Friday, June 20, 2014

இப்படிக் கேட்டால் எப்படி உரைப்பேன்


   
     
யார் அந்த மதுரை தமிழன் இழுத்து வாருங்கள் அவரை இல்லை இல்லை (தமிழுக்கு பங்கம் ஏதும் நேர்ந்து விட்டால் என்ன செய்வது ) மெல்ல அழைத்து வாருங்கள். யாராவது பூரிக் கட்டை இருந்தால் எடுத்து வாருங்கள்  தயவு செய்து ஏனெனில் வந்து சேர எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியாதே எனவே இன் த மீன் டைம் பூரி சுடத் தான்.  ஆமா தெரியாமத் தான் கேட்கிறேன் ஏதாவது ஒரு கனவுக் கன்னியோடு டூயட் பாடுவது போல கனவு காண்பது தானே அதை விட்டு விட்டு வலைதள உறவுகளை பந்தாடுவது போலவா கனவு காணவேண்டும். ராஜி பொண்ணை முதல்ல சொல்லணும் இவ எதுக்கு சும்மா இருக்காம அவர் கனவுல போய் கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு சரி போனது தான் போனா எப்பிடி சுகமா இருகிறீங்களா என்று கேட்டுவிட்டு வரவேண்டியது தானே. அதென்ன 10 கேள்வி வேண்டிகிடக்கு, எல்லாம் நேரம் தான் வியாழ மாற்றம் செய்யும் வேலை போல... சரி அது தான் போகட்டும் என்று பார்த்தால் என் அம்மு மைதிலி ,தோழி அம்பாள் ,சகோதரர் சொக்கன் எல்லாரும் பிளான் பண்ணி என்னையும் இழுத்து இல்ல விட்டுட்டாங்க. என்னையும் உங்க விளையாட்டில சேர்த்து கொண்டமைக்கு ரொம்ப நன்றிங்க கண்ணுகளா. சரி அவங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று மண்டையை போட்டு குடைஞ்சு எடுத்து பதில் போட்டிருகேன்ங்க பார்த்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க நல்லவர்களே வல்லவர்களே. 
பத்து பேருக்கு நான் எங்கே போவேன் எல்லோரும் ஏற்கனவே எல்லோரையும் பதிவில் பதிந்து விட்டார்கள். முடிந்த வரை தேடிப்பார்கிறேன். முடியாவிட்டால் விட்டுவிடுகிறேன்.



1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
 நான் பேராசைப் படுவதில்லை. காரோட கொண்டிஷனை வைத்து தானே எவ்வளவு தூரம் பிரயாணம் செய்யலாம் என்று தீர்மானிப்போம். என்னோட என்ஜின் அவ்வளவு தூரம் பயணம் பண்ணாது. இருந்தாலும் முதுமை பொல்லாதது எனவே அது எனக்கு வேண்டாம்.


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
எப்படி எல்லாம் நேரத்தை மிச்சப் படுத்துவது, செய்யும் வேலைகள் அனைத்தும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும், சீக்கிரமாகவும், இலகுவாகவும்   எப்படி செய்வது என்று பரீட்சித்து கற்றுகொள்ள விரும்புவேன். கவிதையை இன்னும் இன்னும் நன்றாக அழகாக எப்படி எழதுவது. என் ப்ளாக் ஐ மேலும் எப்படி அழகாக்குவது போன்றவையே.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
ஜூன் 13 அன்று கட்டுரை போட்டிக்காக ரூபன் அவர்கள் அனுப்பிய பதக்கம் சான்றிதழ் அனைத்தும் அன்று தான் கிடைத்தன. அன்று தான் என் மகனின் பிறந்த நாளும். என் மகள் மார் இருவரும் போட்டோ பிரேம் வாங்கி வந்து அதில் சான்றிதழை இட்டு பதக்கம் வைத்து லிவிங் ரூமில் வைத்து விட்டு என்னை அழைத்து வந்து காட்டினார்கள். எனக்கு ஒரே சந்தோஷம் தான் அத்துடன் flower basket ம் தந்தார்கள். நான் அண்ணாவுக்கு என்ன வாங்கினீர்கள் என்றேன். flower basket ஐ திருப்பி காட்டிவிட்டு களுக் என்று சிரித்தார்கள். பார்த்தால் அதில் இருந்த கார்ட் ல் ஒரு பக்கம் என்னை விஷ் பண்ணியும் மறு பக்கத்தில் என் மகனை விஷ் பண்ணியும் இருந்தார்கள். நான் அடி பாவிங்களா சோ சீட் இப்படியா செய்வீர்கள் என்று அடிக்கப் போனேன்.அப்பொழுது அனைவரும் சிரித்தோம். அந்த சண்டே பாதெர்ஸ் டே அப்போ நான் சொன்னேன் விட்டா நீங்கள் இதிலேயே பாதெர்ஸ் டே க்கும் விஷ் பண்ணிக் குடுப்பீங்க போல என்று கூற மீண்டும்  அனைவரும்  சிரித்தோம்.
 

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
குளிர் காலத்தில் அப்படி வீட்டில் இருக்க முடியாது. வெப்ப காலத்திலும் இருக்க முடியாது தேநீர் கூட அருந்த முடியாது.எனவே அனைவரும் ஷோபிங் மோலுக்கு போவோம் இல்லையேல் தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் புக வேண்டும். சமாளிக்க முடிந்தால் வீட்டிலேயே இருந்து  நல்ல சந்தர்ப்பம் என்று கவிதை எழுதுவேன். அல்லது  ஏதாவது வாசிப்பேன் மிகுதி நேரத்தில் தூங்குவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
டிவோஸ் என்ற நிலைமை வராது கடைசி வரை ஒற்றுமையாக,சந்தோஷமாக ஈகோ இல்லாமல் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.பிள்ளைகளுக்கு அநாதரவற்ற நிலையினை ஒரு போதும் தேடக் கூடாது  என்று சொல்வேன்.

 6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 நோய் அற்ற வாழ்வு அவசியம் இல்லையா அதனால் பொலூசன் இல்லாமல் வாழ வழியும்,  கெமிக்கல் இல்லாத உணவு உற்பத்தியும் செய்ய வேண்டும் என்று விரும்புவேன். பொல்லாத நோய்களையும் அங்கவீனமும் இது குறைக்கும், என்று நம்புகிறேன். நல்ல ஆரோக்கியமான  சமுதாயம் இதனால் உருவாக வேண்டும் என்பது என் எண்ணம்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கணவரிடமும் பிள்ளைகளிடமும் மட்டும் தான் இல்லையேல் கடவுளின் கையில் கொடுத்துவிட்டு அவரை நச்சரிப்பேன் அவரும் வேறு வழியில்லாமல் அருள் புரிவார்.  

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 
நான் ஒரு பாவமும் அறியேனே ஏன் இப்படி நடக்கிறது என்று கடவுளிடம் முறையிடுவேன் மூக்கையும் சிந்துவேன். அவர் பார்த்துக்கொள்வார்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
மறு பிறப்பில் அவர் தான் மீண்டும் தங்களுக்கு மனைவியாக வருவார் எனவே கலங்கவேண்டாம் என்று சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
முதலில் வீடு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க ரொம்ப பிடிக்கும் அதனால் உடனடியாக களத்தில் இறங்கிவிடுவேன் சுத்தம் செய்ய. அதன் பின்பு வலைத்தளம் வந்து வரிசையாக பதிவுகளை படித்து கருத்துக்களை இடுவேன். கவிதை எழுத முயற்சி செய்வேன்.


தயவு செய்து என்னை மாட்டிவிடும் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு பெரிய மனது  எனவே மன்னித்து விடுவீர்கள் என நம்புபகிறேன். எதோ என்னால முடிந்தது. தயவு செய்து 10 வினாக்களுக்கும் விடை பகர்ந்து விடுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நன்றி! நன்றி ! நன்றி !


அன்பின் சீராளன்  என்னுயிரே
http://soumiyathesam.blogspot.com/2014/06/blog-post.html

அன்பு சகோதரர்
 ஊமைக்கனவுகள்
http://oomaikkanavugal.blogspot.ca/  

அன்பு சகோதரர்
சிவகுமாரன் கவிதைகள்
http://sivakumarankavithaikal.blogspot.ca/2014/05/40.html

அன்பு சகோதரர் ஜீவலிங்கம் யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
http://paapunaya.blogspot.ca/2014/06/blog-post_20.html 

அன்புத் தோழி ராஜராஜேஸ்வரி
மணிராஜ் -
http://jaghamani.blogspot.com/2014/06/blog-post_16.html
Laughing graphics

44 comments:

  1. பதில்கள் அனைத்தும் அருமையார உள்ளது சகோதரி. நானும் இதுலமாட்டி ஏதோ என்னோட அறிவுக்கு எட்டியதை எழுதி SORRY கிறுக்கியிருக்கேன்.
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! மிக்க மகிழ்ச்சி !
      முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. அன்பின் சகோதரி..
    தங்களின் விடைகள் அருமை..
    மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் சகோ.

      Delete
  3. வணக்கம் சகோதரி!

    மிகவே ரசித்தேன் உங்கள் விடைப் பகிர்வுகளை.
    ஆழ்மனதில் ஊன்றி, ஊறியிருக்கும் உணர்வுகள் பதில்களாக
    அருமையாக இருக்கின்றது. அருமை!

    பகிர்தலுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் தோழி!

    ReplyDelete
    Replies
    1. நலம் தானே தோழி ! மிக்க மகிழ்ச்சிம்மா தங்கள் வருகையில்.
      உங்கள் வருகையினால் வலை தளம் மறு படியும் களை கட்டி விட்டது தோழி. வாழ்த்துக்கள் ....!

      Delete
  4. வணக்கம்
    அம்மா.

    கேள்பதில்லில் மிக அருமையாக விடை அளித்துள்ளீர்கள் பதக்கம் தங்களின் அறிவுக்கு கிடைத்த மகுடம் அம்மா.. எனக்கும் மிக மகிழ்ச்சிதான்.. பாகிர்வுக்கு நன்றி. என்னை தேன் மதுரை தமிழ் அவர்கள் மாட்டிவிட்டர்கள் என்னசெய்வது எழுதித்தான் ஆகவேண்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் தேன் மதுரை தமிழ் அல்ல தேன் மதுர தமிழ்.. அவங்க பேரை தப்பா சொன்னிங்க உங்களை வந்து உதைக்க போறாங்க

      Delete
    2. மிக்க நன்றி ரூபன்! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  5. அது சரி எல்லாக் கேள்விக்கும் ஒரு மாதிரி பதிலைச் சொல்லித் தப்பித்து விட்டோமே என்ற மகிழ்வுடன் இங்கு தேர்ந்தெடுத்த ஆட்களின் கதி என்னவாகும் என்று நினைத்துக் கை கொட்டிச் சிரிக்குதே இந்தச் சின்னப் பாப்பா எங்கள் இனியா இத எப்ப நிறுத்தப் போகுது :))இருந்தாலும் இவ்வளவு நக்கல் சிரிப்புக் கூடாது பாப்பா :)))))))

    ReplyDelete
    Replies
    1. அப்பிடி எல்லாம் எண்ணவேயில்லை அப்படா பதில் எல்லாம் கொடுத்துவிட்டேன் என்கிற சந்தோஷம் தான். நானே எழுதிட்டேன். அவர்கள் எல்லாம் வித்துவான்கள் அம்மா பக்காவாக எழுதிவிடுவார்கள். அப்புறம் ஏன் நான் சிரிக்கப் போகிறேன். அம்மா தாயே காப்பாற்றும்மா எல்லோரும் புரட்டி இல்லை எடுக்கப் போகிறாங்க.மிக்க நன்றி தோழி!

      Delete
  6. சிறப்பான விரிவான பதில்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!

      Delete
  7. தங்களின் பதில்களை
    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!

      Delete
  8. ஆஹா! நீங்களும் இந்த வலையிலா?!! ஆனால் இது ஒரு அன்பு வலைதான் இல்லையா சகோதரி!!? எத்தனை நட்புகள்....நாங்களும் வலையில்தான் ஆனால் மிக்க மகிழ்வுடன்....

    தங்கள் பதில்கள் எல்லாமே மிக அருமை சகோதரி! மிக அழகாக தந்துள்ளீர்கள்! ஒவ்வொருவரின் பதில்களும் மிக வித்தியாசமாக சுவாரஸ்யமாக உள்ளன....மதுரைத் தமிழனுக்கு நன்றி! பூரிக்கட்டை எல்லாம் வேண்

    ReplyDelete
  9. ஆஹா சகோதரி நீங்களும் இந்த வலையிலா?!! ஆனால் இது அன்பு வலை! எத்தனை நட்புகள்! இல்லையா சகோதரி!??

    தங்கள் பதில்களும் மிக அருமை...அழகாகத் தந்துள்ளீர்கள்! ஒவ்வொருவரின் பதில்களூம் மிக வித்தியாசமாக சுவாரஸ்யமாக உள்ளன.....

    இத்தனை நட்பு வட்டங்களை கோர்த்தற்கு மதுரைத் தமிழனுக்கு நன்றி! அவருக்கு பூரிக்கட்டை எல்லாம் வேண்டாம் சகோதரி! ஒரு நல்ல உருப்படியான வேலை செய்திருக்கிறாரே...ஹாஹாஹ!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சரி சகோதரா இவ்வளவு தூரம் நீங்கள் பரிந்துரைப்பதால் பாவம் விட்டுவிடுவோம். ஆமாம் அத்துடன் உருப்படியான வேலை செய்திருக்கிறாரே. அப்போ மதுரை தமிழன் வாழ்க என்று வாழ்த்திவிடுவோம். நன்றி வாழ்த்துக்கள் சகோ!

      Delete
  10. உங்கள் ஊரிலிருந்து மதுரைத் தமிழன் இருக்கும் ஊர் கொஞ்சம் பக்கம், தானே, அதனால், எங்கள் எல்லோரின் சார்பிலும் நீங்கள் ஒரு மெகா சைஸ் பூரிக்கட்டையை அவருடைய மனைவிக்கு பார்சல் அனுப்பிவையுங்கள்.

    கேள்விகள் அனைத்துக்கும் அருமையான எதார்த்தமான பதில்கள் சகோதரி.

    உங்கள் மகனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தாமதமாக தெரியப்படுத்துகிறேன் (Belated B'day wishes).

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை தங்கத்தில் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் மற்றைவைகள் எல்லாம் அனுப்பியவரின் வாழ்க்கை துணைக்கு திருப்பி அனுப்பபடும்

      Delete
    2. மோதிரக்கையால் கொட்டுப்பட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன தங்கப்பூரிக்கட்டையால் அடி வாங்க வேண்டும் என்று ஆசை???

      Delete
    3. பூரிகட்டை அனுப்பவேண்டாம் பாவம் நல்லது தானே செய்திருக்கிறார் எனவே விட்டுவிடுவோம் சகோ! பக்கத்தில் தான் இருக்கிறார் என்று பயம் வேற காட்டிவிட்டீர்கள் அப்போ இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சமாதானமாக போய் விடலாம் சகோ. நன்றி வாழ்த்துக்கள் ....!

      Delete
  11. செல்லம் பதிவும், அதுக்கு செலக்ட் பண்ணின படங்களும், வண்ணமும் எல்லாமே என் செல்லம் போலவே ப்ரிட்டோ ப்ரைட்:))
    செம...செம...செம...
    இப்டி ஒரு slang உங்ககிட்ட இருக்குனு தெரிஞ்சுக்க இந்த பதிவு உதவியிருக்கு :)) அழகு:))
    அதுவுக்கு தமிழ் சகாவுக்கு ஒரு தாங்கஸ்:)
    ஆன அந்த பாப்பாவுக்கு ரொம்ப லொள்ளு தான். மாட்டிகிட்ட பார்டீஸ்ஸ பார்த்து கைத்தட்டி சிரிக்குதே:))
    http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் அம்மு. அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது என்று கேக்கமாட்டேங்குதே. ஆமா தமிழ் சகாவுக்கு நிச்சயமாக நன்றி சொல்லத் தான் வேண்டும் இல்லையாம்மா. பார்க்கலாம் இன்னும் சிலர் பதிவு போடவேண்டி இருக்கிறது. நன்றிம்மா செல்லம் வாழ்த்துக்கள் !

      Delete
  12. ///யார் அந்த மதுரை தமிழன் இழுத்து வாருங்கள்///
    இழுக்க நான் என்ன திருவாரு தேரா... அவ்வளவு வெயிட்டா ஒன்றும் நான் இல்லைங்க பூ..ன்னு ஊதிவிட்டா பறந்துவிடுவேன். சரி கூப்பிட்டீங்க வந்துட்டேன்.... பரிசு ஏதும் தரப்போறீங்களா?

    ReplyDelete
    Replies
    1. பூ அவ்வளவு தானா, அப்பாடா தப்பிச்சேண்டா சாமி. வீரமா எழதி விட்டுரொம்ப பயந்து நடுங்கிட்டே இருந்தேன். வெயிட் ஆன பாட்டியோ தெரியவில்ல பக்கத்தில வேற இருக்கிறீர்கள் என்று (சகோதரர் சொக்கன் சொன்னாரு). நான் எல்லாம் புலித்தோல் போர்த்திய பசு தான். ஆமா இனிதான் பயமில்லையே பரிசு நிச்சயம் உண்டு.

      Delete
  13. ///கவிதையை இன்னும் இன்னும் நன்றாக அழகாக எப்படி எழதுவது. ///

    என்ன நீங்க கவிஞரா வழி தெரியாம வந்து மாட்டிகிட்டேன் போல இருக்கே..... எங்கே அந்த தோழி மைதிலி பிடித்து வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க பயப்படும் அளவுக்கெல்லாம் மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன். கொஞ்சம் ரிஸ்க் என்றாலும் படித்து தான் பாருங்களேன். பாவம் என் மைதிலி அவர் ஒரு பாவமும் அறியமாட்டார் அவரை விட்டு விடுங்கள்.

      Delete
  14. ஆஹா..ஒவ்வொன்றும் மனம் திறந்த அருமையான பதில்கள் ..மூன்றாம் பதிலைப் படித்து நான் சிரித்தேன்...காட்சி கண் முன் விரிந்தது.

    சரி, எனக்கு ஒரு சந்தேகம்..இங்கே ஜூன் 20 பதிவிட்டுவிட்டு, என் தளத்தில் 21ம் தேதி பதில்களோடு வருகிறேன், என்று ஏன் சொன்னீர்கள்? (நான் எவ்ளோ பெரிய டிடெக்டிவ் பாத்திங்களா? :) )

    வாழ்த்துகள் தோழி..உங்கள் பேச்சு(எழுத்து வழக்கும் இனிமையாய் இருக்கிறது..)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு என் மனதிற்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்தன. மனம் திறந்த கருத்துக்கள் தோழி என்னை நெகிழச் செய்தன.மிக்க நன்றி !
      ஆமால்ல பெரிய கில்லாடி தான் போங்க. அது ஒரு பெரிய கதைம்மா அப்புறமா தெரிவிக்கிறேன் சரியா..
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  15. ரசிக்கத்தக்க பதில்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

      Delete
  16. பத்துக்கும் முத்துப்போல் பவ்வியமாய் ஈன்றுவிட்ட
    வித்தின் கருவாய் விடை !

    எல்லாமே அருமை சகோ


    மின்னும் இனியா மிடுக்காய் பதிலிறுத்து
    என்னையும் சேர்த்தாளே இவ்விடத்தில் - சின்னதாய்
    என்றாலும் சிந்தித்து போடுகின்றேன் ! எல்லாமே
    என்னுயிர் பூக்கும் எழுத்து !

    கொளுத்தி போட்டாச்சா ரெம்ப நன்றி ஹி ஹி ஹி நான் எப்பவோ எழுதிட்டேன் பதிவேற்றல்ல ..முதல்ல ஒருவர் (.......????? )பதிவேற்றட்டும் பிறகு நான் பதிவிடுகிறேன் எப்புடி !

    அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள் இன் கவிஞரே ! ரொம்ப கில்லாடி தான் இப்படி அசதிட்டீங்களே. நானும் இக் கருத்தை பார்த்து விட்டு தம்பி ரொம்ப பயந்தாங்கொள்ளி போல நழுவ பார்க்கிறீர்களோ என்றல்லவா நினைத்தேன். அடேங்கப்பா அசந்திட்டேன். எனக்கும் ஒரு பட்டம் தர ஆசை தான் என்ன செய்வது. குட்டு பட்டாலும் மோதிரக் கையால் அல்லவா குட்டுப் பட வேண்டும். அப்படி இருக்க நான் எவ்வாறு. எனக்குத் தான் அந்த தகுதி இல்லையே. ஆனால் நான் மனமார வாழ்த்துவேனே. இஷ்டம் போல் பெயர்கள் பல பெற்று கஷ்டம் இன்றி புகழ் பல பெற வாழ்த்துகிறேன் ! வாழ்க கவிஞரே வாழ்க! இன் கவிஞர் என்று அழைப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியே. நன்றி சீராளா வருகைக்கு.

      Delete
    2. உன்வாழ்த்தும் உள்ளத்துப் பூரிப்பும் ! என்றனுக்கு
      அன்னைக்கு நிகரான அன்பு !

      இட்டாரைப் போல இனியாவின் அன்பிருக்க
      தொட்டிடுவேன் அந்த தொலைவு !

      வணக்கம் சகோ தங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி
      வாழ்க வளமுடன் !

      Delete
  17. ஆஹா அருமையான பதில்கள்....மிகவும் ரசித்தேன்மா...

    ReplyDelete
  18. பதில்கள் எல்லாம் எதார்த்தமாக இருந்தன. கடைசியில் அதுயார் கைகொட்டிச் சிரிப்பது... நீங்கள்தானே? (அடடா..மற்றவர்களை மாட்டிவிடுவதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி - நானும் அந்த மகிழ்ச்சியை அனுபவிததிருக்கிறேன் அலலவா????)

    ReplyDelete
  19. அழகான பதில்கள் இனியா.

    ReplyDelete
  20. மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் பதில்களைத் தந்திருக்கீங்க இனியா. அனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  21. வரிசையாக பல கேள்வி பதில்களைப் படித்து வருகிறேன் ஒவ்வொன்றும் அவரவர் சிறப்பிற்கேற்ப்ப மிளிர்கிறது.... ததுவார்த்தமாக இல்லாமல் இயல்பு வாழ்க்கையோடு ஒத்திசைந்து இருக்கிறது உங்கள் பதில்கள்... வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  22. சுவையான நடையில்
    இணையற்ற பதிலடிகள்
    சிந்திக்க வைக்கின்றன
    எனது பதிலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
    http://eluththugal.blogspot.com/2014/06/blog-post_8953.html

    ReplyDelete
  23. அருமையான பதில்கள் இனியா அவர்களே....

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அனைத்து பதில்களும் சூப்பருங்கோ :)
    பிள்ளைகளுக்கு அறிவுரை !!! ப்ராக்டிகலா யோசிச்சு சொல்லியிருக்கீங்க :)

    ReplyDelete
  25. மிக அருமையாக விடை அளித்துள்ளீர்கள்
    இனிய வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.