Tuesday, April 21, 2015

மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது மட்டும்

சட்டையும் இல்லை போர்வையும் இல்லை 
பனிகாலத்தில் எமக்கு, 
ஆனாலும் சட்டை செய்யவில்லை

.
நாம் என்ன மனிதர்களா உடல்நடுங்கி உறைவதற்கு,
பறவைகளா இடம் மாறிப்பறந்து செல்ல
பிடித்து வைத்த பிள்ளயார் மாதிரி 
வைத்த இடத்திலேயே வாழ்கிறோம் வசதியாய்.பாலிலும் வெண்மை நிறம் பொருந்திய 
அப்பனி படர்வதையும் மகிழ்வாகவே
ஏற்றுக் கொண்டு பகட்டாகவே தென்படுகிறோம் 

காற்றும் கடுங் குளிரும் பொருட்டல்ல
கடமையே பெரிது எமக்கு உயிரை விட  
குற்றங்கள் புரிவதிலும் நாட்டம் இல்லை
கொடிகள் பிடிக்கும் எண்ணமும் இல்லை   . 

எதையும் தாங்கும் இதயம் எமது  . 
எந்நிலையும் கடக்க வல்லது 
விதியை நோகவில்லை  நாம் 
சதிபோலவும்  தோணவில்லை 
இவை சவால் தான் நமக்கு  .

வருவதை எதிர்ப்பின்றி எதிர்கொள்கிறோம்.
இன்பமும் துன்பமும் வந்து போவது வாழ்வில்
சகஜம் எனும் நினைப்பில்.


இருந்தும் புத்தாடைகள் அணிவதில் பிரியமே 
குதூகலம் சற்றும் குன்றாமல்.ஆர்வத்தில் 
வசந்த காலத்தை வரவேற்க காத்துக் கிடக்கிறோம்  
 .  


பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். 

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று

அவர் பதிவை ஒட்டிஎன் ஆதங்கத்தையும்
இவ்வாறு தெரிவிக்கிறேன். 

சகோதரர் முரளிக்கு என்நன்றியும் பாராட்டும்.

பாலியல் தொந்தரவு எமக்கில்லையே  
எனவெண்ண தலை நிமிர்கிறது தன்னால். 
மனிதர்களைவிட பகுத்தறிவற்ற நாம்மேல்   

பச்சைப் பாலகன் களையும் விட்டு 
வைக்கவில்லையே இந்த பாதகர்கள் 
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தரையில் இன்னும் ஏன் ....

கோபமும் வெறுப்பும்  அதிகமாக 
விழுங்கவே எண்ணுகிறது மனம்
மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது.  . 


பச்சைக் குழந்தைமேல் இச்சையோ மானிடத்தின் 
நச்சு விதைகளே  நீங்களன்றோ - துச்சமென 
பண்பை அழித்தீர்கள் பாவிகளே நீங்களும் 
புண்கள்தாம் என்பேன் பழித்து !


விந்தை நிறையுலகி லேன்இந்த சிந்தையோ  
பந்தை அடிப்பது போலவே  பாட்டியை
துன்பத்தில் ஆழ்த்திய பாவிகளின் கன்னம்  
மின்ன பழுக்கவை சூடு!

34 comments:

 1. நல்லதொரு கவிதை

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா முதல் வருகை ம்..ம்..ம் நல்லது நல்லது keep it up ok வா
   மிக்க நன்றி சகோ! நீண்ட நாளைக் கப்புறம் எட்டிப் பார்த்திருக்கீங்க மிக்க மகிழ்ச்சி! நலம் தானே?

   Delete
 2. வணக்கம்
  அம்மா
  இன்பம் துன்பம் என்ற இரண்டையும் தாங்கும் சக்தி மனிதனுக்கே.... இந்த காலத்தை பயனாக்கி கொள்வோம்.
  உண்மையில் முரளி அண்ணா சொல்லிய கருத்து 100 வீதம் உண்மைதன். நீங்களும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துக்கும் ...!

   Delete
 3. ///பச்சைக் குழந்தைமேல் இச்சையோ மானிடத்தின்
  நச்சு விதைகள் நீங்களன்றோ///
  உண்மை சகோதரியாரே
  வெட்கட்கேடான உண்மை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 4. எதையும் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்ல நினைத்த போது... இரண்டாவது கவிதையில் சூடு மட்டும் வைத்தால் பத்தாது...

  ReplyDelete
  Replies
  1. அப்போ நிஜத்திலும் வைத்து விடலாம் என்கிறீர்களா? அல்லது கன்னத்தில் மட்டுமேன் சூடு என்கிறீர்களா. எது வாயினும் பூனைக்கு யார் மணி கட்டுகிறது என்பது தான் பிரச்சினை. கவிதையி லாவது சுடுவோமே என்று பார்த்தேன் ஹா ஹா ஹா...
   மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 5. கட்டுக் கடங்காத கற்பனையும் அற்பர்களைச்
  சுட்டுப் பொசுக்கும் கவிவரியும் - மெட்டுக்குள்
  நிற்கின்ற பாட்டின்னும் நீளட்டும் நீளட்டும்
  கற்கின்றேன் உம்பாக் கவி!

  தொடருங்கள் இடைவெளியில்லாமல் காத்திருக்கிறேன்.

  அத்துணையும் அருமை!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் ஆசானே . நான் நினைத்தேன் இப்படி .

   பிள்ளைத் தமிழில் விளையாட்டு என்றெண்ணி
   எள்ளிநகை யாடுவீர்கள் என்றேநான் நாணினேன்
   துள்ளி மகிழவே தந்தபா தென்பெனக்கு
   மெள்ளப்பா மேலும்கற் பேன்! உங்கள் துணையோடு ஹா ஹா.......

   சிறுபிள்ளை வேளாண்மை விளைஞ்சாலும் வீடு வந்து சேராதாம். சிரிப்பு வந்ததா ...... குழந்தைப் பிள்ளை விளையாட்டு போல் இது என்று எனக்கு கேட்டிச்சே இல்லையா அப்ப சரி. குட் boy ஹா ஹா ....
   மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 6. கோபமும் வெறுப்பும் அதிகமாக
  விழுங்கவே எண்ணுகிறது மனம்
  மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது,
  அருமை,,,,,,,,,,,,
  என்ன செய்வது, இது தான் இன்று நடப்பது
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா நலம் தானே! எங்க பதிவைக் காணலை ரோம்ப busy போல ம்..ம். ரெடி ஆகுதா ok ok
   மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 7. அருமை சகோ தாமதமான வருகைக்கு மன்னிக்க....
  முதலாவது கவிதை மனிதனை விட மரம் உயர்வானது என்ற சிந்தனையையே தருகிறது.

  இரண்டாவது கவிதை
  மனம் கணத்து விட்டது இன்றைய அவலமான சமூகத்தை நினைக்கும்போது... வெட்கமாக இருகிறது.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஜீ \\\\முதலாவது கவிதை மனிதனை விட மரம் உயர்வானது என்ற சிந்தனையையே தருகிறது.///// ரொம்பக் கவலையா இருக்காப்போல ......நான் வேணுமின்னா மாத்திடட்டுமா ஜீ இப்படிக் கவலை ப் படுறீங்களே என்ன செய்ய மனம் தாங்கலை அதான். இப்படி ....
   மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 8. அருமையான கவிதை தோழி, மரத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதைபோன்ற என் ஆங்கிலக் கவிதை ஒன்று, நேரமிருக்கும்பொழுது பாருங்கள்
  http://innervoiceofgrace.blogspot.com/2011/10/adapting-trees.html

  கடந்து செல்லும் கேடற்றவரை மரம் விழுங்கிவிட்டால் நல்லது தான்..
  வாழ்த்துகள் தோழி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தேனு நிச்சயமாக பார்க்கிறேன் தங்கள் கவிதையை. ம்..ம்
   கேடற்றவரை விழுங்கி விட்டால் அதெப்படி இவ்வளவு விபரமாக இருக்கும் மரம் எப்படி விழுங்கும் நல்லரை இனங் கண்டு நன்றி நவிலுமே நயமுடன். ஆகையால் பயப்பட வேண்டாம் மரங்களைக் கடக்கும் போது. ok தானே தேனு ....
   மிக்க நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 9. மானிடனாகப் பிறப்பது அரிதுனு ஏதோ சிறுவயதில் தமிழ்க் கவிதை வாசிச்சதா ஞாபகம் வருது. மரமாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமா இருந்து இருக்கும். மனிதர்களைப் போல் ஒரு காமடியன்கள் உலகில் கிடையாது. இதிலே எங்க பிறவிதான் உயர் பிறவினு இவரகளே தங்களை உயர்வாச் சொல்லிக்கிறது.

  அடுத்த ஜென்மத்திலாவது மரமாப் பிறப்போம், இனியா? :) என்ன சொல்றீங்க?

  உங்க கவிதைகளைவிட எனக்கு உங்க சிந்தனைகள்தான் பிடிக்கிது. இனியாவாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமாக இருக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண் ஐயடா என்ன இப்படி சொல்லிட்டீங்க \\\\\இனியாவாகப் பிறப்பது அரிதுனு சொல்லியிருந்தாலாவது கொஞ்சம் அர்த்தமாக இருக்கும். :)//////// இப்படிக் கலாய்க் கிறீன்களே .
   ம்..ம்..ம் அடுத்த ஜென்மத்தில மரமா பிறந்தா நல்லம் போல தான் தோன்றுகிறது. நாம அழவும் வேண்டாம் சிரிக்கவும் வேண்டாமே இல்லையா வருண் நல்ல ஐடியா தான். பிறந்திட்டா போச்சு.
   மிக்க நன்றி வருண் ! வருகைக்கும் கருதிற்கும்.

   Delete
 10. வேதனையைப் பகிர்ந்த விதம் நன்று. கவிதையை ரசித்தோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.

   Delete
 11. கவிதை ரசிக்க வைக்கிறது ! மரம் சொல்லும் பாடம் தான் என்னே! அடுத்து மனதைக் கனக்க வைக்கிறது சகோதரி! ...

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது சகோ வேதனையை இறக்கி வைக்க வேண்டாமா அது தான் இது.
   மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 12. ஆஹா அருமை. உங்கள் பெயர் போலவே கவிதையும். வித்தியாசமான கவிதையால் எங்களைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். என்னுடைய பதிவையும் சுட்டிக்காட்டிஅதற்கு ஆதரவாக உங்கள் ஆதங்கத்தை கவிதையில் தெரிவித்தமைக்கு நன்றி.
  ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 13. மனிதர்கள் கடந்து செல்லும் போது மட்டும் என்ற தொடர்ந்த வரிகளைக் கடந்து செல்ல வெகு நேரமாயிற்று எனக்கு...
  வாழ்த்துக்கள் தோழி. தொடருங்கள் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா சசி ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 14. தொடருங்கள் சகோ
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 15. அர்த்தமுள்ள கவிவரிகளில் ஆழ்ந்துதான் போகிறேன் அருமை அருமை சகோ இனியா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சீராளன் தங்கள் அன்பான கருத்துகளில் அகம் மலர்ந்து தான் போகிறேன். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

   Delete
 16. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சகோ ! வரவுக்கு நன்றி !

   Delete

 17. "கோபமும் வெறுப்பும் அதிகமாக
  விழுங்கவே எண்ணுகிறது மனம்
  மனிதர்கள் எம்மைக் கடந்து செல்லும் போது." என்ற
  வரிகளில்
  கவிதை மூச்சாக நிமிர்கிறதே
  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்திற்கும் !

   Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.