Friday, January 2, 2015

ரொம்ப நாள் ஆசை

 
ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு 
தான் நிறை வேறியிருக்கு
மண்டையை போடுவதற்குள் 
நிறைவேத்தி வச்சிட்டியே சாமி
எவ்வளவு தாராள மனசுனக்கு.

  மற்றவங்களோட பொருளில ஆசை பட்டதற்கு இது தேவை தான் இந்த தண்டனை அப்பாடா ஒளிஞ்சுக்கிறதுக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சதால தப்பினேண்டா சாமி. இப்பிடியா என்னை மட்டிவிடுவே  நல்ல சாமிப்பா உன்னை நம்பினன் பாரு என்னை சொல்லணும் .
 
  
(எலியாருக்கும் கற்பனை வரும் இல்ல)

அப்பாடா எப்பிடியாவது இந்த இதயத்திலயாவது  
ஓடிப்போய் இடம் பிடிச்சிடனும்.
அட கடவுளே எங்கே போனாலும்
போராட்டமா இருக்கே இப்போ நீரோட்டமும்
தடுக்குதே. ஓஹோ  தலை எழுத்தை மாற்ற முடியாதோ   
விதியை வெல்ல யாரால் முடியும் ம்..ம்..ம்...

43 comments:

 1. படமும் விளக்கமும் அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! முதல் வருகை. புது வருடத்தில் ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றிகள் சகோ !

   Delete
 2. படமும் விளக்கமும் அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. கோப்பைக்குள்ள யாராவது
  காப்பித் தண்ணிய ஊத்தறதுக்குள்ளே
  தப்பிச்சுக் கொள்ளுங்கள் எலியாரே!..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அதெல்லாம் தப்பிடுவார் சகோ! மீன் குஞ்சுக்கு கத்துக் கொடுக்கனுமா என்ன அதெல்லாம் கச்சிதமா பண்ணிடுவார்.
   மிக்க நன்றி சகோ ! உடன் வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 4. எந்த இதயத்தில் இடம் பிடிக்க வேண்டுமானாலும் போராட்டம் இருக்கத்தான் செய்யும். அதுதான் நியதி.. எலியாரின் கற்பனையும் அழகுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விச்சு பாவம் எலியார் இல்ல ம்..ம்..ம். என்ன செய்வது இது தான் விதி ஹா ஹா ...மிக்க நன்றி சகோ!வரவுக்கும் கருத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

   Delete
 5. எப்படியெல்லாம் சிந்தித்து பதிவு போடுகிறீர்கள் ஹும் நானும்தான் இருக்கேன் எனது புதிய பதிவு எ.எ.எ.

  ReplyDelete
  Replies
  1. திறக்காத புத்தகத்தையே வெளியிடும்போது நான் இது கூட செய்யக் கூடாதா என்ன ஹா ஹா .....நாங்களும் யோசிப்பம் இல்ல .
   மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

   Delete
 6. வணக்கம்
  அம்மா.

  இம்முட்டு யோசித்து நல்ல கற்பனையில் ஒரு பதிவு... ஆகா...ஆகா.. சூப்பர்...இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன்! ரசனைக்கும் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 7. அட.. அருமை!

  கற்பனை எப்படி எல்லாம் செய்யலாம் பாருங்கள் என்பதற்கு
  நல்ல உதாரணங்கள் இவை!..:)

  அழகிய படங்களும் அசத்தல் சிந்தனைகளும்!..
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா தோழி! எலியை வைத்து தானே ரிசர்ச் எல்லாம் செய்யுறாங்க அதனால நானும் செய்து பார்த்தேன்.ஹா ஹா ...
   மிக்கநன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 8. அழகிய எலியாரின் படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸும் சூப்பர்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 9. Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 10. கடைசியில எலியாராலையும் விதியை வெல்ல முடியலையா?
  படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. விதி எல்லோருக்கும் ஒன்று தானே இல்லையா. அதனால் தான் பொறியை வைத்து எலியை பிடிக்காமலா விடுகிறார்கள். அப்போ பாவம் தானே எவ்ளோ பயந்து சாகும். சொல்லுங்க ம்..ம்..இப்போ புரியுதா ஹா ஹா நன்றி சகோ வரவுக்கு.

   Delete
 11. ஊஞ்சலிலே உல்லாசம், உற்சாகம்
  கரை புரண்டு ஓடுகிறதே
  மூஞ்சு எலிக்கு!
  இல்லை! இல்லை!
  ஊஞ்ச(ள்)! எலிக்கு
  படம் சொல்லும் பாடம்
  படு சூப்பர்!
  புதுவை வேலு
  (kuzhalinnisai°)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 12. எலிக்கு கற்பனை இயற்கையா வருதோ இல்லையோ, எலியையும் கற்பனை செய்ய வைத்தது நீங்கதான்.

  மனிதன் மாறமாட்டான். அவன் ஒரே "போர்"னு எலியை கற்பனை பண்ண வச்சி வேடிக்கை பார்க்குறீங்களாக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. அதுவா வருண் எல்லாம் இந்த மதுரை தமிழருக்காகத் தான் எப்பவும் பூரிக் கட்டையை எண்ணி பயந்திட்டே இருக்காரா அவரை சிரிக்க வைக்க தான் ஒரு சேஞ்சுக்காக பாவம் இல்ல எப்ப பார்த்தாலும் கலாய்க்கிறீங்களே அதான் ஆனால் அவரை மட்டும் காணவே இல்ல. நீங்களாவது சிரிச்சிடுங்க ok வா நான் சொல்வதரற் காகவேனும் மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்துக்கும்.

   Delete
  2. என்ன இனியா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டேங்க நான் என்றும் பூரிக்கட்டையை கண்டு பயப்படுவதில்லை அதை எடுத்துவரும் என் மனைவியை கண்டுதான் பயமுங்க சரி சரி நான் அப்புறம் வருகிறேன் என் மனைவி வரும் சத்தம் கேட்கிறதுங்க

   Delete
  3. அட என்னை காணவில்லையா நாந்தான் முதலில் வந்து கருத்து சொல்லி இருக்கேன் நல்லா பாருங்க வீட்டுல அடி வாங்கினாலும் அந்த வலியோட நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோர்தளமும் சென்று கருத்துகள் இடதான் செய்கிறேன்

   Delete
  4. அப்போ பூரிக் கட்டைக்கு பயமில்லை ........ம்.ம்..ம் அடடா நான் நாகரீகமா சொன்னால் அதை புரிஞ்சுக்காம இப்படியா போட்டு உடைப்பீங்க சகோ!

   Delete
 13. கில்லேர்கி சொன்ன மாதிரி வித்தியாசம்தான். வாழ்த்துக்கள் புத்தாண்டில் தொடரட்டும் புதுமைகள்

  ReplyDelete
  Replies
  1. அடடடா விஷயம் அப்பிடியா நன்றி ஜி
   மிக்க நன்றி சகோ! வரவிற்கும் கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

   Delete
 14. “எலி வளையானாலும் தனிவளை வேண்டும்“
  அப்பா திருப்பதிக்கே லட்டு கொடுத்தாச்சு!
  வி(டு)ஜூ ட்!!!

  ReplyDelete
  Replies
  1. பழமொழியா ம்..ம்.. மனம் கொண்டது மாளிகை
   எலி வளை போதுமா உங்களுக்கு ம்..ம்.. எலியை பொறி வைத்து பிடித்து விட்டு அதை தரலாமே என்று தான்.....ஹா ஹா
   மிக்க நன்றி குருவே வரவுக்கு.

   Delete
 15. வணக்கம் சகோதரி
  நலம் தானே! எலியாரின் கற்பனை கண்டு வியந்தேன். காட்சிகளுக்குள் வித்தியாசமான கற்பனையைப் புகுத்தி ஆசையைக் கூறி இறுதி வரிகளில் ஏக்கத்துடன் முடித்திருப்பதும் அழகு. தொடர்வோம் இணைந்த நட்பில் இணைபிரியாது...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மாப்பிள்ளையாரே எப்படி இருக்கிறீர்கள் நீண்ட நாட்களின் மிக்க மகிழ்ச்சி மெல்ல மெல்ல வலைப்பக்கம் எட்டிப் பார்ப்பது போல் தெரிகிறது. ம்..ம்.. நல்லது வரவு நல் வரவாகுக.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இருவருக்கும். மிக்க நன்றி வரவுக்கு.

   Delete
 16. ஆஹா!! எலியையும் கற்பனை செய்ய வைத்த உங்கள் திறமை பிரமாதம் தோழி! படங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. மனிதர்கள் கற்பனை பண்ணி பண்ணியே மொட்டை ஆவுராங்கல்லே பாவம் தானே ஒரு change க்கு எலியும் தான் கற்பனை பண்ணட்டுமே இப்ப என்ன கேட்டுப் போச்சு அப்படி என்று ஒரு நல்லெண்ணம் தான் ஹா ஹா ..
   நன்றி தோழி ! வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 17. Replies
  1. மிக்க நன்றி! சகோ ரசனைக்கும் வரவுக்கும்.

   Delete
 18. படமும் அதற்கான விளக்கங்களும்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்.

   Delete
 19. எலி என்ன்னம்மா think பண்ணுது!! பின்ன அது சிக்குன வலை சாதாரண வலையா!! கவியகவியின் வலை ஆயிற்றே:))) நல்லா சிரிச்சேன். நம்ம வாத்தியார் ஒரு இல்ல இல்ல ரெண்டு ஹோம் ஒர்க் கொடுத்திருக்கார். நான் இப்போ அதை ரிலாக்ஸா பண்ணபோறேன்:)) bye டா செல்லம்:))

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்யிறது எங்க போனாலும் பொறி வச்சு பிடிச்சிடுறான்கல்ல பாவம். பின்ன அது தான் என்ன செய்யும். எங்க இடம் பிடிக்கிறது ஒழிக்கிறது என்று think பண்ணாதா? அம்மு ஹா ஹா ....
   அட வாத்தியார் ஒண்ணு, இரண்டா மூணு இல்ல தந்திருக்காரு..அம்மாடியோ ஒரு வழி பண்ணாம விடுகிறது இல்ல என்று சபதம் எடுத்திருக்கிறாரோ என்னமோ எதுக்கும் கொஞ்சம் விளிப்பாவே இருப்போம் இல்ல அம்மு ஹா ஹா ....
   ஏற்கனவே வகுப்பை முடிக்க திட்டம் போட்டிருக்காரு இதை பார்த்தா நிச்சயம் இதையே சாக்கா வைத்து cut பண்ணப் போறாரு அம்மு. எஸ்கேப்..... அம்மு ...நன்றிம்மா வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 20. படமும் அருமை! அதற்கான விளக்கங்களும் அருமையோ அருமை சகோதரி!!!

  ReplyDelete
 21. படங்களும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.