நட்டால் தானே
நெடுமரம் வளரும்
மழையும் வளமும்
தினப்படி நல்கும்
பட்டு போனால்
பசுமைக ளின்றி
புளுங்கிடுவீரே
புரிந்திடுவீரோ
புதைத்திடும்
வித்துக்கள்தான்
முளைத்திடும்
ஒத்துக்கொள்
விதையில் விருட்சம்
வாழ்வுக்கு வெளிச்சம்
விளைந்து பொலிந்தால்
தவிர்க்கும் அச்சம்
வீழா தென்றும்
விழுதுகள் தாங்கும்
விரும்பி வேர்கள்
தாகம் தீர்க்கும்
வசப்படு வோர்க்கு
வதிவிடம் நல்கும்
பசித்திட புசியென
விருந்தே வைக்கும்
நிழலும் நல்கி
நிம்மதி காக்கும்
களையினை போக்கும்
கவிதையில் பார்க்கும்
உறங்கிட மெல்ல
சாமரை வீசும்
உயரிய குணங்கள்
உள்ளவர் தன்வசம்
இளகிய மனது
கொண்டவை மரங்கள்
பழகிட வேண்டும்
பார்த்து நாங்கள்
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
முடிச்சிர்கள்
உறங்கிட மெல்ல
சாமரை வீசும்
உயரிய குணங்கள்
உள்ளவர் தன்வசம்
இளகிய மனது
கொண்டவர் நீங்கள்
பழகிட வேண்டும்
பார்த்து நாங்கள்
என்ன வரிகள் கவிதை புனைந்து சென்ற விதம் சிறப்பாக உள்ளது இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஅம்மா
உறங்கிட மெல்ல
சாமரை வீசும்
உயரிய குணங்கள்
உள்ளவர் தன்வசம்
இளகிய மனது
கொண்டவர் நீங்கள்
பழகிட வேண்டும்
பார்த்து நாங்கள்
கவிதை புனைந்து சென்ற விதம் சிறப்பாக உள்ளது இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்! உடன் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்வும் நிம்மதியும் கொண்டேன். எப்படியோ தெரியவில்லை என்று பயந்து கொண்டு தான் வெளிவிட்டேன். மிக்க நன்றி ரூபன் !
ReplyDeleteவாழ்க நலமுடன் ....!
இனிய கவிதை. நெஞ்சை குளிர்விக்கின்றது. மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்க நலம்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.
Deleteவாழ்க வளமுடன் ....!
ஆஹா! மிக அ;ருமையான கருத்துச் செறிந்த கவிதை சகோதரி! அருமையான படங்கள் கவிதைக்கு ஏற்றபடி! மனதில் பதிந்த கவிதை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வாருங்கள் வாருங்கள் நலம் தானே ! வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!
Deleteதலைப்பே சொல்லிவிட்டதே கவிதையின் பொருளை. நல்ல சிந்தனையோடு முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோ வருகையும் கருத்தும் கண்டு
Deleteவாழ்க வளமுடன்......!.
ReplyDeleteவணக்கம்!
உள்ளுள் இருக்கும் ஒளியை உணர்ந்திட்டால்
எள்ளும் உணா்வுகள் ஏது?
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே! மிக்க மகிழ்ச்சி வருகையும் கருத்தும் கண்டு.
Deleteமிக்க நன்றி வாழ்க வளமுடன்....!
அருமையான கவிதை சகோதரி
ReplyDeleteபசிதிட புசியென விருந்தே வைக்கும்
அருமையான வரி சகோதரி
அரிமளம் என்ற ஊர்க்காரர் ஒருவர் சொன்னார்
எங்கள் ஊரில் ஒருகாலத்தில் இருந்த காடு நாங்கள் பசித்து உள்ளே போனோம் என்றால் பசியாறி வெளியே வரலாம்
இப்போது அந்தக் காடு யுக்ளிப்ட்டஸ் காடாக மாறிவிட்டது..
மரங்களின் அருமை இன்னும் புரியவில்லை நமக்கு
http://www.malartharu.org/2013/10/blog-post_7691.html
வாருங்கள் சகோ ! மிக்க மகிழ்ச்சி சகோ கருத்து கண்டதும்இருந்தாலும் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்ட தவற வேண்டாம். மேலும் மெருகேற வழி வகுக்கும் என நம்புகிறேன்.
Deleteபசுமை பேணி காப்போம் ஒன்று சேர்ந்து மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!
ஹே! மரத்தை பற்றிய இந்த விழிப்புணர்ச்சிக்கவிதை அருமை டா!
ReplyDeleteஅதிலும் படங்கள் அதுவொரு கவிதையாய் விரிகிறது. சந்த நயம் கொஞ்சி விளையாடுகிறது!! மரங்களிடம் பழகத்தெரியாத மனிதர்கள் படித்து உணரட்டும்.
அப்பாடா ரொம்ப சந்தோஷம் அம்மு, குழப்பத்தோடு தான் வெளியிட்டேன். இப்பொழுது தான் ஆறுதலாக இருக்கிறது. தவறுகளையும் கண்டு திருத்தவும் சரியா. இனியாவின் நெஞ்சு பிஞ்சு விடும் என்று சொல்லாமல் விட வேண்டாம். உண்மையான நட்புக்கு அது அழகல்ல தோழி சரியா. ஆசிரியர் தானே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும் ok வா not வித் குட்டீஸ்.ஹா ஹா
Deleteநன்றி செல்லம் ......!
நல்ல சிந்தனை
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும் ...!
Deleteவாழ்க வளமுடன் .....!
மொட்டைத் தலையில
ReplyDeleteகொட்டும் வெயில்
சுட்டால் தானே தெரிகிறது
நட்ட மரநிழல் தேவையென
பட்ட பின்தானும்
நட்டு வைப்போம் நல்மரங்களை...
visit: http://ypvn.0hna.com/
மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க நலமுடன்....!
சகோதரி,
ReplyDeleteவணக்கம். படிக்கும் போதே,
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதான் நல்ல மரம்“
என்ற அவ்வைப் பாட்டின்
மூன்றாவது வரியை,
”கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சுவைநிறையிப்
பாட்டில் மரத்தருமை யூட்டும் கருத்தறிய
மாட்டாதான் நல்ல மரம்”
என மாற்றத் தோன்றிற்று.
நன்றி!
வாருங்கள் சகோதரா! மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில். தங்கள் கருத்து கண்டு மிகவும் சந்தோஷப் பட்டேன். அதில் தங்கள் பெருந்தன்மை வெளிப்படுகிறது அல்லவா? மிக்க நன்றி சகோதரா! தொடர வேண்டுகிறேன்.
Delete.மிக்க நன்றி! வாழ்க வளமுடன் .....!