ஈழம் மீட்டிட இடர் தீர தளராது
இடைவிடாது இருதயம்
துடித்திட கண்கள் துஞ்சாது
மன்னுயிர் காத்திட தன்னுயிர் நீத்தவர் எங்கே
தாயன்பை தள்ளி வைத்து
போர் அன்பை வளர்த்தவர் பற்று
பாசம் முழுவதும் துறந்தவர்
ஆடம்பர வாழ்வையும் மறந்தவர் எங்கே
கல்வி கலை கற்காமல் கால்
பந்தாடாமல் வாலிப வசந்தம் உணராமல்
அறுசுவை உணவையும் உண்ணாமல்
ஆனந்தமாகவே அல்லலுற்றவர் எங்கே
குப்பையில கிடந்தாலும்
குண்டு மணி மங்காது
கல்லறையில் வாழ்ந்தாலும்
மறவர் கர்வம் குறையாது
கொள்கையும் மாறாது
கொண்ட காயமும் ஆறாது
தாயக தாகம் தணியாது
மிளிரும் என்றும்
விரைந்து கண்ட கனவு
வீணே கலையாது
ஏற்றி வைத்த தீபம்
அணையா தொளிரும்
மாவீரர் தினம் என்றறிந்தோ
விண்ணிலவு வண்ணம் இழந்தது
சூரியக் கதிர்களும் தெரிந்தோ
அனலாய் கொதித்தது
மாய உலகே பாரு
இது உடைந்து போன தேரு
இதை கடந்து போன தாரு உறக்கமில்லா
ஊரு உருவமில்லா பேரு
கார்த்திகை பூக்கள் எல்லாம்
காகிதப் பூக்கள் அல்ல
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை இல்லை
கண்ணீரும் செந்நீரும் கலந்தது
போதும் கண் விழித்து பாரும்.
மீண்டும் வாரும் முகிற்
கூட்டங்களே அவரை மீட்டு வாரும்
மாவீரர் தோள்கள்
வனப்புற வேண்டிடுவோம்
அவரை வந்தனை
செய்திடுவோம் .
வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோதரா....!
Deleteஉங்கள வருகையும் கருத்தும் மிகுந்த ஊக்கமும் மகிழ்வும் தருகிறது.
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்....!
மாவீரர் தியாகம்
ReplyDeleteமறக்காது நெஞ்சம்! - தாயே!
தாவீரம் எமக்கும்
தேசத்தைக் மீட்போம்!
அருமையான உணர்ச்சிக் கவிதை படைத்தீர்கள் தோழி!
நெஞ்சத்தை விட்டு அகலாது அவர்களின் தியாகம்.
வலிமிகுந்த உணர்வோடு கவி வடித்த
உங்கள் திறமை அருமை! மேலும் வளர வாழ்த்துக்கள்!
தொடருங்கள் தோழி!
படைத்திடுங்கள் இன்னும்!..
மறவர் குல மாணிக்கங்கள்
Deleteவழி வந்த நாமும் விலகி
விட்டோமே என்றொரு வருத்தம்
வலி தாளாமல் விழுந்தது விருத்தம்
வாருங்கள் தோழி ....!
ஓடி நீ வந்து தந்த ஒத்தடம்
மருந்தாய் ஆனது தோழி
என் மனதை கவர்ந்தது தோழி
நீ வாழ்ந்திட வேண்டும் நீடூழி....!
உங்கள் வரவும் கருத்தும் கண்டதும் தான் மூச்சே வந்தது தோழி.
மிக்க நன்றி தோழி....! தொடர வேண்டுகிறேன்.
வணக்கம்
ReplyDeleteஇவர் எங்கள் தேசத்தின் காவல் தெய்வங்கள்.. அவர்களை பூசித்து வழிபடவேண்டியது எங்களின் கடமை..... கவிதையின் வரியில்.... அவர்களின் தனிச் சிறப்பு.... ஒளிர்கிறது.. அருமை.....அருமை. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வந்திட்ட கருத்து
Deleteதொட்டது மனதை
தொடர்ந்திட வேணும்
புலமை வளர்த்திட்டு
புண்ணியம் காணு
அதுவும் வாழ்வை பேணும்.
வரும் துன்பம் விலகும் ....!
மிக்க நன்றி ...! தொடர வேண்டுகிறேன் ...!
என்றோ ஓர் நாள்
ReplyDeleteஎமது தேசம் இதுவே எனக்கூவி
எமது மக்கள் அனைவரும் கூடி
எமது கொடி வானில் பறந்திடவே
எமது வீரனை வந்தனை செய்வோம்.
அந்த நாள் வரும்.
காத்திருப்போம்.
சுப்பு தாத்தா.
வணக்கம்....!
Deleteசுப்பு தாத்தா நீங்களா வாருங்கள் வாருங்கள் ...! மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தன்நம்பிக்கை யான கருத்து மிகுந்த தென்பை தருகிறது நீங்கள் என் வலை தளம் வந்தது என் பாக்கியமே. உங்கள் பாடல்கள் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். என் பக்தி பாடல்களையும் பாடுவீர்களா என்று கேட்க விருந்தேன் வலை தளம் வந்து. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் வந்து விட்டீர்கள் தாத்தா மிக்க மகிழ்ச்சி...! மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். தொடர வேண்டுகிறேன். உங்களையும் தொடர்கிறேன்....!
வாழ்க வளமுடன் ....!
கார்த்திகை பூக்கள் எல்லாம்
ReplyDeleteகாகிதப் பூக்கள் அல்ல!..
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை!.. இல்லை!..
நல்லதொரு தொடக்கம்..
காலம் கனிந்து வரும்!..
கலக்கம் வேண்டாம்..
காளி வரம் தருவாள்!..
வணக்கம்....! வாருங்கள்....! முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். உங்கள் கருத்து ஆறுதல் தருவதாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது. மிக்க நன்றி...! உங்கள் வலை தளம் இன்று தான்அறிந்தேன் தொடர்வேன் பக்தி மயமாக இருப்பதை கண்டேன் திளைத்திட வருவேன்.
Deleteநன்றி வாழ்த்துக்கள் ...! வாழ்க வளமுடன் ....!
உணர்ச்சியூட்டும் வரிகள்! அருமையான கவிதை! தோழி இளமதியின் தளம் மூலம் முதல் வருகை! இனி தொடர்ந்து வருகிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் ....!
Deleteஉங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன். உங்கள் கருத்து மிகுந்த ஆர்வத்தை அளிக்கிறது. தோழி இளமதிக்கும் மிக்க நன்றி....! என்னை அறிமுகப்படுத்தியமை என்னை நெகிழ வைத்தது. என்னை ஊக்கப்படுத்த எடுத்த முயற்சியில் அவர் எங்கோ போய் விட்டார். அவரின் நல்லெண்ணம் அவரை மேலும் மேலும் உயர வைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.தொடர வேண்டுகிறேன். உங்கள் தளமும் இனி தொடர்கிறேன்.
வாழ்க வளமுடன்....!
கனிந்து வரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅந்த நாள் விரைவில் வரட்டும்..
நம்பிக்கை தானே வாழ்கை எல்லோரும் அந்த நாளுக்காக காத்திருப்போம். அந்த நாள் விரைவில் வரும் என.
Deleteவருகையும் கருத்தும் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
நன்றி.....! வாழ்க வளமுடன்....!
\\கார்த்திகை பூக்கள் எல்லாம்
ReplyDeleteகாகிதப் பூக்கள் அல்ல
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை இல்லை\\
மனம் தொட்ட வரிகள். காத்திருப்போம். கனியும் காலம் விரைவில் வரட்டும். பாராட்டுகள் இனியா.
இளமதியின் அறிமுகத்தால் வர இயன்றது. நன்றி இளமதி.
வாருங்கள் தோழி.....!
Deleteஉங்கள் வரவால் என் மனம் மகிழ்ந்தது. கருத்து என் மனதை தொட்டது நம்பிக்கையும் ஊட்டியது. இளமதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர வேண்டுகிறேன். நன்றி ....! வாழ்க வளமுடன் ....!
https://www.youtube.com/edit?o=U&video_id=8c892g_5hzY
ReplyDeleteaatha mahamayee ungal ellorukkum arul puriyavendum.
ithu en ayuz irukkumunnal nadakkumaa endru theriyavillai.
endravathu oru naazh ungal thuyar ellam thudaithida
aatha mahamayee
avasiyam varuvaaL.
வணக்கம் சுப்பு தாத்தா....!
Deleteஎன் வேண்டு கோளுக்கிணங்க உடனேயே பாடி அனுப்பியதில் அளவு கடந்த சந்தோஷம் தாத்தா உங்கள் குரலில் பாடியதை கேட்டு மெய் சிலிர்த்து கண்கள் பனித்தன. எல்லாம் நான் செய்த புண்ணியம் தாத்தா உங்கள் நட்பு கிடைத்தது. ஆண்டவனுக்கு தான் மிக்க நன்றி சொல்ல வேண்டும்.
உடனே கேட்க முடியவில்லை link உடனும் வேலை செய்யவில்லை. அத்துடன் வேலைக்கு சென்று திரும்பிய பின்னரே இதை செயல் படுத்த முடிந்தது. தாமதத்திற்கு மனிக்கவும். ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா.....! எல்லா நலன்களும் பெற்று நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்....!.
தமிழன் தலைநிமிரும் காலம் விரைவில் வரும்.மாவீரர் எண்ணங்களும் ஈடேறும் .வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteவணக்கம் தோழி...! உங்கள் வருகையும் கருத்தும் மனதுக்கு இதமாக இருக்கிறது அன்புக்கும் ஊக்கம் தர விளையும் எண்ணத்திற்கும் மிக்க நன்றி ...! தோழி உங்கள் வலை தளப்பக்கம் வரவோ கருத்திடவோ முடியவில்லை அனுமதியில்லை என்று சொல்கிறது. என்னவென்று பாருங்கள் தோழி நானும் பார்க்கிறேன். வாழ்க வளமுடன் ....!
Deleteகீத மஞ்சரி
Deletehas left a new comment on your post "ஈழம் மீட்டிட
":
\\கார்த்திகை பூக்கள் எல்லாம்
காகிதப் பூக்கள் அல்ல
கனிந்து வரும் நாளும்
வெகு தூரம் இல்லை இல்லை\\
மனம் தொட்ட வரிகள். காத்திருப்போம். கனியும் காலம் விரைவில் வரட்டும். பாராட்டுகள் இனியா.
இளமதியின் அறிமுகத்தால் வர இயன்றது. நன்றி இளமதி.
சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteநம் சொந்தங்களில் சோகம் தீரும் அந்த புதிய விடியல் விரைவில் மலரட்டும்! போர்குணம் கொண்ட கயவ்ர்களின் போர்மேகம் மறையட்டும். நாளை நமதாகட்டும்.. அதற்கான இறைவேண்டல் ஒவ்வொரு இல்லங்களிலும் உள்ளங்களிலும் தொடரட்டும். தங்கள் சிந்தையில் எழுந்த வரிகள் வீரம் செறிந்துள்ளதாக அமைந்துள்ளது சகோதரி. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அழகான பகிர்வு என்று வர்ணிக்கும் உள்ளடக்கம் அமையாத கவிதை. வலிகள் வேதனைகளை உள்ளடக்கிய அவசியமான கவிதை.. பகிர்வுக்கு நன்றிகள்...