Wednesday, February 5, 2014

மகிழும்உள்ளம் நலம்காண உதவும்

animated flowers photo: Animated flowers Animacin1.gif

                                        

மலர்களே மௌனமா
மனதிலே பாரமா
இல்லையேல் ஈரமா
தன்மையில் மாற்றம் இல்லையே
animated flowers photo: Animated Flowers FairyBlue248.gif
மழை வந்த போதும்
நிறம் மாறவில்லை
புயல் வந்த போதும்
மணம் வேறு இல்லை

நதி மீது போனாலும்
சதி செய்யவில்லை
மிதிபட்டு கிடந்தாலும்
கதிகலங்க வில்லை

குளிர் கொண்டபோதும் 
குறைகாண வில்லை 
தீயிலே வெந்தாலும்
சினம் கொள்ள வில்லை 

பழிவாங்க ஒருபோதும் 
பதம் பார்க்க வில்லை
வழியின்றி ஒரு போதும் 
விழவில்லை காலில்

நிமிடம் ஒரு நிறமும்
நிலையில்லா மனமும் கொண்டு
மனிதரை மனிதர் தினம்
வருத்துவதே தலையாய தொண்டு


animated flowers photo: Animated Flowers fl52.gif


முன்னாடி சிரித்திடுவர் 
வாழ்வை பின்னாடி சிதைத்திடுவர்
நாம் கருணை உள்ளவர் என்பர்
கொலை களவும் செய்திடுவர்

தினம் ஒரு கவலை
கொள்ளும் மனமே
தீராத நோய்கள் வந்து
சேரும் வருத்தும் உனையே

தித்திக்கும் எண்ணங்கள் கொண்டாலும்
அன்பான இதயங்கள் கண்டாலும்
துன்பங்கள் சருகாகும் உடனும் 
மகிழும்உள்ளம்  நலம் காண உதவும்




31 comments:

  1. நன்றாக இருக்கின்றது மேலும் தொடர வாழ்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      முதல் வருகை மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் .....!
      தங்கள் தளத்திற்கு வந்திருந்தேன் கருத்து இட இலகுவாக இல்லையே condition போடுவது போல் தெரிகிறது. இலகுவாகினால்
      கருத்திட வசதியாக இருக்கும்.

      Delete
  2. மனம் கவரும் கவிதைகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இணைத்த படங்கள் அட்டகாசம்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ..!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  4. நல்ல இசைவான கவிதை .அருமையான படங்கள். வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. வருகையும் கருத்தும் கண்டு நெகிழ்ந்தேன் தோழி. மிக்க நன்றி ...!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. படங்களும் , கவிதையும் அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      வரவும் கருத்தும் கண்டு மனம் நிறைவு கொண்டேன்
      . மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்.....!

      Delete
  6. படங்களுடன் கவிதை மிக மிக அருமை
    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி சார் !
      நீண்ட நாட்களின் பின் வருகை கண்டு உவகை கொண்டேன்.
      உற்சாகப் படுத்தும் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
      மிக்க நன்றி ....!வாழ்க வளமுடன்....!

      Delete
  7. வணக்கம்
    அம்மா.

    ஒவ்வொரு வரிகளின் செம்மை கண்டு
    என் மனம் உவகை கொண்டது.....
    தித்திக்கும் சின்ன வரிகள்
    என் மனதுக்கு தீங்காரம் பாடுது....

    படங்கள் சூப்பர்...பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள் அம்மா.............

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் !
      வழமை போல் ஊக்கப் படுத்தும் கருத்திட்டு வாழ்த்தியது கண்டு மனம் நெகிழ்ந்தேன். மிகக் நன்றி ! வாழ்க வளமுடன்......!

      Delete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா..!மிக்க மகிழ்ச்சி சென்று பார்க்கிறேன்....!

      Delete
  9. முன்னாடி சிரித்திடுவர்
    வாழ்வை பின்னாடி சிதைத்திடுவர்...
    மிகவும் பிடித்த வரிகள்...

    தொடருங்கள்...

    அழகான கவிதை..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் முதல் வருகை கண்டு மனம் பூரித்தேன். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். இனி தொடர்கிறேன் தொடரவும் வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  10. மலரையும் மனிதரையும் ஒப்புநோக்கி
    அருமையானதொரு கவிதை .
    காவியகவி அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      அருமையான கருத்திட்டு என்னை நெகிழ வைத்தீர்கள் ரொம்ப நன்றி தோழி ! இன்னமும் எழுத வேண்டும் என்று ஆவல் பெருகுகிறது தோழி. பார்க்கலாம்,இனி இறைவன் செயல்.
      நன்றி வாழ்க வளமுடன்.....!

      Delete
  11. மகிழுள்ளம் உன்னில் முகிழும் கவியில்
    அகிலம் பொழியும் அழகு !

    அருமை அருமை சகோ
    பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீராளா.!
      தங்கள் வருகையில் மகிழும் உள்ளம்
      தினமும் வாழ்த்தும் இன்புற்று வாழ.....!

      மிக்க மகிழ்ச்சி... நன்றி .... வாழ்க வளமுடன்....!

      Delete
  12. ''..நதி மீது போனாலும்
    சதி செய்யவில்லை
    மிதிபட்டு கிடந்தாலும்
    கதிகலங்க வில்லை...'''
    அருமையான கவி வரிகள்
    முழுவதும் மிக நன்றாக உள்ளது.
    இனிய வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. அன்பு சகோதரிக்கு (அப்ப தான் அடிக்காம இருப்பீங்க)
    தங்கள் கவிவரிகள் வழக்கம் போல் கலைக்கட்டுகிறது. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள், கருத்தும் கவி பாடுகிறது அது தான் அனுபவம் என்பதோ! தங்கள் பதிவு நிறைய தவற விட்டமைக்கு உண்மையாக வருந்துகிறேன். சூட்டோடு ப(கு)டிக்க நாயர் கடை சாயாவா! இது காவியக்கவியின் கவி வரிகள் என்றும் இனிக்கும் என்பதால் அவசியம் அனைத்தும் படித்து விடுவேன் என்று சொல்லி ஜகா வாங்கிக் கொள்கிறேன். நன்றி சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி என்று சொல்லி விட்டீர்கள் அதற்குள் அன்பு வேற இனி என்ன செய்வது சரிசரி பிழைச்சு போங்க பாண்டியா. ஹா ஹா ....
      இந்த முறை ஒரு மாதிரி தப்பிசிட்டீங்க.ம்..ம்...ம்
      தங்கள் அன்பான வருகையும் இதய பூர்வமான கருத்தும் கண்டு மிக்கமகிழ்ச்சி ! ரொம்ப நன்றி...!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  14. அருமையான ஒரு கவிதையை படித்த திருப்தி. வாழ்த்துக்கள் சகோதரி.
    தங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.

    ஒரு சின்ன ஒற்றுமை - என் இரண்டாவது மகளின் பெயரும் இனியா தான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      முதல் வருகை மிக்க மகிழ்ச்சி..!
      தங்கள் கருத்தும் வாழ்த்தும் என்னை வழிப்படுத்தும் மிக்க நன்றி...! எனக்கு பெரும் மகிழ்ச்சி என்னவென்றால் தங்கள் மகளை அழைக்கும் போதெல்லாம் என் கவிதை நினைவுக்கு வரப் போகிறது. ஹா ஹா . நன்றி ! வாழ்க வளமுடன்...!
      இனியா குட்டிக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!

      Delete
  15. Replies
    1. வணக்கம் சகோதரா வாருங்கள் !
      தங்கள் முதல் வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் .
      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ..!
      நட்பு தொடர வேண்டுகிறேன். நானும் தொடர்கிறேன்.
      வாழ்க வளமுடன்...!

      Delete
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா ! இதோ உடனே சென்று பார்க்கிறேன்.
      தங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். நன்றி !
      வாழ்க வளமுடன்....!

      Delete
  17. மனதிற்கிதமான உங்கள் படைப்பைத் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.