Thursday, August 27, 2015

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

Image result for பலாப்பழம் images
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது ஏன் எனக்கு மட்டும் விதிவிலக்கா... என்ன ?            ( பட உதவிக்கு  கூகிளுக்கு நன்றி !)                     அன்னிக்கு ஒரு நாள் என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வாசிகசாலைக்கு சென்றேன். தமிழ்நூல்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். அப்போது  ஒரு பகுதியில் அரைவாசிக்குமேல் இரண்டு மூன்று தட்டுகளில் தமிழ் புத்தகங்கள் அடுக்கி இருக்க கண்டு ரொம்ப ஆர்வத்தோடு எனக்கு பிடித்த புத்தகங்கள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . அப்போது இரண்டு மூன்று நூல்கள் அகப்பட அதை எடுத்து வந்து வாசித்தேன். அதில்

கணக்குப் பண்ணுவோம் வாங்க .........என்று இருந்தது 

அட இதென்ன அப்படி என்ன கணக்குப் பண்ணப் போறாங்க என்று ஆர்வத்தோடு நானும் வாசித்து  பார்த்தேன். அட இது இப்ப ரொம்ப அவசியம் என்று  எனக்கு தோன்றிற்று உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் ஆச்சரியமாக இருந்தது. அது தான் பகிரலாமே என்று எண்ணினேன்.  அட அலட்டாம விடயத்திற்கு வா என்கிறீர்களா? சரி சரி   இதோ.....

அது வேறு ஒன்றுமில்லைங்க

பலாப் பழத்தை வெட்டாமலே எத்தனை சுளை இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அட இதெல்லாம் எனக்குத் தெரியாது  உங்களுக்குத் தெரியுமா? ம்..ம்..ம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஆனால் நம்ப viju அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெட்டாமலே அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள பழம் பெரும் கணித நூலான கணக்கதிகாரம் ஒரு வழி சொல்லியிருக்கிறதாம். இது விந்தை தானே ...

இதோ  கணக்குப் பண்ண  அதற்குரிய வெண்பா வேறு போட்டிருக்கிறார்கள்... ''பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !
ஒரு பாலாப் பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று
கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு பலாப் பழத்தின் காம்பு அருகில் உள்ள சிறு முட்களின் எண்ணிக்கையை   6  ஆல் பெருக்கி வரும் விடையை   5   ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.

அதாவது பலாப் பலத்தின் முற்களின் எண்ணிக்கை:   100
இதை 100*6=600 பின்பு   600-ஐ   5- ஆல் வகுக்க , வரும் விடையே சுளைகளின் எண்ணிக்கை யாகும்.

ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா?  தெரிந்தவர்களுக்கு நிச்சயமா இருக்காது தெரியாதவர்கள் பரிசோதித்து பார்த்து சொல்லலாம்.

எனக்கு இங்கெங்கே கிடைக்கப் போகிறது. அதனால் தான் சொன்னேன். யாரவது  வீட்டு  முற்றத்தில் வைத்திருந்தால்  சுலபமாக கணக்கிடலாம். ஹா ஹா ....


46 comments:

 1. பலாப்பழத்தை என்னிடம் கொடுத்தால் முழுமையாக தின்று விட்டு கணக்கு சடொல்லி விடுவேன்.
  அகமதின் அழகு முகமதில் தெரியுமே...

  ReplyDelete
  Replies
  1. \\\\அகமதின் அழகு முகமதில் தெரியுமே...///உண்மை உண்மை ஆனால் பலாப்பழதிற்கு பொருந்தாதே பாவம். இனிப்பான இதயம் கொண்ட பலாவிற்கு ஏன் கொடூர முகம். ம்..ம் புறவழகை மட்டும் வைத்து கணக்கிடமுடியாது தானே இல்ல ...
   மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 2. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டு சொல்லிவிடுவார்கள் போல எளிதில்..
  தலைப்பும் சூப்பர்!
  இனிப்பான வெண்பா...

  ReplyDelete
  Replies
  1. எத்தனை ஆற்றல் மிகுந்தவர்கள் ஆச்சரியப் படாமல் இருக்க முடியுமா என்ன. மிக்க நன்றிம்மா! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 3. அதை நேரிடையாகப் பழக வேண்டும்..
  பலாப்பழத்தின் காம்பின் அருகில் எண்ணுகின்றேன் என்று முழுப்பழத்தின் முட்களையும் எண்ணி முடிப்பதற்குள் - அடுத்த சீசன் வந்து விடும்!..

  ஆனாலும் இந்த கணக்கு ஓரளவு சரியாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. எதிலிருந்து எதுவரை எண்ணனும் என்று சரியாக இன்னும் தெரியலையே பரீட்சித்து பார்த்தால் தான் தெரியும். மிக்க நன்றி சகோ !

   Delete
 4. ஆஹா ...இப்படியும் ஒரு வழி இருக்கிறதா !!!! ஆச்சரியம் தான் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

  ReplyDelete
  Replies
  1. அப்போ இனி எண்ணிப் பார்த்து தான் பலாப்பழம் வாங்குவீர்கள் இல்லம்மா ஹா ஹா ......மிக்க நன்றிம்மா! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 5. வணக்கம்மா,
  நலமா?
  இப்பாடல் நானும் படித்திருக்கிறேன். ஆனால் பரீசித்துப்பார்க்கல,,,,,,,,,
  தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. \\\\நானும் படித்திருக்கிறேன். ///அப்படியா நான் நினைத்தேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று.
   மிக்க நன்றிம்மா! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 6. முள் எண்ணிக்கையில் கணக்கிடலாம் என்று அறிந்ததுண்டு ஆனால் பாடல் இப்போது தங்களின் மூலம் தான் அறிகின்றோம் சகோதரி! கணக்கதிகாரப்பாடலைத் தந்து அருமையான விளக்கம் கொடுத்தமகுக்கு மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 7. ஓணம் வாழ்த்துகள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ! மிக்க நன்றி!வருகைக்கு !

   Delete
 8. மிக அருமை! இது வரை இந்தப்பாடலையும் வாசித்ததில்லை. பொருளையும் அறிந்ததில்லை. இனிமேல் அடுத்த பலாப்பழ சீசனில் பரீட்சித்தும் பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா பரீட்சித்து சொல்லுங்கள் அறிய ஆவலாகவே உள்ளது.
   மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 9. நம் முன்னோர் வணங்குதலுக்கு உரியவர்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா போற்றாமல் இருக்கவே முடியாது. மிக்க நன்றி சகோ வரவுக்கும் கருத்துக்கும் .

   Delete
 10. இதை நானும் ஏதோ நூலில் படித்தேன்! ஆச்சர்யமான விஷயம்தான்!

  ReplyDelete
  Replies
  1. அப்பிடியா இரவின் புன்னகையும் இப் பதிவை முன்னரே இட்டுள்ளார். மிக்க நன்றி சகோ !

   Delete
 11. அடைப்படியுமுண்டோ?ஆரஞ்சுப்பழம்போல.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா! வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 12. ஆமாம் இனியா, இதை வெற்றிவேல் தன் தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்
  நல்லா நூல்கள் தேடிப் படிக்கிறீங்க...வாழ்த்துகள். இப்படியே எங்க கூட பகிர்ந்துக்கோங்க, சரியா? :-)

  ReplyDelete
  Replies
  1. okம்மா நீங்க சொல்வது போலவே செய்கிறேன்மா. அப்போ தான் வாசிக்கும் ஆர்வமும் வளரும், வாசிப்பது மனதில் நிற்கவும் இது ஒரு வழி இல்லையாம்மா தேனு. நன்றி! வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 13. இந்தப் பதிவைப் பாருங்கள், சும்மாப் பகிரலாம் என்றுதான் :-)
  http://iravinpunnagai.blogspot.com/2013/07/blog-post_17.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா சென்று பார்த்தேன் அவர் எப்பவோ இட்டு விட்டார் நமக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கு. அப்போ பலருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஹா ஹா ...நான் கொஞ்சம் லேட்டு தான் கொஞ்சம் இல்ல நிறையவே தான் மிக்க நன்றிம்மா !

   Delete
 14. அன்புள்ள சகோதரி,

  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

  ஒரு பாலாப் பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று கண்டு பிடிக்க வெண்பாவுடன் விளக்கம் அளிக்கப் பட்டிருப்பது கண்டு வியந்தோம்.

  நன்றி.


  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! ஆச்சரியம் தாங்க முடியாம தான் நானும் இதை பகிர்ந்தேன். இது மட்டுமில்லை இன்னும் நிறைய இருக்கும் போல...மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 15. அட.. இதென்ன இது?..
  எப்போ இந்தப் பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு வந்தீங்கள்?..

  நான் காணவே இல்லையே..:(
  இருந்தும் வாசனை வருகிறதே என்று பார்க்க வந்தேன்.
  பழத்துடன் வெண்பாவின் ருசியையும் கண்டு மலைத்து நின்றேன்!

  மிக அருமை! நல்ல தேடல்.
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா .. பலாப்பழ வாசமா இழுத்திச்சு உங்களை. அப்போ இனி ஒவ்வொரு பதிவுக்கும் பழம் வச்சுத் தானா அழைக்கணும் இல்ல வாசனைத் திரவியங்கள் தான் தெளிக்கணுமா ... என்ன ம்..ம் வர வர ரொம்பக் குறும்பு ...இல்ல ம்..ம்
   மிக்க நன்றிம்மா! அன்புத் தோழியே. வரவு கண்டு மிக்க மகிழ்ச்சிம்மா.

   Delete
 16. சுவாரசியமான பகிர்வு தோழி! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா தங்கள் வரவு நல்வரவாகுக.! தளத்தில் இணைந்து தொடருங்கள் நானும் தொடர்கிறேன் ..மிக்க நன்றி வாழ்த்துக்கள் ..!

   Delete
 17. என்னது பலாப் பழமா எட்டுவருடம் ஆச்சு இதைக் கண்டு இப்போ கிடைத்தால் கணக்குப் பண்ண நேரம் இருக்காது காலி பண்ணிட்டுத்தான்
  கவிதைக்கே வருவேன் !

  நல்ல தேடல் பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அட என்ன அதிசயம் ஐயாவிற்கு ஓய்வா என்ன. அது தான் மழை கொட்டிசோ ம்..ம் \\\காலி பண்ணிட்டுத்தான்
   கவிதைக்கே வருவேன் ! /// நானும் அந்த நிலை. எத்தனையை இழந்து விட்டோம். தான் ஊருக்கு தான் போகணும். தங்கள் வரவு காண எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. இடையில் கவிதைகள் போடுங்கள் இல்லாவிடில் மறந்து விடப் போகிறீர்கள். மிக்க நன்றி சீர் ! வரவுக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

   Delete
 18. வித்தியாசமான செய்திப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 19. இனியாச்செல்லம்!!
  இந்த பழம் அத்தனை ஒன்றும் இனிமை இல்லை , உங்களை காட்டிலும்:) இந்த பாடல் கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிஞ்சுகிட்டேன். விஜூ அண்ணாவும் இதை ஒரு பதிவிலோ, பின்னூட்டத்திலோ குறிப்பிட்டதாக நினைவு:) பதிவு மணக்குது போங்க:)

  ReplyDelete
  Replies
  1. அட அம்மு இதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க. பலாப் பழம் கோச்சுக்கப் போகுதில்ல. இப்படி எல்லாம் சொல்லி என்னைக் கலாய்க்கலாமா? அம்மு ம்...ம் ஆமா உங்கள் viju அண்ணா already எழுதிட்டரா ஐயடா இது தெரியாம நான் வேற. ஆமா எங்க உங்க அண்ணா நல்ல காலம் இன்னும் பார்க்கலை. ஐய என்ன சொல்லப் போகிறாரோ தெரியலையே ....ம்..ம்..ம் ஆமா எங்க உங்க அண்ணா காணோமே.... நீங்க பார்த்தீங்க .....ரெஸ்ட் எடுக்கிறாரா சரி சரி நல்லா எடுத்திட்டு மெதுவா வரட்டும். நன்றிம்மா வாழ்த்துக்கள் அம்மு !

   Delete
 20. தமிழும் கணக்கும் வாழ்வியலும் தாவர அறிவும் ஒன்றிணைந்து எப்படியெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது அந்தக்காலத்தில். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி இனியா.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி உங்கள் வரவில் மட்டற்ற மகிழ்ச்சியே ம் உண்மை தான் எத்தனை ஆற்றல் அறிவு மிக்கவர்கள் உண்மையில் அதிசயமே .நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 21. பாடலும் பொருளும் அருமை சகோ. எனது வலைப்பூ பக்கமும் வாருங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் !

   Delete
 22. எத்தனை சுளை இருக்கிறது என்று முன்னரே தெரிந்தால் யாருக்கு எவ்வளவு என்று திட்ட மிட்டு விடலாம் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. ஆமால்ல சரியாகச் சொன்னீர்கள் சகோ ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 23. Iniya: In all the fairy tales the "heroine" will be beautiful and good looking, the villain is always an ugly girl. Shrek series is the only exception to break this "prejudice".

  அகத்தின் அழகு முகத்தில் தெரியலாம். தெரியாமலும் போகலாம்.

  உங்க சிந்ந்தனைகள் எல்லாம் என் சிந்தனைகளை ஒத்து இருப்பதால் நீங்க எழுதுவதெல்லாம் நான் எழுதியது போல் இருக்கு..:))) நம்ம எதுக்கு கஷ்டப்பட்டுப் பதிவெழுத?? அதான் இனியாதான் நம்ம சிந்த்னைகளை அள்ளிக் கொட்டுறாங்களேனு நான் பதிவெழுதுறதையே விட்டுவிட்டேன். :))

  ReplyDelete
  Replies
  1. இது நியாயமா தெரியுதா உங்களுக்கு.... இது கொஞ்சம் ஓவரா தெரியலை சகோ....ம்..ம்..ம் ...இந்த சாக்குப் போக்கு எல்லாம் சொல்லப் படாது. உங்க எழுத்தையே ஆர்வமா எல்லோரும் பார்த்துக் கொண்டு இருப்போம். அப்புறம் என்ன யோசனை வெளுத்துக் காட்ட வேண்டியது தானே. என்ன அரசியல் அது இது என்றால் நமக்கு கொஞ்சம் நமக்கு அவ்வளவா ஓடாது. என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியாமல் நழுவிடுவேன். அதனால ஒன்றும் கோபமில்லையே வருண். எனக்குத் தெரியும் நீங்க கோபிக்க மாட்டீங்க என்று... ஏனா ?... நீங்க தான் நல்ல பிள்ளை யாச்சே எனக்குத் தெரியுமே நன்றி ! வருண் வருகைக்கும் கருத்திற்கும் !

   Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.