பூக்கள் பூக்கிறதே புகழுக் கேங்கிறதா
வாசம் வீசுறதே வஞ்சனை செய்கிறதா
வாடி விழுந்தாலும் வருத்தபடுகிறதா
தன்மை மாறாமல் திண்மை யாகாமல்
திகழும் எந்நாளும் மகிழும் தான்னாலும்
வாழும் காலம் முழுதும் வலிகள் சுமக்கும் வாழ்வு
வருடும் போது மறக்கும் மறு படி பிறக்கும் சிறக்கும்
முள்ளிலே உள்ள ரோஜா
வண்ணமாய் இல்லையா
சிப்பியில் உள்ள முத்து பெறுமதி யற்றதா
சேற்றினில் செங்கமலம் பூஜையில் இல்லையா
கள்ளுள்ள தென்னையில் இளநி தான் இல்லையா
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது தொல்லையா
நீரிலே தோன்றும் நிலவு
நீந்துவது உண்மையா
பகுத்தறிவு கொள்ள பலகாலம் தேவையா
பாரினில் பல காலம் வாழ்வது சில காலம்
தூக்கத்தில் பல காலம் துக்கத்தில்
சில காலம் மகிழ்வாய் வாழ்வது எக்காலம்
மனிதனாய் வாழ்வது எக்காலம் வாழும்
போதே வாழ்ந்திடு நாளும் வீழ்ந்திடும் போதும்
எழுந்திட வேணும் மரணம் வரும் முன்
மறக்காமல் மகிழ்ந்திடு என்றும் முறைக்காமல்
அன்பில்லை அழகில்லை அறிவில்லை
புகழ் இல்லை பொருள் இல்லை
வறுமையின் எல்லை
வறுமையின் எல்லை
என்றே வருந்தி நின்றால் பயன்னேது
நினைத்த வாழ்வு கிடைக்க வில்லை
என்று எண்ணி கிடைத்த வாழ்வை
வாழாமல் தொலைப்பது விதியோ
அனைவருமே அழகியவர்
நினைத்த வாழ்வு கிடைக்க வில்லை
என்று எண்ணி கிடைத்த வாழ்வை
வாழாமல் தொலைப்பது விதியோ
அனைவருமே அழகியவர்
தான் இளகிய மனது கொண்டவர் தான்
திறமைகள் பலவும் உள்ளவர் தான்
அன்பும் பண்பும் அழகு தான்
உழைப்பும் உயர்வும் அழகு தான்
உண்மையும் நேர்மையும் அழகு தான்
தன்னம் பிக்கை கொண்டால்
எல்லாம் அழகு தான்
என்றுணராமல் திறம்பட வாழ
எண்ணாது தாழ்த்திடும் தூத்திடும் பிறரை
நோயினில் வாடும் தீயினில் வேகும் உடல்
திமிரினில் ஆடும் தக திமி போடும்
வீணே நேரம் விரயம் செய்யாமல்
தன்னையே தான் ஆராய
தன் நிறைவு கண்டு உயர்வு கொண்டு
வாழலாம் இத் தரணியில் என்றும்
தன் நிறைவு கண்டு உயர்வு கொண்டு
வாழலாம் இத் தரணியில் என்றும்
சிந்திக்க + ரசிக்க வைக்கும் அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாருங்கள் சகோதரரே..!
Deleteமுதல் வாழ்த்து அமர்க்களம்...! ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்கள் வருகையும் வாழ்த்தும் புது தென்பை தருகிறது. என்றும் உங்கள் அன்பும் ஆதரவு தேவை.
வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
வாழ்க வளமுடன்.....!
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteகவிவரிகள் அனைத்தும் வழிகாட்டுவதும் அறிவுரைப் பகர்வதும் அருமை. உலகத்தில் இரண்டு விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது பிறப்பு-இறப்பு. இடையில் நாம் போடுகிற ஆட்டங்கள், வேசங்கள் எத்தனை எத்தனை!! நல்ல மனம் மட்டுமே ஒருவனைச் செல்வந்தனாக மாற்றும் என்பது உண்மை. பிறர்க்கு உதவி வாழ்க்கையில் இன்பம் கொள்வோம். நல்லதொரு கவிதையை வடித்து தந்தமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் சகோதரி,
வணக்கம் சகோதரா...!
Deleteஉங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் ரொம்ப நன்றி.
உங்கள் கருத்து மிகவும் உற்சாகத்தை தருகிறது. மேலும் வளர உங்கள் வாழ்த்தும் தயவும் என்றும் தேவை.
எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....!
அற்புதம்
ReplyDeleteகவிதை உலகில் உச்சம் தொடுவீர்கள் என
நம்பிக்கை ஏற்படுத்திப்போகும்
அருமையான் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா...!
Deleteஎல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான். உங்கள் வரவும் வாழ்த்தும் குதூகலிக்க வைக்கிறது. உங்கள் ஆதரவு இருந்தால் நிச்சயம் வளர்வேன்.
வாழ்க வளமுடன்...! ரொம்பநன்றி....!
தன்னம்பிக்கை ஊட்டும் அற்ப்புதமான வரிகள் . நிலையில்லா உலகில் நிம்மதி இழந்து பலர் போடுமாட்டம்தான் எத்தனை . நோயினில் வாடும் தீயினில் வேகும் உடல் திமிரினில் ஆடும் தக திமி போடும் .உன்னையே நீஅறி என்று அழகாகச் சொன்ன வரிகள் அற்புதம்
ReplyDeleteவணக்கம் சகோதரி...!
Deleteஇங்கும் உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் பிறரை சுட்டி காட்டும் போது மற்றும் மூன்று விரல்கள் நம்மை காட்டுவது தெரிந்தும் தொடர்கிறது.
நமக்குள்ளும் புதையல் இருக்கும் அல்லவா அதை தோண்டி எடுக்க முனைய வேண்டும் அல்லவா. நேரத்தை வீணடிக்காமல். திறமைகள் தொலைந்து போகலாமா என்ற வேதனை தான்.
அவரவர் வாழ்வை அவர்கள் வாழட்டுமே என்று விட்டு விடாமல் அவர்களை நோகடிப்பது தவறல்லவா. இவற்றை கருத்தில் கொண்டு எழுதியவை தான்
உங்கள் வருகை ஆனந்தத்தை தருகிறது, கருத்து ஊக்கத்தை தருகிறது.
மிக்க நன்றி...!
வாழ்கவளமுடன்....!
கெல்விக்கணைகளின் கீர்த்தனையை
ReplyDeleteகேட்கும் செவிகள் பதில்தேடும்
வாழ்வுக்கான வகை எல்லாம்
வரிந்து காட்டிய நற்கவியே ...!
ஆக்கும் கலையில் அழகாக
அறிவுரை கொட்டி தருகின்றாய்
பூக்கும் இந்த கவிஎல்லாம்
புகளை எட்டும் தன்னாலே ...!
அற்புதம் இனியா
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வாருங்கள் சகோதரரே....!
ReplyDeleteஆஹா...! இங்கும் கவிதையிலேயே வாழ்த்தா....!
அருமை அருமை உங்கள் வருகையும், கருத்தும், வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி தருகிறது.
வாழ்க வளமுடன்....!
Mathu S
ReplyDeletehas left a new comment on your post "பூக்கள் பூக்கிறதே
":
// நோயினில் வாடும் தீயினில் வேகும் உடல்
திமிரினில் ஆடும் தக திமி போடும் //
எதார்த்தமான வரிகள் ....
நீங்கள் முதல் கட்டத்தில் இருப்பதை உணர்கிறேன்..சகோதரி
எனது வலைப்பூவில் மது? என்கிற பக்கம் ஒன்று இருக்கிறது படியுங்க...
தோழி அல்ல தோழன்
நன்றிகள்
வாருங்கள் சகோதரா ...!
Deleteஉங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.
கருத்தும் மிகுந்த ஊக்கம் தருகிறது நன்றி...!
குழந்தையின் அழுகையை நிறுத்த சாக்லட் கொடுப்பது இல்லையா அது போல நீங்கள் முதற் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று என்னை அமைதிப்படுத்தி விட்டீர்கள் இல்லையா ரொம்ப சந்தோஷம்.தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் ...! உங்கள் வலை பூவை பார்கிறேன்.மேலே தவறுதலாக அழிந்து விட்டது.
நன்றாக இருக்கிறது...
ReplyDeleteவணக்கம் சகோதரா...!
Deleteஉங்கள் அன்புக்கும் வரவுக்கும் அன்புக் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. உண்மையே உரைக்கிறீர்கள். ஏற்கிறேன் மதிக்கிறேன். உங்கள் கருத்துகளை இன்னும் வரவேற்கிறேன்.மிக்க மகிழ்ச்சியே. தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்....!
தன்னையே தான் ஆராய
ReplyDeleteதன் நிறைவு கண்டு உயர்வு கொண்டு
வாழலாம் இத் தரணியில் என்றும்
தன்னம்பிக்கை தரும் தங்கமான வரிகள்..பாராட்டுக்கள்.!