Friday, July 25, 2014

மழலை மொழிகள் மகத்தான செல்வம்

மழலை மொழிகள் மகத்தான செல்வம்
வாழ பழக்கு வருங்காலம் அவர்க்கு
ஊக்கம் உறுதியும் ஊட்டிடு உவக்க-அவர்
ஆக்கமும் நோக்கமும் அறிவும் சிறக்க

ஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா 

: தெவிட்டாத திங்கள் :

  தூரிகையில் துலங்கும் ஓவியனின் எண்ணம்.


எண்ணங்கள் பூக்கும் காவியமாய் ஆக்கும்


ஆலயம் தொழுவது சாலவும் நன்று


நாவூறும் அறுசுவையில் நூறுவகை நோய்தீரும்

மழலை மொழிகள் மகத்தான செல்வம்


தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்

நன்றாக இருந்தது அம்முக்குட்டியின் சமையல். ரசித்து ருசித்து சாப்பிட்டோமா கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டோம். அதனால் கொஞ்சம் அசதியாக இருந்தது.எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரூபன் என்னம்மா யோசனை சொல்லுங்கள் என்றார் இல்ல நான் வெளிக்கிடும் போது வீட்டுக்காரர் உடம்பை பாத்துக்கோ சுகர் சேர்த்துக்காத என்று சொன்னாரு ஆனால் இங்கு பார்த்தால் அம்முவின் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் ஒரே குலாப்ஜமன், பால் பாயசம், லட்டு என்று ஏகப்பட்ட சுவீட் தந்தாரா ஒரு சுத்து பெருத்திட்டன் இல்ல வீட்டுக்கு போக வீட்டுக் காரங்க என்ன உண்டு இலன்னு பண்ணிடுவாங்களே என்று பயமா இருக்கையா. அது தான் யோசனை வேறு ஒன்றும் இல்லை. எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோமா. மகிழ் நிறை கதை சொல்லுங்கள் ஆன்ரி என்று நச்சரித்தார்கள். இன்று வீட்டிலேயே இருப்போம் என்று முடிவு. எனவே ரூபனும் சகோ மதுவும் கூட சரி சொல்லுங்கள் நாங்களும் கேட்கிறோம் என்றார்கள்  சரி என்று நானும் சொல்லத் துவங்கினேன்.

பேராசிரியர் நியூக்லிட் என்பவர் தன் பேராசிரியர் நண்பர்களுடன் எகிப்து நாட்டிலுள்ள பிரமிட்டுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் ஒரு பேராசிரிய நண்பர் " நியூக்லிட் ," இந்த பிரமிடின்  உயரத்தை நீங்கள் டேப்பை வைத்து அளந்து சொல்லிவிட முடியுமா ?"என்று கேட்டார்.
பிரமிட் அடிப்பகுதி அகலமாகவும் , போகப் போக குறுகலாகவும் உள்ள அமைப்பு. அதில் டேப்பை தொங்க விட்டு அளக்க முடியாது. "ஏனப்பா! எறிவிடலாமெனப் பார்க்கிறாயா?"என்று கிண்டல் செய்தார் ஒருவர்

"இரப்பா ! யோசிக்கட்டும் என்றார் ஒருவர். நியுக்லிட் எதுவும் பேசாமல் டேப்பை எடுத்து பிரமிட்டின் நிழலை அளந்து குறித்தார். தான் நிழலையும், உயரத்தையும் வைத்துக் கணக்கிட்டவர், இத்தனை நீள நிழலுக்கு இத்தனை உயரம் இருக்கும் என்று துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார். நியுக்லிட் சொன்னது பிரமிட்டின் சரியான உயரம் என்பதை அறிந்த நண்பர்கள் அவரது புத்திக்கூர்மையைக் கண்டு பிரமித்தார்கள்.

"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு."

நீர்பூக்களின் தண்டின் நீளம் அவை தண்ணீரில் நிற்கும் அளவே இருக்கும். நீர் உயர உயர தண்டும் உயரும். மனிதருக்கும் ஊக்கத்தின் அளவே உயர்ச்சியும் இருக்கும். முடியாது என்று எதுவுமே இல்லை என்று முயன்றார் நியுக்லிட். வெற்றியும் புகழும் பெற்றார்.
எப்படி கதை என்றேன். எலோரும் ம்...ம்.. நன்றாகவே உள்ளது என்றார்கள்.
மகிழ் நிறை ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.

சரி tea டைம் என்றேன் பின்னர் நானே போட்டுக் கொடுத்தேன். உடனே எல்லோரும் wow காப்பியே இப்படி என்றால் நிச்சயம் சமையலும் நன்றாகவே இருக்கும். எனவே  டின்னர் நீங்கள் தான் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் சரி என்று நானும் தலையாட்டி விட்டு, பேசிக்கொண்டு இருந்தோம். நான்  என் அம்முவை கேட்டேன் எப்படி மாணவர்களை சமாளிக்கிறீர்கள் உலகம் போகிற போக்கில் கொஞ்சம் பயமாகவே உள்ளது. குழந்தைகளை  எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால் எப்படி என்று புரியாமல் இருப்பார்கள் அல்லவா நீங்கள் ஆசிரியர்களாக இருப்பதால் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றேன்.
உடனே காத்திருந்தது போலவே மதுவும் மைதிலியும் மாறி மாறி சொன்னார்கள் இதோ நீங்களும் கேட்டுப்பாருங்களேன்  உங்களுக்கும் இவை மிகவும் உதவும்.


1       மகிழம்பூச்சரம் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி சாகம்பரி அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி மிக அருமையாக கூறிள்ளார் வாருங்கள் சென்று பார்ப்போம் குழந்தைகளும் ஊட்டச்சத்துப் பானமும் பாகம்-  mahizhampoosaram.blogspot.com

2        4 பெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொரு விடயங்களையும் துல்லியமாக மிக மிக அருமையாக கூறியுள்ளர்கள்  சென்று பாருங்கள். fourladiesforum.com


3        மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 


மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.  சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். என்கிறார் ரோஜா பூந்தோட்டம் எஸ் பாரத்   bharathbharathi.blogspot.com  நிறைய விடயங்கள் சொல்கிறார் கேட்டுத் தான் பாருங்களேன். 
4       ‘குழந்தை வளர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு
தூக்கமின்மை பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தான் என்கிறார். பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள். நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் அதை நிவர்த்தி செய்யுங்கள் என்கிறார். Dr M K Muruganandan மேலும் என்ன சொல்கிறார் சென்று பாருங்கள். தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்

5          சிறுவர்களை வழி நடத்த  நற்கருத்துக்கள் உள்ள தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய நீதிக்கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். தவறுகளை ஆரம்பத்திலேயே முளையிலேயே கிள்ளி விடவேண்டும் என்கிறார்  பாபு நடேசன்.சென்று தான் பாருங்களேன்.   தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்  http://tamilarivukadhaikal.blogspot.ca

6       நாளைய சமுதாயம் நலமாக வாழ மனிதநேயத்தை கட்டிக் காக்க, ஆரோக்கியமாக வாழ, நற்குணங்கள் கொண்டு  , விவேகமும் வெற்றியும் பெற குழந்தைகள் எப்படி வளர வேண்டும் வளர்க்கப் பட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துரைக்கிறார் சம்பத்குமார் 
நிச்சயம் ஒவ்வொரு பேரன்ட்சும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சென்று பாருங்கள் நட்புகளா. குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1 தமிழ்பேரன்ட்ஸ் http://www.tamilparents.com எனும் தளத்தில்

7        ஆதித்தன் வலைக்குடிலில்  ஓவியம், சிறுவர் பாடல்கள், குழந்தை பாடல்கள், பொ து அறிவுச்  செய்திகள்,சிரிப்பு துணுக்குகள் என பல விடயங்களை அள்ளித் தருகிறார். இச்சிறுவனுக்குத் தான் எத்தனை ஆர்வம் எத்தனை பற்று தமிழில். அவரை நாம் ஊக்கப் படுத்த வேண்டாமா இதோ சென்று பாருங்கள்    க. ஆதித்தன்  http://kuttivall.blogspot.ca/ பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்

8      நான் சந்திக்கும் பிரச்சனை, சாதாரண ஒன்று தான். ஆனால் அதை பற்றி எழுதும் தைரியம் எனக்கு இல்லை.. ஆக அதை விவரிக்கும் விதமாக, படங்கள் 
சிலவற்றை கோர்வையாக சேர்த்து எனது கவலையை எடுத்துரைத்துள்ளேன்.. இதை படிக்கும் உங்களுக்கு எனது பிரச்சனைக்கான தீர்வு தெரிந்திருந்தால், பெரிதுள்ளம் கொண்டு அதை பின்னூட்டத்தில் தெரியபடுத்தி, என்னையும் எனது எதிர்காலத்தையும் காக்குமாறு 
வேண்டிக் கொள்கிறேன் என்கிறார் அப்படி என்ன தான் பிரச்சனை போய் தான் பார்ப்போமே அறைகூவல் விடும்      இல. விக்னேஷ்  ஐ காப்பாற்றலாமா  என்று பார்ப்போம் வாருங்கள் ..http://indianreflects.blogspot.com/

9       காற்றும் வீச மறுத்ததால் மரங்களும் மரித்ததாம் இதனால் வயல் வெளிக்கு ஒரு மணம் வாழை மரத்திற்கு ஒரு மணம் என்கிறார் ஜெ.பாண்டியன்  பாலைவனமாகும் உலகு என்கிறார்  தூக்கிவாரிப் போடுகிறது நமக்கு என்ன தான் சொல்லுகிறார். இரவைக் கூட இரவல் வாங்க வேண்டுமோ என்று ஆதங்கப் படுகிறார். /சென்று தான் பாருங்களேன் ஒரு முறை. 

10       குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை உரியநேரத்தில் போட்டால் நோய் வரு முன் தடுக்கலாம் என்பதை விளக்கும் இப் பதிவு இதோ  குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை......... http://kiruukkal.blogspot.com

23 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்புடன் சங்கமம் செய்கிறது. தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. இங்கேயும் கருத்துரை வழங்கணுமா ? அப்போ வலைச்சரத்தில் போட்டது ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
      வலைச்சரத்தில் போட்டதை தூக்கி வீசிடலாமா?.

      Delete
  3. ஒ! இங்கயுமா? கலக்குங்க செல்லம்:)))

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் எனக்கு வருத்தம்தான் இனியா.
      இனியாவது, மது-மைதிலி வீட்டுக்கு வரும்போது எனக்கும் சொல்லிவிடலை... அப்புறம் நானே சமைச்சு எடுத்துட்டு வந்து இனியா, மைதிலி, என் மருமக்கள், மது, ரூபன், பாண்டியன் மற்றும் புதுப்பொண்ணு என அனைவரையும் சாப்பிடச் சொல்லி தண்டனை தருவேன் ஜாக்கிரதை‘! (ஒருவேளை எனக்கு இனிப்பு ஆகாதுனு விட்டுட்டீங்களோ..இருக்கும! என் தங்கை மைதிலி என்னை மறக்க வேறு காரணம் இல்லயே!...)

      Delete
    2. மிக்க நன்றி! அம்மு வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
    3. நிலவன் அண்ணா நான் மறந்தாலும் உங்க தங்கை மைதிலி மறக்கவே மாட்டார். அவர் சொன்னார் அவர் இயல்பிலேயே இனிமையானவர் அவருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்று சொன்னார் அண்ணா. இவற்றை எல்லாம் கொடுத்து நிலவன் அண்ணாவை நோயாளியாக்க மாட்டேன் என்றும் சொன்னார். அடுத்த முறை வரும் போது நிச்சயமாக வருவேன் அண்ணா தங்கள் தரிசனம் பெற. இப்பொழுது மன்னித்து விடுங்கள் இத் தங்கையை. நிஜம் என்று நம்பிவிட்டீர்களா எல்லாம் வெறும் கற்பனை தான் அண்ணா ஆனால் என்றோ ஒரு நாள் நடக்கலாம்.

      Delete
  4. பயனுள்ள தளங்களின் இனிய அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. நன்றி நண்பரே...... தாங்கள் "கடல்பயணங்கள்" தளத்தை வலைச்சரம் பகுதியில் அறிமுகபடுதியத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் எனது தளத்தை தொடர்ந்து படித்து வருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.


    தங்கள் அறிமுகம் மூலம், பல புதிய நண்பர்கள் கிடைப்பது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி !


    தங்களது காவியகவி பதிவுகளை இன்று முதல் படிக்க தொடங்கி உள்ளேன், தாங்களும் மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடரவும் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும்.
      மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் ....!

      Delete
  6. சகோதரியின் அன்பினுக்கு நன்றிகள்!
    கடிவாளமிடப்பட்ட பயிற்சி முகாமில் கடந்த பன்னிரு நாட்கள் கலந்து கொண்டு இன்று தான் வீடு திரும்பினேன். அதனால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
    என்னையும் ஒரு பொருட்டாய் அறிமுகம் செய்தமைக்கு மீண்டும் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. ஆஹா..இனிய கதை இங்கும் இருக்கிறதா? கலக்குங்க இனியா...இனியா போலவே கதையும் இனிமை..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை மிக்க மகிழ்ச்சி தோழி ! வரவுக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்கிறேன் தொடருங்கள் .

      Delete
    2. ஐயோ தோழி, நீங்க என்ன அடையாளம் கண்டுகொள்ளவில்லையா? என்னுடைய ஆங்கிலத் தளத்தில் இருந்து இட்ட கருத்து இது. :)
      வலைச்சரத்தில் உங்கள் அருமையான கதைபோக்கிலான அறிமுகப் பதிவுகள் படித்துவந்தேன்.. முக்கியமாக DD குறளால் அடிப்பார் என்று படித்து நன்கு சிரித்தேன்..ஆலயத்தரிசனம் முடிந்து அறுசுவையும் உண்டாயிற்று. மைதிலி இரண்டு மணி நேரத்தில் இவ்ளோ செஞ்சுட்டாங்களா? நல்லா சாப்பிட்டு தோட்டவேலை செய்ய வச்சுட்டீங்களே :) அடுத்து எங்க வீட்டுக்கு வாங்க தோழி..நம்ம ஹோட்டல் ல வாங்கியே சாப்பிட்டுக்குவோம் ..என் சமையல் அப்படி :)
      உங்க பதிவுகள் அனைத்தையும் ரசித்தேன் தோழி..

      Delete
    3. அப்படியா தோழி! sorrymma நான் உங்கள் சகோதரியாக இருக்கக் கூடும் என்று நினைத்தேன்டா. அப்போ என்னை தொடர்ந்திருக்கிறீர்கள் ரசித்திருக்கிறீர்கள் என்பதை யறிந்து மகிழ்ந்தேன் தோழி. ஆமா இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள். அப்போ வந்தால் ஹோட்டல் சாப்பாடு தானா அதெல்லாம் எனக்கு தெரியாது உங்க கை மணம் தான் வேண்டும் எப்படி இருந்தாலும் பரவாய் இல்லை நான் சாப்பிடுவேன். அன்பு இருந்தால் சுவை தானாக வருமே தெரியாதா so dont worry அடுத்த விசிட் அங்க தான் ok வா. ஹா ஹா ...

      Delete
  8. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  9. Replies
    1. தகவலுக்கு நன்றி சகோ! வருகிறேன் பார்க்கிறேன்.

      Delete
  10. சகோதரி என்ன நடக்கிறது இங்கு ? வலைகளின் அறிமுகமா?
    புரியவில்லை. தங்களைக் காணோமே என்று வந்தால் அரையும் குறையுமாக பார்க்கிறேன்.
    முழுவதும் பார்க்க முடியவில்லை வெளியே போக வேண்டும்.
    மீண்டும்...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அடடா மன்னித்துக் கொள்ளுங்கள் தோழி தெரிந்திருக்கும். எதோ busy என்று நினைத்தேன். ஆனால் ஏன் காணவில்லை என்று எண்ணுவேன் நானும் கொஞ்சம் busy யாகவே இருந்ததால் தான். இனி தொடர்வேன். மிக்க நன்றி தோழி வருகைக்கு. எல்லாம் இங்கே பதிவிட்டமையால் நீங்கள் எப்போதும் பார்க்கலாம் அல்லவா.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.