.png

http://www.vallamai.com/?p=40213



 மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு


எதுவும் கடந்து போகும்  
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்  
எளிதில் மறந்து போகும்


http://kaviyakavi.blogspot.ca/2013/09/blog-post_20.html?showComment=1385516494313#c1698670523300673425


என் கவிதைக்கு ஏற்ப தேமொழியின் அருமையான வரை படம் அவருடைய வலைதளமும் மேலே தந்துள்ளேன்.கவிதைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப  அருமையான ஓவியங்களை தானே வரைந்து படைத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் வலைதளத்தை சென்று பார்வை இட்டு ஊக்கம் தர  வேண்டுகிறேன் நன்றி வணக்கம்...!

14 comments:

  1. அருமை... உண்மையும் கூட...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்....!
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி...!
    வாழ்க வளமுடன்...!

    ReplyDelete
  3. எதுவும் கடந்து போகும் என்று எண்ணுவதே
    எம்மை எது இடறினாலும் கடந்து போய்விட வைத்திடும்!

    அருமையான கவிதை! வாழ்த்துக்கள் தோழி!

    படம் வரைந்த தேமொழிக்கும் என் வாழ்த்துக்கள்!
    அவர் தளமும் சென்று பார்க்கின்றேன்!

    அறிமுகப் படுத்திய உங்களுக்கும் என் நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் வந்து ஊக்கம் தரும் வகையில் கருத்துகள் ஈந்து களிப்புறவைக்கும் என் அன்புத் தோழிக்கு எந்த இடரும் நேராதிருக்க நெற்றிக்கண்ணன் நிறைவான வாழ்வு தருவான். நன்றிகள் பல ...!
      எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ...!

      Delete
  4. உண்மை.மிக பெரிது என நினைத்தவைகள் காலக்கடத்தலில் காணாமல் போய்விடும்.இதுவும் கடந்து போகும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி
      உங்கள வரவும் கருத்தும் கண்டு மனம் நிறைந்து போனது.நெகிழ்வு கண்டது.
      நன்றி...! வாழ்க வளமுடன்.....!

      Delete
  5. வணக்கம்

    குட்டிக்கவிதையாம் ஆழ்மனதில் வடம் பிடிக்குது அதன் கருத்துக்கள் பல உள்ளங்களின் மனதில் ஆழப்பதியும்... அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பதில் கீழே பார்க்கவும்

      Delete
  6. கவிதையும் அதன் அர்த்தம் புரிந்து வரைந்துள்ள
    ஓவியமும் அற்புதம்
    மிகவும் ரசித்தேன்
    இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் நல்கிறது ஐயா
      ரொம்ப நன்றி
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  7. வணக்கம் ரூபன்
    உங்கள் கருத்தின் பின் தான் அந்தக் கவிதையின் ஆழம் மேலும் சிறக்கிறது என்பதை உணர்கிறேன். மிகவும் திருப்தியாகவும் இருக்கிறது.
    மிக்க நன்றி வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  8. அன்பு இனியாவிற்கும், அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்.
    என் படத்தினை வெளியிட்ட தோழிக்கும், பாராட்டிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    என் படம் இடம்பெற்ற "வல்லமை" என் வலைத்தளம் அல்ல, வல்லமை மின்னிதழில் நான் என் கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வேன்.

    என் படைப்புகளுக்கு ஊக்கமூட்டி ஆதரிக்கும் வல்லமை இதழ் ஆசிரியர் குழுவினரும், வாசகர்களும் என் நன்றிக்கும் அன்பிற்கும் உரியவர்கள். வல்லமை போன்றே மற்ற மின்னிதழ்களிலும் நான் பங்கு கொள்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழி பாராட்டுக்கள் ....! தொடர வாழ்த்துக்கள்....! நாமும் பார்க்க கூடிய வசதிகளை செய்தால் நல்லது. தொடர்ந்து வாருங்கள்
      உங்கள் வருகை எனக்கு மகிழ்வை யும் ஊக்கத்தையும் நல்கும்..

      Delete
  9. அன்பின் சகோதரிக்கு சகோதரரின் வணக்கங்கள் இதோ...
    எதுவும் கடந்து போகும் எனும் அற்புதமான தன்னம்பிக்கை தரும் வரியை உள்ளடக்கிய கவிக்கு அழகான ஓவியம் புனைந்த தேமொழிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. அவரின் அறிமுகம் தந்த தங்கள் தங்க குணத்திற்கு நன்றிகள். திறமைகளை, நல்லவைகளை உடனே பாராட்டும் தங்கள் குணம் எத்தனை பேருக்கு வரும் என்பது கேள்விக்குறியே.. தங்கள் பாராட்டும் குணத்திற்கும் நல்லவற்றை ஆராதிக்கும் பண்பிற்கும் நன்றிகள் பல. தொடர்க வாழ்த்துகள் சகோதரி. நன்றி.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.