சித்திரை வருடப் பிறப்பினை ஒட்டி எழுத்துப் படைப்புக்கள் திரு ரூபன், திரு. யாழ் பாவணன் அவர்கள் நடாத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய வெண்பாக்கள்.
முல்லைச் சிரிப்பொன்று மொட்டவிழ்க்கும் காலத்தில்
கல்லைக் களர்நிலத்தைக் காவியமாய்ச் - சொல்லின்
நனைமழையில் நாவுற்ற நற்கருத்தே ஆள்க
இணையத் தமிழே இனி
நிலாபார்த் திருந்த நெடுமுற்றம் மண்ணில்
உலாப்போகும் எந்தமிழ் ஊற்றில் - பலாவாய்
இணைகின்ற தேன்நீயே இன்புற்று வாழ
இணையத் தமிழே இனி
மண்ணில் சிறகே மகிழ்ந்தெங்கள் வாழ்வான
அன்னைத் தமிழே அருமருந்தே - வண்ணக்
கனவுண்டு நீவாழும் சங்கப் பலகை
இணையத் தமிழே இனி
வேர்நீயே தந்த விதை நெல்லைக் கொண்டிந்தப்
பாராண்ட நெஞ்சங்கள் பாரட்ட - சீராய்
மணக்க வருகயாம் மாண்புற்று வாழ
இணையத் தமிழே இனி
தென்றல் கரும்பெல்லாம் தேடக் கிடைத்தாலும்
உன்றன் சுவைக்கெதுவும் ஒப்பாமோ? - குன்றா
நினைவுச் சுவையேநீ நீடித்து வாழ
இணையத் தமிழே இனி
கலைவளர நீநின்ற தக்காலம் இன்றே
வலைவளர வேண்டும் வருக - தலையே
உனையென்று கொண்டோம் உயிர்நின்று வாழ
இணையத் தமிழே இனி
கொல்லத் துடிக்கின்ற கோழைகளின் கைசிக்கி
மெல்ல உனதாற்றல் மங்குவதோ? - சொல்லின்
இணையில் பெருஞ்சிறப்பே உன் இல்லம் இந்த
இணையத் தமிழே இனி
வெள்ளம் வருமுன் அணைகட்டும் நேரமிது
எள்ளிநகை யாடுவர்யார் எந்தமிழை? - துள்ளும்
கணைகொண்டு எப்பகையும் துண்டாடும் கையாய்
இணையத் தமிழே இனி
SUPER... Supet....
ReplyDeleteFrom Cell
வாங்க ஜி! இது என்ன சோர்ட் அண்ட் ஸ்வீட்டா ஓ ...cell என்பதாலா. ok ok நன்றி ஜி இவ்வளவு வேகமா ஓடி வந்து கருத்து இட்டதற்கு. ரோம்ப ரொம்ப நன்றி ஜி !
Delete
ReplyDeleteஅம்மா,
வணக்கம்.
உங்களின் படைப்பில், ஆகச் சிறந்த வெண்பாக்கள் இவை. போட்டிக்காய் எழுதி இருப்பீர்களாயின், பிற கவிதைகளைப் பார்ககவில்லை என்றாலும் இதைப் பார்த்தமட்டில் சொல்கிறேன்.
முதற்பரிசை வெல்லும் தரமுள்ளவை இவ்வெண்பாக்கள். மற்ற கவிதைகளிலும் மரபார்ந்த வடிவத்தில் கவிதை சார்ந்த இத்தரம் இருப்பின் எழுதப்படுவன எல்லாவற்றிற்கும் முதற்பரிசு கொடுக்கலாம்.
தமிழ்ப் பற்றினால் தமிழ்பற்றியே பேசும் ஒருவனின் உள்ளிருந்து புறப்படும் அலங்காரமற்ற சம்பிரதாயத்திற்காய்ச் சொல்லப்படாத வாக்காக இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளும்..., மரபின் தோரணவாயிலில் நுழைவதற்காய் மகிழ்ந்து கைகூப்பிய என் வரவேற்பும்.
நன்றி.
வாங்க ஐயா வாங்க!
Deleteநீங்கள் வருவதும் கருத்து இடுவதுமே நமக்கு கிடைத்த வரம். அதினிலும் பெரியது தாங்கள் தரும் இனிய கருத்து. இவை எப்போதும் எனக்கு பெரும் தென்பும், நம்பிக்கையும் தர வல்லவை. நீங்கள் கூறியதே போதும் எனக்கு முதல் பரிசு கிடைத்தது போலவே மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி ! வரவுக்கும் இனிய கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!
அருமைப்பா.........அருமை......
ReplyDeleteஇனியாவோடு விளையாடும் தமிழே....
என்னோடும் விளையாட வாராயோ....
ஆசைக்கு சொன்னேன் சகோ....வாழ்த்துக்கள்.
நிச்சயமா வரும்!
Deleteநாமும் நாடிநிற்க நயம்பட தமிழ்
தானும் தேடி வரும் நம்மை
மிக்க நன்றிம்மா உமா வரவுக்கும் வாழ்த்திற்கும்! வாழ்த்துக்கள் ...!
அற்புதமாக எழுதியுள்ளீர்கள் தோழி.
ReplyDeleteஆறுதல் பரிசு கிட்டியிருப்பதை நண்பர் திரு. ரூபன் அவர்களின் தளம் வாயிலாக அறிந்தேன்.
இனிய நல்வாழ்த்துகள் தோழி.
அடேங்கப்பா வாங்க வாங்க ! அதானே பார்த்தேன் ஏன் இவ்வளவு மழை இன்னு இப்பதானே புரியுது. இத்தனை காலத்திற்கு அப்புறம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியே. மீண்டும் வலைத்தளத்தில் வலம் வர என் மனமார்ந்த வாழத்துக்கள்...! மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும். தொடர்ந்து சந்திக்கலாம்.
Deleteவணக்கம் சகோ இனியா !
ReplyDeleteபொங்கும் கவியில் பொலிகின்ற சந்தங்கள்
எங்கும் மகிழ்வூட்டும் ! என்னுயிரில் - அங்கமாம்
செங்காந்தள் பூவொன்று சித்திரையில் பூத்தார்ப்போல்
மங்காத் தமிழின் மணம் !
அருமையான வெண்பாக்கள் தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
இன்னும் எழுதுங்கள் எம்தமிழை போற்றுங்கள் அதுவே தாய்மொழிக்குச் செய்யும்
கடமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வரவேணும் வரவேணும் ம்..ம்..ம் தங்கள் தொடர் வருகை கண்டு மனம் மகிழ்கிறது. சர்க்கரை பந்தலிலே தேன்மாரி பொழிந்தது போல் இனிய வெண்பாவில் கருத்து வேறு அப்புறம் என்ன என் மகிழ்ச்சிபற்றி சொல்லவா வேண்டும். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ...!
Deleteஅருமை !அருமை !வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !தங்களின் வெண்பா விருத்தம் கண்டு உள்ளம் வியந்து நிற்கின்றது ¨!பாராட்டுக்கள் வெற்றியும் உமதாகட்டும் .
ReplyDeleteவாருங்கள் தோழி ! தங்களின் இனிய கருத்துக் கண்டு நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் ...!
Deleteஅற்புதமான வெண்பாக்கள்
ReplyDeleteபதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாங்க சகோ ரொம்ப நாளைக்கப்புறம் தங்கள் வரவு காண மகிழ்வே. நன்றி வரவுக்கும் இனிய கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!
Deleteஇனியாச்செல்லம்!!!
ReplyDeleteவாவ்! எங்கயோ போய்டீங்களே மா!! வெண்பாக்கள் அத்தனையும் பொன் பெறும்!! நம்ம வாத்தியாரரே சொல்லிட்டாரே!! சூப்பர்! வெற்றிபெற வாழ்த்துக்கள் செல்லம்.
* வெள்ளம் வருமுன் அணைகட்டும் நேரமிது
எள்ளிநகை யாடுவர்யார் எந்தமிழை? - துள்ளும்
கணைகொண்டு எப்பகையும் துண்டாடும் கையாய்
இணையத் தமிழே இனி *
நச்சுனு முடிச்சிருகீங்க!! வாழ்த்துக்கள்!
வாங்கம்மா வாங்க ! என்ன பொன் பெறுமா...... உங்க வாய் மொழியே எனக்கு பொன் தான் டா அம்மு ! என்ன? வெற்றி பெற ...வாழ்த்துக்களா ம்..ம்..ம் இப்ப தான் பொண்ணு விழிச்சிருக்கா பொறுங்க நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க ok வா ஹா ஹா நன்றிம்மா அம்மு ! வாழ்த்துக்கள் எதுக்கா ? பதிவுகள் போடுவதற்குத் தான்.
Deleteகவிதை நடையில் நிகழ்வுகளைப் பகிரும் உங்களது பாணி அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் ...!
Deleteவெள்ளம் வருமுன் அணைகட்டும் நேரமிது
ReplyDeleteஎள்ளிநகை யாடுவர்யார் எந்தமிழை? - துள்ளும்
கணைகொண்டு எப்பகையும் துண்டாடும் கையாய்
இணையத் தமிழே இனி
அருமை சகோதரியாரே
அருமை
நன்றி
மிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் ...!
Deleteசிறப்பான வரிகள்.... வாழ்த்துகள்....
ReplyDeleteமிக்க நன்றி சகோ !வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் ...!
Deleteஉங்கள் இந்தப் பதிவைப் பார்க்கும் போது என்னுள் நான் ஒரு தாழ்ச்சி நிலையினை( inferiority complex) பின்னூட்டம் இடுபவர்கள் கூட தமிழ்ப் புலமையில் மிளிர்கிறார்கள். போட்டியின் பரிசு அறிவிக்கப் பட்டதாய் ஒரு பின்னூட்டம் மூலம் அறிகிறேன் உங்கள்திறமைக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்கையா தங்கள் முதல் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இனிய கருத்தும் வாழ்த்தும் இன்னும் மகிழ்வித்தது. மிக்க நன்றி ஐயா ! வருகைக்கும் கருத்திற்கும். வாழ்க வளமுடன் ....! தங்கள் தொடர வருகை மேலும் என்னை ஊக்குவிக்கும். தொடருங்கள் நானும் தொடர்கிறேன் ....!
Deleteகலை வளர்த்த தமிழ் வலை வளர்க்கும் , வளர்க்கிறது
ReplyDeleteமிக இனிமையான வரிகள் இனியா, வாழ்த்துகள்
வாங்க தேனு தேனு வந்தாலே தேன் மாரி பொழிந்தது போல மகிழ்ச்சியாகவே உள்ளது நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்...!
Deleteஉங்களின் எழுத்து படைப்பு மிக அற்புதம் !
ReplyDeleteமிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஆஹா, இனியாம்மா,,,,,,, வாழ்த்துக்கள்,
ReplyDeleteவெண்பா எனும் உயர்பா தங்கள் கரங்களில்
நர்தனம் ஆடுகிறது எம் அகக்கண்கள் மட்டுமா
புறக் கண்களும் களிக்க காலம்
கரம் குப்பி வரவேற்கிறது வாழ்த்துகளுடன்
நன்றிம்மா.
என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா. ஹா ஹா .....பேராசிரியரே ....நக்கல் கிக்கல் பண்ணலையே உண்மையாவா சொல்கிறீர்கள். ரொம்ப...... மகிழ்ச்சிம்மா மிக்க நன்றி! வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteஇணையத் தமிழ் உங்கள் பாக்களிலே இனிய தமிழ்
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
இனியா சகோதரி! தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது....பரிசிற்கு வாழ்த்துகள்! தங்கள் கவிதைகள், இன்னும் நம் நண்பர்கள் பலரின் கவிதைகள் தமிழ், நம் விஜு ஆசானின் பாக்கள், தமிழ் எல்லாமே ஐயோ நமக்கு தமிழே தெரியவில்லையே என்றும் தோன்ற வைக்கின்றது.....
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி!
ஆஹா சகோதரரே கவலை வேண்டாம். நாளடைவில் எல்லாம் கற்றுக் கொள்ளலாம். அதுவுமில்லாமல் இதுவீண் ஆதங்கம் உங்கள் எழுத்துக்களை தான் நான் பார்க்கிறேனே என்னால் அப்படியெல்லாம் எழுதமுடியாதே. நான் மலைத்திருகிறேன் தங்கள் பதிவுகள் பார்த்து அப்படி இருக்க ஏன் வீண் கவலை உங்களுக்கு.ம்..ம்..ம் ஐயடா இன்னும் குறும்படம் பார்த்து முடியலை ஆரம்பம் பிரமாதம் பாடல் சுப்பர். மேலும் பார்த்து விட்டு கருத்து இடுகிறேன். நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!
Deleteஅமிழ்தமிழ். அருமை.
ReplyDeleteமுதல் வருகை கண்டு மிகவும் மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ! வாழத்துக்கள் ...!
Deleteஅற்புதமான வெண்பாக்கள். விஜு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அழகு தமிழில் பாடிய வெண்பா
என் மனதிலும் ஆழமாய் பதிந்துள்ளது...
அருமையாக உள்ளது. தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-