அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
இன்னபிற மொழிகளிலே ஏற்பட்ட நேயம்
இறக்கட்டும் போதாதோ தமிழ்பட்ட காயம்?
சின்னவரும் பெரியவரும் எடுத்தாள வேண்டும் !
சிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்!
மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
மடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?
வென்றாலும் தோற்றாலும் வழிநீயே என்றே
வருகின்றோம் வாழ்விக்க வாஎங்கள் முன்னே!
அன்றாடம் யாம்வாழ நீமூச்சாய் வேண்டும்!
அடிமைத்தீ அணைக்கின்ற பேச்சாக வேண்டும்!!
குன்றேறும் குமரன்உம் கனிவான பிள்ளை!
குலமான குடிநாங்கள் தமிழேஎம் எல்லை!
என்றும்உன் சுவைபேசி யாம்வாழ வேண்டும்
எழுத்தாய்நீ பேச்சாய்நீ எமையாள வேண்டும்.!
நன்னீரைப் பொழிகின்ற மேகங்கள் போலே
நலமென்றும் எம்வாழ்வில் தருகின்ற தாயே!
உன்மக்கள் வன்மங்கள் கொள்ளாமல் எங்கும்
உறவென்று உலகாள எம்மோடு தங்கேன்!
நற்றமிழை நாவாலே நாமணக்கப் பாடும்
நலமெல்லாம் எம்மோடு நலமாகச் சேரும்
கற்றதனை எந்நாளும் கேட்டொழுக நாளும்
கவலைகள் புகையாகிக் கண்முன்னே மாளும்!
சிற்றெறும்பு போல்சிறுகச் சேர்த்திடவே நாளும்
சத்தியமா சுகம்காணும் சித்திரமாய் வாழும்
உற்சாகம் கொப்பளிக்க ஊரெல்லாம் ஓதும்
உறவெல்லாம் ஒருநாளில் தடம்மாறி யாளும்
வற்றாத நதியாகி வளம்தந்து ஓடும்
வாழக்கைக்குள் நீநிற்க வசந்தங்கள் பாடும்
கொற்றவர்கள் கொண்டாடி மகிழ்ந்தேத்தும் பெண்ணைக்
குழந்தையான் தாயென்று அழைக்கின்றேன் உன்னை
பொற்காசு பெற்றிடவே புனைவாரே போற்றி
புலவர்கள் முனிவர்கள் புடைசூழ வந்தே
பொற்பாதம் பணிகின்றேன் பொழிந்தாட ஆழும்
பைந்தமிழ் என்னில்ஓர் பாகமாய் வாழும
நற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்
நாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
கோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி
பற்றற்று போனாலே பதறிமனம் வீழும்
பெற்றவரின் பாசத்தை புரிந்தாலே போதும்
புற்றென்று மொழிசாய்க்க வருகின்ற புன்மை
போராடிச் சாய்த்தாலே பின்னுண்டு நன்மை!
காற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்
கண்ணோடும் கருத்தோடும் ஒன்றாக வேண்டும்!
ஊற்றாகி உணர்வெங்கும் உவப்பூட்ட வேண்டும்!
உயிருக்கு உரம்செய்யும் உடலாக வேண்டும்!
உயிருக்கு நேர் தமிழை- நீ!
ReplyDeleteஉயர்விக்க வந்தாய் வாழி!
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி சகோ முதல் வருகைக்கும் கருத்துக்கும்!
Deleteவாழ்க வளமுடன் ...!
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
ReplyDeleteகோலமிட வேண்டும் கொஞ்சுதமிழ் பாடி!..
கனிவும் கம்பீரமும் கலந்து மிளிர்கின்றது - கவிதை..
வாழ்க நலம்!..
மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும் நீட நாட்களின் பின் தங்கள் வரவு கண்டு மகிழ்கிறேன். உங்கள் தளத்தில் இணைய முடியாமையும் ஒரு காரணம் தான் இருந்தாலும் மன்னிதுக் கொள்ளுங்கள் சகோ தொடர்கிறேன் இனி.
Deleteகாற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்
ReplyDeleteவாழ்க தமிழ்
அருமை கவிஞரே நலம்தானே.... அமெரிக்கா போய் விட்டீர்களோ என்று நினைத்தேன்.
இன்னும் இல்லை சகோ இனித் தான் போகணும்.புரிகிறது புரிகிறது வருகிறேன்.கழுகுக் கண் உங்களுக்கு இல்ல ஒன்னு இரண்டு மிஸ் பண்ணினாலே தொலைஞ்சன் நான் இல்ல ஹா ஹா .....கோவிக்கக் கூடாது இதற்கெல்லாம் உடம்புக்கு ஆகாதில்ல. ம்..ம்..ம் மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். தொடர்கிறேன்.
Deleteதங்கள் வலைதளத்திற்கு முதன் முதலாக வருகை தந்து இணைந்துள்ளேன். தொடர்கிறேன்.
ReplyDeleteஅன்னை தமிழ் கவிதை அருமை.
வணக்கம் சகோ ! வரவேண்டும் வரவேண்டும் தங்கள் வரவு நல்வரவாகுக !முதல் வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சியே.மிக்கநன்றி வருகைக்கும் கருத்துக்கும். தங்கள் தளத்தில் இணைந்து நானும் இனி தொடர்கிறேன்.
Deleteவாழ்க வளமுடன் ...!
"குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
ReplyDeleteகோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி" என்பேன்
தமிழை விரும்பும் உள்ளங்களில் - தமிழே
தானாக வந்து குந்திவிடுமே!
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
செம்மொழி பற்றி செம்மையாக கவி புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன். எம் மொழி ஒரு அழகுதான்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் வரவுக்கும் கருத்திற்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
காற்றாகி தமிழும் மூச்சோடு கலந்தே
ReplyDeleteகவிபாடும் சகோதரியாரே
தங்கள் கவி அருமை அருமை
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
தமிழைப் போற்றும் அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
அருமை...
ReplyDeleteபாசத்தை புரிந்தாலே போதும்...
மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
வணக்கம் நலமா தோழி?தமிழுக்கு தந்த பா அருமைமா
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
கவிதை மிக அருமை.
ReplyDeleteமிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
மழையென தமிழைப் பொழிந்த...சகோவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
தங்கள் கவிமழையில் நனைந்தேன் அம்மா
ReplyDeleteஅடுத்த மழைக்காய் காத்தி ருக்கிறேன்,
நன்றிம்மா
மிக்கநன்றிடா! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன் ...!
***அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
ReplyDeleteஅடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்***
அடடா! தமிழுக்கு பெருமை சேர்க்கும் கவிதை, இனியா! வாழ்த்துகள்! :)
வாங்க வருண் நலம் தானே? நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வருண்.
Deleteவாழ்க வளமுடன் ...!
கொஞ்சுதமிழ் பாடிக் கொடுத்தகவி! கோர்த்திருக்கும்
ReplyDeleteமஞ்சரியில் ஊறும் மதுத்துளியோ ? - நெஞ்சத்துள்
விஞ்சுகின்ற சிந்தனையில் வேர்விட்ட இவ்விருத்தம்
எஞ்ஞான்றும் வாழும் இகத்து !
அருமை அருமை இனியாம்மா படித்தேன் ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
சீராளன் சிந்தையில் சீறுமே செந்தமிழ்
Deleteபாராள பைந்தமிழ் பாடிப் பவனிவரும்
பேராளன் நின்தமிழ் பாடலுக்காய் காத்திருப்போம்
சோராமல் எந்நாளும் பார் !
வெண்பாவில் இனிய கருத்துரைத்து களிப்படையச் செய்தாய்.
மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ்க ..!
வணக்கம் அ ம் மா!
ReplyDeleteதேவாரத்தில் ஒரு பாடல் வரும்,
“பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;”
இதைச் சற்று மாற்றி,
சித்தத்தைத் தமிழ்பாலே வைப்பார்க்கும் அடியேன் என்று கூறத் தோன்றுகிறது.
பாடுதற்கு ஏற்ற சந்தம்.
ஏனோ சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
தொடர்கிறேன்.
நன்றி.
வாங்கையா வாங்க!
Deleteஎல்லாமும் தயவே
எந்நாளும் தந்திடுமே! மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்திற்கும்.நீங்கள் அழைத்தது சுப்பு தாத்தாவிற்கு கேட்டால் நிச்சயம் வருவார். பார்க்கலாம்.
சிந்தை மகிழதமிழ் மீதுசித்தம் வைத்தென்றும்
விந்தை புரிகின்ற விஜ்ஜூவே - மந்திரம்போல்
தந்திரம் ஏதேனும் உண்டோசொல் அன்னையின்
பந்தத்தை பெற்றுய்ய இங்கு !
தமிழ்தாயின் பிள்ளைநீர் கண்ணிமைக்கும் முன்னர்
அமிர்த மழைபொழிந் தன்புசொரிந் தும்மை
மகிழவைப்பாள் அத்தாயை மன்றாடக் கேட்டு
அகிலம் போற்றவரு வாள் !
தப்பு தப்பா எழுதுகிறேன் தேறாது என்று திட்டுகிறீர்கள் தானே? ஹா ஹா..... நானும் குழந்தை தானே விழுந்து விழுந்து தானே எழுந்து நடக்க வேண்டும் இல்லையா பொறுத்தருள்க. என்ன மாட்டீர்களா. முறைக்காதீங்கய்யா..... கழுகுப் பார்வைபார்த்தாலும் தப்பி விடுகிறதே .....
நன்றி ! வாழ்க வளமுடன் .....!
இனியாச்செல்லம்
ReplyDeleteவிஜூ அண்ணா சொல்லவது போல சந்தநயம் கொஞ்சி விளையாடும் கவிதை:)
**சின்னவரும் பெரியவரும் எடுத்தாள வேண்டும் !
சிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்!
மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
மடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?**
அது தானே!!! என் இனியாச்செல்லம் இருக்க தமிழை வெல்ல முடியுமா??
நற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்
நாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
கோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி !!! ஆஹா!!! அழகு! அழகு!
வாங்க அம்மு எங்கடா இன்னும் ஆளைக் காணோமே என்று பார்த்தேன். எல்லோரும் நலம் தானே. அப்பா இப்ப தான் நிறைவா இருக்கு அம்மு. மிக்க மகிழ்ச்சி ! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
ReplyDeleteவாழ்க வளமுடன் ..!
கவிதை அருமை..
ReplyDeleteதொடருங்கள்..
வாழ்த்துகள் சகோ
வாங்க சகோ! நலம் தானே! மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும்.வாழ்த்துக்கும். வாழ்க வளமுடன...!
Deleteபாடல் அருமைம்மா.. அழகான இனிய பாடல்.
ReplyDeleteஅதிலும் தமிழைப் போற்றும் பாடல் என்றால் தங்கை இனியாவிற்கு எங்கிருந்துதான் வருமோ இந்த இனிய சொற்கள்?
“பற்றற்று போனாலே பதறிமனம் வீழும்
பெற்றவரின் பாசத்தை புரிந்தாலே போதும்“ போல இனிய சந்த ஓட்டம்.
என்ன சொல்லிப்பாராட்டலாம் என்று யோசிக்கும்போதே, முன்னொருமுறை ஃபாலோயர்“ பெட்டியில் சேர்ந்து, முடியாமல் திரும்பியது நினைவிற்கு வந்தது. இதோ இப்ப உடனடியாகச் சேர்ந்துவிட்டேன். “சாப்பாடு நல்லா இருக்கு“ என்று சொல்வதை விடவும், “இன்னும் கொஞ்சம் போடுங்க“ என்பதுதானே சரியான பாராட்டு. சொல்லிட்டேன்மா.
வாங்க வாங்க நிலவன் அண்ணா நீங்கள் வந்ததே பெரு மகிழ்ச்சி. அதனிலும் பெரியது உங்கள் இனியகருத்து. இது எப்படி இருக்கிறது தெரியுமா சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்தது போல் இருகிறதண்ணா. இதை விட வேறு என்ன வேண்டும் மேலும் தங்கள் ஆசீர்வாதம் கிடைத்தால் தானே இன்னும் வளரமுடியும் மெருகேறும் ம்..ம்..ம். .மிக்க நன்றியண்ணா வரவுக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!
Deleteகாற்றாகி மூச்சோடு கலந்தோட வேண்டும்
ReplyDeleteகண்ணோடும் கருத்தோடும் ஒன்றாக வேண்டும்!
ஊற்றாகி உணர்வெங்கும் உவப்பூட்ட வேண்டும்!
உயிருக்கு உரம்செய்யும் உடலாக வேண்டும்!
ஆத்தி இப்படியெழுத எனக்கெலாம் வருமா ?
அசத்திட்டிங்க போங்க...வாழ்த்துக்கள்.
அதெல்லாம் நல்லாவே வருகுதும்மா நான் பார்த்து அசந்திருக்கிறேனே அப்புறம் என்ன நன்றாக எழுதுங்கள் ok வா மனமார என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி !வரவுக்கும் இனியகருத்துக்கும்.
Deleteமணக்கிறது உங்கள் தமிழ்
ReplyDeleteவாருங்கள் சகோ தங்கள் முதல் வருகை கண்டு மனம் மகிழ்கிறேன். மிக்க நன்றி! வரவுக்கும் இனிய கருத்துக்கும். மேலும் தொடர வேண்டுகிறேன்.
Deleteதமிழ் பற்றி எழுத என்றும் இன்பம்
ReplyDeleteசிறப்பாக உள்ளது சகோதரி.
மிக்க நன்றி !தோழி வரவுக்கும் கருத்துக்கும்.
Delete"மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
ReplyDeleteமடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?" -
என்று முழக்கமிடும் உங்கள் பின்னல் அணிதிரளுவோம் தாயே, எம் தமிழுக்காக!
மிக்க நன்றி சகோ ! வரவுக்கும் இனியா கருத்துக்கும்.
Deleteஅன்றாடம் யாம்வாழ நீமூச்சாய் வேண்டும்!
ReplyDeleteஅடிமைத்தீ அணைக்கின்ற பேச்சாக வேண்டும்!!
இன்று தான் உங்கள் கவித்திறன் அறிந்து கொண்டேன் இனியா. கவிதை என்னமாய் எழுதுகிறீர்கள்! அருமை அருமை!
மிக்க நன்றி தோழி ! வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteநற்றவமே பெற்றுவந்த தேன்தமிழை நாட்டில்
ReplyDeleteநாமிழந்து போவதற்கு நிர்க்கதியே சாட்சி
குற்றமற்ற குழந்தைகளும் கொண்டாடி நாளும்
கோலமிட வேண்டும்எம் கொஞ்சுதமிழ் பாடி //
இப்படிச் சொல்லிவிட்டு முதலிலேயே அழகாக விடையும் கொடுத்து..
சின்னவரும் பெரியவரும் எடுத்தாள வேண்டும் !
சிலந்திவலை என்னாது தடுத்தாக வேண்டும்!
மன்னாதி மன்னர்கள் வாழ்வித்த அன்னை
மடியத்தான் விடுவேனோ தமிழேநான் உன்னை?
// ஆஹா ஆஹா...
அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்//
இப்படி எழுதும் போது அதை வாசிக்க இத்தனை பேர் இருக்கும் போது தமிழ் மடியுமா என்ன?!!!! வாழும்!
அருமை அருமை சகோதரி!
வாங்க சகோ மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாளைக்கப்புறம் காண்பதில். இருவருமே ரொம்ப busy போல ம்..ம் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இருவருக்கும். வாழ்த்துக்கள் ...!
Deleteதமிழைப் போற்றுவிக்கும் சிறப்பான் வரிகள்! அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வரவுக்கும் இனிய கருத்துக்கும்.
Delete