காதலர் தினம் வாழ்க
காதலர்கள் வாழ்க .....!
கனவுகளை கற்பனையை
வெல்க வெல்க...!
வீதியிலே வலம்வரும்
வாலிபர்கள் வாழ்க
வான்னிலவு தேடிவரும்
புன்னகைகள் வாழ்க
பூத்துக் குலுங்கும் ரோஜாபோல்
பொலிவுடேனே வாழ்க
அன்னநடை சின்னஇடை
பைங்கிளிகள் வாழ்க
அச்சம் மடம் நாணம்
பயிர்ப்பு அலுங்காமல் வாழ்க
இஷ்டப்பட்டு கஷ்டம்
கொள்ளும் இதயங்கள் வாழ்க....!
இன்பம் பொங்க என்றும் வாழ்க வாழ்க....!
இதயம் ஒன்றானால்
காதல் பிறக்கும்
கண்கள் கலந்திடவே
கவிதை உயிர்க்கும்
இறையருளும் சேர்ந்து
விட்டால் கைகள் கலக்கும்
காதல் கொள்ள
கொள்ள பரவசம்
அதில் கனவுகளும்
கற்பனையும் இலவசம்
உடல் பொருள் ஆவி
எல்லாம் உன்வசம்
உற்றவரும் பெற்றவரும்
தென்பட வில்லை
உருகி உருகி காதல் செய்வார்
தன்வசம் இல்லை
பறவைகளும் விலங்குகளும்
கொள்ளும் இந்தக் காதல்
சுதந்திரமாய் காதலிக்கும்
இல்லை ஒரு காவல்
ஜாதி மத பேதமில்லை
கட்டுப்பாடு இல்லை
பணம் பதவி கௌரவமும்
தேவையே இல்லை
தற்கொலையும் தோல்விகளும்
இல்லவே இல்லை
கற்றவரும் பாமரரும்
கொள்ளும் இந்தக்காதல்
முற்றும் துறந்த முனிவரையும்
வென்று விட்ட காதல்
முத்தமிழ் வித்தகரும்
வீழுகின்ற காதல்
முத்துகுமரன் அவன்
முக்குளித்த காதல்
பட்டுப் போன அத்தனையும்
தளிர வைக்கும் காதல்
பித்துபிடித்தே காதலரை
கொன்று விடும் காதல்
மோதலிலே பிறக்கும்
காதல் வாழும்
காதலினால் மோதல்
பிறக்க வீழும்
வாழுகின்ற காதல்
எல்லாம் காவியம்
வீழுகின்ற காதல்
எல்லாம் வெறும் ஓவியம்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
காதலர் தினத்தில் காதலர்களை வாழ்த்தும் கவிமாலை தித்திக்குது.... .படங்கள் அனைத்தும் மிக அழகு.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதலர் தின வாழ்த்துக்கள் ரூபன் !
Deleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! அன்பான கருத்தும் வாழ்த்தும் என்னை நிச்சயம் என்றும் மேம்படுத்தும்.
அன்புக் காதல் வென்றிடவும்
இன்பக்கடலில் நீந்திடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
வலையுலக வானில் சிறகை விரித்து பறக்கும் கவியின் வரிகள் என்மனதில் பசு மரத்தாணிபோல.... பதிந்துள்ளது.... தொடர்ந்து கவிகள் படைக்க எனது வாழ்த்துக்கள் அம்மா.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
அப்படியே ஆகட்டும் ரூபன் !
Deleteதங்கள் தயவு இருந்தால் போதும் சிறகை விரித்து விடுகிறேன். ஆனால் விழுந்தால் நீங்கள் தான் தாங்க வேண்டும் சரி தானே... ஹா ஹா நன்றியப்பனே தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
வளமுடன் வாழ்க...
ReplyDeleteஅன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...
வாழ்த்துக்கள்...
காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரா..!
Deleteஆஹா திருக்குறள் போல் அழகாக சொல்லி விட்டீர்கள்.
பெரிய விடயத்தை எவ்வளவு எளிதாக....
நன்றி வாழ்த்துக்கள்...!
வான்னிலவு தேடிவரும்
ReplyDeleteபுன்னகைகள் வாழ்க
பூத்துக் குலுங்கும் ரோஜாபோல்
பொலிவுடேனே வாழ்க
வாழ்த்துகள்..!
வாருங்கள் தோழி !
Deleteமிக்க நன்றி ! வரவுக்கும் கருத்துக்கும் தோழி..!
வாழ்க வளமுடன்...!
காதலர் தின வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteதங்களின் காதல் கவிதையை ஒரு தடவைக்கு இரு தடவை ரசித்து படித்தேன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் என்றும் காதல் அழியாது.
வணக்கம் சகோதரா..!
Deleteதங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
நன்றி ! வாழ்க வளமுடன்....!
அருமையான கவிதை வரிகள் ! வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteமிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்...!
சிறப்பான வாழ்த்துப்பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் சகோதரா ! நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை கண்டு ஆனந்தம் அடைந்தேன். மிக்க நன்றி ! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள் வராமைக்கு இனி தொடர்கிறேன்.
Deleteவாழ்க வளமுடன்....!
வாருங்கள் சகோதரா !
Deleteநீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரா வராமைக்கு இனி தொடர்ந்து வருகிறேன்.
நன்றி வாழ்க வளமுடன்....!
//அச்சம் மடம் நாணம்
ReplyDeleteபயிர்ப்பு அலுங்காமல் வாழ்க//
சரியான நினைவூட்டல் .
//இஷ்டப்பட்டு கஷ்டம்
கொள்ளும் இதயங்கள் வாழ்க....!//
அழகான வரிகள்,வாழ்த்துக்கள் தோழி!
வணக்கம்!
Deleteதங்கள் வருகையும் சிறப்பான கருத்தும் என்றும் எனக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கும் ஊட்டச்சத்தே மிக்க நன்றி !
வாழ்க வளமுடன்....!
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் கவிஞரே!
Deleteதங்கள் வருகை என் பாக்கியம் நீண்ட நாட்களின் மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ! வாழ்க வளமுடன்....!
//முத்துகுமரன் அவன்
ReplyDeleteமுக்குளித்த காதல்
பட்டுப் போன அத்தனையும்
தளிர வைக்கும் காதல்//
தளிர்ந்தால் மகிழ்வு...
வாழ்த்துக்கள் ...
வாருங்கள் சகோதரா !
Deleteதங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். ஊட்டம் தரும் கருத்துகளை காணாவிட்டால் வாட்டமுறும் என் வதனம். மிக்க நன்றி ! வாழ்கவளமுடன்....! .
பின்னே இல்லையா சும்மாவா சொன்னார்கள் கோழையையும் வீரனாக்கும் கொடுமைகளை குறைத்து விடும் (திருந்துதல்) அதுவுமில்லாமல் வாழ்கையில் எல்லாம் இழந்து பிடிப்பற்று வாழ்வதில் என்ன பயன் என்று நினைக்கும் போது கூட காதல், அன்பு மிளிர கடலில் தத்தளிக்கும் ஒருவன் ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் என்று நீந்தி கரை ஏறுவது போல் நீந்தி விடுவான் அல்லவா. இதையே குறிப்பிட்டேன்.