Wednesday, June 11, 2014

விதையில் விருட்சம் வாழ்வுக்கு வெளிச்சம்


   
  
 


நட்டால் தானே
நெடுமரம் வளரும்
மழையும் வளமும்
தினப்படி நல்கும்




பட்டு போனால்
பசுமைக ளின்றி
புளுங்கிடுவீரே
புரிந்திடுவீரோ

புதைத்திடும்
வித்துக்கள்தான்
முளைத்திடும்
ஒத்துக்கொள்

விதையில் விருட்சம்
வாழ்வுக்கு வெளிச்சம்
விளைந்து பொலிந்தால்
தவிர்க்கும் அச்சம்

வீழா தென்றும்
விழுதுகள் தாங்கும்
விரும்பி வேர்கள்
தாகம் தீர்க்கும்


வசப்படு வோர்க்கு
வதிவிடம் நல்கும்
பசித்திட புசியென
விருந்தே வைக்கும்

நிழலும் நல்கி
நிம்மதி காக்கும்
களையினை போக்கும்
கவிதையில் பார்க்கும்



உறங்கிட மெல்ல
சாமரை வீசும்
உயரிய குணங்கள்
உள்ளவர் தன்வசம் 

இளகிய மனது
கொண்டவை மரங்கள்
பழகிட வேண்டும்
பார்த்து நாங்கள்

21 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    முடிச்சிர்கள்
    உறங்கிட மெல்ல
    சாமரை வீசும்
    உயரிய குணங்கள்
    உள்ளவர் தன்வசம்
    இளகிய மனது
    கொண்டவர் நீங்கள்
    பழகிட வேண்டும்
    பார்த்து நாங்கள்

    என்ன வரிகள் கவிதை புனைந்து சென்ற விதம் சிறப்பாக உள்ளது இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா

    உறங்கிட மெல்ல
    சாமரை வீசும்
    உயரிய குணங்கள்
    உள்ளவர் தன்வசம்

    இளகிய மனது
    கொண்டவர் நீங்கள்
    பழகிட வேண்டும்
    பார்த்து நாங்கள்

    கவிதை புனைந்து சென்ற விதம் சிறப்பாக உள்ளது இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள்வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் ரூபன்! உடன் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்வும் நிம்மதியும் கொண்டேன். எப்படியோ தெரியவில்லை என்று பயந்து கொண்டு தான் வெளிவிட்டேன். மிக்க நன்றி ரூபன் !
    வாழ்க நலமுடன் ....!

    ReplyDelete
  4. இனிய கவிதை. நெஞ்சை குளிர்விக்கின்றது. மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  5. ஆஹா! மிக அ;ருமையான கருத்துச் செறிந்த கவிதை சகோதரி! அருமையான படங்கள் கவிதைக்கு ஏற்றபடி! மனதில் பதிந்த கவிதை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் நலம் தானே ! வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!

      Delete
  6. தலைப்பே சொல்லிவிட்டதே கவிதையின் பொருளை. நல்ல சிந்தனையோடு முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோ வருகையும் கருத்தும் கண்டு
      வாழ்க வளமுடன்......!.

      Delete

  7. வணக்கம்!

    உள்ளுள் இருக்கும் ஒளியை உணர்ந்திட்டால்
    எள்ளும் உணா்வுகள் ஏது?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே! மிக்க மகிழ்ச்சி வருகையும் கருத்தும் கண்டு.
      மிக்க நன்றி வாழ்க வளமுடன்....!

      Delete
  8. அருமையான கவிதை சகோதரி
    பசிதிட புசியென விருந்தே வைக்கும்
    அருமையான வரி சகோதரி
    அரிமளம் என்ற ஊர்க்காரர் ஒருவர் சொன்னார்
    எங்கள் ஊரில் ஒருகாலத்தில் இருந்த காடு நாங்கள் பசித்து உள்ளே போனோம் என்றால் பசியாறி வெளியே வரலாம்
    இப்போது அந்தக் காடு யுக்ளிப்ட்டஸ் காடாக மாறிவிட்டது..
    மரங்களின் அருமை இன்னும் புரியவில்லை நமக்கு
    http://www.malartharu.org/2013/10/blog-post_7691.html

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! மிக்க மகிழ்ச்சி சகோ கருத்து கண்டதும்இருந்தாலும் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்ட தவற வேண்டாம். மேலும் மெருகேற வழி வகுக்கும் என நம்புகிறேன்.
      பசுமை பேணி காப்போம் ஒன்று சேர்ந்து மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. ஹே! மரத்தை பற்றிய இந்த விழிப்புணர்ச்சிக்கவிதை அருமை டா!
    அதிலும் படங்கள் அதுவொரு கவிதையாய் விரிகிறது. சந்த நயம் கொஞ்சி விளையாடுகிறது!! மரங்களிடம் பழகத்தெரியாத மனிதர்கள் படித்து உணரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா ரொம்ப சந்தோஷம் அம்மு, குழப்பத்தோடு தான் வெளியிட்டேன். இப்பொழுது தான் ஆறுதலாக இருக்கிறது. தவறுகளையும் கண்டு திருத்தவும் சரியா. இனியாவின் நெஞ்சு பிஞ்சு விடும் என்று சொல்லாமல் விட வேண்டாம். உண்மையான நட்புக்கு அது அழகல்ல தோழி சரியா. ஆசிரியர் தானே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும் ok வா not வித் குட்டீஸ்.ஹா ஹா
      நன்றி செல்லம் ......!

      Delete
  10. நல்ல சிந்தனை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும் ...!
      வாழ்க வளமுடன் .....!

      Delete
  11. மொட்டைத் தலையில
    கொட்டும் வெயில்
    சுட்டால் தானே தெரிகிறது
    நட்ட மரநிழல் தேவையென
    பட்ட பின்தானும்
    நட்டு வைப்போம் நல்மரங்களை...

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க நலமுடன்....!

      Delete
  12. சகோதரி,
    வணக்கம். படிக்கும் போதே,
    “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதான் நல்ல மரம்“
    என்ற அவ்வைப் பாட்டின்
    மூன்றாவது வரியை,
    ”கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் - சுவைநிறையிப்
    பாட்டில் மரத்தருமை யூட்டும் கருத்தறிய
    மாட்டாதான் நல்ல மரம்”
    என மாற்றத் தோன்றிற்று.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா! மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில். தங்கள் கருத்து கண்டு மிகவும் சந்தோஷப் பட்டேன். அதில் தங்கள் பெருந்தன்மை வெளிப்படுகிறது அல்லவா? மிக்க நன்றி சகோதரா! தொடர வேண்டுகிறேன்.
      .மிக்க நன்றி! வாழ்க வளமுடன் .....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.