ஒளி காட்டும் வழி போல
வழி காட்டு விழியாக
விழித்தெழு நரகாசுரனே விழித்தெழு
உனை அவல குரல்கள் அழைக்கிறதே எழுந்திரு
நாடெங்கும் நாச வேலைகள் தடுத்திடு
உன் பாவச் செயல்கள் பயன்பட புதிய சரித்திரம்
படைத்திடு புண்ணியம் உன்னை சேர்ந்திடும்
மானம் காக்க உன் இனிய உயிரை ஈந்திடு
நம் இனிய மக்கள் இருட்டினில் ஒளியை
ஏற்று உன் உயிரினில் அவர் உறக்கம்
காண நீ விழித்திரு மேனி நோகாது காத்திரு
களைகள் ஆங்காங்கு வளருதே களைந்திடு
பச்சிளங் குழந்தை மாரினில் தாய்
மரித்த பின்னும் பால் குடிக்குது
காலையில் பூத்த புது மலர்களோ கசங்கிக்
கிடக்குது மாலையில் கதிரவன்
கண் மூடையில் கொலைகள் நடக்குது
மூலையில் பட்டாசு வெடிப்பது போலவே
துப்பாக்கி வெடிக்குது பாரிலே
தூங்கும் போதும் குழந்தைகள் அதைக்
கேட்டு தூங்குது தூளியில்
இனிமை எங்கும் பொங்கிட அணையா விளக்காய்
ஒளிர்ந்திட ஆலய மணிகளை அடித்திடு ஆழிக்கண்ணனே
ஊழித்தீயை அணைத்திடு தீபாவளித் திருநாளில்
உதித்திடு கோடி உடுத்தி கூடிமகிழ விதித்திடு
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html
உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...!.
Deleteஉங்களது சொர்க்கம் பற்றி வாசித்து கருத்து இட்டு கொண்டிருந்தேன்.
மின்னஞ்சல் மாறி இருந்தமையால்.கிடைத்ததா என்று தெரியவில்லை நாளை பார்போம்.
நரகாசுரனை விழித்தெழச் சொன்ன வித்தியாசமான கற்பனை!..
ReplyDeleteஅழகான சொல்லமைப்பும் அற்புத உணர்வுக் கவிதையும் இனியா!
மிகவே ரசித்தேன்!
உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
பி.கு: இங்கே உங்கள் பதிவுகளை உடனுக்குடன் நாம் பெற்றுக்கொள்ளக்கூடியதான வசதி ஏதும் காணப்படவில்லையே தோழி...
கூகிள் ஃப்லோவர் இணைப்பு அல்லது மின்மடலிணைப்பு ஏதாவது இருந்தால் பதிவுகளை உடனுக்குடன் காணவும் கருத்துப் பகிரவும் முடியும்!
ஆவன செய்தால் நன்றென எண்ணுகிறேன்! நன்றி!
வாருங்கள் இளமதி....! இங்கும் உங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன். ......!
Deleteஉங்கள் கருத்து உண்மையில் மிகுந்த பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது. கிள்ளிப் பார்க்கிறேன் நம்பமுடியாமல் உண்மை தானோ என்று
ரொம்ப ரொம்ப நன்றி இளமதி .......! உங்கள் வரவு தொடர வேண்டுகிறேன்.
நீங்கள் சொல்வது சரியே நான் இப்பொழுது கற்றுக்குட்டி தானே
போகப் போகத்தானே புரியும். முதலில் என் கவிதை எப்படி இருக்கும், இது கவிதை தானா என்று தெரியாமல். எப்படி இதைப் பற்றி எல்லாம் யோசிக்க முடியும். இப்பொழுது தானே நம்பிக்கை வந்திருக்கிறது. இதையே எழுதி விட்டு யோசித்து விட்டு நாலு ஐந்து நாட்களின் பின் தான் வெளியிட்டேன். இனிமேல் தான் மிகுதியை யோசிக்க வேண்டும். உங்கள் யோசனைக்கு ரொம்ப ரொம்ப நன்றி விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற ஆவன செய்வோம்.
இத் தீபாவளித் திருநாளில் எல்லா நலன்களும் பெற்றுவாழ வாழ்த்துகிறேன்......!
நரகாசுரனை விழித்தெழச் சொல்லியதும் நானும் புருவம் உயர்த்தியே தொடர்ந்தேன். அற்புதமான வரிகள். நாட்டில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து காட்டுகிறது தங்களது கவிவரிகள். சமூக நோக்கம் கொண்ட பார்வைக்கு முதலில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..
ReplyDeleteஅன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஹாஹா பயந்துவிட்டீர்களா.....! வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறேன் என்று, நரகாசுரன் இப்பொழுது நல்லவன் தானே தவறை உணர்ந்து திருந்திவிட்டான் அல்லவா திருந்தியவர்களை மன்னித்து ஏற்றுகொள்ள வேண்டாமா? அதனால் தான் நம்பிக்கையோடு அழைத்தேன் சரி தானே.
Deleteஉங்கள் வரவு கண்டு மகிழ்கிறேன் ....! நன்றி....!
நீங்கள் அனைவரும் இத் தீபாவளி திருநாளில் என்றென்றும் ஒளி மயமாக வாழ வாழ்த்துகிறேன்......!
வணக்கம்
ReplyDeleteகவிதையில் உயிர்மூச்சும் புரட்சியும் விடியலும் தேடிய கவிதையாக உங்கள் வலைப்பூவில் தீபாவளி நன்னாளில் மலர்ந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்......
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் சகோதரா......!
Deleteஉங்கள் வரவும் கருத்தும் மிகுந்த ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது ரொம்ப நன்றி....!
உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....!
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உங்கள் வரவும் வாழ்த்தும் மிகுந்த மனநிறைவை தருகிறது.
Deleteமனங்கமழ கவிதையிலேயே கற்கண்டாய் வாழ்த்துரைத்த கவிஞரே உங்கள் நாவன்மை கண்டு வியக்கிறேன்...... .!
இத் தீபாவளித் திருநாளில்
நீங்களும் இல்லத்தாரும்
ஒளி போல பிரகாசித்து
என்றும் இன்பம் பொங்க
வாழ வாழ்த்துகிறேன்.........!
தங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteTyped with Panini Keypad
வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.......நன்றி.....!
Deleteஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னதை பற்றி பார்கிறேன்
மகிழ்ச்சி நிறைந்த எழுச்சியான வரிகள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதல் வருகையும் கருத்தும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ரொம்ப நன்றி ...! தொடர வேண்டுகிறேன்.
Deleteஆனால் இந்தக் கவிதை போட்டிக்கானது இல்லை. நாம் சிரித்தால் தீபாவளி தான் போட்டிக்காக என்று அனுப்பியிருக்கிறேன்.
வாழ்கவளமுடன்...!