Thursday, August 14, 2014

உலையில் கிடக்கும் அரிசி



நிலவும் முழுகும் இரவில்
நீர்நிலையில் தவழும் மகிழ்வில் 
உலவும் உலகம் முழுதும்
நீர்த்திவலை இன்றி கழுவும்

உலகும் உலவும் நிலவில்
அமைதி யான பிறகும்
விலகும் துன்பம் யாவும்
நிலவழகில் மயங்கி திளைக்க

அருகில் நின்று ஆடிக்களிக்கும்
அகத்தில் இனிமை சேர்க்கும்
மதியும் நிலவுபோல தேயும்
மறுபடியும் வளரும் வாழும்


காதல் பிரிவில் கருகி 
நெஞ்சை நெருடும் போது- உன்
கொள்ளை அழகை கண்டால்
கொதிக்கும் உள்ளம் குளிரும் 

அலையில் அலையும் அறுகு
உலையில் கிடக்கும் அரிசி
அனலில் விழுந்த மெழுகு-ஆனபோதும்
உன்னைக்கண்டால் உணர்வு ஒன்றிப்போகும்


ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
வெளியில் இல்லை என்றால்
எட்டிப் பார்க்கும் மெல்ல  
சாளரம் வழியே உள்ளே


நிலவின் ஒளியில் நின்று
உணவை அன்னை  ஊட்ட
மழலை மொழியில் பேசி
வியக்கும் குழந்தை காட்டி  

நிஜம் இல்லையென்று புரிந்தும்
நெருங்க மனது துடிக்கும்
நினைவு நிறைய சூடும்
நெஞ்சில் நிறுத்தி பாடும்

வளரும் போது பிறையும்
வனப்பு மிகுந்து காணும்
மறையும் போது விழிகள்
ஏக்கம் கொண்டு பார்க்கும் 

பகலவன் வரும் நேரம்  
பயந்தே மெல்ல  நழுவும்
பலவேளை நாணம் கொண்டு 
வெட்கி விலகி ஓடும்
  




33 comments:

  1. யாப்பறுத்தெழும் உணர்வு!
    அருமை!
    உணர்வின் வேகத்தில் கட்டுடைக்கும் சொற்கள் தம் பெயர் கவிதையெனக் காட்டும் தருணம் இது! சரிதானே சகோதரி?
    ஆயிரமாயிரம் மொழிகளில் ஆயிரமாயிரம் கவிஞர்களைக் கண்ட நிலவிற்கு நீங்களும் ஒரு கவிதை பாடிவிட்டீர்கள்!

    “உன்னை என் திருவிழியாற் காணுகின்றேன்;
    ஒளிபெறுகின் றேன்‘இருளை ஒதுக்கு கின்றேன்;
    இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்;
    எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
    அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவுமுற்றி
    ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
    இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!
    எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்ததாலே!
    பாரதிதாசன் சொல்லுவது போலத்தான்,
    “எனை இழந்தேன் உம்கவியில் கலந்ததாலே“
    சரிதானே சகோதரி?!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! ஆஹா முதல் வருகை அளவில்லா ஆனந்தம் அடைகிறேன் சகோ ! தங்கள் இனிய கருத்து என்னை மேலும் மகிழ்ச்சியடைய செய்கிறது. ஆஹா பெரிய பெரிய கவிஞர்கள் வரிசையில் ஹா ஹா நானும் கவிதை பாடிவிட்டேன் அந்த நிலவுக்கு இல்லையா சகோ! அப்பாடா நிலவுக்கு பாட்டு எழுதியாச்சு இனி அதை கையில பிடிக்கணுமே. ஹா ஹா ....
      மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்.... !

      Delete
  2. அற்புதமான கவி குளிர்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  3. அருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் என் தோழியே .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  4. வணக்கம்
    அம்மா.
    ா மதிக்கு பாடிய கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்குநன்றி அம்மா
    இனியசுதந்திர தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் ! வருகைக்கும் கருத்துக்கும் !
      உங்களுக்கும் என் இனிய சுதந்திர வாழ்த்துக்கள் !

      Delete
  5. நிலவுக் கவிதை இனிமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  6. ஆஹா! என்னே அழகான வரிகள் சகோதரி! அருமை!

    காதல் பிரிவில் கருகி
    நெஞ்சை நெருடும் போது- உன்
    கொள்ளை அழகை கண்டால்
    கொதிக்கும் உள்ளம் குளிரும் //

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete

  7. வணக்கம்!

    ஏங்கித் தவிக்கும் இதய நினைவுகளைத்
    தாங்கித் தழைக்கும் தமிழ்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் !

      Delete
  8. உலவும் நிலவோடு உள்ளாடும் எண்ணம்
    புலரவே கண்டேன் புகழ்ந்து!

    குளிர்ச்சியான நினைவுகள்!
    இனிமைதரும் கவிவரிகள்!
    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி நலம் தானே! என்ன கவிதைகள் எதையும் காணோம். வெகு நாட்களாயிற்ரே. ஆவலோடு எதிர்பார்க்கிறேன் தோழி.
      மிக்க நன்றிம்மா வருகைக்கும் இனிய கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!

      Delete
  9. அருமையான ஒரு படைப்பு.

    "//ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
    வெளியில் இல்லை என்றால்
    எட்டிப் பார்க்கும் மெல்ல
    சாளரம் வழியே உள்ளே//"

    - என்ன அற்புதமான வரிகள் .

    வியக்க வைக்கின்றன வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  10. மாலை வீடு வந்ததும் விரிவா கமென்ட் போடுறேன் செல்லம்:)

    ReplyDelete
    Replies
    1. அட டா இன்னுமா உங்க வீட்டுக்கு மாலை வரல அம்மு ஹா ஹா .....பரவாய் இல்லடா ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா வாங்கடா அம்மு. ஆனால் வரணும் ok வா.

      Delete
    2. அம்மு சென்ற முறையிட்ட கம்மென்ட் வந்ததா என தெரியவில்லை:) so செக் பண்ண இந்த கமெண்ட்:)

      Delete
    3. எனக்கு புரியவேயில்லை அம்மு. கமென்ட் எல்லாம் காக்கா கொண்டு போகுதா என்ன அடிக்கடி தொலையுதேடா.

      Delete
    4. விட மாட்டேன் செல்லம்:) தொடர்ந்து அதே கருத்தை போடுறேன். இப்போ வருதான்னு பார்க்கலாம் :) கவிதைகடலில் கால் நனைத்து, உம் கரம் பற்றி நடனமாடி, குழந்தையாக்கி என்னை இருக்கிறாய் என்னை:)
      நிலவோடு உங்க கவிதையில் நானும் நனைந்தேன் தோழி!
      இந்த வரிகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது
      **
      ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
      வெளியில் இல்லை என்றால்
      எட்டிப் பார்க்கும் மெல்ல
      சாளரம் வழியே உள்ளே **
      இந்த முறை படங்களும் போட்டி போடுகின்றன கவிதையோடு!! அழகுடா!! ப்ரோபைல் படம்மும் கொள்ளை அழகு செல்லம். மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள்:))

      Delete
    5. அப்பாடா finally.... பார்த்திட்டே இருந்தேன் அம்மு எங்க போய்ட்டா இந்த அம்மு என்று ம்..ம்...ம் இப்ப தான் சந்தோஷமா நிறைவாய் இருக்கு அம்மு ஹா ஹா..... ...

      ப்ரோபைல் படம் ஆமா என் மூத்த பொண்ணு தான் செலக்ட் பண்ணி மாத்திகுடுத்தாங்கடா அம்மு. மிக்க நன்றிடா சிரமத்தின் மத்தியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தமைக்கு. ஆமா போட்டிக்கு கவிதை எழுதலையா அம்மு. எதிர்பார்க்கிறேன் ok வா.

      Delete
  11. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
  12. ஏங்கி தவிக்கும் நிலவு - நாம்
    வெளியில் இல்லை என்றால்
    எட்டிப் பார்க்கும் மெல்ல
    சாளரம் வழியே உள்ளே// ரசனையான வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! முதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வழமுடன்....!

      Delete
  13. படிக்கப் படிக்க இனிக்கும்
    பாவடிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  14. நிலவே நீ இனிமை தான் நானறிவேன்
    இனியா பாடியதால் மேலும் இனிதானாயே
    இதையும் நான் அறிவேன்

    அருமை...வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இனியா பாடியதால் இனிமையாகி விட்டதா நிலவு ஹா ஹா கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது தோழி. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ....!.

      Delete
  15. இனிய கவி வரிகள்
    அன்பு வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள் தோழி நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ....!.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.