Sunday, August 3, 2014

சித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி 

சித்த மெல்லாம்
நீரே சாயி ஸ்ரீ சாயி
நித்தமும் நான்தொழுவேன்
உத்தமராம் உமை
வித்தகரே தினம்
காப்பாயே  எ(ம்)மை   ( சாயி ஸ்ரீ சாயி)

எத்தனை நான்மறவேன்
பித்தனையும் பணிவேன் -உன்
சக்தியையும்  அறிவேன்
சரணடைந்தேன் சாயி
எத்துணை அவலம்
வந்துற்ற போதும்
அத்தனையும்  களைவாயே-அந்த  
அம்மை அப்பனும் நீயே  (சாயி ஸ்ரீ சாயி)

நொந்துநான் போனால்
நிந்தனைகள் உமக்கே
சிந்தனை செய்வாயே
வந்தருள் செய்வாயே
சிந்தையில் வந்தமர்ந்து
விந்தைகள் புரிவாயே
முந்தைய வினைமுழுதும்
விலகிட அருள்வாயே   ( சாயி ஸ்ரீ சாயி)

நித்திரை யின்றி
செத்திடுவேனே
புத்திரர் நிர்கதியானால்
நித்தியமாய் வேண்டும்
நெற்றிக் குங்குமம்
நிலைத்திட அருள்வாயே-வாழ்வை
சிதைத்திட எண்ணி எனை
பகைத்திட வேண்டாம் சாயி

பதைத்திடும் போதில் எல்லாம் 
திகைத்திடும் படியாய் 
தீர்த்திடுவையே சாயி 
சாயி தயாளா வள்ளல் நீயே  வருக -நல்
வாழ்வினையே தருக (சாயி ஸ்ரீ சாயி)

நீள்கடலில் நின்று
தத்தளித்தாலும்
நீந்திட வழிவிடய்யா
ஆழ்புதை குழியில்  நான்
அமிழ்ந்தாலும்-எனை
ஆதரிப்பாய் ஐயா
ஆளரவம் அற்ற
அடர்ந்த காட்டில்
தனித்து நின்றாலும்
துணையாவாய் ஐயா  ( சாயி ஸ்ரீ சாயி)

புயல்காற்று மழையினில்
சிக்கி சுழன்றாலும்
கொடிய விலங்கு-எமை  
கொன்று போட்டாலும்
வலிய பகை என்னை
வளைத்து நின்றாலும்
விஷக்கிருமி என்னையே
வாரிச் சென்றாலும்
விலகி ஓடுமே
உம்நாமம் சொல்லவே  (சாயி ஸ்ரீ சாயி)

என் கண்ணுக்குளே
இரும் காருண்யரே உம் நினைவு
என்றும் நீங்காமலே 
நின் பாதம் பணிய
காணும் இனிமை
இம்மை மறுமை எங்குமே
தோன்றும் எண்ணம் நிகழுமே
தொல்லை எல்லாம் அகலுமே
தொடர்ந்து செல்வேன் உம்மையே  (சாயி ஸ்ரீ சாயி)

27 comments:

 1. அருமைச் சகோதரி
  உங்கள் வலைச்சர பணியை பாரட்டுக்கு உரியது.
  எதுமாதிரியும் இல்லாமல் ஒரு புதுமாதிரி செய்திருந்தீர்கள்.
  நல்ல படைப்பாற்றல் உங்களுக்கு ..

  எனக்கு கொஞ்சம் வேலைப்பளு வீட்டின் புதிய குட்டி செல்ல தேவதை எனது நேரங்களை எடுத்துக் கொள்கிறார் மேலும் இனைய இணைப்பிலும் சில தடங்கல்கள் ...

  தொடர்கிறேன் சகோதரி ...
  உங்களின் கண்களில் இருக்கட்டும் சாயிநாதனின் காருண்யம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ ! மிக்க மகிழ்ச்சி! தங்களின் கருத்தை எதிர்பார்த்து இருந்தேன் மிக்க நன்றி! இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது தங்களின் நற்கருத்து கண்டு. ஆஹா குட்டி தேவதைகள் ஆக்கிரமித்துக் கொண்டார்களா தங்கள் நேரத்தை. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது வளர்ச்சியும் மகிழ்ச்சியும் தான் முதலில் மிகுதி பின் சகோ!
   மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.
   வாழ்த்துக்கள் ...!

   Delete
 2. அன்புத் தோழி!

  மடைதிறந்த வெள்ளமோ மாதேயுன் பாடல்!
  தடைதிறக்கக் கிட்டும் தயை!

  உளத்தினை உருக்கும் அருமையான பாடல்!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. அருமை தோழியே வருக! குறள் மூலம் இனிய கருத்தை ஈந்தீர் நன்றி ! உண்மை தான் தடை திறக்க கிட்டும் தயை. நிச்சயம் திறக்கும் தோழி ! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் ....!

   Delete
 3. அன்புச் சகோதரி,
  தங்களின் ஸ்ரீ சாயி பெருமகனார் பாடல் கந்த சஷ்டி கவசத்தை நினைவு படுத்துகிறது. சஷ்டி என்றால் ஆறு. அதற்கேற்ப ஆறு சரணங்களால் அமைந்துள்ளது பாடல்.
  “புயல்காற்று மழையினில்
  சிக்கி சுழன்றாலும்
  கொடிய விலங்கு-எமை
  கொன்று போட்டாலும்
  வலிய பகை என்னை
  வளைத்து நின்றாலும்
  விஷக்கிருமி என்னையே
  வாரிச் சென்றாலும்
  விலகி ஓடுமே
  உம்நாமம் சொல்லவே“
  என்ற உங்களின் பாடல் வரிகளைப் படிக்கப் படிக்க,

  “தேளும் பாம்பும் செய்யான் பூரான்
  கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
  ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
  ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
  வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
  குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
  குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
  பக்கப் பிளவை படர்தொடை வாழை
  கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
  பற்குத் தரணை பருஅரை யாப்பும்
  எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
  நில்லா தோட நீஎனக் கருள்வாய்“
  என்ற கந்த சஷ்டிக் கவசம் காதில் ஒலித்துக் கொண்டே வந்தது.
  ஸ்ரீ சாயி சஷ்டி கவசமாக இதைக் கொண்டுவிடலாம்.
  “உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
  எந்தலை வைத்துன் இணையடி காக்க“
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ! தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது சகோ சும்மா வாயில் வருவதெல்லாம் எழுதி விட்டு பயந்து கொண்டிருப்பேன். சரியோ தப்போ தெரியவில்லை என்று. அவ்வளவு தான். அதுவும் தங்களைப் போன்ற வல்லுனர்கள் என்றால் இன்னும் பயம் தான். நிறைய என்ன, எல்லாம் பிழையாக வல்லவா தெரியும் சகோ. கோபமும் வருமே என்று தான் ஏன் இப்படி கொலை செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடும் இல்லையா சகோ ஹா ஹா அது தான் பயம்வேறு என்ன.
   தங்கள் வருகை என் பாக்கியம். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!

   Delete
 4. வணக்கம்
  அம்மா.

  சீராக அடியெடுத்து சாயி சித்தத்தை
  படிப்பவர் உள்ளம் கவரும் வகையில்
  பதிவாகிய விதம் கண்டு மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கு நன்றி அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஐயா ரொம்ப busy யாக இருப்பீர்கள் அது தான் போட்டி தொடங்கி விட்டதே. அதற்கிடையிலும் வந்து கருத்து இட்டமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி ரூபன் !இனிய கருத்திற்கும் வருகைக்கும். வாழ்க வளமுடன் ...!

   Delete
 5. சாயி நாதர் புகழ் பாடும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும் .
   வாழ்க வளமுடன்....!

   Delete
 6. சாய் பாமாலை அற்புதம்.
  ஒவ்வொரு வரிகளும் அருமை.

  சகோ - இந்த வரிக்கு விளக்கம் அறிய ஆவல்.

  "//எத்தனை நான்மறவேன் //"

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ வார்த்தைகள் தானாக வருபவை தானே ஆனால் அது சரியா என்று சிந்திப்பேன் ஏன் வந்தது என்றால் அது சரியாகத் தான்அமைந்து இருக்கிறது பெரும்பாலும். இதுவுமப்படியே சிந்தித்தேன் சரியாகவே இருக்கும் என்று நம்பினேன்.
   பின்னர் தான் \\ பித்தா ///பிறை சூடி பெருமானே அருளாளா
   \\\\எத்தான்//// மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை என்று இருக்கிறது அல்லவா ஆகையால் சிவனைக் குறிப்பதாக எண்ணியே எழுதினேன். இரண்டுமே அவரை குறிப்பதாக எண்னுகிறேன். தங்களுக்கு தெரிந்தால் விளக்குங்கள் சகோ. பிழை எனில் மாற்றிவிடலாம். அல்லது தெரிந்தவர்கள் சொல்லலாம். இது எனக்கும் ஏற்பட்ட சந்தேகம் தான் சகோ. வருகைக்கு நன்றி சகோ ! வாழ்த்துக்கள் !

   Delete
  2. இப்போது புரிந்துவிட்டது சகோ.

   எனக்கு தப்பெல்லாம் தெரியாது, ஏன்னா கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

   நீங்கள் நன்றாக கவிதையை படைக்கிறீர்கள், அதனால இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்து பொருள் புரிந்துகொள்வேன். அப்படியும் இந்த மாதிரி சில வரிகளுக்கு பொருள் விளங்காது. அவ்வளவு தான். வேறொன்றுமில்லை.

   Delete
 7. அருமை அருமை! ஸ்ரீ சாயியின் மகிமையே மகிமைதான் சகோதரி! பாமாலை ஆஹா போட வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! தங்கள் இனிய கருத்து மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. வாழ்க வளமுடன் ....!

   Delete
 8. அருமை
  அருமை
  உள்ளம் கவர்
  இனிமை வரிகள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

   Delete
 9. பக்தி உணர்வை ஊட்டும்
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்
  http://jaffnashirdisaitemple.eu5.org/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும். இந்த லிங்குக்கு சென்று பார்த்தேன். மிக அருமை! இனம் புரியாத ஒரு உணர்வும் அமைதியும் கிடைத்தன நன்றி சகோ வாழ்த்துக்கள்...!

   Delete
 10. பாமாலை அருமை சகோதரி நேற்றே கருத்துரை இட்டேனே ?

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சகோ என்ன வென்று தெரியவில்லை இப்பொழுது எல்லாம் அடிக்கடி காணாமல் போகிறது கருத்துகள். வடை திருடும் காக்கா தான் இதையும் திருடுகிறது போல். நீங்க தான் பெரிய கில்லாடியாச்சே கண்டு பிடிங்க ok வா. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 11. சிந்தையில் வந்தமர்ந்து
  விந்தைகள் புரிவாயே
  முந்தைய வினைமுழுதும்
  விலகிட அருள்வாயே ( சாயி ஸ்ரீ சாயி)

  ஆழ்ந்த பொருளுடன்
  அருமையான பிரார்த்தனைப்பகிர்வுகள்.!பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! தோழி வருகைக்கும் பாராட்டுக்கும் ...!

   Delete
 12. இனியாசெல்லம் எப்டி இருக்கீங்க! அடுத்த பதிவு போடுவீங்கன்னு பார்த்த நகர மாட்டேங்கிறீங்களே :(( வாழ்த்துக்கள் டா!

  ReplyDelete
  Replies
  1. அம்முக் குட்டி வாங்கடா மிக்க மகிழ்ச்சி. ஆமல்லே வார்த்தைகள் வற்றிவிட்டதோ என்னமோ தெரியலையேடா. பார்க்கலாம். ட்ரை பண்ணுகிறேன்மா. மிக்க நன்றிம்மா! வருகைக்கும் ஆதரவுக்கும்.

   Delete
 13. வேண்டும் வரத்தில் விலகிடா காயங்கள்
  தாண்டும் தவிப்புகள் விட்டோடும் - ஆண்டுகள்
  தோறும் அவனடி தொட்டிருந்தால் ! நன்றெனவே
  ஊறும் கவிதை உணர்வு !

  அழகாய் இருக்கு ஆனாலும் ஏக்கங்கள் எங்கோ ஒழிந்தே இருக்கிறது
  வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சீராளா ! மிக்க மகிழ்ச்சி தங்கள் வரவில். ஆமாம் உண்மை தான் சீராளா நோய்கள் தாக்கும் போது ஏற்படும் பயம் தான் பாபாவை வேண்டி விரதம் இருந்து வடித்த கவிதை இது. தாலியை காக்கவும் துன்பம் நெருங்காதிருக்கவுமே. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!

   Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.