Wednesday, February 27, 2013

கருவறையும் கல்லறையும்

கோவிலிலே கருவறை உண்டு தாயின்
கருவறையில் கோவிலும் உண்டு
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அந்த இருவருமே கருவறையில் ஒன்று
அந்த கோவிலும்  புனிதமானதொன்று 

கருவறையில் தொடங்குகின்ற வாழ்வு
அலை அலையாய் கொண்டு போகும் பாரு
மணவறையில் பூத்த புது உறவு அது
பள்ளியறையை அலங்கரிக்கும் ஒன்று
அங்கு கலந்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு
தாயின் கருவறையில் மிளிர்ந்து சிறை கொள்ளும்

கருவாகி உருவாகி பெரிதாகி வருமே வெளியில்
பூவுலகை காண ஒரு நாளே அது தான் திருநாளே
துன்பங்கள் அறியாமல் அதுவும்
மழலை மொழி  பேசி கொள்ளும்
அழுக்கு போக குளியலறையில் கழுவும்
பசியெடுத்தால் சமையலறை செல்லும்

படுக்கையறையில் துயில் கொள்ளும்
கொள்ள பழுதுகளை சரி செய்யும் 
நல்லறிவு பெற கல்வி கலை கற்று
வாழ்க்கையினை வழி நடத்தும் நன்று
வாழ்க்கையிலே வந்து போனதெல்லாம்
வகுப்பறையில் கொண்டதுபோல் ஆகும்

படிப்படியாய் அறிவிழந்து உடல் தளர்ந்து போகும்
அது பிணவறையில் கொண்டு சென்று சேர்க்கும்
பின்னர் கல்லறையில் கதை முடித்து கொள்ளும்
கருவறையில் தொடங்கிய நம்  வாழ்வு
கல்லறையில் சென்று அது  முடியும்

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.