Tuesday, December 30, 2014

வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே

 
வலைதள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்


வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே
கருவாய் இருப்பாயே காலத்தை வென்றிடவே
பெருகும் நற்பணிகள் உருகும் உளநலன்கள்
தருவாய் நிறைவாக நாடுகள் நலம்பெறவே

சீரும் சிறப்பும் சேர்ந்திட வேண்டும்
வாரும் எண்ணங்கள் விலகிட வேண்டும்
போரும் நீங்கிடவே புரிந்துணர்வு வரவேண்டும்
பாரும் மகிழ்ந்திடவே  நற்பலன்கள்  தருவாயே

ஈழத்தில் துன்பங்கள் இன்றோடு ஒழிந்திடவும்
பழமாக வெற்றிகள் பெறவேண்டும்  காரியங்கள் 
களையின்றி பயிர்வளர்க்க கவனங்கள்  பெறவேண்டும்
விளைச்சலிலே  வர்த்தகமும் வானுயரும் நிலைவேண்டும்

தேரோடும் வீதியிலே போராட்டம் இல்லாமல் 
வேரோடும் ஆல்போன்று  விழுதுகளாய் தாங்கிடவும்
பேரோடு வாழ்ந்திடவே பெற்றோரின் பிரியங்களும்
நீரோடு போகாமல் நிலைத்திடவும்  வரம்வேண்டும் !

நோய்நொடிகள் விலகிடவும் நொந்தமனம் தேறிடவும்
வாய்மை பேணியங்கு வல்லரசு அமைந்திடவும்
சேய்கள் கூடிநற் செயல்கள் புரிந்திடவும்
தூய்மை எங்குமே துலங்கிடவும் வரவேண்டும்

 இல்லையென்று சொல்லாத நிலையங்கு வேண்டும்
தொல்லை எல்லாம் கடந்தங்கு  சுகம்காண வேண்டும்
முல்லை சிரிப்பங்கு முத்தாட வேண்டும்
மல்யுத்தம் காணாத மகிழ்வங்கு விரைவாகவேண்டும்

பொன்னோடு பூச்சூடி பொழுதெல்லாம் களிப்புடனே
கண்ணிலே மையிட்டு கட்டியவன் வரவைஎண்ணி 
காதலுடன் காத்திருக்கும் கனவுநனவாக வேண்டும்
மோதல்கள் ஏதுமின்றி காதல்ஏக்க முறவேண்டும் 

கோவில்கள் கோபுரமும் குறையின்றி நடந்திடவும்
காவிகளும் கவலையின்றி கண்மூடித் தூங்கிடவும்
காடுகளும் விலங்குகளும் வீடுகளில் வாழுகின்ற
மாடுகளும் நன்றிமிக்க நாய்களையும் பேணிடவும்

வறுமைகள் வற்றிடவும் வெறுமைகள் நீங்கிடவும்
பொறுப்புகள் பெற்று புதுமைகள் புரிந்திடவும்
வெறுப்புகள் அகன்று விருப்புகள் தோன்றிடவும்
மறுப்புகள் இன்றிமனிதம் பெருகிடவும் வேண்டும்

வருகபுத்தாண்டே வருகவருக புத்தாண்டேவருக 

50 comments:

  1. வாழ்க நலம்!..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உடன் வருகைக்கும் வாழ்த்திற்கும்...!
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  2. புத்தாண்டு புதுப்பொலிவோடு அமையட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  3. ஆகா! என்ன அழகான பிரார்த்தனை !!! இது உங்கள் மன அழகை காட்டுகிறது செல்லம். நீங்க சொல்லறதெல்லாம் நடந்தா எவ்ளோ நல்ல இருக்கும்:)) உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மு இந்த வருஷம் இன்னும் களை கட்டுகிற மாதிரி வெண்பா விருத்தம் என்று அசத்திடனும் ok வா இன்னமும் தங்கள் திறமைகள் மேலும் வெளி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அம்மு இந்த புதுவருடத்தில்தாங்களனைவரும் சகல சௌபாக்கியங்கள் அனைத்தும் பெற்று அமோகமாக வாழ வாழ்த்துகிறேன்டா ...!

      Delete
  4. அருமையான வைரவரிகள்.... வாழ்த்துகள்

    எமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  5. உங்கள் வாழ்த்துகளுடன் புத்தாண்டு இனிது தொடங்கட்டும்!
    உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகள் அனைவர்க்கும் என்
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பொன்னும் பொருளும் புதுப்பொலிவும்
      மின்னும் புகழும் குறுநகையும் பெற்றிட்டே
      குன்றாமல் என்றும்நீ வாழவாழ்த்தும் அன்னை
      நின்அன்பை எண்ணி மகிழ்ந்து!

      Delete
  6. ... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    subbu thatha

    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தாத்தா ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அருமை!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !கீதாவிற்கும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  11. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspoty.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  12. வணக்கம் !

    தித்திக்கும் கவிதை வரிகளைத் தினந்தோறும் படைத்து மகிழும் என்
    தோழிக்கும் ,குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ! வாழ்த்துக்கள் தோழி !வாழ்க வளமுடன் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி என் அன்புத் தோழியே ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  13. வணக்கம் தோழி!

    எல்லாம் வரவேண்டும்! இன்பம் தரவேண்டும்!
    நல்லோர் உறவும் நமைத்தொடர்க! - வல்லவர்
    நாமென்று சொல்லட்டும் நம்பிக்கை ஓங்கவே
    தீமெனப் பாடும் சிறந்து!

    அருமையான பாடல்! அனைத்தும் சிறப்பு!

    மலரும் ஆண்டு மகிழ்வாய் அமைய
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. புன்னகையும் பொன்னகையும் பெற்றுக் கவிபுனைந்து
      இன்பமாய் வாழவாழ்த்தும் அன்புள் ளஇனியா
      நீங்கா புகழுன்னை நின்றுகாக்கும் நித்தியமே
      பாங்காக வேவாழு துணிந்து !

      புதிய ஆண்டில் இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்!...! நன்றி தோழி வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  15. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  18. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  19. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  20. அருமையான வேண்டல்கள் தோழி..வாழ்த்துகள்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete

  21. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  22. ,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  23. அடாடா, புத்தாண்டை என்னமாய் வரவேற்று இருக்கிறீர்கள். அருமையான வரிகள்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  24. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  25. அழகான வாழ்த்து சகோ இனியா !

    பாடிப்பரவசம் அடைந்தேன் அருமை !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருக வருக கவிஞரே ! தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
      மிக்க மகிழ்ச்சி! வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ! தொடரட்டும் தங்கள் பணி இப்புதிய ஆண்டில். ok வா...பார்க்கலாம்.

      பெருஞ்ச்செல்வப் பேறும் பதவிகளும் பெற்று
      விரும்பிய வாழ்வையும் பெற்றுத் தழைக்கவே
      வாழ்த்துகிறேன் பெற்றதாயாய் !வல்லகவி பாடுகாலம்
      தாழ்த்தாது வானோரைப் பணிந்து !

      Delete
  26. புத்தாண்டுச் சிறப்புக் கவிதை மிக மிக அருமை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete
  27. நல்ல கவிதை இனியா! உங்களுக்குத்தான் எத்தனை "பாஸிட்டிவ்" எண்ணங்கள்!! :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அப்ப்டியா சொல்கிறீர்கள் வருண் ம்..ம்..ம்.. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.