Friday, August 22, 2014

பூவிழிகள்நோகும்


2 .....தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014




O

ஒய்யாரமா நிக்கிறியே கண்ணம்மா 
ஒருக்களித்து பார்க்கிறியே செல்லமா-
ஐயா மனசை கலைக்கிறியே மெல்லமா
என்னோருயிரை பறிக்கிறியே நியாயம்...மா

தண்ணிக்குடம் தலையிலதான் கண்ணம்மா 
என்தாகம் தீர்க்க வேணுமடி செல்லம்மா
வளைந்து நெளிந்துநிக்கிறியே தேனம்மா- நானுன்
வலையினிலே துடிக்கின்ற மீனம்மா                             ஒய்யாரமா  


அழகிய ஓவியங்கள் (10)

அயிலை மீனைபோல என்னை அலைக்கிறியே- தோகை
மயிலை போல ஓயிலாவே நடக்கிறியே
கூடை நிறைய பாசம் வைத்து பார்த்திருக்கே - உன்
கூடபேச ஆசை கொண்டு காத்திருக்கேன்                                             ஒய்யாரமா

வேல்விழியால் தாக்கியெனை விளுத்திறியே கீழே- என்
மேலடுப்பு வச்சுதானே காய்ச்சிறியே கூழே
புன்னகையை மறைத்துவைத்து தாக்கிறியே என்னை
கன்னமிட்டு என்கனவை கலைக்கிறியே பெண்ணே                      ஒய்யாரமா 

மின்னுகின்ற மூக்குத்தி மேலழகு பெண்ணே
மன்னுகின்ற பார்வையிலே  சீரழகு கண்ணே -நீ
பொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்
கட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும்                                     ஒய்யாரமா                             
உன்நடையழகை கண்டாலே அன்னமது நாணும்
உன்இடையழகை கண்டாலும் நடையுடனும்  தளரும்  
என்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என் 
கன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை                      ஒய்யாரமா  


 இந்தக் கவிதை பார்க்க இங்கே கீழே சொடுக்குங்கள்
 

47 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. என்னம்மா சகோதரி
    இப்படி எல்லாம் எழுதித் தள்ளினால்!!!!!!!
    நாங்க என்ன பண்றதும்மா!
    எங்கள் பரிசை (பாராட்டுக்கள்) அள்ளிச் செல்லம்மா !!!!

    அருமை அருமை!!!!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோ பரிசை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் சகோ பாராட்டு மட்டும் கொஞ்சம் பெரியமனசு பண்ணி சொன்னா போதும் பெரிய விடயம் சகோ ! அது போதும் எனக்கு. சரியா சகோ! இப்ப கப்பி தானே. ஹா ஹா ......
      மிக்க நன்றி நட்புகளா வரவுக்கும் வாழ்த்துக்கும் ....! என்னம்மா கீதா கவிதை போடலையா என்ன. சும்மா போடுங்களேன்.ஒரு ட்ரை தானே.

      Delete
    2. சகோதரி! இது கீதா.... அழகாய் கவிதை தீட்டிட இத்தனை சகோதரிகள், சகோதரர்கள் இருக்கும் போது....நான் எங்கே...
      கவிதை எழுத நினைக்கையில் கவிதை கொட்டுது
      அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....(குணா படம்)
      வார்த்தை முட்டி முட்டி உடைஞ்சுசுடுதுங்க......அப்படியே சிதறி கரைஞ்சு போய்டுதுங்க.....அதான்.....நம்ம ஏரியாகுள்ளயே முட்டிக்கிட்டா போதுமேன்னு.....ஹாஹஹஹ்

      Delete
    3. சகோதரி! இது கீதா.... அழகாய் கவிதை தீட்டிட இத்தனை சகோதரிகள், சகோதரர்கள் இருக்கும் போது....நான் எங்கே...
      கவிதை எழுத நினைக்கையில் கவிதை கொட்டுது
      அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....(குணா படம்)
      வார்த்தை முட்டி முட்டி உடைஞ்சுசுடுதுங்க......அப்படியே சிதறி கரைஞ்சு போய்டுதுங்க.....அதான்.....நம்ம ஏரியாகுள்ளயே முட்டிக்கிட்டா போதுமேன்னு.....ஹாஹஹஹ்

      Delete
    4. இங்க பாருங்க விஜு ஐயாவே இப்படிச் சொன்னா நாங்க எல்லாம் எங்கோ.....தேடுங்க..ப்பா.....பின்னூட்டமே இப்படி ஊட்டமா இருக்கும் போது....நாங்கள் எல்லாம் ஓட்டம்தான்....ஹாஹஹஹ்

      Delete
    5. என்ன சகோ கலாய்கிறீங்களா சகோதரர் விஜு அவர்கள் பெரிய மலை நான் வெறும் மண்மேடு அவர் சிரிக்காமல் பெருந்தன்மையாய் பிழைச்சுப் போகட்டும் என்று விட்டிருப்பார் சகோ. ரொம்ப நல்லவர் இல்லையா சகோ ம்..ம்..ம்.. அது புரியாமல் நீங்க வேற பயந்து கொண்டு எழுதுங்க சகோ வரும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! இப்ப போய் எழுதிப் பாருங்கள் சகோ வரும் ok வா.

      Delete
    6. கீதா வாங்கடாம்மா அப்பப்ப தான் தலைய மெல்ல காட்டுவீங்களா.
      ஆமா என்ன இப்போ வார்த்தை முட்டினா கொட்டிட வேண்டியது தானே தயங்காம.சரியான நேரத்தில கொட்டா விட்டால் முட்டி உடையும் தானே ஹா ஹா இன்னிக்கு இருவரும் யோசித்து எழுதுங்கள் ok வா பார்த்துக் கொண்டிருப்பேன்உங்களால் முடியும் ok வா. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  3. இசை அமைத்துப் பாடினால் மிக சிறப்பாக அமையும். வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வரவுக்கும் வாழ்த்துக்கும். ஆமா என்ன வைத்து காமெடி கீமெடி பண்ணலையே.ம்...ம்...ம்.. என்ன கொஞ்ச நாளா பதிவ காணவில்லை vacation னா.

      Delete
  4. என்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என்
    கன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை //

    அருமை..இனிமை.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி! முதல் வருகை மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! தொடர வேண்டுகிறேன்!

      Delete
    2. அன்புடன் தொடர்கிறேன் தோழி.

      Delete
  5. அருமை அருமை !
    வாழ்த்துக்கள் என் தோழியே போட்டியில் வெற்றிவாகை சூடி வர !

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா தோழி! வருகைக்கும் வாழ்த்துக்கும் ....!

      Delete
  6. கவிதை ஒய்யாரமான நடையழகு
    வெற்றபெற எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  7. கண்ணுக்குள்ள வாழுறியே கண்ணம்மா! - உன்
    கண்ணசைவில் வீழுறாங்க என்னம்மா!
    பெண்ணுக்குள்ள நீ‘அழகோ சொல்லம்மா!- அந்தப்
    பார்வைக்குள்ள நானிருப்பேன் செல்லமா!
    விதையில்லாம மரம்மொளைச்ச தெங்கம்மா? - உன்
    விழியுழவே மனம்நிறைஞ்ச திங்கம்மா!
    கதைபேசக் கனவிருக்குது கொஞ்சமா? - நீ
    கண்டுகிட்டா காதலுக்குப் பஞ்சமா?
    ஐ...............
    நானும் ஏதோ எழுதுறேனே......................?!!!!!!!!!!!!!
    வேறென்ன ..... உங்க பாதிப்புதான்!
    என்னமா கலக்குறிங்க............................!!!!!!!!
    வெளுத்து வாங்குங்க!
    இந்த ஆட்டத்துக்கு நான் வரல சாமி!
    வெற்றிபெற வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. இது எல்லாம் உங்களுக்கு பாதிப்பா சகோ. சும்மா விளையாடாதீங்க சகோ. மீன் குஞ்சுக்கு யாரும் கத்துக் குடுப்பாங்களா என்ன. ஹா ஹா ...
      அட இப்படி சொன்னா எப்பிடி அதெல்லாம் இல்லை நீங்க ஆட்டத்திற்கு வர்றீங்க ok வா போட்டியில் கலந்து கொள்ளுங்கள் சகோ ஏன்னா அந்த ஓவியத்திற்கு தங்கள் கற்பனை கவிதை எப்படி இருக்கும் என்று பார்க்க நிச்சயம் காத்திருப்பார்கள் அனைவரும். ஆகையால் அனைவரையும் ஏமாற்றி விடாதீர்கள் சகோ. பரிசு நிச்சயம் உங்களுக்கே அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எனவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சகோ வெற்றி பெற.

      Delete
  8. வணக்கம்
    அம்மா.

    மாலையிட் மங்கையவள்
    மாறப்பூச் சேலையுடன்
    மாமன் வாரன் என்று
    பின் நோக்கி தலையசைக்
    தண்ணீர்க் குடமதுவை
    தாவிப் பிடிக்கிறாளே.

    யாழ்இசைகண்டதும்
    நம்மவர் தேசம் கண்ணுக்கு வந்து.
    கவிதையை கண்டதும்
    ஆறுதலாய் இருந்தது
    -------------------------------------------------------------------------
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஓ ஊரை ஞாபகப்படுத்திவிட்டேனா ம்..ம்..ம்.. தங்களின் முயற்சிக்கு என்னாலான சிறு ஒத்துழைப்பு.தங்கள் எண்ணம் சிறக்க வாழ்த்துக்கள் ...! ரூபன் மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...!

      Delete
  9. ஒய்யாரமாய் நிற்பவளை பற்றிய கவிதை ஒய்யாரமாக இருந்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்....!

      Delete
  10. ஆஹா! இனியாச்செல்லம் பாட்டா பாட அருமையா இருக்குடா:) பின்னணியில் கிராமிய இசைகூட கேட்குதே!! பரிசு பெற வாழ்த்துக்கள் டா! பாடல் சிறப்பா வந்திருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. என்னடா அம்மு இது வாழ்த்திவிட்டு விலகிடலாம் என்ற நினைப்பா ம்..ம்..ம்..இதற்கு உங்கள் கற்பனையை நாம் பார்க்கவேண்டாம்? உங்கள் வித்தியாசமான கவிதையும் கற்பனையும் அருமை உடனே எழுதிடுங்க அம்மு ok வா மிக்க நன்றிடா வருகைக்கும் வாழ்த்திற்கும். செல்லம் கவிதையை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  11. நீ
    பொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்
    கட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும் // சூப்பர்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மிக்க மகிழ்ச்சி. கவிதையை ரசித்து கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி!தொடர்கிறேன் தொடருங்கள். வாழ்க வளமுடன் ....!

      Delete
  12. பின்னீட்டீங்க தோழி!
    எங்கோ போயிட்டீங்க! அருமை! அருமை!
    வெற்றி உங்களுக்கே! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா தோழி காமெடி கீமெடி பண்ணலையே. ம்..ம்..ம். அது சரி கவிஞர் அம்மா நீங்க வரல போட்டிக்கு. அதெல்லாம் சரிவராது இப்ப உடனும் எழுதிப் போடுறீங்க ok வா. குட் girl இல்ல.
      தங்கள் வருகையும் கருத்தும் மனதுக்கு இதமாகவே உள்ளது ஊக்கத்தை வாரி வழங்குகிறது தோழி மிக்க நன்றிம்மா.

      Delete
  13. ஆகாகா ஒரு திரைப்பட பாடல் ஆசிரியை தயாரகிக் கொண்டிருக்கிறார் போல் தெரிகிறதே..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! நீண்ட நாளைக்கப்புறம் ரொம்ப busy தான் இல்லையா?
      பாடல் ஆசிரியரா என்ன கலாய்க்கிறீங்களா சகோ! சாச்சா அப்பிடி ஒன்றும் இல்லையே. ஹா ஹா ... ரொம்ப நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்,

      Delete
  14. ஒய்யார மாயிருக்கும் ஓவியத்தை பாடிவிட
    மெய்யுருகி வந்ததுவோ மெட்டு !

    தளராமல் ஆர்த்தகவி தந்ததிங்கே நெஞ்சில்
    இளநீர் சுவையாய் இனித்து !


    அருமை அருமை சகோ இனியா வெற்றி உமதே வாழ்க வளமுட

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீராளன்!
      தங்கள் வரவும்
      இட்ட கருத்தும்
      நெஞ்சை தொட்டது
      இனிய கருத்து
      இதயத்தில் பதிந்தது இனிமையாய்!
      மிக்க நன்றி அப்பனே! வாழ்க வளமுடன்...!

      Delete
  15. அழகுவிழியில் எழுதிய கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  16. அட அட ஒய்யாரமா இப்படி மயக்குறாளே!! மிக அருமை தோழி! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி இப்பிடி சொன்னா எப்பிடி. சரி யார் வாழ்த்து பலிக்குதுன்னு பார்க்கலாம் ok வா ம்..ம்..ம்.. இலக்கண இலக்கியதிலேயே ஊறியவர் அல்லவா நீங்கள் கவிதையும் அப்படியே அசத்தல் எனவே நீங்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி...!. இப்படி சொல்வதற்கு காரணம் உண்டு ஏனெனில் என் அருமைத்தோழி இளமதியும் இருக்கிறாரே எனவே இருவரையும் மனதில் கொண்டு தான் சொன்னேன்(நீங்களும்) என்று. நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  17. நீங்க என்ன சினிமா பாடலாசிரியரா? இல்லைன்னு சொல்லாதீங்க.....நான் வருங்கலா சினிமா பாடலாசிரியரைப் பற்றி சொன்னேனுங்க..... பாட்டு அருமை பாராட்டுக்கள்....பாருங்களேன் இளையராஜா பாத்தா இதை காப்பி பண்ணிடப் போறாருங்க

    ReplyDelete
  18. வாங்க சகோ ! அய்யய்யோ மெல்ல சகோ அக்கம் பக்கத்தில கேட்டா சிரிக்கப் போறாங்க இல்ல சகோ. எத்தனை சிறந்த கவிஞர்கள் உள்ளார்கள். நான் எம் மாத்திரம். மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் இனியகருத்துக்கும் பாராட்டுக்கும்.
    எப்பிடி பயணம் எல்லாம் பாதியிலே திரும்பி விட்டீர்களா என்ன. சீக்கிரம் வந்து போல் அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
  19. அருமை! இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  20. அருமையான பாடல். மிகவும் இரசித்தேன். இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்திற்கும்.மிக்க நன்றி தோழி!

      Delete
  21. அருமையான கவிதை,நன்றி உங்களின் தளத்திற்கு இன்று எனது முதல் வருகை இனிமேல் அடிக்கடி வருவேன்

    ReplyDelete
    Replies
    1. அன்பை தேடித் தான் வந்திருகிறீர்கள் இல்லையா சகோ ! தங்கள் முதல் வருகையை மனதார வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ! வருகைக்கும் இனிய கருத்திற்கும். தொடர்கிறேன் தொடருங்கள் ...

      Delete
  22. அருமையான காதல் வரிகள். எப்படி சகோ, உங்களுக்கு வரிகள் வந்து கொட்டுது?

    இந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரிந்திருந்தால், கல்லூரி காலத்தில் ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம்... உம்.. உம்... இந்த மாதிரி எழுதுவதற்கு ஞானம் வேண்டும்...

    பாராட்டுக்கள். கண்டிப்பாக போட்டியில் வெற்றிபெறுவீர்கள் சகோ...

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.