மலர்களே மௌனமா
மனதிலே பாரமா
இல்லையேல் ஈரமா
தன்மையில் மாற்றம் இல்லையே
நிறம் மாறவில்லை
புயல் வந்த போதும்
மணம் வேறு இல்லை
நதி மீது போனாலும்
சதி செய்யவில்லை
மிதிபட்டு கிடந்தாலும்
கதிகலங்க வில்லை
குளிர் கொண்டபோதும்
குறைகாண வில்லை
தீயிலே வெந்தாலும்
சினம் கொள்ள வில்லை
பழிவாங்க ஒருபோதும்
பதம் பார்க்க வில்லை
வழியின்றி ஒரு போதும்
விழவில்லை காலில்
நிமிடம் ஒரு நிறமும்
நிலையில்லா மனமும் கொண்டு
மனிதரை மனிதர் தினம்
வருத்துவதே தலையாய தொண்டு
முன்னாடி சிரித்திடுவர்
வாழ்வை பின்னாடி சிதைத்திடுவர்
நாம் கருணை உள்ளவர் என்பர்
கொலை களவும் செய்திடுவர்
தினம் ஒரு கவலை
கொள்ளும் மனமே
தீராத நோய்கள் வந்து
சேரும் வருத்தும் உனையே
தித்திக்கும் எண்ணங்கள் கொண்டாலும்
அன்பான இதயங்கள் கண்டாலும்
துன்பங்கள் சருகாகும் உடனும்
மகிழும்உள்ளம் நலம் காண உதவும்
நன்றாக இருக்கின்றது மேலும் தொடர வாழ்துக்கள்.
ReplyDeleteவணக்கம் !
Deleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் .....!
தங்கள் தளத்திற்கு வந்திருந்தேன் கருத்து இட இலகுவாக இல்லையே condition போடுவது போல் தெரிகிறது. இலகுவாகினால்
கருத்திட வசதியாக இருக்கும்.
மனம் கவரும் கவிதைகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇணைத்த படங்கள் அட்டகாசம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோதரா !
Deleteவருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ..!
வாழ்க வளமுடன்.....!
நல்ல இசைவான கவிதை .அருமையான படங்கள். வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteவருகையும் கருத்தும் கண்டு நெகிழ்ந்தேன் தோழி. மிக்க நன்றி ...!
Deleteவாழ்க வளமுடன்....!
படங்களும் , கவிதையும் அருமை..பாராட்டுக்கள்..!
ReplyDeleteவாருங்கள் தோழி
Deleteவரவும் கருத்தும் கண்டு மனம் நிறைவு கொண்டேன்
. மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்.....!
படங்களுடன் கவிதை மிக மிக அருமை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் ரமணி சார் !
Deleteநீண்ட நாட்களின் பின் வருகை கண்டு உவகை கொண்டேன்.
உற்சாகப் படுத்தும் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி ....!வாழ்க வளமுடன்....!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
ஒவ்வொரு வரிகளின் செம்மை கண்டு
என் மனம் உவகை கொண்டது.....
தித்திக்கும் சின்ன வரிகள்
என் மனதுக்கு தீங்காரம் பாடுது....
படங்கள் சூப்பர்...பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள் அம்மா.............
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் !
Deleteவழமை போல் ஊக்கப் படுத்தும் கருத்திட்டு வாழ்த்தியது கண்டு மனம் நெகிழ்ந்தேன். மிகக் நன்றி ! வாழ்க வளமுடன்......!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா..!மிக்க மகிழ்ச்சி சென்று பார்க்கிறேன்....!
Deleteமுன்னாடி சிரித்திடுவர்
ReplyDeleteவாழ்வை பின்னாடி சிதைத்திடுவர்...
மிகவும் பிடித்த வரிகள்...
தொடருங்கள்...
அழகான கவிதை..
வாருங்கள் முதல் வருகை கண்டு மனம் பூரித்தேன். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். இனி தொடர்கிறேன் தொடரவும் வேண்டுகிறேன்.
Deleteவாழ்க வளமுடன்....!
மலரையும் மனிதரையும் ஒப்புநோக்கி
ReplyDeleteஅருமையானதொரு கவிதை .
காவியகவி அருமை!
வாருங்கள் தோழி !
Deleteஅருமையான கருத்திட்டு என்னை நெகிழ வைத்தீர்கள் ரொம்ப நன்றி தோழி ! இன்னமும் எழுத வேண்டும் என்று ஆவல் பெருகுகிறது தோழி. பார்க்கலாம்,இனி இறைவன் செயல்.
நன்றி வாழ்க வளமுடன்.....!
மகிழுள்ளம் உன்னில் முகிழும் கவியில்
ReplyDeleteஅகிலம் பொழியும் அழகு !
அருமை அருமை சகோ
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
இனிய வாழ்த்து
வாழ்க வளமுடன்
வாருங்கள் சீராளா.!
Deleteதங்கள் வருகையில் மகிழும் உள்ளம்
தினமும் வாழ்த்தும் இன்புற்று வாழ.....!
மிக்க மகிழ்ச்சி... நன்றி .... வாழ்க வளமுடன்....!
''..நதி மீது போனாலும்
ReplyDeleteசதி செய்யவில்லை
மிதிபட்டு கிடந்தாலும்
கதிகலங்க வில்லை...'''
அருமையான கவி வரிகள்
முழுவதும் மிக நன்றாக உள்ளது.
இனிய வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
அன்பு சகோதரிக்கு (அப்ப தான் அடிக்காம இருப்பீங்க)
ReplyDeleteதங்கள் கவிவரிகள் வழக்கம் போல் கலைக்கட்டுகிறது. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள், கருத்தும் கவி பாடுகிறது அது தான் அனுபவம் என்பதோ! தங்கள் பதிவு நிறைய தவற விட்டமைக்கு உண்மையாக வருந்துகிறேன். சூட்டோடு ப(கு)டிக்க நாயர் கடை சாயாவா! இது காவியக்கவியின் கவி வரிகள் என்றும் இனிக்கும் என்பதால் அவசியம் அனைத்தும் படித்து விடுவேன் என்று சொல்லி ஜகா வாங்கிக் கொள்கிறேன். நன்றி சகோதரி..
சகோதரி என்று சொல்லி விட்டீர்கள் அதற்குள் அன்பு வேற இனி என்ன செய்வது சரிசரி பிழைச்சு போங்க பாண்டியா. ஹா ஹா ....
Deleteஇந்த முறை ஒரு மாதிரி தப்பிசிட்டீங்க.ம்..ம்...ம்
தங்கள் அன்பான வருகையும் இதய பூர்வமான கருத்தும் கண்டு மிக்கமகிழ்ச்சி ! ரொம்ப நன்றி...!
வாழ்க வளமுடன்.....!
அருமையான ஒரு கவிதையை படித்த திருப்தி. வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteதங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.
ஒரு சின்ன ஒற்றுமை - என் இரண்டாவது மகளின் பெயரும் இனியா தான்.
வாருங்கள் சகோதரா !
Deleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி..!
தங்கள் கருத்தும் வாழ்த்தும் என்னை வழிப்படுத்தும் மிக்க நன்றி...! எனக்கு பெரும் மகிழ்ச்சி என்னவென்றால் தங்கள் மகளை அழைக்கும் போதெல்லாம் என் கவிதை நினைவுக்கு வரப் போகிறது. ஹா ஹா . நன்றி ! வாழ்க வளமுடன்...!
இனியா குட்டிக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவணக்கம் சகோதரா வாருங்கள் !
Deleteதங்கள் முதல் வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் .
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ..!
நட்பு தொடர வேண்டுகிறேன். நானும் தொடர்கிறேன்.
வாழ்க வளமுடன்...!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
மிக்க நன்றி சகோதரா ! இதோ உடனே சென்று பார்க்கிறேன்.
Deleteதங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். நன்றி !
வாழ்க வளமுடன்....!
மனதிற்கிதமான உங்கள் படைப்பைத் தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete