தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை-நாம்
கெஞ்சிட கெஞ்சிட செய்யும் தொல்லை
கொஞ்சி கொஞ்சி மகிழ்வார் தந்தை
பத்துமாதம் சுமப்பாள் அன்னை
பகல் இரவாய் உழைப்பார் தந்தை
மனதுபூரா இழைப்பார் எம்மை
களைப்பை மறந்து சிரிப்பார் தம்மில்
ஊன் உறக்கம் இன்றி காப்பாள் அன்னை
உடலை உயிரை வருத்தி பார்ப்பார் தந்தை
கேட்பது எல்லாம் கிடைக்கும்- எம்
கேள்விக்கு பதிலும் கிடைக்கும்
ஊட்டி ஊட்டி வளர்க்கும் தந்தை
உள்ளத்தில் கனவு வளரும்
பாட்டி சொல்லும் நீதி கதைகளை
மீட்டிப் பார்த்து சொல்வார்
பண்புடனே தான் நடப்பார்
உண்மைகளை நமக் குரைப்பார்
விசனம் என்றால் போதும்
வேடிக்கை காட்டிட விளைவார்
கேள்விக்குறி போல் தோன்றி
உப்பு மூட்டை சுமப்பார்
ஒப்புக்கே அவர் சிரிப்பார் -எம்
தப்பை மறைக்க தவிப்பார்
ஆனை போலே மாறி எம்மை
அள்ளிச் செல்வார் பாரீர்
கோளை போல எம்மை கண்டு
கெஞ்சி கெஞ்சி பார்ப்பார்
மேம்பட எம்மை வளர்ப்பார்
நல்வழியினில் நடத்திச் செல்வார்
தேம்பி அழுதால் நாமும்- அவர்
திகைத்தே நிற்பார் காணும்
தவறுகள் செய்தால் போதும்-அவர்
தடி கொண்டு அடிப்பார் மேலும்-தலை
தலையென அடிப்பார் தானும் -தாயிற்
திரும்பும் கோபம் தணிந்திடும் உடனே பாரும்
கலங்கிட நேரா தென்றும்
காத்திடவேண்டும் இறைவா
நோய்கள் தாக்காதென்றும்
நோக்கிடவேண்டும் வா வா
நிம்மதி என்றும் நிலைத்திடவும்
மகிழ்சிக் கடலில் நீந்திடவும்
நீடுழி வாழ்ந்திடவும்
வாழ்த்திட வேண்டும் வாவா
போற்றிடுவோம் உமை பாபா
தந்தையைப் போற்றும் இனிய நற் கவிதையைக் கண்டு
ReplyDeleteசிந்தையும் சிலிர்த்தது தேன் என்று ! வாழ்த்துக்கள் தோழி .
மிக்க நன்றி தோழி ! வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Deleteவாழ்க நலமுடன் ....!
தந்தையின் சிறப்பை போற்றும் உன்னத கவிதை! அருமை! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
அடடா அதற்குள் உங்களுக்கு தந்தையர் தினம் வந்துவிட்டதா சகோ!! (ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை சரியா?) . இங்கு செப்டம்பர் மாதம் முதல் ஞாயிறு தான்.
ReplyDeleteஅனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அருமையான தந்தையர் தினப்பரிசு.
வாழ்த்துக்கள் சகோ.
மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteசிறப்பு...
ReplyDeleteஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteதாயுமானவன் தான் தந்தை என்பதை
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள்.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் தோழி.
முதல் வருகை மிக்க மகிழ்ச்சி தொடர வேண்டுகிறேன்.
Deleteமிக்க நன்றி ! வருகைக்கும் வாழ்த்துக்கும்.
சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteபெரும்பாலும் தாய்மையைப் போற்றும் நாம் தந்தையைப் போற்ற மறந்து விடுகிறோம்,. நீங்கள் அப்படியில்லாமல் தந்தைக்கு ஒரு கவிதை படைத்து அவரின் மேன்மையை உணர வைத்திருக்கிறீர்கள். வரிகள் அனைத்தும் இளமைக் காலத்திற்கு அழைத்து சென்றது. தொடருங்கள் சகோதரி.இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் சகோதரி.
உண்மைதானே பாண்டியா பல தடவை நான் யோசித்திருக்கிறேன். ஆண்கள் அனேகமாக ஒரு சில வருடங்கள் உழைத்தால் அது அவர்களுக்கு எவ்வளவு காலத்துக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.
Deleteமிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு செலவாகும் ஒரு சில ஆடைகள் ஒரு சங்கிலி 2 மோதிரம் ஒரு பைக் இதை விட வேறு என்ன, நமக்காக தானே எம்மை பாதுகாப்பதும் நாம் பகட்டாக வாழ காலமெல்லாம் உழைத்தும் இளைத்து போகிறார்கள் இல்லையா? அது தான் அவர்களுக்கு தேவையானதே கவுரவப்படுத்துவது அவசியமே. பாண்டியரே மிக்கநன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவணக்கம்!
தந்தையைப் போற்றியே தந்த கவிதையை
வந்தனை செய்யும் மனம்!
மிக்க நன்றி ! கவிஞரே வருகைக்கும் கருத்துக்கும் .
Deleteதந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும் .
Deleteமுந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்திப்பகலாக ஆதரித்துப் பெறுபவள் அன்னை யென்றால், அவையத்து முந்தி யிருத்தப் பாடுபடுபவன் தந்தை தானே!
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள்! டஇன்னும் நான் சொல்ல வந்ததை சகோதரர் பாண்டியன் சொல்லி விட்டார்.
நன்றி சகோதரி.
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரரே.
Deleteவாழ்க நலமுடன் ....!
தந்தைக்காய் வாழ்த்தெழுதி தந்தவுன் தாய்மனது
ReplyDeleteசிந்தை கனிந்த செயல் !
அருமை வாழ்த்துக்கள் சகோ
வாழ்க வளமுடன்
சிந்தை குளிர தந்த வாழ்த்தும், கருத்தும் மகிழ்வித்தது. மேலும் ஊக்கம் தந்தன. மிக்க நன்றி சீராளா வருகைக்கு!
Deleteவாழ்க வளமுடன் ...!
வணக்கம் தீழி இனியா!
ReplyDeleteஎந்தையும் தாயும் எமது இருகண்கள்
சிந்தையில் ஏற்றச் சிறப்பு!
தந்தையின் சிறப்பை எத்தனை அழகாகக்
கவிதையில் கூறியுள்ளீர்கள்!..
மிக மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!
வாருங்கள் தோழி தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு பெரிய பலமே. வான் மழை இல்லாத பயிர் போல் வாடித்தான் கிடந்தேன். வருகையில் பேரம் பொலிவு கண்டேன். மிக்க நன்றி தோழி !
Deleteவாழ்க நலமுடனும் மகிழ்வுடனும் நீடூழி...!
வணக்கம் !
ReplyDeleteஅன்பின் தோழி இனியா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .
நல்ல முயற்சி...
ReplyDeleteவரிகள் அருமை...
வாழ்த்துக்கள்
http://www.malartharu.org/
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
தந்தையின் பாசத்தை சொல்லும் கவிதை மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
மிக அருமையான கவிதை தந்தைக்கு! தங்கள் தமிழுக்குத் தலை வணங்குகின்றோம்! சகோதரிகள் எல்லோரும் அழகு தமிழ் கவிதைகளில் கலக்குகின்றீர்கள்!
ReplyDeleteதாமதமான தந்தையர் தின வாழ்த்துக்கள்! சகொதரி!
கணினி பிரச்சினையால் வலைத்தளம் வர இயலவில்லை! மன்னிக்கவும்!
தந்தைக்கான கவிதை படைப்பு வெகு சிறப்பு...
ReplyDeleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி !
Deleteவாழ்க வளமுடன்.....! தொடர்கிறேன்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/06/kadal-kanthum-valarum-thamizh.html
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி !
Deleteஅன்பின் இனியா - பொதுவாகத் தாயினைப் போற்றும் சமுதாயத்தில் தந்தையி போற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதனை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது - தங்கள் பதிவினிற்கு வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி ஐயா ! தங்கள் பாராட்டுக்களை பெற்றது என் பாக்கியம். என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று பாடத் தோன்றுகிறது. மிக்க நன்றி ஐயா!
Deleteஎன்ன தான் இருந்தாலும் தாயுமனவர்கள் பெரும்பாலும் 60 வீதமானவர்கள் ஆவது இருக்கத் தான் செய்வார்கள் ஐயா!
நன்றி !வாழ்க வளமுடன் ....!
முதல் வருகை மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி !
ReplyDeleteவாழ்க வளமுடன்.....! தொடர்கிறேன்.
முன்னர் வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்துள்ளேன். இன்று வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in