Thursday, August 13, 2015

பாவலர்க்கு ஒருவண்ணப் பூங்காத்து

  Image result for பூங்கொத்து image 
google படத்திற்கு என் நன்றிகள்.

வெண்பா வித்தகர்க்கு எல்லாம் ஒரு வண்ணப் பூங்கொத்து
என்ன பார்க்கிறீங்க, ஐய அப்பிடி பார்க்காதீங்கப்பா சும்மா தான் நானும் முயற்சி செய்து பார்த்தேன். அதுக்காக இனி இந்த வலைக்கே வரமாட்டேன் என்று எல்லாம் சொல்லக் கூடாது ok வா. கோச்சுக்காதீங்கப்பா அப்படி ரொம்ப தப்பு என்றால் நீக்கிவிடுகிறேன் இந்த deal ok தானே. அன்பு கூர்ந்து எல்லா வெண்பா வித்தகரும் வந்து வாங்கிகோங்கோ. 

இதை எழுதிவைத்து விட்டு நாலு, ஐந்து நாளாக வெளியிடலாமா என்று யோசித்து விட்டுத் தான் பின்னர் துணிந்து வெளியிட்டேன்.  தம்பிரானே என் தலையை காப்பாத்துப்பா. 

பாரதிதாசன் ஐயாவின் வெண்பா இலக்கணம் பார்த்து எழுதியது தான். பயிற்சியும் முயற்சியும் பலனளிக்காதா என்று எண்ணி எழுதிவிட்டேன் ஐயா. பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க. இருந்தால் நிச்சயம் நீக்கிவிடுகிறேன் மிக்க நன்றி ஐயா ....!  


குறள்வெண்பா!

வெண்பா மலர்பறித்து விந்தைக் கவிஞருக்கு 
கொண்டளித்தேன் அன்பொளிர் கொத்து! 

நேரிசை வெண்பா!

வெண்பா விருந்தளிக்கும் வித்தகர்க்கு இங்களிதேன்
ஒண்பாத் தமிழை உயர்வாக- கண்ணுக்குள் 
கொண்டொளிரும் இந்தப் பூங்கொத்து! 

இன்னிசைச் சிந்தியல் வெண்பா!

வெண்பா அழகெல்லாம் மேவி வியப்புறவே 
வண்ணக் கவிகள் வடிக்கின்ற ஆற்றல்மிகக்  
கொண்டவர்க்கு இந்தப்பூங் கொத்து!    

நேரிசை வெண்பா!


வெண்பா அளித்திங்கு வேர்மரபைக் காப்பாற்றும்
திண்மை எனக்கருள்வாய் செந்தமிழே!- வண்ணமுடன் 
பாவின் இலக்கணத்தை பற்றும் கவிஞர்க்குக்
கூவிக் கொடுப்பேன்பூங் கொத்து! 

 இன்னிசை வெண்பா!


வெண்பா எழில்கற்க வேண்டி தவமிருந்தேன் 
பண்பாய் பசுந்தமிழ் பாதம் தினம்தொழுவேன்
காலம் கனிந்தது கண்கள் கமழ்கின்ற 
கோலம் கொடுக்கும்பூங் கொத்து !


பஃறொடை வெண்பா!


வெண்பா விளையாட்டில்  வீறுகொண்ட வித்தகர்தம்
வண்ண வெழுத்தொன்றும் வாய்க்கவில்லை -என்றனுக்கு
என்றுமே  பைந்தமிழை ஏற்றுமிகக் கற்றிடவே
எண்ணித் துணியவில்லை ஏனோநான் -  என்மனத்து
மண்டிக் கிடக்கிறது மாதுயரம் மின்னுகின்ற 
குன்றாச் சுவையையும்  கொண்டுமனம் துள்ளவே
பின்னத் துடிக்கிறதே பெண்மனம்- இன்னமுதம்
என்றும் பருக இனிய தமிழ்அருள
என்னுள் கவிதை எழுந்தாடப் பாருக்குப்  
பொன்னால் தருவேன்பூங் கொத்து !




31 comments:

  1. ***அதுக்காக இனி இந்த வலைக்கே வரமாட்டேன் என்று எல்லாம் சொல்லக் கூடாது ok வா. கோச்சுக்காதீங்கப்பா அப்படி ரொம்ப தப்பு என்றால் நீக்கிவிடுகிறேன் இந்த deal ok தானே.**

    நீங்களும் ஆங்கிலம் கலந்து எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல. உங்களுக்கும் ஒரு "பொக்கே" "பார்சல்" பண்ணிடலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் நலம் தானே !
      ம்..ம் யோசிக்க வேண்டிய விடயம் தான். இனி கவனமாக இருக்கிறேன். எல்லாம் இந்த ஆங்கில டீச்சர் அம்மு, வருண் போன்றோர் சேர்க்கை தான்......ஹா ஹா வருகைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

      Delete
  2. Replies
    1. நன்றி சகோ! வருகைக்கு.

      Delete
  3. KILLERGEE Devakottai at 09:59

    வணக்கம் கவிஞரே ரசித்தேன் வரிகளை டீல் டபுள் ஓகே வாழ்த்துகளுடன்.... on பாவலர்க்கு ஒருவண்ணப் பூங்கொத்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீ பதிவு முடக்கப் பட்டதால் பின்னூட்டம் இப்படி இட்டுள்ளேன்.எப்பிடி .....ஹா ஹா ....

      Delete
  4. ரூபன் at 09:57

    வணக்கம் அம்மா
    அன்னைத் தமிழ் காதலை அள்ளி எண்ணத் தமிழ்ழில் உரைத்திட்ட வண்ணத் தமிழுக்கு எந்தன். எண்ணித் தலை வணக்கம். என் உள்ளம். மிக அருமையாக உள்ளது தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அம்மா. -நன்றி- -அன்புடன்- -ரூபன்- on பாவலர்க்கு ஒருவண்ணப் பூங்கொத்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      அம்மா
      என் கருத்து என்னவாயிற்று...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    2. பதிவு முடக்கப் பட்டதால் நேர்ந்தது அது தான் மேலே இட்டுள்ளேனே மிக்க நன்றி ! வரவுக்கும் கருத்திற்கும்.

      Delete
  5. Replies
    1. மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  6. நல்ல முயற்சி. ஆசிரியரிடம் கருத்து கேட்பது அதைவிட அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கு வாழ்த்துக்கள் ...!

      Delete
  7. இப்போதெல்லாம் வலையில் மரபுக் கவிதைகள் கோலோச்சுகின்றன. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் மிக்க நன்றி ஐயா ! வரவுக்கும் கருத்திற்கும். வாழ்த்துக்கள் ஐயா ...!

      Delete
  8. வெண்பா கொத்து படைத்திட்ட உங்களுக்கோர் வாழ்த்து பூங்கொத்து! அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மிக்க நன்றி ! வரவுக்கும் வாழ்த்திற்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. அட! என்ன இந்தவாரம் வெண்பா வாரமா?
    எங்கும் வெண்பாவாகத்தெரிகிறதே...
    நாமெல்லாம் பழகும் குழந்தைகள் தானே அதனால் எந்தவித தயக்கமின்றி எழுதுவோம் பா. சொல்லித்தர ஆசான் இருக்க பயமென்ன ? உங்க முயற்சி பாராட்டுக்குரியதுப்பா. தொடருங்கள் பா.

    நீங்களாவது பரவாயில்ல நான் எழுதிமுடிப்பதற்குள் என்ன பாடுபட்டேன் தெரியுமா?

    சரி வித்தகர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

    வாழ்த்துகள் பா. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா வாங்க அது சரிதான் தோழி! குழந்தை விழுந்து விழுந்து தானே நடை பயில்கிறது இல்லையா. ஆகையால் பரவாய் இல்லை நீங்கள் இப்படி சொல்வதால் கொஞ்சம் தென்பாக உள்ளதும்மா நன்றி! வாழ்த்துக்கள் ...!

      Delete
  10. அட..! ஆசிரியர்களுக்கு வெண்பாக் கொத்து!

    நீங்கள் பதிவேற்றியதைக் கண்டு இங்கு வந்து பார்த்தபோது
    அதை நீக்கிவிட்டதாகவே அறிவிப்புக் கண்டேன்.
    இப்போ மீண்டும் என்ன ஆயிற்று என அறியும் ஆர்வத்தில் வந்தபோதே
    உங்களின் இப்பதிவினை தற்சமயம் காண்கிறேன் தோழி!..
    தாமத வருகை எனது என கோபம் கொள்ளாதீர்கள்..:(
    என் தவறல்ல எனது வலை டாஷ்போட்டின் தவறு!..

    கற்கும் நிலையிலேயே உங்கள் கரங்களில் வந்துவிழும்
    சீர்கள் கண்டு பிரமித்தேன்! நல்ல சிந்தனை வரிகள்!
    முழுமையாகக் கற்றுவிட்டால்
    உங்களைப் பிடிக்கவே முடியாது என்று நினைக்கிறேன்!
    நானும் இன்னும் மிக மிகத் தவளும் குழந்தையே...

    விடாமல் முயற்சியுடன் கற்றுத் தேறுவோம் வாருங்கள்.
    ஆசிரியர்களுக்கு மேலும் பெருமை சேரும் உங்களால்!

    முயற்சிக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ..என்னம்மா என் அன்புத் தோழியே . நீங்கள் தவழும் குழந்தையா இதானே வேணாங்கிறது .
      ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி எல்லாம் விளையாடுகிறீர்கள். அப்புறம் என்ன பேச்சு இது ஹா ஹா .......பார்க்கலாம் அம்மா எதுவரை செல்கிறது என்று. மிக்க நன்றிம்மா ஊக்கம் தரும் உயரிய கருத்தைக் கண்டுள்ளம் மகிழ்ந்தேன்மா. நன்றி ! வாழத்துக்கள் ...!

      Delete
  11. வணக்கம்,
    தங்கள் தளம் வந்து படித்து ஏதோ சொல்லி செல்லும் என்னை இன்று வராதே என்பது போல்,,,,,,,,,
    எனக்கு இது தெரியாதே என்ன செய்வது?
    சொற்களின் பிரவாகம் என்னைச் சொக்க வைக்கிறதே
    சீர்கள் தங்களுக்கு பாதைச் சீரமைக்க
    நான் என்ன தருவேன் உமக்கு வாழ்த்தைத் தவிர,,,,
    வாழ்த்துக்கள் ம்மா,

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா வாங்க உங்கள் அன்பான வருகையே பெரும் பேறும் பலமும் தானேம்மா. இதை விட வேறு என்ன வேண்டும். தங்களின் நட்பே அடைகிறேன் மகிழ்ச்சி என்றும். வருகைக்கு நன்றி !வாழ்த்துக்கள் ...!

      Delete
  12. விஜூ அண்ணா சொன்னது போல எனக்கு முதலில் அந்த தகவல் தான் வந்தது இனியாச்செல்லம்!!!! உண்மையாக வெண்பாக்கள் எல்லாமே நன்பாக்களாக வந்திருகின்றன !! சும்மா சொல்லக்கூடாது செம்ம .....செம!!! வாழ்த்துக்கள் செல்லம்:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மு எப்படி இருக்கிறீர்கள். நலம் தானே !
      \\\\விஜூ அண்ணா சொன்னது போல எனக்கு முதலில் அந்த தகவல் தான் வந்தது இனியாச்செல்லம்!!!! ///// என்ன புரியலையே!

      சும்மா சொல்லக்கூடாது செம்ம .....செம!!!அம்முகுட்டி சொன்னா சரி தான் நன்றிம்மா! தங்கள் இனிய கருத்துக்கும் வரவுக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  13. வணக்கம் அம்மா.

    சுற்றும் கவிச்சுடர் சூழ்ந்தே ஒளிநிற்கக்
    கற்றுத் தருபா ரதிதாசர் - முற்றத்தில்
    இன்னுமோர் விண்மீன் எழுகிறதோ? எந்தமிழ்வான்
    மின்னட்டும் செந்தேன் மரபு.

    வெண்பாக் கொத்துகள் அருமை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா வாங்க எங்க வித்துவானை காணோம் என்று பார்த்தேன். கருமியோட உரையாடல் போல தவறான பாட்டுக்கு எல்லாம் பரிசு இல்லை என்பது போல கருத்தும் இல்லையோ என்றல்லவா நினைத்தேன்.
      அப்பா கடைசியில் வந்து விட்டீர்களே இப்பதான் மூச்சே வந்தது.

      நன்றி ! நன்றி ! வருகைக்கும் இனிய வெண்பாவிற்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. வெண்பாக்களைப் பார்த்துக் கருத்து சொல்லும் தகுதி எனக்கில்லை இனியா! உங்கள் முயற்சி வியக்க வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் இனியா! வெண்பாவும் உங்கள் வசப்பட்டுவிடும்.

    ReplyDelete
  15. வாருங்கள் தோழி !
    எல்லாம் ஒரு முயற்சி தானேம்மா பார்க்கலாம் பெரிய கடல் தான் கடப்பது எளிதில்லை என்று தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் பிராப்தம் வேண்டும் அல்லவா? பார்க்கலாம். நன்றிம்மா கருத்துக்கும் தொடர்வதற்கும்...!

    ReplyDelete
  16. எப்படி இப்படி எல்லோரும் வெண்பா என்று அழகு தமிழில் பா எழுதி வெற்றி நடை போடுகின்றீர்கள். அருமை சகோதரி! நண்பரின் குறும்பட வேலையில் இருந்ததால் இந்தப் பதிவுகள் எல்லாம் விடுபட்டிருக்கின்றது....வந்துவிட்டோமே..!

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.