Monday, December 15, 2014

கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே!



வாழ்க்கைத் துணையென வாய்த்து,  வளம்பெற
வாழ்வில் இனிமைதனைச்  சேர்த்து,  மெழுகென
இல்லறம் கண்ணாய் இருளா தொளிர்கின்ற    
நல்லறம் செய்தாய் நயந்து !

நெஞ்சம் விழுந்தழவே தஞ்சமென வாரியெமைக்
கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே! - மிஞ்சயெமை
நெஞ்சில் இருத்தி நிழலாய்த் தவிக்கவிட்டேன்
பஞ்சாய்  அகன்றாய் பறந்து!

வற்றாத பாசமழை வாழ்வை அமுதாக்கக்
கற்றதுன்னால் அம்மா! கனவிதுவோ? வெற்றாய்த்
திரியும் உடல்தவிக்கத் தாயேயேன் போனாய்
எரியும் நெருப்பிலெனை யிட்டு!


அம்மாநின் அன்பும் அருளும் இருந்தால்பின்
எம்மா இடர்வரினும் என்ன?  நிறைபலமே !
அன்னையாய்  உன்னை அடைந்தோம் பெருவரமே
இன்றிழந்தோம் காக்கும் இமை!
 

பாலூட்டி ச் சீராட்டிப் போராடி உன்னன்பின்
சோறூட்டித் தாலாட்டிச்  சோதனையை நீயேற்று
மெய்வருத்தம் பாராதூர்  மெச்சிடவே நீவளர்த்தாய்
அய்யோ!ஏன் போனாய் அகன்று!

தள்ளாடும் எம்மைஉன் தோள்தாங்கும்! கண்ணீரே
உள்ளோடும் என்றாலும் உன்சிரிப்பால் -  பிள்ளை‘‘யாம்
வாழ்தற்கும் நன்றாய் வளர்தற்கும் நின்துணையே
ஏழ்பிறப்பும் வேண்டும் இனி!

மாமியென்  றெண்ணாமல் மாசில்‘தாய் ஆனீரே  !
சாமி அருளெனவே சாதித்தோம், சோதனையாய்
பாவியெமை விட்டுப் பிரிந்தீரோ? இன்பிறவிச்
சாவியுண்டோ மீட்கவுமை சொல் !

திருவிளக்கே உம்மைத் தொலைத்தோம் விதியே
இருளில் கிடத்தல் இனிதகுமோ? அன்புறையும்
இன்முகம் தென்படுமோ எங்கேனும் என்றெங்கள்
கண்கள் அலையுதலைக் காண் !

கண்ணுக்குள் வைத்தெம்மை காத்தாயே    பாட்டி 
கருத்தினில் என்றும்  கலந்தாய்! – மருந்தாகி
எண்ணத்தில் தேன்போல்  இனித்தாய்‘உன் அன்பெண்ண  
கன்னத்தில்  கண்ணீர்க் கரை!

அன்பொடு பாசம் அடக்கம் அருங்குணங்கள்
இன்பம் நிறைகின்ற இல்லறப்பண் – துன்பம்
துடைக்கின்ற உன்கரங்கள் எங்கே‘என் அம்மா
உடைத்தணைத்தல் என்றோ உனை?

ஆசை முகம்மறத்தல் ஆமோ அருள்விளங்கப்
பூசையிட் டெண்ணுவம்‘உம் புன்னகையை -  மாசில்லா
அன்பில் உறவொருங்கே ஆன்மாவின் சாந்திக்காய்
ஒன்றிணைவோம் நல்(கு)‘உன் ஒளி!

பட்ட மரமானோம் பாவியெமை விட்டுவிட்டுக்
கெட்டமனக் காலனுனைக் கொண்டதென்ன -  சுட்டதனால்
என்றகன்று போகும் எமனே? நினைவாலே
என்றென்றும் வாழ்வாள் அவள்!

ஐயைய மூக்கில இருந்து கையை எடுங்க இது ஒன்றும் முழுக்க நான் எழுதவில்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம். எங்க ஆசான் விஜு அவர்களோட கை வரிசை தான் நான் சும்மா எழுதிக் கொடுத்ததை அழகா திருத்திக் கொடுத்துள்ளார். ஹா ஹா ...நல்லா ஏமாந்து விட்டீர்களா அட இனியா இப்படி எழுதுகிறாரே என்று இல்லையா.? ம்..ம்..ம்.. இப்ப தான் தெரிஞ்சிடுசில்ல அப்ப சட்டு புட்டுன்னு கருத்தை போடுங்கப்பா. என்ன இதுக்கு கருத்து இல்லையா  போடமாட்டீங்களா? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன். இப்படி என்றால் நான் சொல்லாமல் விட்டிருப்பேனே. ......

இது என் friend டினுடைய மாமிக்காக எழுதியது. பேப்பர் ல் போடுவதற்காக.

39 comments:

  1. விடியற்காலைல வயித்தைக் கலக்கிட்டீங்களே!..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி சகோ! ரொம்ப பயந்திட்டீங்களா? குத்துக் கல்லாட்டம் நல்லா தான் இருக்கிறேன் சகோ dont worry. ஒருவருடைய வலைப்பக்கமும் வரமுடியவில்லை சொற்பநேரம் கிடைத்தால் வந்து ஒன்று இரண்டு வாசித்து விட்டு போய்விடுவேன். கருத்திட முடியவில்லை மகளின் திருமணவேலைகளில் மூழ்கி இருப்பதாலேயே தாமாதம் கூடிய விரைவில் மீண்டும் வந்து சேர்ந்து விடுவேன் சகோ.. அதுவரை மன்னித்து கொள்ளுங்கள் என் அருமை உறவுகளா ........

      Delete
  2. முதலில் வாசித்ததும் நிஜமாகவே வேறு ஏதோ தோன்றிவிட்டது. ஆனால் சில தின ங்களுக்கு முன் தானே தங்களின் மகள் மணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனால்தான் வலை வர இயலாத நிலை என்று....அதை நினைத்து சிறிது சாமாதானமாகிப் போனாலும் ...ஹப்பாடா இறுதியில் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் தான்....ஆசுவாசம்...

    ஆனால் கவிதை வரிகள் அருமை அருமை! விஜு ஆசானைக் கேட்கணுமா....அறிவு ஜீவி அவர். நாம் இப்போது சிறு பிள்ளைகளாகி அவரது மாணாக்கர் ஆக மாட்டோமா என்று பல முறை எண்ணியதுண்டு....

    தங்கள் மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடை பெற எங்கள் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள். சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மன்னித்துக் கொள்ளுங்கள் சகோ ரொம்ப பயபடுத்தி விட்டேனா? எனக்கே கவலையாக போய் விட்டது. ஆமா அதெப்படி இருந்தாலும் நான் தானே பதிவு போட முடியும். வேறு யார் போடுவா. சிந்திக்கக் கூட முடியலை இல்ல சகோ அவ்வளவு பயம். ஆவியெல்லாம் வந்து போடாதே சகோ ஹா ஹா ... என் மீது கொண்ட அன்புக்கு நன்றி சகோ, தோழிகீதா கண் கலங்கி விட்டது !
      மிக்க நன்றி! சகோ வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      Delete
    2. ஆசானே,
      என் தவறை சகோதரி திருத்தினார் என்று என் பதிவில் நான் சொல்லியதற்கு இங்குச் சரியாகப் பழிவாங்கி விட்டார் சகோதரி!
      நம்பாதீர்கள்!
      பேசாமல் நாம் சகோதரியின் மாணவர்கள் ஆகிவிடலாம்.
      அதுதான் சரி!
      நன்றி

      Delete
  3. தோழி!

    இம்மா நிலவாழ்வில் எம்மை உயர்த்தியது
    அம்மாவின் அன்பே அறி!

    முதலில் மனத்துள் புகுந்தது புயலென வலி!
    வெண்பாவை மிகவும் பதைபதைப்புடனே படித்து
    இறுதியில் உங்கள் விளக்கம் கண்டு ஆறுதற்படுவதற்குள்
    இங்கே நான் செத்துப் பிறந்தேன்!...

    தங்கள் சினேகிதரின் மாமியின் ஆன்மா சாந்தியடைய வேண்டிகொள்கின்றேன் நானும்!

    ஐயாவின் வெண்பா மனதில் வந்து அமர்ந்துகொண்டது!
    பகிர்விற்கு நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. அம்மா தாயே என்னை மன்னிச்சுடும்மா. நான் உங்கள் அன்பில் நலமே நீடு வாழ்வேன். ok வா ஹா ஹா .....நீங்கள் வேதனை பட்டதை நினைத்து ரொம்ப வேதனைப் பட்டேன்மா. இப்ப தானே கருத்து போட்டேன். தங்கள் பதிவுக்கு அதற்கிடையில் 31 நாட்கள் ஆகுமா என்ன ம்..ம்..ம்..எங்க சிந்திக்க முடிஞ்சுது அப்பிடித் தானே? அன்பிற்கு மிக்க நன்றிடா ! தலைப்பை மாற்றி விட்டேனே. இப்ப ok தானே. அப்பாடா.....

      Delete
  4. ச்சே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டது மனது இப்படி எல்லாமா ? விளையாடுவது அதனால உங்களுக்கு தமிழ் மணம் ஓட்டு போடமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா எனக்குத் தான் இல்லையே தமிழ் மணம். அப்போ எப்பிடி ஓட்டு போடுவீங்க. sorry...... sorry..... sorry...... போதுமா .......ok வா அன்புக்கு நன்றி சகோ ........உங்க எல்லோருடைய அன்பும் என்னை எப்போதும் காக்கும் ok வா ....இல்லை இல்லை .இப்போதைக்கு........ நாங்க விரும்பினாலும் ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது இல்ல .....அதன் சொன்னேன்.

      Delete
  5. மனம் முதலில் கலங்கித்தான் போய்விட்டது சகோதரியாரே
    இதுபோன்ற பதிவுகள் வேண்டாமே

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒண்ணும் ஆகாது சகோதரரே தங்கள் அனைவரதும் அன்பு இருக்கும் வரை. அது தான் தலைப்பை மாற்றிவிட்டேனே.
      இப்ப ok தானே இனிமேல் இப்படியெல்லாம் போடமாட்டேன் சரிதானே சகோ மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. வெண்பாவில் இரங்கற்பா சிறப்பு! ஆசான் திருத்தினாலும் கருத்து உங்களதுதானே? பாராட்டாம இருப்போமா?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. தங்களை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன் வந்து சூடிக்கொள்ளவும் நன்றி.

    http://blogintamil.blogspot.ae/2014/12/mr-1983.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! அறிமுகத்திற்கும் வருகைக்கும் கருத்துக்கும்.
      பார்த்து கருத்தும் இட்டு விட்டேன் சகோ.

      Delete
  8. இனியா அம்மாவிற்காக எழுதிய வெண்பா அருமையோ அருமை! மீதி நாளை !!

    ReplyDelete
    Replies
    1. ஓகோ நாளை வருகிறீர்களா அம்மு சரி சரி ......வாருங்கள் வாருங்கள்நான் காத்திருக்கிறேன் அம்மு.

      Delete
  9. என்ன சகோ இப்படிச் செய்துவிட்டீர்கள்?
    இதில் எனது திருத்தம் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதுதானே?
    அதிக பட்சம் ஐந்தாறிடங்களில் திருத்தி இருப்பேனா?
    ஏன் என்னை இப்படி மாட்டி விடுகிறீர்கள்?
    இப்பொழுதுதான் ஒரு பதிவிட்டு மைதிலி அவர்களின் தளத்தில் உங்கள் பதிவைப் பார்த்ததும் என்ன நம் காற்று சகோதரியின் தளத்திலும் அடிக்க ஆரம்பித்துவிட்டதா என்று எண்ணி வந்தால்,
    கடைசியில் இப்படிச் சோகத்தைப் போட்டுத் தாக்கிவிட்டீர்களே!
    நானெல்லாம் இப்படி எழுதுவேனா..............?
    யாரும் நம்ப மாட்டார்கள்!!!
    வழக்கமான உங்களின் சந்தோஷம் இல்லாமல் சோகமாக இருக்கும் பதிவைப் பார்த்து நம்ம தலையில் கட்டி விட்டீங்களே!!!!
    ஊமை எங்கு பேசப்போகிறது என்று தானே...?
    இருக்கட்டும் இருக்கட்டும்!
    என் தளத்தில் உங்களைக் குறிப்பிட்டதற்குப் பழிவாங்கிவிட்டீர்கள்!
    இப்ப சந்தோஷம் தானே?
    ஹ ஹ ஹா
    ( நம்ம திருத்தம் கால்புள்ளி அரைப்புள்ளி மாத்தினதுதாங்கோ...! யாரும் நம்பிடாதீங்கோ )
    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா இதெல்லாம் என் குருவோட கருணை தானே. குருவே இப்படி மாத்தி மாத்தி பழி வாங்காமல் விட்டு விடுவோம் ok தானே. நான் வாபஸ் வாங்கிக்கிறேன் குருவே ஹா ஹா ....
      மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்......
      சோகம் ஆனாலும் அம்மா பற்றிய கவிதை சுகம் தானே இல்லையா ........

      Delete
  10. வணக்கம்
    அம்மா
    நர்த்தனம் ஆடும் பாக்கள் எல்லம்
    நாணிலம் போற்ற போட்டீர்கள்
    படித்த போது நாவறண்டு நின்டது
    நாலு போர் போற்ற வாழ்ந்த -உறவு
    நாலு நிமிடத்தில் பிரிந்தது.
    ஆறாத துயரத்தில் தத்தளிக்கும்
    தங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை..
    தங்களின் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய
    இறைவனை பிராத்திக்கிறேன்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  11. கவியூறும் சோகம் ...
    ஒரு அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  12. இனியாச்செல்லம்,
    தாமத்திற்கு மன்னிச்சூ:((( இனியாவின் சக்கரைக்கட்டி கவிதைகளையே படித்துப் படித்து, இப்படி ஒரு சோக கீதம் படிக்கையில் மனம் வாடுகிறது:(( விஜூ அண்ணா என்ன அருமையா சொல்லிகொடுதிருக்கார், டா இனியாச்செல்லம் (அப்படா தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டியாச்சு:))) இத்தனை நீளமான வெண்பா!!! கலக்கல் டா செல்லம்:))

    ReplyDelete
    Replies
    1. சக்கரை கட்டி கவிதையா அம்மு விளையாடுகிறீர்களா என்ன? என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே. ஹா ஹா .....நன்றிடா அம்மு வருகைக்கும் கருத்துக்கும்.
      என்ன .......(சிங்கத்தை சீண்டியாச்சா ): ஹா ஹா .....

      Delete
  13. கண்ணீர் திரள வைத்த வெண்பா தோழி...கடைசியில் சற்று ஆறுதல் தந்தீர்கள்! நானும் உங்கள் மகள் திருமணத்தைத் தான் முதலில் நினைத்தேன்...என்னடா இந்த நேரத்தில் ஏதோ என்று..
    திருமண விழா சிறக்க என் அன்பான இனிய வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. அடடா அவ்வளவு எளிதில் தங்களை எல்லாம் விட்டு விலக மாட்டேன்ம்மா. எல்லாம் என் பிழை தான் எல்லாம் தலைப்பு செய்த வேலை தான் முதலிலேயே மாற்றி இருந்தால் குழப்பம் நேர்ந்திருக்காது. இல்ல sorry ம்மா.மிக்க நன்றிம்மா தங்களின் மிகுந்த அன்புக்கும் வருகைக்கும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. அம்மாநின் அன்பும் அருளும் இருந்தால்பின்
    எம்மா இடர்வரினும் என்ன? நிறைபலமே !
    அன்னையாய் உன்னை அடைந்தோம் பெருவரமே
    இன்றிழந்தோம் காக்கும் இமை!

    அருமையான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்திற்கும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

      Delete
  15. ***ஐயைய மூக்கில இருந்து கையை எடுங்க இது ஒன்றும் முழுக்க நான் எழுதவில்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம். எங்க ஆசான் விஜு அவர்களோட கை வரிசை தான் நான் சும்மா எழுதிக் கொடுத்ததை அழகா திருத்திக் கொடுத்துள்ளார்.***

    ஒரு மாணவிக்கு நல்லாசிரியர் கிடைப்பது அரிது. அதேபோல் ஒரு ஆசிரியருக்கு ஆவலுடன் கற்றுக்கொள்ளும் ஒரு அருமையான மாணவி அமைவதும் அரிது. ஆரியர் மாணவி.. நீங்க இருவருமே ஒருவரை ஒருவர் இன்னொரு படி மேலேற்றியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ...மிக்க நன்றி வருண்! நன்றாக புரிந்து வைத்துள்ளீர்களே அதற்குத் தான். இப்படி எல்லாம் எழுதினால் ஆசான் கட்டை விரலை கேட்டு விடப் போகிறார். பார்த்துப்பா ......மிக்கநன்றி வருகைக்கும் கருத்துக்கும்.!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  16. மன உணர்வுகள் யதார்த்தமாக வெளிப்படும்போது சொற்கள் மெருகேறுகின்றன என்பதற்கு இக்கவிதை சாட்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  17. சும்மா எழுதுனதே இவ்வளவு அழகா இருந்துச்சுன்னா..! !! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
      இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

      Delete
  18. அழகாய் எழுதி அதற்கும் காரணம் சொல்லி என்னமா தப்பிக்க பார்க்குறீங்க ..ம்ம்ஹூம் நடக்காது ! மகளே அவ்வ்வ்வ் மென்மேலும் பாபுனைய நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    மறைந்திட்ட ஆன்மா இறையடி சேரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீராளா வாருங்கள் !

      தப்பிக்கப் பார்கிறேனா ....... இது கொஞ்சம் ஓவரா இல்ல ....ஐய்யய்ய அப்போ நம்பலையா ....ம்..ம்.. சின்னப் புள்ள மாதிரி எல்லாம் அடம் புடிக்கக் கூடாது சொன்னா நம்பனும் ok வா ஹா ஹா ....
      தங்கள் வரவில் அளவு கடந்த மகிழ்ச்சியே! மிக்க நன்றி ! வரவுக்கும் கருத்துக்கும்.....! வாழ்க வளமுடன் இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

      Delete
  19. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2015/01/blog-post.html

    முடிந்து போது பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !வாழ்த்துக்கள்....!வந்து பார்த்து கருத்தும் போட்டு விட்டேனே

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.