காற்றுக்கூட கதை பேசும்
கனிவு இன்றி குறைகூறும்
மாற்றம் மட்டும் மாறாமல்
மனிதம் தன்னை சிறைபோடும்
நேற்று பிறந்த காளானும்
நேரில் நின்று போராடும்
ஊற்றுப் போல உருகாமல்
உள்ளம் தன்னை உடைத்தேகும்
வற்றாது வார்த்தை கடல்
வாழ்த்திபாடு தினந் தோறும்
பொற்காலம் என்றே எண்ணி
புதுமை கீதம்தனைப் பாடும்
போற்றிப் பேசிப் பழகாமல்
புறணி பேசக் கூடாது
மாற்றிப் பேசி மற்றவரின்
மனசை கெடுத்தல் ஆகாது
தோற்றுப் போனால் தைக்காது
பேசிப் பழகு தேற்றிடவே
தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தூற்றித் திரியக் கூடாது
தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தீர்த்துக் கட்டத் துடிக்காதே
தூற்றித் திரிவோர் தனைக்கண்டால்
தொடர்ந்து செல்லக் கூடாது
கூற்று வனைக் கண்டாலும்
கொடுமை கண்டு அஞ்சாதே
பற்றிப் படரகொழு கொம்பாய்
வாழ வாழ்வு அழகாகும்
கொற்ற வன்றன் கூற்றுக்குக்
கட்டுப் பட்டே வாழோனும்
கற்றுத் தேர்ந்த பின்னாலும்
கெட்டுப் போகக் கூடாது
வேற்று மனிதர் வாழ்வினிற்கு
வேட்டு வைக்கக் கூடாது
சீற்றம் கொண்டு சொந்தத்தை
சேதம் செய்யக் கூடாது
வணக்கம் இனிய தோழியே!
ReplyDeleteஊற்றே உடைப்பினைக் கொண்டதுபோ(ல்) உன்கவி
சாற்றுகிற தத்துவங்கள் தான்கண்டேன்! - வேற்றுமை
நாட்டி விளைவது நன்றோ? எழுத்தெனும்
சாட்டையைத் தூக்கியே தட்டு!
அருமையான தத்துவங்கள் அழகான சொற்கட்டில்
அமைத்த நல்ல கவிதை கண்டேன்!
மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!
///வற்றாது வார்த்தை கடல்
ReplyDeleteவாழ்த்திபாடு தினம் தோறும்
பொற்காலம் என்றே எண்ணி
புதுமை கீதம் பாடிடுவோம் ///
புதுமை கீதம் பாடுவோம் சகோதரியாரே
நன்றி
கவிதை ஜோராக வந்திருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
எளிய நடை .... இனிய சந்தம்.... விளங்கும் பொருள்..
ReplyDeleteஇதைத் தங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமே?
எப்போது வகுப்பைத் தொடங்கலாம்? ம்ம்!
வேற்று மனிதர் வாழ்வினிற்கு
ReplyDeleteவேட்டு வைக்கக் கூடாது
சீற்றம் கொண்டு சொந்தத்தை
சேதம் செய்யக் கூடாது!..
இனிய கவிதை.. அருமை..
சிறப்பான கருத்துக்கள் அமைந்த அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDelete"//வேற்று மனிதர் வாழ்வினிற்கு
ReplyDeleteவேட்டு வைக்கக் கூடாது//"
இந்த விஷயத்தை மட்டும் புரிந்து நடந்தால், தமிழர்களாகிய நாம், நாமும் வாழ்கையில் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேற்றலாம்.
அருமை சகோ.
நல்ல கவிதை தோழி.
ReplyDeleteஅழகாக வடித்த கவி அருமை சகோதரி.
ReplyDeleteஎனது தொடர்பதிவு காண்க...
நல்ல கவிதை! நீங்க ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து குழந்தைகள் எங்களுக்கு நீதிப் பாடம் எடுப்பதுபோல் இருக்கு இனியா! நீங்கள் நம்புவதைத்தான் மற்றவருக்கு புகற்றுறீங்க!
ReplyDeleteதோல்வியையும், துக்கத்தையும், இகழ்ச்சியையும் சரிவர எடுத்துக்கொள்ள நாம் கற்றுக்கொண்டால் "ஆண்டவனே" நம்மை வெல்ல முடியாது, இனியா!
இனியாச்செல்லம்
ReplyDeleteசெம டா!! சிம்ப்ளி சூப்பர்ப் னு இப்படிப்பட்ட பாடல்களை தான் சொல்லணும். பாருங்க வருண்யே ரஜினி டயலாக் சொல்ல வச்சுடீங்க:))
வெற்றியையும்,தோல்வியையும் எப்படி எடுத்துக்கணும்னு சொல்லகிற, நட்பை பேணுகிற ரகசியத்தை எடுத்துரைத்த நட்புக்காரியே!!! வாழ்த்துகள்:))
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அருமையான சிந்தனை யோட்டம் மிக்க கவி கண்டு மகிழ்ந்தது மனம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரி,!
ReplyDelete"வற்றாது வார்த்தை கடல்
வாழ்த்திபாடு தினந் தோறும்
பொற்காலம் என்றே எண்ணி
புதுமை கீதம்தனைப் பாடு"....வற்றாத வார்த்தைக் கடல் நீங்கள்..!
புதுமைக் கீதம் தனை படித்துக்கொண்டே இருங்கள்....!
கனவில் வந்த காந்தி
ReplyDeleteமிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து
புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr
("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)
மிக்க அருமை தோழி
ReplyDelete//மாற்றிப் பேசி மற்றவரின்
மனசை கெடுத்தல் ஆகாது// அப்டிச் சொல்லுங்க..
//தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தூற்றித் திரியக் கூடாது//
மிக அருமை தோழி, வாழ்த்துகள்
நற்கருத்தையும் நம்பிக்கையும் விதைக்கும் அருமையான வரிகள். பாராட்டுகள் இனியா.
ReplyDeleteஎன்னே அருமையான வரிகள்! //தோற்றுப் போனால் ஜெயித்தவரை
ReplyDeleteதூற்றித் திரியக் கூடாது//
சூப்பர் சகோதரி! நல்ல சிந்தனை மிக்க வரிகள்!
"நேற்று பிறந்த காளானும்
ReplyDeleteநேரில் நின்று போராடும்" என்ற
தூர நோக்கு எண்ணத்தை
வரவேற்கிறேன்.
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
ஆத்திசூடி போல் நன்றாய்
ReplyDeleteஅழகாய் சொன்ன வரியுள்ளே
நீதி நூல்கள் அத்தனையும்
நிறையக் கண்டேன் உன்னாலே !
சத்திய வாழ்வு கொண்டவளே
சரணாகதி நான் அடைகின்றேன்
நித்தியம் உன்றன் பதிவெல்லாம்
நினைவில் எனக்கு சாமரமே !
எத்தனை எத்தனை இன்பங்கள்
எமக்காய் இறைவன் தந்தாலும்
அத்தனை சுகமும் அனுபவிக்க
அன்பை நெஞ்சில் சுமந்திடணும் !
புத்தன் காந்தி பாரதியாய்
புதுமை செய்ய புறப்படுவாய்
எத்தனை இடர்கள் வந்தாலும்
இனியா எழுத்தை தவிர்க்காதே !
முத்தம் கேட்கும் மழலையென
முகத்தை பார்த்து கேட்கின்றேன்
சித்தம் கொள்வாய் எழுதிடுவாய்
சிந்தை மகிழ வைத்திடுவாய் !
ஓகே வா ஹி ஹி ஹி
இனிய பாடல் அருமை அருமை சகோ இனியா
தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
கூற்றுவனைக் கண்டாலும் கொடுமை கண்டு அஞ்சாதே என்ற அடிகள் எனக்கு தேவாரப் பதிகங்களை நினைவூட்டின. கவிதையைப் போலவே சிறப்பான புகைப்படம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாண முடியவில்லையே.... எமது குடிலோரம்.......
ReplyDeleteநேற்று பிறந்த காளானும் நேரில் நின்று போராடும்
ReplyDeleteபோற்றிப் பேசிப் பழகாமல்
புறணி பேசக் கூடாது ....
தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தீர்த்துக் கட்டத் துடிக்காதே
-நல்ல அறிவுரைக் கவிதை அளித்தது அருமை.
நன்றி.
கவிஞரே..
ReplyDeleteவலைச்சர வேலையில் மூழ்கி விட்டேன் வருகை தரவும்
http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html
என்ன ஆச்சு நிறைய கவிதைகள் மடைதிறந்து பாயும் தளம் இப்போது ... நலம் என்றே நம்புகிறேன்
ReplyDeleteWishes and greetings
ReplyDeleteCan't read the post in mobile
வற்றாத வார்த்தைக்கடல். சிலநேரம் வார்த்தைகளும் தீர்ந்துவிடும். மெள்னமாக இருக்கும்போது...
ReplyDelete