ஆளானநாள் முதலாய்
என்னைக் காணாம தேடுகிறேன்
தோளோடு தோள் சேர
நான் தூங்காமல் வாடுகிறேன்
அந்திபகல் உன்நினைவே
அழகான பெண்மயிலே
சிந்தும்உன் புன்னகையில்
சிதறும்செம் மாதுளையே
பூங்கோதையே உன்தன்
பூங்குழலும் வேய்ங்குழலே
பூங்காற்று வீசிடவே மனம்
போராடும் தாங்காமலே
துள்ளும் இளமானே நீ
எந்தன் பேரழகே
முள்ளின் மேல்பூத்த
முத்தான ரோஜாவே
வள்ளங்கள் போல்வாழ்வு
வெள்ளத்தில் செல்கிறது
உள்ளத்து வலியோடு
உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல்
வாடாமல் சாகிறது
எண்ணத்து ஆசைகக ளெல்லாம்
எழுதாமல் அழிகிறது
உளிதேடி வந்தென்னை
உடைக்கிறது யிரோடு
செதுக்காத சிலையாகத்தான்
சிரிக்காமல் வாழ்கிறது
செந்நீரும் தோன்றாமல்
வெந்நீரில் மூழ்கிறது
கன்னங்கள் கண்ணீரில்
நனையாமல் கரைகிறது
நினையாமல் செல்கிறது
நீண்டே காலங்கள்
மனையின்றி மகிழ்கின்றேன்
மனதோடு வாழ்கின்றேன்
முளைக்கின்ற காதலிங்கு
முளையாமல் கருகிறதே
உழைக்காமல் உண்பது போல்
உணர்கின் றேன்உயிரே
அழையாத விருந்தாளிபோல்
அழுகின்றேன் அன்பே
மழையில் நனைகின்ற
மடியாகின்றேன் மானே
முகிழும் முனதன்பில்
மடிசாய விழைகின்றேன்
விடியாதோ என்றெண்ணி
விண்மீனைப் பார்க்கின்றேன்.
வெண்பா வாகியது பின்னர் இவை. எல்லாம் ஒரு முயற்சி தானே. பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி!
ஆளான நாள்முதல் நான்காணா மல்போனேன்
தோளோடுதோள் சேரநானும் தூங்காமல் வாழ்வேனே
முள்ளின்மேல் ரோஜாபோல் துன்பத்தில் இன்பமே
கொள்வேனே காண உனை !
திண்டாடி போவேன் தினம்உன்னைக் காணாமல்
மன்றாடிக் கேட்பேன் மடிப்பிச்சை போடம்மா
கண்ணோடு தான்வாழ்வாய் விண்ணோடு போனாலும்
புண்ணாகும் இல்லை எனில் !
தள்ளாத போதில்நான் தள்ளாடி வீழ்ந்தாலும்
கொள்ளாத உன்நினைவை தள்ளாது வாழ்வேனே
காணாத போதினிலும் நான்மாலைத் தாமரையே
வீணாகிச் சாதல் விதி !
இனிய கவிதை.. நல்ல சொல்லாடல்!..
ReplyDeleteஅருமை!..
மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
பாடிய பாடலின் பொருள் உணர்ந்தேன்
பாடி மகிழ்ந்து பரவசமடைந்தேன்....
என்ன வரிகள்... சொல்ல வார்த்தைகள் இல்லை
மிக அருமையாக உள்ளது..... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
Deleteபுதுக்கவிதை அருமை ...
ReplyDeleteவாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி!. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Delete//தள்ளாத போதில்நான் தள்ளாடி வீழ்ந்தாலும்
ReplyDeleteகொள்ளாத உன்நினைவை தள்ளாது வாழ்வேனே //
அருமை சகோதரியாரே
அருமை
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
Deleteமரபில் புதுமை படைக்கும் தங்கள் கவிதைப்பணி தொடரட்டும் கவிஞரே!
ReplyDeleteஅருமையான பாடல்கள்!!
வாழ்த்துகள.!
மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே .....! வர வர ரொம்ப சிக்கனமாகவே பின்னூட்டம் இட பழகி விட்டீர்கள் இல்ல ம்..ம்..ம்.. நல்லதப்பனே. அல்லது.........என்ன இதெல்லாம் ஒரு பாடல்..... என்று முனு முணுப்பது போல் கேட்கிறதே அப்படியா....ஹா ஹா ...
Deleteகலக்கல் கவிதை! வெண்பாகவும் வடித்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
Deleteஅருமையான கவிதை சகோ வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணத்தை இணைக்க முடியவில்லையே....
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
Deleteஅது தானே எனக்கும் பிரச்சினை....களைத்து அப்படியே விட்டு விட்டேன். இன்னுமொரு முறை ட்ரை பண்ணவேண்டும் நேரமில்லையே. சரி பார்க்கலாம்.
நல்லாயிருக்கு.. ஆமா இந்த வார்த்தைகளை எல்லாம் எங்கிருந்து கடன் வாங்குகிறீர்கள். அவ்வளவு அழகா பொருத்தமா இருக்கு. நானும் வார்த்தைகளைத்தேடுகிறேன்... தேடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் கடன் கொடுங்களேன்.
ReplyDeleteஅய்ய உறவுக்கு பகை கடன் என்று தெரியாதா? அதனால நான் கடன் குடுக்கிறது இல்ல சகோ. இதிலிருந்து என்ன தெரிகிறது எனக்கு உறவுகள் தான் முக்கியம் என்று புரிகிறது அல்லவா? ஹா ஹா......மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
நல்லவேளை கடன் எலும்பை முறிக்கும்னு சொல்லாமல் விட்டீங்களே.. அதுவே சந்தோசம்.
Deleteதங்களுக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வணக்கம் இனிய தோழியே!
ReplyDeleteபாவையே! உன்கவி மாலையைப் பார்த்தேனே!
பூவையைத் தேடியொரு போராட்டம்! - தேவையாய்ச்
சீரெடுத்துச் சேர்த்தீர்நற் பாட்டு! மரபெனும்
வேர்காண்பாய் நீயும் விரைந்து !
நல்ல சீர்களுடன் அமைந்த பாடல்!.. விரைவில் மரபில்
பயிற்சி எடுங்கள். மிகச் சிறப்பாக வெண்பா விருத்தம் யாவும்
உங்களாலும் அருமையாக எழுத முடியும்!.. வாழ்த்துக்கள்!
தாமதமான வருகைக்கும் வருந்துகின்றேன் தோழி!..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
வாங்கம்மா தோழி !
Deleteநில்லாமல் வந்தாய் நிலவாய் நிறைவாயே
நல்வார்த்தை தந்தாய் நயம்பட இவ்வினிய
புத்தாண்டில் சீரெடுத்துப் பாடவே மிக்கநன்றி
சித்தம் அதுவாகச் சேர்.!
புரிந்துணர் விருக்க வருந்துவதேன் தோழி
பிரியேனே என்றும் உமை!
மிக்க மகிழ்ச்சி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே ...!
அம்மா தாயே!!! உலகம் தாங்காது :)) இப்படியா போட்டு த்தாக்குவது!!!! விருத்தம் போல் ஒரு பாடல்.....அப்புறம் அதுவே வெண்பாவாகவும்!!!!
ReplyDelete**உள்ளத்து வலியோடு
உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல
வாடாமல் சாகிறது** இந்த வரிகள் ரொம்ப..ரொம்ப சூப்பர் டா செல்லம்:)
ஹா ஹா .....வாங்க அம்மு பட்டாசு மாதிரியே வந்து வெடித்து விட்டுப் போகிறீர்களா? இப்ப தான் களையே வந்துச்சும்மா எங்கேயா என் முகத்தில தான்.ஹா ஹா .. மிக்க மகிழ்ச்சிம்மா.
Deleteஆமா....(((( அம்மா தாயே!!! உலகம் தாங்காது :)) இப்படியா போட்டு த்தாக்குவது!!!! )))இப்ப என்னை திட்டிறீங்களா அம்மு, இல்ல மெச்சிறீங்களா, என்னடா .... ஓ இல்லையா மெச்சியா அப்பசரி அம்மு. அம்முவாவது என்னை திட்டிறதாவது. இல்ல அம்மு just kidding டா செல்லம்.
மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மு அனைவருக்கும். ....!
நீங்க எழுதினால் எப்படி கவிதையா வருது!!
ReplyDelete****************
****உழைக்காமல் உண்பது போல்
உணர்கின் றேன்உயிரே ****
உழைக்காமல் உண்பது எவ்வளவு கஷ்டமான ஒண்ணுனு சொல்லி உங்க உயர் தரத்தை காட்டிட்டீங்க, இனியா! :))
வாங்க வருண் மிக்க மகிழ்ச்சி !
Deleteஆமா காமெடி கீமெடி பண்ணலையே ?இல்ல எனக்கு தெரியும் அப்படி பண்ணமாட்டீங்க. அதுவா யாருக்கும் சொல்லாதீங்க ஒகேவா. அது அப்பிடித் தான் வருண் நான் பேசுவதே கவிதை தான் அது தான் எழுதும் போதும் வருகிறது.சும்மா just kidding வருண் ....ஹா ஹா
உழைக்காமல் உண்பதை சந்தோசமாகவே எண்ணுகிறார்கள் பலர் இல்லையா வருண். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
அழகான வார்த்தைகளால் கோர்த்த அருமையான கவிதை !
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
மிக்க நன்றி சாம்! வருகைக்கும் கருத்துக்கும். நிச்சயமாக வருவேன். வாசித்துவிட்டேன் மீண்டும் வந்து கருதிடுவேன்.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
கவிதை அருமை சகோ. அதையே வெண்பாவாகவும் மாற்றியது இன்னும் அழகு,வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவாருங்கள் சகோ ! ரொம்ப நாளைக் கப்புறம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.அனைவரும் நலம் தானே ஓவியா, இனியா
Deleteமிக்க நன்றி! வாழ்த்திற்கும் கருதிற்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . சகோ ...! மீண்டும் கூடிய சீக்கிரம் மறுபடியும் காண்பீர்கள் அதுவரை பொறுத்தருள்க.
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
இனிய புத்தாண்டில் ஏற்றம் மிகவே
Deleteகனிய வேண்டும் வருமாண்டு என வாழ்த்துகிறேன் தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரையும் ....!
ஆகா இதை எல்லாம் எப்போ பதிவிட்டீங்க கவனிக்கவில்லையே ஆமா நாமதான் வலைப்பக்கமே வருவதில்லையே பின்ன எப்படி காண்பதாம்
ReplyDeleteஇல்லையா தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் சகோ !
விருத்தம் வெண்பா அருமையா இருக்கு தொடர வாழ்த்துக்கள் சகோ
வாழ்க வளமுடன் !
ஆஹா வாருங்கள் ஐயனே! ரொம்ப சமத்து கேள்வியும் நானே பதிலும் நானேவா நன்று நன்று! எப்படி நலம் தானே? இப்ப எல்லாம் ஐயா ரொம்பவே பிசி இல்ல என்ன செய்வது இப்ப வாவது வந்தீர்களே. அதுவே ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது.
Deleteஇனிய விருத்தம் புதுமை படைக்கின்ற வெண்பா
தனிச்சிறந்த ஆற்றல் மிகுந்திடும் பண்பாளன்
நீரிடும்பா மாலைகள்பூ மாலையாய் தோன்றிடுமே
வேரிலே நீர்வாழும் வித்து !
இனிவரும் நாளெல்லாம் இனிமை பெறஇவ்
வினிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன் ....!
அருமையான கவிதை!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி!