கார் மேகமே வலிக்கின்றதே
பார் மேகமே சொந்தமண் கண்ணீர் சொரிகின்றதே
மண்ணின் மைந்தர் எங்கே காணவில்லையே
எங்கு தேடியும் தென்படவில்லையே
மேகமே மறைத்து வைத்தாயோ
ஒரு முறை காட்ட மாட்டாயோ
நட்சத்திரமாய் மின்னுகின்றாரோ
இல்லை ஒளி தர மெழுகுவர்த்தியாய் உருகிப்போனாரோ
சூரியக் கதிர்களாகி பகைவரை சுட்டெரிப்பாரோ
கல்லறையில் தூங்குகின்றாரோ
சற்று நேரம் இளைப்பாறவாமோ
கருவறை அழுகின்றதே தழுவிடத் துடிக்கின்றதே
நெஞ்சும் நெருப்பில் வேகின்றதே
வெற்றிடத்தை நிரப்ப வழியின்றி தவிக்கின்றதே
வெறிச்சோடி கிடக்கின்றதே வீதி கிடக்கின்றதே
எங்கே அந்த வீரர்கள் வீறுநடை போட எங்கே அந்த வீரர்கள்
மறவர் குல மாணிக்கங்கள் மதுரமாய் வீசுங்கள் வீணையாய்
மாறுங்கள் விளையாடிப் பாருங்கள் காற்றினில்
கலந்து கானம் இசையுங்கள் ஈழம் நமதென்று முரசு கொட்டுங்கள்
உம் இழப்பை நாம் ஈடு செய்யவே
உரிமை கீதம் பாடுங்கள்
உம் கனவு ஈடேறும் என்றே நம்புங்கள்
உம் இழப்பை நாம் ஈடு செய்யவே
உரிமை கீதம் பாடுங்கள்
உம் கனவு ஈடேறும் என்றே நம்புங்கள்
நல்ல வரிகள்
ReplyDeleteநல்லதே நடக்கும் என்று நம்புவோம்
வாருங்கள் தோழி...!
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
தொடர வேண்டுகிறேன்....!
வாழ்க வளமுடன்....!
மறைவரோ எங்களின் மாவீரர் உள்ளே
ReplyDeleteபிறைபோல் வளர்வார் பொலிந்து!
தோழி நீங்கள் தந்த இணைப்பை இன்றுதான் பார்க்கின்றேன்..
உணர்வினைக் கொட்டி உருவேற்றியுள்ளீர்கள் கவிவரிகளில்..
வாழ்த்துகிறேன் உங்களை!
மறவர்களை வனங்குகின்றேன்!
மிக்க நன்றி தோழி ....! உங்கள் வரவும் அன்பான கருத்துக்களும்
Deleteமிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் வலுவாக வழங்குகின்றது தோழி
ரொம்ப நன்றி.....!
எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....!