Friday, July 31, 2015

புரட்டிப் போட்ட விதி

Image result for iimage
படத்திற்கு நன்றி கூகிள்
                   
                                       
கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்து  - தானுந்தன்  
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே 
கல்லாதான் கற்ற கவி !


அட என்ன பாக்கிறீங்க அது தான் சொல்ல்லிட்டேன் இல்ல வான் கோழி என்று ம்..ம் அப்புறம் என்ன   பயப்படாதீங்க அவ்வளவு மோசமா இருக்கும் என்று தோணலை. என்னமோ தெரியலை ......எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே  இருப்போம் யாராவது உங்க கெல்மட்டைக் கொஞ்ச நேரம் குடுக்கிறீங்களா ப்ளீஸ் ......


மகிழ்சியும் இன்பமும் பொங்க கோலம் இட்டு பொங்கி தெளித்தவளுக்கு காத்திருந்தது  பேரிடி. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்  வரும் போகும் தவணை முறையில். ஆனால் இந்த விதி இப்படி  மொத்தமாக தூக்கி மூலையில் போட்டு விட்டதே வெந்து வெடித்தாள் சீதா. அவளுக்கு எல்லாம் கணவன்தான். காசைக் கூட எண்ணிப் பார்த்ததில்லை ஒரு நாளும். காய்  கறியெல்லாம் வாங்குவது அவள் கணவர் தான். கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்த பொம்மை மாதிரி தன்னை அலங்கரிப்பாள். ஆனால் தன் கணவருடன் கை கோர்த்து கோவிலுக்கும் தியட்டருக்கும் மட்டுமே போய் வருவாள். அப்பப்போ தன் உறவுகளின் நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொள்வாள். மற்றபடி பாவம் சீதா வாயில்லா பூச்சி  வேறு வெளியுலகம் தெரியாதவள். படிப்பும் பெரிதாய் இல்லை. பத்தாம் வகுப்போடு சரி.

அவள் ரசித்து வாழ்ந்திருந்த வாழ்க்கையை நொடிப்பொழுதில் காலம் பிடுங்கிக்கொண்டது. எனென்னமோ மனதில் அலைபாய ஏங்கித் தவித்தாள். வாழ்வே சூனிய மாகி விட்டது போல் ஒரு உணர்வு. கலைந்து கிடந்த  கூந்தலைக் கூடக்  கோதத் தோணாமல் எங்கோ வெகு நேரமாக  வெறித்துப் பார்த்தபடி  இருந்தாள் சிலை போல. சீதா சீதா எங்கே இருக்கிறாய் என்று அழைத்த குரல்கூட அவள் காதுகளில் விழவில்லை. வீட்டின் அருகில் அடர்ந்து விரிந்த மாமரம். வெங்கட் ஓய்வுகிடைக்கும் போதெல்லாம் அங்குதான் உட்கார்ந்திருப்பான்..  அங்குதான் இவளும்  பிரமை பிடித்தது போல் உட்கார்ந் திருந்தாள். ஓரளவு வசதியான குடும்பம் தான் என்றாலும் வாழ்வாதாரம் ஏதும் பெரிதாக இல்லை. யாருமற்ற உலகில் தனிப்பட்டுப் போனவள் போல் எல்லாம் தகர்ந்து தலைவிரி கோலமாகக் கிடந்தாள்.

தன் அழைப்பிற்கு மறுமொழி இல்லாமல் போகவே அவள் அருகில் வந்தாள் சிநேகா. சீதாவின் தோழி. கணவனை விட்டால் அவள்தான் சீதாவின் உலகம். ஒரு கணம் பரிதாபமாக அவளை வைத்த கண் வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தவள். சட்டென கீழே முட்டுக் காலில் இருந்து அவள் தோள்களை ஆறுதலாக பற்றிக் கொண்டு மீண்டும் மெல்ல அழைத்தாள். திடுக்கிட்ட அவள் சிறிது நேரம் அவளையே மலைக்க பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல விசும்பத் தொடங்கினாள். குமுறி அழுதாள். பின்னர் வழியும் நீரையும் வேதனையையும்  வலுக்கட்டாயமாக விலக்க  எண்ணித் தோற்றாள். சினேகா கண்கள் கலங்க அவள் முதுகை தட்டிக் கொண்டிருந்தாள். என்ன செய்வதும்மா....

போன முறை பொங்கல் எவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம். இன்று .... அவள் மேலும் பேச முடியாது நாதழு தழுத்தது. “புத்தாடையும் புன் சிரிப்புமாக வலம் வந்தாரே….” கேவினாள்.


                              கடந்த பொங்கலன்று நிகழ்ந்த அந்த துயர சம்பவம் சிநேகாவின் மனதில் ஓடியது அன்று வழக்கம்போல் பொங்கல் பானையில்  பால்பொங்கி வழிய வாங்கி வந்த பட்டாசுகளை மகிழ்ச்சியில் குழந்தைகளோடு குழந்தையாக வெடித்து மகிழ்ந்தான் வெங்கட்.  சிறிது நேரத்தில் பொங்கி முடித்து படையல் வைத்து வணங்கிய பின்னர், சாப்பிட உட்கார்ந்தார்கள். என்ன நினைத்தானோ சட்டேன்று எழுந்த வெங்கட் தாயை பார்த்து வருவதாக கூறி புறப்பட்டான். கூட்பிடு தூரம் தான் உடனே வந்து விடுவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா ஆனால் அவன் திரும்பி  வரவேயில்லை. யாருக்கு தெரியும் அது அவன் கடைசி நாள் என்று .

                       பாவம் சீதா அவளுக்கு கோபம் எல்லாம் அவர் தங்கை மீது தான். அவளால் தானே தான் நிர்க்கதியானேன் என்று அடிக்கடி பொருமுவாள்.
வெங்கட்டின் செயல்களைக் கண்டு சினேகா பல தடவை ஆச்சரியப் பட்டிருக்கிறாள். ஒவ்வொரு செயல்களும் நிதானமாகவும் நேர்த்தியாகவும்  இருக்கும். எடுத்த பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்திலேயே வைத்துத் தான் பழக்கம் அவனுக்கு. மொத்தத்தில் அவன்  இருக்கும் இடம் எப்போதும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் இல்லையேல் ரொம்பக் கோபப் படுவான். ஆனால் அதற்கு எதிர்மாறாக இருப்பாள் அவன் தங்கை அப்படிப் பட்டவருக்கு இப்படி ஒரு தங்கையா என்று எரிச்சலுடன் பல தடவை முகத்தை திருப்பி இருக்கிறாள் சினேகா.  
                                   
வெங்கட் தாயை அழைத்த வண்ணம் வீட்டினுள் நுழையும் போது அங்கு யாரும் இருக்கவில்லை எல்லோரும் தம் தம் கடமைகளில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அந்த இரண்டு வயது குழந்தையை யாரும் கவனிக்கவே யில்லை. வெங்கட்டின் தங்கை கீதா உப்பியே இருப்பாள் ஊருப்பட்ட வருத்தங்களுடன்.அவள் தான் மருந்தை போட்டு விட்டு அப்படியே மறந்து வைத்து விட்டு போய் விட்டாள். அவளின் ஒரே ஒரு குழந்தை இரண்டு வயது தான் இருக்கும். அதுக்கு என்ன தெரியும் பளபளத்துக் கொண்டு பலவர்ண நிறத்தில் இருந்த போத்தலைக் கண்டதும், குட்டிப் புளுகோடு, அதை அந்தப் பச்சைமண் மெல்ல மெல்ல ஏறி அதை எட்டி எடுக்க முயலவும், அது விழுந்து உடையவும் சரியாக இருந்தது.

 

விழுந்த மருந்தை எடுத்து வாயில் போட பதைப்புடன் பறிக்க ஓடி வந்த வெங்கட் அவளது கணவன் அக் குழந்தையின் மாமன் அவன் அருமைத் தங்கையின் குழந்தை அதுவும் தவம் இருந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்த அன்புக் குழந்தை பாய்ந்து செல்ல தடால் என்று தடுக்கி விழுந்தவன். குழந்தையின் கையில் இருந்த மருந்தை தட்டி விட்டான். அதே நேரம் விழுந்த வேகத்தில் மேசை மூலையுடன் தலை மோத உடைந்த போத்தல் துண்டும் மண்டையில் ஆழமாக குத்தி ரத்தம் பீறிட்டது. விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் கண்டு பதை பதைத்தார் செய்வதறியாது துடித்தார்.

  அவன் மெல்ல நடந்ததை சொல்லி முடிக்கு முன் மயக்கமுற்றான், அவர்கள் உடனே எமேர்ஜென்சிக்கு அழைத்து வருவதற்குள். நிறைய ரத்தம் கொட்டி விட்டது மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடனும் ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு சென்றார்கள். ஆனாலும் பிரயோசனம் இல்லை என்று கை விரித்து விட்டார்கள். என்றாலும் முயற்சி செய்கிறோம் ஏன்று உள்ளே போனவர்கள். உடனேயே வெளியில் வந்து கை விரித்து விட்டார்கள். அவர் தங்கையின் கவனக் குறைவினால் ஏற்றபட்ட இழப்பை ஈடு செய்ய முடியுமா?

 

வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள் குறைவாகவும் துன்பங்கள் நீண்டும் அமைகின்ற சாபம் பெற்ற வாழ்க்கை என்றாகிவிட்டது அவளுக்கு. .
எல்லோருக்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஒவ்வொரு பொங்கலும்,  சீதாவிற்குத் தன் கடந்தகால இன்பங்களின் முடிவுரை குறிக்கப்பட்ட தேதியாகத் தோன்றும் அந்நாள்…………………………………………………………………………………

 

தவறு செய்பவர்கள் திருந்த இடமுண்டு தான் . தவறுகள் நல்ல பாடத்தைக்கற்றுக் கொடுக்கும் என்பதும்  உண்மை தான். ஆனால் அதையும் கற்றுகொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் அமைந்தால் சரி ஆனால் அமையாமலே போய் விட்டால்.... தவறுகள் செய்வது மனித இயல்பு தான் என்றாலும். கவனக் குறைவாலும், நல்ல பழக்க வழக்கங்களை கைக்கொள்ளா மையினாலும் ஏற்படும் அசம்பா விதங்கள் மன்னிக்க முடியாதவை அல்லவா?

 


47 comments:

  1. யார் கானமயில் யார் வான்கோழி.?

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா முதல் வருகை அதுவும் உடன் வருகை கண்டு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஐயா. என்னய்யா இது நீங்க எல்லாம் தான் கானமயில். நான் தான் வான்கோழி. இதில் என்ன சந்தேகம் இது என் முதல் முயற்சி தானே ஐயா அது தான் மிக்க நன்றி ஐயா! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. சில சமயங்களில் எதிர்பாராதவை நடந்து விடுகிறது. கவனக் குறைவை தவிர்த்திருந்தால் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம் என்பது உண்மைதான். மோசமான விபத்தில்கூட பிழைத்து விடும் அதிசயம் நடப்பதுண்டு. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ ! தங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
      ஆமா நீங்கள் சொல்வது சரி தான். ஆனாலும் இது கதை தானே சகோ இதுவே இப்படி தப்ப வைத்திருக்கலாமா என்று சட்டென எண்ணத் தோன்றுகி றதல்லவா அது... அது தான் வேணும்.ஏன்னா நிஜத்தில இப்படி எல்லாம் நடக்க வேண்டாமே என்பதற்காகவே தானே இக் கதை. சின்ன சின்ன அலட்சியங்களால் இப்படியும் அசம்பாவிதம் நேரும் என்ற ஒரு வெறும் கற்பனையே.
      மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. வேதனையாக உள்ளது. எதிர்கொண்டுதானே ஆகவேண்டும். வேறு வழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திட்டு ஊக்குவதற்கும்.

      Delete
  4. சந்தர்ப்ப(மு)ம் நம் மனதைப் பொறுத்து தான்... நாமே உருவாகிக் கொள்ளவும் முடியும்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  5. யாரைக் குறை சொல்வது ! விதி வலியதாச்சே !!

    ReplyDelete
    Replies
    1. விதியையும் மதியால் வெல்லலாம் என்பார்கள். விதிவழி தான் மதியும் செல்லும் என்பார்கள். எப்படியோ சாவுக்கும் சாட்டு வேண்டுமல்லவா?
      மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  6. கவிதையாக இருக்குமோ என்று பயந்து பயந்து வந்தேன் வந்த பிறகுதா தெரிந்தது அருமையான கதை என்று...பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வாங்க வாங்க சகோ ...அடேங்கப்பா அப்போ நான் நினைத்தது சரி தான் .....ஐயடா அப்போ நான் இனி கவிதை எழுதப் போவதில்லை........ ஏனா? நீங்கள் தான் பயப் படுகிறீர்களே. அட பூரிக்கட்டைகே இவ்வளவு பயப் பட்டதி ல்லையே நீங்கள் அதான் ........
      நன்றி நன்றி நன்றி !

      Delete
  7. புரட்டிப் போட்டுவிட்டது என்னையும் தோழி!
    விதி எந்த ரூபத்தில் வருகிறது என யாரால் எதிர்வு கூறமுடியும்?..

    அருமையான சிந்தனை. அழகிய நீரோட்டமாகக் கதை
    சென்றவிதம் சிறப்பு!
    கதையும் எழுத வரும் என்று நிரூபித்துவிட்டீர்கள்!
    தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா என் அன்புத் தோழியே உங்களைக் காணும் போதெல்லாம் கண்கள் பனிக்கிறது. மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளுகிறது. சொல்லி மாளாதும்மா god is great அவ்வளவு தான் சொல்ல முடியும்.
      புதிய முயற்சிக்கு ஊக்கம் தரும் வகையில் கருத்தளித்து ஊக்குவதற்கு மிக்க நன்றிம்மா !
      நலம்பல பெற்று வாழ வென் வாழ்த்தும்மா!

      Delete
  8. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வந்து பார்த்தேன் சகோ நன்றி !

      Delete
  9. கதையாக இருந்தாலும் கவிதையாக இருந்தாலும் இனியாவின் திறமைக்கு இனி ஏது ஈடு ! வாழ்த்துக்கள் தோழி உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி அளிக்கட்டும் .
    இந்தக் கதை கதையாகவே இருக்கடும் இனி வரும் காலங்களில் மகிழ்ச்சி ததும்பும் கதைகள் பொங்கி வழியட்டும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! என் அன்புத் தோழியே நீண்ட நாட்களின் பின்னர் தங்களின் வருகை கண்டு மனம் மகிழ்கிறது. தங்கள் விருப்பம் போல் அமைக்க எத்தனிக்கிறேன். மிக்க நன்றிம்மா!

      Delete
  10. வணக்கம் அம்மா.

    முதற்கதையிலேயே கதையின் ஒழுங்கும் சொற்கட்டும் வசப்பட்டுவிட்டன.

    வடிவமும் நுட்பமும் எழுத எழுத மேம்படும்.

    கவிதைகள் மட்டுமன்றி, கதை, கட்டுரைகள் என வெவ்வேறு வகைமைகளில் முன்னெடுக்கப்படும் படைப்பு முயற்சிகள் பரவலான கவனத்தைப் பெறும் என நினைக்கிறேன்.

    தொடருங்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் தங்களைப் போன்றோரின் ஆதரவு இருந்தால் எல்லாம் சாத்தியமே என்று தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் பரகதி யடையுமாமே அது போன்று ஊமைக் கனவுகளை தினம் கண்டு களிப்பதாலும் வலையுலக நட்புகளின் வாசமும் இங்கும் இம்மியளவாவது வீசாதா எனும் ஏக்கம் தானே அல்லவா தொடர்ந்தும் ஆதரவு தரவேண்டுகிறேன் நன்றி வரவுக்கும் இனிய கருத்துக்கும் ...!

      Delete
  11. Replies
    1. மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும் !

      Delete
  12. வணக்கம்மா,
    பாடலைக் கண்டதும், தங்கள் சகோ போல் வாசிப்போ என நினைத்தேன்,
    கதையாகவே இருக்கட்டும்,
    ஏதோ வாழ்க்கையை புரட்டி போடுகிறது சில சமயங்களில்,
    அருமையான ஆக்கம்,
    நன்றிம்மா,,,,

    ReplyDelete
    Replies
    1. சும்மா தான்மா முயற்சித்து பார்த்தேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
      \\\பாடலைக் கண்டதும், தங்கள் சகோ போல் வாசிப்போ என நினைத்தேன்,
      கதையாகவே இருக்கட்டும்,///// அப்படியா சரி முயற்சிக் கிறேன்மா.

      Delete
  13. வணக்கம் இனியவளே..! சிறுகதை எழுதும் உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். விதி எப்பொழுது நம் வாழ்வை மாற்றும் என்பதை யார் அறிவார். சின்ன நிகழ்வும் நம் வாழ்வை புரட்டிபோட்டுவிடும். இனி தொடர்ந்து தங்களது சிறுகதையை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் இனியா..

    ReplyDelete
    Replies
    1. வாங்கையா வாங்க பதிவுகளையும் காணலை ஆளையும் காணலை இப்போ தான் தூக்கம் கலைந்ததோ. டொக்கு எல்லாம் கண்டபாடி சொல்லாதீர்கள். \\\ இனி தொடர்ந்து தங்களது சிறுகதையை எதிர்பார்க்கிறேன்./////
      ஐயடா நானா... பார்க்கலாம் ... திருப்பாற்கடல் முழுவதையும் ஒரு சிறு எறும்பு குடித்து முடிக்க உன்னியது போலவே தோன்றுகிறது இந்த முயற்சி ஹா ஹா .... நன்றி சகோ! வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  14. Replies
    1. வணக்கம் !முதல் வருகைகண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.மிக்க நன்றி !தங்கள் இனிய வருகைக்கு தொடருங்கள் தொடர்கிறேன் ...!

      Delete
  15. சபாஷ்! சபாஷ்! பன்முகப்புலமை வெளிப்படுகிறதே... வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் பா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா வாங்க என்ன இவ்ளோ தாமதம்.ம்...ம்..ம் ஆமா எங்கே என் வெண்பா வரும்போது கொண்டு வரவேணாமா? வீட்டில் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்மா...... சும்மா சொன்னேன்டா.
      நீங்கள் வருவதே எனக்கு பெருமகிழ்வு தான். நன்றி டா வரவுக்கும் கருத்துக்கும் ...!

      Delete
  16. வணக்கம் இனியா! இது முதல் கதை என்று நம்ப முடியவில்லை. சிறுகதைக்குரிய எல்லா அம்சங்களும் இதில் உள்ளன. வாழ்விலும் இது போல ஒரு சிறு சம்பவம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். தொடர்ந்து எழுதுங்கள். சிறுகதை மன்னியாகிவிடுவீர்கள். (மன்னனுக்குப் பெண்பால் மன்னி தானே!!!) வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் இனியா!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .....எடுத்த சாமான்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் எனக்கு கோபம் வரும் ஹா ஹா தேடும் நேரம் விரயமாகும் அதனால் ஆபத்துகளும் உண்டு தானே. அது தான் இந்தக் கதை வெறும் கற்பனையே. நன்றிம்மா! வரவுக்கும் தரும் ஊக்கத்திற்கும்.

      Delete
  17. இனியா!

    விதி எல்லாம் யாரையும் புரட்டிப் போடாதுங்க. முள் யாரையும் டார்கட் பண்ணிக் குத்தாது.

    விதியை அப்பப்போ அங்கங்கே புரட்டிப் போடுவது மனுஷாதான்!

    அதேபோல் முள்ளைக் குத்திக் கொள்வதும் மனுஷாதான்! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் நலம் தானே?நீண்ட நாட்களின் மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சியே.
      \\\விதி எல்லாம் யாரையும் புரட்டிப் போடாதுங்க. முள் யாரையும் டார்கட் பண்ணிக் குத்தாது. .///
      ஆமால்ல நீங்க சொல்வதும் ஞாயமா தான் தெரியுது. ம்..ம் விதிக்கு பலம் இல்லை இல்ல நம்ம தூக்க. தூக்கினால் தானே நம்ம புரட்ட முடியும். ஹா ஹா....... முள்ளும் நம்மைத் தேடி வரப் போவதில்லை தானே உண்மை தான். அப்போ மொத்ததில கதை கந்தல் அப்படித் தானே வருண் ? இது என்ன கேள்வி இனியா ...அதை வேற சொல்லனுமாக்கும் ஹா ஹா ...... சும்மா .......சொன்னேன்

      நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  18. இது வான்கோழி போலத் தெரியவில்லை இனியா. வான்கோழி என்று தவறாக நினைத்துக்கொண்ட மயில் தான், மயில் தான் , மயில் தான்! :-)
    நல்ல கதை தோழி..கவனக்குறைவால் ஏற்படும் பேரிழப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாம்மா தேனு நலம் தானே ?
      என்னம்மா தேனு இப்படி அடம் பிடிக்கிறீங்களேம்மா .....சரி உங்க ஆசையை என் கெடுப்பான் அப்படி இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி தானே. நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் மா ...!

      Delete
  19. நுட்பம் உங்களுக்கு இருக்கிறது
    தொடர்ந்து எழுதுங்கள்
    ஒரு கதாபாத்திரம் கதையில் மரணம் அடைந்தால் கதை நீண்ட நாட்களுக்கு பேசப்படும் .
    வாழ்த்துக்கள் சகோதரி கதைக்கு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! நீண்ட நாளைக்கப்புறம் காண்பதில் மகிழ்ச்சியே. என் அம்மு நலம் தானே?
      \\\\நுட்பம் உங்களுக்கு இருக்கிறது
      தொடர்ந்து எழுதுங்கள் ///// ம்..ம் முயற்சிக்கிறேன். நன்றி சகோ! தாங்கள் தரும் நம்பிக்கைக்கும் ஊக்கத்திற்கும். வாழ்த்துக்கள் ....!

      Delete
  20. இனியாச்செல்லம்!

    நான் இதற்கு கருத்திட்டதாக நினைவு!@!@ *#%
    சரி! மீண்டும் கருத்து! ரொம்ப தான் தன்னடக்கம் உங்களுக்கு:) கதை நன்றாக வந்திருக்கிறது! விதியோ மதியோ! அந்த கவனமின்மை தான் எத்தனை பெரிய சிக்கலில், துயரத்தில் கொண்டு விட்டிருக்கிறது!:( கருத்துள்ள கதைம்மா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா வாங்க. அம்முக்குட்டி ... ம்..ம் அப்போ யார் திருடி இருப்பாங்க. காக்கா எல்லாம் அங்கு ஜாஸ்தி தானே வழியிலேயே திருடி இருக்கும் ஹா ஹா ....அது சரி அப்போ ஆபத்து இல்லை கதை தொடரலாம் என்கிறீர்கள் இல்லையா அம்மு சரி பார்க்கலாம் நன்றிம்மா ! வாழ்த்துக்கள் ...!

      Delete

  21. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. வந்து பார்த்து கருத்தும் இட்டேன் மிக்க நன்றி ஐயா !
      வாழ்க வளமுடன் ...!.

      Delete
  22. வணக்கம் சகோ நலம்தானே ? விதி வலியது அருமையாக கதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அருமையான கதை! சகோதரி! சூழ்நிலைகள் சிலசமயம் அவ்வாறாகிப் போகின்றது...உயிரைப் பறிக்கும் அளவு. நன்றாக எழுதுகின்றீர்கள்.

    கீதா பயணத்தில் இருந்ததால் வலைப்பக்கம் வர இயலவில்லை...இப்போது மீண்டும்...

    ReplyDelete
  24. வணக்கம்
    அம்மா

    கதை நன்றாக உள்ளது விதி யாரை விட்டு வைத்தது... அருமையாக உள்ளது தொடருங்கள் அம்மா எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  25. வணக்கம் சகோ !

    அடடா கவிதையில் இருந்து கதைக்கு முன்னேற்றம் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  26. இனியாம்மா பதிவிட்டுள்ளேன் பார்க்க வில்லையா?

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.