Tuesday, January 20, 2015

வாசகர்களாக மட்டுமே வாழாமல்



நன்னெறியில் இருந்து

பெருக்கமோடு சுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் -இரக்கம்
மலையளவு நின்றவெழில் மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

கருத்து :-
அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.

வணக்கம்! வலையுலக மக்களே!

இப்பாவுக்கு ஏற்ப நம் மதிப்பிற்குரிய திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன் அவர்கள் இருவரும் இணைந்து தமிழை வளர்க்க அரும்பாடு படுவது யாவரும் அறிந்ததே. போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள். எழுத்தார்வம் மிக்க அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதும்.  நாங்கள் எல்லாம் எங்கே எழுதப் போகிறோம் என்று எண்ணி ஏங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதுவும் தான் அவர்களது நோக்கம்.
எனவே வாசகர்களாக மட்டுமே வாழாமல், எண்ணக் கருவை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியுமா என்று ஏங்குவதை விட்டு விட்டு முடியுமா என்று சிந்திப்பதையும் சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு முயன்று தான் பாருங்களேன் ஒரு முறை. ம்..ம்..ம்.. பலமாக யோசிக்க துவங்கிவிட்டீர்கள் இல்லையா? நல்லது? உங்களை பாதித்த விடயங்கள் பல இருக்கலாம் இல்லையேல் உங்களுக்கு தெரிந்தவர்களோ நண்பர்களோ பாதித்த போது பார்த்து இருக்கலாம் அவற்றை கூட  நீங்கள் பதியவைக்கலாம். உங்களுக்கே தெரியாமல்  உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்திருக்கலாம்.அவ்வாற்றலை எல்லாம்  குடத்துள் விளக்காய் குன்ற விடலாமோ? நாட்கள் நெருங்கி விட்டதல்லவா? எனவே அருமையான இச்சந்தர்ப்பத்தை  நழுவ விடாமல்  அனைவரும் பங்குபற்றி உலகளாவிய  இப்போட்டியை சிறப்பிப்பதோடு நீங்களும் பயனடைந்து சிறப்படையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆற்றுப் பெருக்கற்ற போதும் அலுக்காது
கற்றறிவு இல்லாக் கடலும் கலங்காது
வெட்ட வெளியினில் கொட்டும் மழையாவும்
முட்டக் கொடுக்கும் பிறர்க்கு!  

மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்
    http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

 மிக்க நன்றி!

33 comments:

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ! உடன் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete

  2. //அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.//

    அறிவும் இல்லாமல் செல்வமும் இல்லாத நான் யாருக்கும் உதவ முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி உடன் வருகை கண்டு.
      இப்போ என்ன \\\அறிவும் இல்லாமல் செல்வமும் இல்லாத நான் யாருக்கும் உதவ முடியாதா?///இதற்கு பதில் தெரியனும் இல்லையா ஓ நன்றாக உதவலாமே ...எப்படியா ?

      நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற
      நூலளவே யாகுமாம் நுண்ணறிவு -மேலைத்
      தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்
      குலத்தளவே யாகும் குணம்!

      நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா சரி இவை இரண்டும் இல்லை என்று நம்பி விட்டேன் ok வா இப்போ உங்களுக்குத் தான் அருமையான குணம் இருக்கிறதே அது போதுமே உதவுவதற்கு. இல்லையா? அறிவும் செல்வமும் உள்ளவர்கள் யாவருமா உதவுகிறார்கள். இல்லையல்லவா ஆகையால் கவலைப் படாமல் உதவுங்கள் ok வா ...
      நட்பும், தயவும், கொடையும் பிறவிக் குணம் என்று வேறு சொல்வார்களே இது போதும் அல்லவா .....

      Delete
  3. வணக்கம்
    அம்மா.

    முதலில் தலைசாய்த்து வணங்குகிறேன்..தங்களின் இந்த உதவும் கரம் கண்டு மகிழ்ந்தேன்...
    அம்மா... பகிர்வுக்கு நன்றி..
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் தாங்கள் செய்யும் செயலும் நோக்கமும் அளப்பரியது . நான் செய்வது எல்லாம் எம்மாத்திரம் ரூபன் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை உங்கள் செயலுக்கு முன். மிக்க நன்றி ..! மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் ..!
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  4. நல்ல பணி!
    ஊக்குவிக்கும் உங்கள் அக்கறையும் ஆர்வலருக்கு
    விடும் அழைப்பும் மிகச் சிறப்பு!
    சிறுகதை வாசனை மட்டுமே என்னால் முடிகிறது!
    போட்டி நடத்துனர்களுக்கும் பங்குபற்றுவோருக்கும்
    உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா முயற்சி செய்வதில் தப்பில்லையே. தங்களால் நிச்சயம் முடியும் ok வா சொ எழுதுங்கள். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஹா ஹா ....

      Delete
  5. போட்டியை நடத்துபவர்களுக்கும், நடுவர்களுக்கும், பங்குபெற இருப்பவர்களுக்கும், நடத்த உதவுபவர்களுக்கும் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அட வாழ்த்துக்கள் மட்டும் தானா அப்போ பங்கு பற்றுவது ம்..ம்.. ஓ ஆரம்பித்து விட்டீர்களா அப்பசரி நான் ஒருத்தி புரியாம ...ok ok வாழ்த்துக்கள் ...!

      Delete
  6. அருமையான பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமையான பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாழ்த்துக்கள்! எதற்கா வெற்றி பெறத் தான் ..!

      Delete
  8. ஆஹா எழுதத்தூண்டுகின்றதேம்மா....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அப்புறம் என்ன ஆரம்பிச் சாச் சில்லே very குட் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தங்களின் பணி ஓங்குக

    ReplyDelete
  10. போட்டி அருமை..
    எழுத ஆரம்பித்துவிட்டீர்களா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்த எண்ணம் இருக்கவே இல்லை உங்கள் கேள்வியில் எழுத தூண்டிற்று சொ அதன் பின்பு எழுத தொடங்கியுள்ளேன். ( நேரப் பற்றாக்குறை யினால் சிந்திக்கவில்லை )
      சரி வருமா தெரியலை. பார்ப்போம். மிக்க நன்றி சகோ !
      நீங்க எல்லாம் எழுதி அனுப்பியாச்சு போல் இருக்கே அப்படியா?
      நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!

      Delete
  11. வாசகர்களாக மட்டுமே வாழாமல்
    பதிவர்களாக மட்டுமே இருந்துவிடாமல்
    தம்மைச் சிறந்த படைப்பாளியென
    அடையாளப்படுத்தவும் கூட
    போட்டியில் வென்றிடப் பங்கெடுக்க வாருங்கள்...
    அதனால்,
    பெற்றோருக்கு, சொந்த ஊருக்கு, தாய்நாட்டுக்கு
    பெருமை சேர்த்திட முடியுமே!

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!

      Delete
  12. எல்லோரையும் ஊக்கப்படுத்துவதோடு அவர்களின் எழுத்து திறமையையும் வெளிக்கொணர்வது சிறப்பு. அதை பாராட்டி எழுதியிருப்பது இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் விச்சு என்ன ஆரம்பித்து விட்டீர்கள் போல் இருக்கிறதே. நல்லது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எதுக்க வெற்றி பெறத் தான் ....மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  13. போட்டி என்றாலே வர்ர சிந்தனைகளும் வராமல் நின்னுடும் எனக்கு. :)))

    தடம் மாறிய பண்டிகையா?

    பண்டிகை

    சந்திப்பு

    அவமானம்

    எதிர்பார்ப்பு

    னு இப்படி பொதுவாகத் தலைப்புக் கொடுத்தால் கதை எழுத எளிதாக இருக்கும், நெறையா யோசிக்கவும் முடியும். "தடம் மாறிய பண்டிகை" னு ரொம்ப ஸ்பெஸிஃபிக்காப் போனா என்னைமாதி சாதாரண பாமரன் எல்லாம் தலைப்பை திருப்திப் படுத்துறேன்னு நல்ல கதையை கொலை செய்ய வாய்ப்பு அதிகம்னு நான் நினைக்கிறேன்

    "கதை எழுதுடா!" னா நான் பாட்டுக்கு அறிவுரை வழங்க ஆரம்பிச்சுட்டேன் பாருங்க, இனியா. :))

    ReplyDelete
    Replies
    1. இங்க பாருங்க வருண் சும்மா சாக்குப் போக்கு எல்லாம் சொல்லப் படாது ok வா உங்களுக்கு நன்றாக எழுத வரும் என்று எனக்கு தெரியுமே அது எப்பிடி உங்களுக்கு தெரியாம போச்சு என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. so நம்பிக்கையோடு எழுத தொடங்குங்கள் . ok தானே சரி எதிர்பார்க்கலாம் அல்லவா .....நன்றி வருண் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...! ஏன்னா .....வெற்றி பெறத் தான்.....

      Delete
    2. இல்லங்க இனியா, நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸியா இருக்கேன். :( எழுதினால் ஏதாவது அர்த்தமா எழுதணும். இப்போ உள்ள சூழலில் கஷ்டம். சாரி, இனியா!

      உங்கள் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி. :)

      Delete
    3. ம்..ம்.. எப்பவும் அர்த்தத்தோடு தானே எழுதுகிறீர்கள். அப்புறம் என்ன தயக்கம். சரி சரி இவ்வளவு தூரம் நேரம் இல்லையென்று சொல்லும் போது வற்புறுத்தக் கூடாது அல்லவா? நானும் என்னமோ பரிசு உங்களுக்குத்தான் என்று நினைத்தேன். சரி அடுத்த தடவை பெற்றால் போச்சு இல்லையா. அடுத்த தடவையும் மீள் பதிவு போல் இதையே சொல்லாமல் இருந்தால் சரி தான். ஹா ஹா .....

      Delete
  14. mUikahd nra;jp. elj;Jgth;fs; jkpo; tsu Kd;nkhopa jhk; mjid top nkhopa mUik. tUfpNwhk;.

    ReplyDelete
    Replies
    1. இது மொழி இல்லீங்க. என் சிஸ்டம் செய்த சதி. சரி வேற எழுதுகிறேன்,

      Delete
  15. என்னைப்போன்ற கத்துக்குட்டிகளை எழுத தூண்டும் தங்களுக்கும் எமது வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete
  17. தமிழ் வளர்க்க ஒருவர் முன்மொழிய அதனை தாங்கள் வழி மொழிய அருமை.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.