நாம் சிரித்தால் தீபாவளி
நாடழுதால் சூறாவளி
கேடழிந்தால் நாளும் களி
இருள் அகற்றும் தீப ஒளி
இனிமை பெற கனிவை அளி
கவலைகளை கண் நீரால்அழி
தீமைகளை தீயாய் அழி
பாவண்ணம் கொண்டால் பாவால் அழி
மூட நம்பிக்கையை அறிவால் அழி
கோபம் தனை கொன்று அழி
பெற்றவர்க்கு பேரை அளி
உற்றவர்கு உயர்வை அளி
கற்றவர்கு மதிப்பை அளி
நண்பருக்கு விசுவாசம் அளி
பிள்ளைகட்கு நல்ல கல்வி அளி
ஆற்றல் கொண்டவர்க்கு ஊக்கம் அளி
உண்மை நேர்மைக்கு பரிசு அளி
உயர்பவர்க்கு வாழ்த்து அளி
வறியவர்க்கு உதவி அளி
ஆதரவற்றோருக்கு அன்பை அளி
கலைகளை நீ கண்டு களி
அறுசுவை உணவை உண்டு களி
அன்பு நன்றி உணர்ச்சி காட்டும் விழி
காணும் என்றும் இன்ப ஒளி
தினம் தினம் நல்கும் தீபாவளி
அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteநடுவர்களுக்கு கவிதையை (இணைப்பை) அனுப்பி வைக்கிறேன்... நன்றி...
வணக்கம் தனபாலன் அவர்களே...!
Deleteஉங்கள் வாழ்த்துக்கும் வரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...!
உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மீண்டும் மீண்டும் வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்...!
வணக்கம் சகோதரி.
ReplyDeleteகவிவரிகள் அனைத்தும் தீப ஒளியாய் மின்னுகின்றன. கவிதை போட்டியில் முதல் பரிசு அன்பு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி. எனது தளத்திற்கு வருகை புரிந்து ஒவ்வொரு பதிவுக்கும் கருத்திடும் தங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.
வாருங்கள் சகோதரரே...!
Deleteஉங்கள் வருகையில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.
உங்கள் அன்பு வாழ்த்து கண்டு பூரித்து போனேன். முதல் பரிசு என்றும் சொல்லியிருகிறீர்கள். உங்கள் பொன் வாக்கு பலிக்கட்டும். ரொம்ப நன்றி..!
வாழ்க வளமுடன்...!
வணக்கம் தனபாலன் அவர்களே...!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...!
உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மீண்டும் மீண்டும் வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்...!
//பெற்றவர்க்கு பேரை அளி
ReplyDeleteஉற்றவர்கு உயர்வை அளி
கற்றவர்கு மதிப்பை அளி
நண்பருக்கு விசுவாசம் அளி
பிள்ளைகட்கு நல்ல கல்வி அளி//
ரசித்த வரிகள் இவை, இனியா.
உங்கள் பெயர் போலவே கவிதையும் நல்லனவற்றைப் பேசி இனிக்க செய்கிறது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
வணக்கம் சகோதரி..!
Deleteவருக வருக என வரவேற்கிறேன் வாருங்கள்....!
ஆற்றல் இருக்குமா என்று தெரியவில்லை பங்கு பற்றுவதில் தவறில்லையே என்று எழுதினேன். இனித்தது என்ற தங்கள் இனிப்பான செய்தி கேட்டு பூரித்து போனேன். தங்கள் வரவும் வாழ்த்துமே எனக்கு முதல் பரிசு கிடைத்த மகிழ்வைத் தருகிறது. என்றும் தங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன்.
ரொம்ப நன்றி...!
வாழ்க வளமுடன்...!
வணக்கம்
ReplyDeleteதங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரா..!
Deleteதங்களின் நல்ல முயற்சிக்கு. நானும் பங்களிப்பு தருவதை இட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் பதில் கிடைக்காமையால் ஏற்றுக் கொள்ள வில்லையோ என்று எண்ணினேன். தங்கள் பதிலில் நடுவர்களின் பரிசீலனையில் உள்ளதை அறிந்து உவகை கொண்டேன். உங்கள் தலைப்பை மட்டுமே அவசரமாக பார்த்து விட்டு கவிதை எழுதி அனுப்பிவிட்டேன். பின்னர் தான் தாயக தாகமும் அதில் மிளிர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக உணர்ந்தேன். போட்டிக்கு இனி அனுப்ப முடியாது. ஆனால் உங்களுக்காக உங்கள் தாகத்திற்காக எழுதியுள்ளேன். அதை பின்னர்அனுப்பி விடுகிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...!
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...!
நல்ல கருத்துள்ள கவி வரிகள்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எனது மகனின் பெயர் இனியவன். இங்கு இனியா என பெயர் பார்த்ததும் மகிழ்ந்தேன்.
வாருங்கள் வாருங்கள் முதல் வருகை,
Deleteஆனந்தமாக இருக்கிறது. கருத்தும் வாழ்த்தும் நிச்சயம் என்னை வளர்க்கும். சுவாசம் போல் வாழவும் வைக்கும்.
ரொம்ப நன்றி...! தங்கள் மகன் பெயருக்கேற்றப இனியவனாக இருக்கவும், இன்பமாக வாழவும் வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.....!
வாழ்க வளமுடன்......!
ழகரம், ளகரம் முடிவாக
ReplyDeleteமுகிழும் வாழ்த்து இனிக்கிறதே
மகிழும் நடுவர் தேர்வாக
நிகழும் உங்கள் எதிர்பார்க்கை ...!
அழகிய கவிதை இனியா
தங்கள் கவிதை பரிசும் பாராட்டும் பெற நல்வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்
வாருங்கள் சகோதரா.....!
ReplyDeleteஉண்மையில் உங்கள் வாழ்த்துக்களே எனக்கு பரிசு கிடைத்தது போல் தான் இருக்கிறது. இதுவே பெரிய வெற்றி தான். எதிர்பார்க்கவில்லை, ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
நன்றி.....! நன்றி...! நன்றி....!
சீராளா சீர் ஆளும் எண்ணங்கள் சிறப்புனக்கு
பேராளும் உன் கவிதை உந்தனுக்கு....!
வாழ்க வளமுடன்.....!
கவிதை கண்டு களித்தேன் அருமை .வாழ்த்துக்கள்
ReplyDelete