என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....
ஆகா என்ன வென்று எழுதுவேன், எத்தனை கற்பனை வளம் ...!
எத்துணை ரசனை உங்களுக்கு எல்லாமே பிடிக்கிறதே. படிக்கும் போது கண்கள் சொரிகிறது. அகத்தில் அட்சய பத்திரமா வைத்திருகிறீர்கள். இப்படி பொங்கி பிரவாகிக்கிறதே. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
உங்களை வாழ்த்த எனக்கு அருகதை இல்லை ஐயனே....!
இருந்தாலும் வாழ்த்துகிறேன்....!
பார் போற்ற புகழ் பெற்றிடு.....!
உன் உளம் மகிழ தினம் கவிதை படைத்திடு....!
மறுபடியும் ரசித்தேன்... சக பதிவரை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteரொம்ப நன்றி சகோதரரே...!
Deleteமீண்டும் உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.
உங்கள் பாராட்டு தான் எனக்கு ஊட்டம் தரும் அரு மருந்து.
மூளை என்னும் அட்சய பாத்திரம் அள்ளி வழங்கும் வழங்கல் அற்புதமே. வாழ்த்துகள்
ReplyDeleteவாருங்கள் சகோதரி...!
Deleteஉங்கள் வருகையும் வாழ்த்தும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. தொடர வேண்டுகிறேன்.
எல்லா நலன்களும் பெற வாழ்த்துகிறேன்....!
வணக்கம்
ReplyDeleteசக பதிவரை வாழ்த்திய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்....
உங்கள் தளம் எனக்கு புதிது.. இனி என்வருகை தொடரும்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் வணக்கம் சகோதரா...!
Deleteவரவேண்டும் வரவேண்டும்....! உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர வேண்டுகிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....!
வாழ்க வளமுடன்...!
ஐயோ இனியா என்ன நடந்திருக்கு இங்கே....!
ReplyDeleteநினைவுகளை
அதன் பாட்டில்
பூக்கவிடுகிறேன்
ஆழ்மனத்தின்
ஈரத்தில்
சிலபூக்கள்
வாசத்தோடும்
சில பூக்கள்
வலியோடும்
அடிக்கடி பூக்கின்றன
கனவுப்
பனி மூட்டம்
கண்ணிரண்டில்
ஒற்றி எடுக்கும்
ஒவ்வொரு சொட்டு
கண்ணீருக்குள்ளும்
பல்வகைமை
கொண்டதாய்
முட்களின் கீறல்கள்
சிலபூக்களில்
சாட்சியங்களாய்
இழப்புக்கள் சொல்லும்..!
மிக்க நன்றி இனியா தங்கள் வாழ்த்தில் மிக மகிழ்கிறேன்
வாழ்கவளமுடன்
வாருங்கள் சகோதரரே.....!
Deleteஇபொழுதுதான் விழித்திருக்கிரீர்கள் போல, ஒன்றும் பெரிதாக நடக்கவில்லையே.
அது சரி நீங்கள் உங்கள்பாட்டில் பூக்கவிடுங்கள் பூக்களை, வலியும் தன்னால் போகும், வாசமும் தன்னால் வீசும். ஆழ்மனதில் உள்ளதை கவிதையிலே வடித்து விட்டீர்களே அழகாய். அருமை...!
இன்பமும் துன்பமும் நிலையாது போகும்.
இடி மின்னல் வந்தாலும் இருக்காது போகும்.
எறும்புக்கும் எதிர்காலம் உண்டு
வருந்தாதே வருங்காலம் உனது....!
வாழ்கவளமுடன்....!
ஹா ஹா ஹா என்னது இப்போதான் விழித்திருக்கிறேனா ..?
Deleteஅப்படி இல்லை நேரம் கிடைக்கும்போதுதானே வரமுடியும்
நன்றி இனியா ...!
என் வாழ்வு கண்டால் எறும்புக்கும் காச்சல் வரும்...!
சரி....தான்....நேரத்திற்கு வந்த நேரத்தை பாருங்களேன் அதற்கு இப்போ தட்டுப்பாடு அதிகம் தான், அதனால் தான் கிடைப்பதில்லை. அதற்கும் நேரம் வந்தால் தானே நேரம் கிடைக்கும்.....!
Deleteஅது சரி எறும்புக்கு காய்ச்சல் வருமா? என்றால் பாவம் அதற்கு கிட்ட போகாதீர்கள்.......!
சகோதரிக்கு வணக்கம்.
ReplyDeleteசக பதிவரை சிறப்பித்த தங்கள் குணம் கண்டு நெகிழ்ச்சியடைகிறேன் சகோதரி.. வாழ்த்த மனம் இருந்தால் போதுமே . அது என்ன பெரிய வார்த்தை! அருமையான பதிவிற்கு நன்றி. தொடர்வோம்.
வணக்கம் சகோதரரே...!
Deleteஉங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன் நெகிழ்கிறேன்.
நல்லவற்றை வரவேற்கவும் திறமைகளை போற்றவும் தயக்கம் ஏன் காட்டவேண்டும் சகோதரா. எங்கிருந்தாலும் வளர்த்து விடுவோமே இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லையே. நாமும் எதுவும் செலவு செய்ய போவதில்லை அல்லவா?இதில் என்ன கஞ்ச தனம் வார்த்தைக்கா பஞ்சம். நான் சொல்வது சரி தானே சகோதரா.
உங்கள் வருகையும் கருத்தும் கண்டு ஒரே உற்சாகம் தான். ரொம்ப நன்றி.....!
வாழ்கவளமுடன்...!
அன்புக்கினிய இனியா!.. வணக்கம்!
ReplyDeleteஉங்கள் வலைத்தளத்திற்கு என் முதல் வருகை!!
சிறந்த கற்பனை வளமுடன் நல்ல கவிதைகளை
அள்ளிச் சொரிகிறீர்கள் இங்கே! மிக்க மகிழ்ச்சி!
ஓ!.. இங்கே சக பதிவரை அறிமுகம் செய்துள்ளீர்களோ.. மிகச் சிறப்பு!
அதில் என் அன்புறவு சீராளன் வலைப்பூ!.. ம். மட்டற்ற மகிழ்ச்சியாயிருக்கின்றது..:)
அவரின் கவிதை வரிகளில் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கும்!
அறிமுகம் செய்த உங்களுக்கும் அன்புச் சீராளனுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
இளமதியே வருக பெருமான் சூடிய பிறை நிலவே வருக.......!
Deleteஉங்கள் வருகை கண்டு முழுமதியே வந்தது போல் அகமகிழ்ந்தேன்.......! ஆனந்தம் கரை புரண்டு ஓடியது. உங்கள் வரவு நல்வரவாகுக.....!
என்னே கலையழகு......! நாவண்ணம் கைவண்ணம் ஒருங்கே நல்கிடக்கண்டேன்.
புல் நுனிமீது பனியாய் அமர்ந்திடும் ஆசை கண்டேன்
தாய் மண்ணில் மறுபடியும் பிறந்திட துடிக்கும்
உள்ளம் கண்டு கண்கள் பனித்தது. மெய்சிலிர்த்தது. அருமை அருமை......!
வருகைக்கும் வாழ்த்துக்கும்ரொம்ப நன்றி..... இளமதி......!
உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
சீராளனை நான் எப்படியம்மா அறிமுகப்படுத்தமுடியும். நான் மடு அவர் மலையல்லவா நீங்கள் அறியாததா என்ன.........!
ஆமாம் சூரியனை யாராவது அறிமுகப்படுதுவார்களா?
சூரியனை பார்த்து வரையத் தான்முடியுமே தவிர வரையறுக்க முடியுமா? நான் வரைந்திருக்கிறேன் அம்மா அவ்வளவு தான்.
சீராளன் சீறுவது போல் கேட்கிறதே உங்களுக்கு கேட்கிறதா......! ம்ம்ம்
எஸ்கேப்....!