Thursday, September 25, 2014

கரும்பு தின்னக் கூலியா

 


வணக்கம் வலையுறவுகளே ! ஏன் இந்த சுணக்கம் என்று கேட்பது புரிகிறது. கரும்பு தின்னக் கூலியா விருது வாங்கவும் கசக்கிறதா என்று  எல்லாம் நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும் காரணம் கேட்டால் நீங்கள் மகிழ்வீர்கள் என்னை மன்னிப்பீர்கள் அந்த நம்பிக்கையில் காரணத்தை சொல்கிறேன்.
செப்டெம்பர் 1ம் திகதி என் திருமண நாள். அன்று  என் பிள்ளைகள் செப்பரைஸ் சாக cruise trip க்கு போகும் படி டிக்கெட் எடுத்து தந்து விட்டார்கள். அதனால் வேறு வழியின்றி தங்களை யெல்லாம் பிரிவது வருத்தமே எனினும்  செல்ல வேண்டியதாயிற்று நினைவு எல்லாம் இங்கே விட்டு விட்டுத் தான் சென்றேன். இப்போது அனைவரும் என்னை மன்னிப்பீர்கள் அல்லவா ? ஆமாம் மன்னிப்பீர்கள் எனக்குத் தெரியும். உங்களுக்கு தான்  பெரிய மனசு ஆயிற்றே.
மிக்க நன்றி !

என்னையும் மறக்காமல் விருது தந்து சிறப்பித்தமை மெய் சிலிர்க்க வைக்கிறது. மூவர்தம் விருதினை பகிர்ந்துள்ளார்கள் அவற்றை முறையே பகிர்கிறேன் இங்கு.

ஆன்மீகத்தை ஆதாரமாக கொண்டு அல்லும் பகலும் ஆண்டவன்  நாமத்தையே  உச்சரித்தபடி அவன் புகழ் பாடி பரவும் சகோதரர் துரை செல்வராஜூ அவர்கள் கையால் பெற்ற விருது. நான் செய்த பாக்கியமே. என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சே. இதற்கு தகுதி பெற்றிருக்கிறேனா என்ற சந்தேகம் இன்னுமே உள்ளது  என்னையே என்னால் நம்ப முடிவதில்லை இருந்தாலும் கவிதை  மீதுள்ள ஆர்வமும் தாய் மொழி மீதுள்ள பற்றும் என்னை தூங்க விடுவதாய் இல்லை.
பல தடவை இனி விட்டு விடுவோம் என்று நினைத்துள்ளேன். இருந்தாலும் என்னால் விட முடிவது இல்லை.தான் பெற்ற விருதினை பகிர எண்ணி  கவிதைகளால் கட்டிப் போடும் காவியக் கவி என்று வழங்கிய விருதினை தங்கள் பாதம் பணிந்து ஏற்றுக் கொள்கிறேன் சகோதரரே. இதனால் பெற்ற ஊக்கமும் வலியதே, தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ. தங்கள் நிபந்தனைகளுக்கும் கட்டப் பட்டு அனைத்தையும் தொடர்கிறேன்.

அதை தொடர்ந்து அரும்பாடு பட்டேனும் தமிழ் வளர்க்க தளராத  ஊக்கமுடன், ஆக்கங்கள் அளிக்க வேண்டி   போட்டிகள் வைத்து,   உவந்து அளிக்கும் விருதுகளும் என்ன வென்று சொல்ல. வெறும் சொல்லில் அடங்காது இவை எல்லாம். தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற் கிணங்க இச் சிறு வயதிலேயே பெரும் குணங்கள் கொண்டு  வலைத்தளம் முழுவதும் வலம் வரும் ரூபனின் கரங்களால் மீண்டும் பெறும் இவ்விரண்டு  விருதினையும் இருகரங்கள்  கொண்டு கூப்பி வணங்கி வேண்டுகிறேன்.என்னையும் நினைவு வைத்து ஈந்த விருதுக்கும் அன்புக்கும் இணை ஏதும் உண்டா. மிக்க நன்றி ரூபன்! நோய் நொடிகள் இன்றி வாழ்க பல்லாண்டு ...!


வித்தியாசமாக இரு நண்பர்கள் இணைந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் அசத்திக்கொண்டு நல்லவை கெட்டவைகளை ஆராய்ந்து நற்கருத்துகளை புகட்டும் குறும் படங்களும் பதிவுகளும் இட்டு பல திறமைகளை கொண்டவர்களான பெருமைக்குரிய சகோதரர் ஆங்கில ஆசிரியர்
Thulasidharan V Thillaiakath  அவர்களும், அவர் தோழி கீதாவும் இவர்கள் மூலம் இவ் விருதினைப் பெறுவதிலும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும்  அடைகிறேன். இத்தனை  பேர்களுக்கும் மத்தியில் என்னுடன் பகிர்ந்து என்னை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்  ! வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் பல ! வாழ்க பல்லாண்டு ....!



இப்பொழுது என்னைப் பற்றி சொல்ல வேண்டும் இல்லையா.ம்..ம்..ம்..
என்னைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.


ஈழம் என் தாய் நாடு
இருப்பதோ அயல் நாடு
யாழில் தவழ்ந்து ஊழில் தவித்து
நாளும் நற்கல்வி கற்றுவர
சூழும் தொல்லைகள் சகியாமல் பிராண பயம்
துரத்த ஒரேபெண் பிள்ளை
யாதலால் போனவர்கள் வீடு வந்து
சேர்வார்களோ என அனுதினமும்
ஏங்கவைக்கும் நிலையில் உரிய வயதில்
உத்தமமான வரன் அமைய 
ஊரையும் உறவையும்  பிரிந்து
என்தலைவன் தாலி ஏற்று தப்பினால்
போதும் என்று மத்தியகிழக்கு நாடுகலில்
ஒன்றான பாரினில் 10 வருடங்கள் வாழ்ந்து
களிப்புடன் களிந்தன நாட்கள் அங்கு.

மூன்று வகை முத்துகள் நான்
பெற்றேடுத்தேனே கணக்கில்லாத
சொத்துகள் நான் கொடுத்து வைத்தேனே!
என்று மட்டற்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தேன். (சொத்துகள் என்று பிள்ளைகளை தான் சொல்கிறேன் ) இரண்டு மகளும் ஒரு மகனும்.

 
பின்னர் தாய்நாடு திரும்ப முடியாது ஆகையால் நிரந்தரமாக ஒரு வதிவிடம் தேட வேண்டும் அல்லவா அதனால் அங்கிருந்து கனடாவுக்கு  ஸ்கில் பேசிஸ்சை அடிப்படையாக கொண்டு  அப்ளை பண்ண கிடைத்தவுடன் கனடா வந்து வாழ்கின்றோம். இப்பொழுது இரண்டு வருடங்களாகத் தான் ஆண்டவன் அருளால்  கவிதை எழுதும் முயற்சி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியும் தங்கள் அனைவரது நட்பும் கிடைத்துள்ளது என் பாக்கியமே. முற்பிறப்பின் பயனே. விருதினை வழங்கி ஊக்கத்தையும் பொறுப்பையும் கூட்டியிருக்கிறீர்கள். தங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்.

அனைத்து வலை யுறவுகளுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இது வரை ஊக்கம் தந்து  வளர்த்து விட்ட பெருமை தங்கள் அனைவரையுமே சாரும். மேலும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து நல்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடடா இப்பொழுது நான் யாருக்கு பகிர்வது எல்லோரையும் எனக்குப் பிடிக்குமே அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் மனம் ஆசைப்படுகிறது ஏற்கனவே எல்லோரும் பகிர்ந்து இருப்பார்களே  பிந்தி விட்டதால்...........சரி பார்க்கலாம்.





என் விருப்பப் பதிவர்கள் இதோ:-


இளமதி
மாதுளை பிளந்தவுடன் வரும்  முத்துக்கள் போல வாய்திறந்தால் வரும் வெண்பாக்கள். வெண்பாக்களோடு மட்டும்  தான் விளையாடுவார் இந்த வெண்ணிலா சொற்சுவையும்  பொருட்சுவையும் கொஞ்சி விளையாடும் தன்னடக்கம் மிகுந்தவர் கை வண்ணத்திலும்  நிகரில்லாதவர் கவிஞர் பட்டம் பெற்றும் கனிவுடன் திகழ்பவர். ஏற்கனவே விருது  பெற்றிருந்தாலும்,  இத் தருணத்தில் அவருக்கும் நிச்சயம் வழங்க வேண்டும் என்பது என் ஆசை. ஆகையால் இளைய நிலாவுக்கும் இதை பகிர்வதில் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்.
ஆங்கில ரீச்சர் தமிழ் வராதுன்னுவாங்க அப்புறம் அசத்துவாங்க இப்ப கணக்கு வேற தெரியாதின்னு கணக்கு விடுறாங்க ஹா ஹா எனக்குத் தெரியாதா  என்ன
என் அம்முகுட்டி எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்று  குறளும் இல்லாமல் வெண்பாவும் இல்லாமல் புதிதா வித்தியாசமா புதுக்கவிதையில் திருக்குறள் மாதிரி குறும்பாவில் அத்தனை கச்சிதமாக புதிய புதிய   விடயங்களை சொல்லி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறாங்களே, அப்போ குடுக்கணுமா இல்லையா குடுத்திடுவோம். அம்மு எடுதுக்கோங்க அம்மு. உங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி யடைகிறேன்! 


சீராளன்
பாக்களை எல்லாம் பூக்களாய் சொரிவார் சந்தம் அவருக்கு சொந்தம் போலும்
சிந்துவையே பந்தாடுவார்.  என்னுயிரே காதல் என்று கரைந்து பாடுவார் எம்மையும் கரைத்து. சீராளன் என்ற பெயருக்கு ஏற்ற சீராளர். தமிழ் மொழியும் ஐயா பாரதிதாசன் அவர்களும் தாலாட்டி வளர்த்த பிள்ளை அல்லவா  தளைத் தோங்க வேண்டாமா அத்துடன்  கவிஞர் பட்டமும் பெற்றவர் ஆயிற்றே அந்தப் பிள்ளைக்கும் கொடுத்திடலாமா? வேண்டாம் என்றா சொல்லப் போகிறார். இதோ பெற்றுக் கொள்ளுங்கள் சீராளன். இவ் விருதுக்கு தகுதியானவர் நீங்கள் தான் ஐயனே ! தங்களுக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சியே !


சாமானியனின் கிறுக்கல்கள் !
இவர் சும்மா கிறுக்கல்கள் என்று தாங்க சொல்லுவார் ஆனாலும் அவர் ஒன்றும் சாமானியன் இல்லைங்க. எத்தனை விடயங்களை மெச்சும் படியாக வசீகரமாக சொல்லுவார் தெரியுமா. அத்தனை அழகா ரௌத்திரம் பற்றி கூட சொல்லியிருக்கிறார். அதை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும் .ம்..ம்..ம்..

மீண்டும் மீண்டும் படிக்க வசீகரிக்கும் உங்கள் நடை!
ஒரு எழுத்தாளனின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்.? அனுபவங்களை அனுபவித்துக் கொடுப்பதைப் படிக்கும் அனுபவம்....அருமை! என்று நம்ம சகோதரர் விஜுவே சொல்லியிருகிறாரே  அப்போ இவருக்கு கொடுக்கணுமா இல்லையா அப்போ கொடுத்திடுவோம். இதோ எடுத்துக் கொள்ளுங்கள் சகோ.


ஊமைக்கனவுகள்
சும்மா ஊமைக்கனவுகள் என்று தான் சொல்வார் அப்புறம் பேசத் துவங்கினால் ஒரு தம்பி கிட்ட நிற்கமுடியாது. நம்புவீன்களோ இல்லையோ சுவாசிப்பது சிரிப்பது எல்லாம் கூட இலக்கண இலக்கியத்தில மட்டும் தாங்க . அப்போ பேசினால் எப்படி இருக்கும் சொல்லுங்க.  அத்தனை பேரையும்  பிரமிக்கவைக்கும் படியாய் இருக்கும் அத்தனை கவிதைகளும்.  மந்திரத்தால கட்டிப் போடுவது தான் இவரோட வேலை. நம்ப முடியலையா நிஜமா தாங்க  கட்டிப் போட்டிடுவாருங்க அனைவரையும் அப்படிப் பட்டவருக்கு நிச்சயம் கொடுக்கனுமா இல்லையா கொடுத்திடுவோம். இதோ எடுத்துக்  கொள்ளுங்கள் சகோ. தங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன் சகோ.

இன்னும் பலருக்கு கொடுக்கவே விரும்புகிறேன் ஆனால் இன்று தான் வீடு வந்து சேர்ந்தமையாலும்  நேரம் போதாமையாலும் நிபந்தனைக்கு உட்பட்டும்  ஐவருடன் முடிக்கிறேன்.ஏனையோர் அனைவரும் ஏற்கனவே விருது பெற்றுவிட்டீர்கள்  என்ற திருப்தியுடன்  மகிழ்வோடு முடிக்கிறேன்.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!
 


39 comments:

  1. விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ! இதிலிருந்து என்னை மன்னித்து விட்டீர்கள் என்று தெரிகிறது அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு சகோ. கூடிய விரைவில் வருகிறேன் தளத்திற்கு.

      Delete
  2. மனம்கனிந்த வாழ்த்துக்கள் பல சகோதரி...
    இன்னும் ஏகமாய் விருதுகள் உங்களை வந்தடைய
    என் விருப்பங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! தங்கள் வரவு நல்வரவாகுக பல தடவை எண்ணி மனம் வருந்தினேன் என்ன ஆயிற்று ஏன் இப்போதெல்லாம் வலைத்தளப் பக்கம் காணவில்லை என்று கடைசியாக எழுதிய அந்த கவிதை நினைத்து பல தடவை ஆச்சரியப் பட்டிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் வருகை கண்டு மனம் மகிழ்கிறது. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மனம் நெகிழ்கிறேன். மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் ...! தங்கள் விருதுக்கும் வாழ்த்தை வந்து தெரிவிக்கிறேன்.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். விருது பெற்றமைக்கு மகிழ்கிறேன் வாழ்த்தை தளத்திற்கு வந்து தெரிவிக்கிறேன்.

      Delete
  4. மேலும் பல சிறப்புகளை எய்துதற்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். ஆண்டவன் ஆசிகள் அனைத்தும் பெற்றுய்ய வாழ்த்துகிறேன் ! தங்கள் விருதை பகிர்ந்தமைக்கும்,வருகைக்கும் வாழ்த்திற்கும்.
      மிக்க நன்றி சகோ ...!

      Delete
  5. வணக்கம் அம்மா
    மூன்று முத்துக்கள், மூன்று விருதுகள் சும்மா கலக்கிறீங்க அம்மா. பெற்ற விருதினை நண்பர்களுக்கும் பகிர்ந்து சிறப்பு சேர்த்தமைக்கும் நன்றி. தங்களைப் பற்றிய தன்விவரமும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து அசத்துங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாப்பா பாண்டியா என்ன புது மாப்பிள்ளை களத்தில குதிச்சாச்சா திரும்பவும். ம்..ம்..ம்..பார்த்துப்பா பொண்ணுக்கு கோபம் வராம இருந்தா சரி தான். இந்தத் திருவிழா வில கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது என்று சிறிது வருத்தம் தான். ஆனாலும் உங்களை எல்லாம் கண்டவுடன் கவலை பறந்து விட்டது. மிக்க நன்றிப்பா வருகைக்கும் வாழ்த்திற்கும். பல பதிவுகளும் இட்டிருக்கிறீர்கள் போல் வருகிறேன் சீக்கிரம். ok வா.

      Delete
  6. செல்லம் உங்க அன்பு என்னை தழுதழுக்க வைக்கிறது:)
    நான் ரூல்ஸ் எல்லாம் பார்த்து பல பிரெண்ட்ஸ் க்கு பகிரவில்லை :( ஆனா நீங்க உங்க அன்பால் என்னை திக்குமுக்காட செய்கிறீர்கள்:) நன்றி!! நன்றி!! அப்புறம் உங்க ட்ரிப் நல்ல படியா முடிந்ததா செல்லம்:)) நலம் தானே!!

    ReplyDelete
    Replies
    1. முக நக நட்பது நட்பல்ல நெஞ்சத்தகனக நட்பதே நட்பு அல்லவா அம்மு அதான் இதுக்கு போய் என்னம்மு நீங்க. அன்பை விட வேறு என்ன பெரிய விடயம் இருக்கிறது அது தரும் மகிழ்ச்சியே தனி தான். அதுவும் எதிர்பார்க்காமலே கொடுக்கும் அன்பில் இன்னும் அதிக மகிழ்ச்சிதான் அம்மு. ட்ரிப் அமோகமாக இருந்ததும்மா. நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...! சீக்கிரம் தளத்திற்கு வருகிறேன்.

      Delete
    2. ///செல்லம் உங்க அன்பு என்னை தழுதழுக்க வைக்கிறது:)///

      யாரு அங்கே கலைஞர் டயலாக்கை எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி போடுறது

      Delete
  7. உங்களிடம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிகளை தெரிந்துகொண்டேன், இனியா!

    ஆமா, கரும்பு எங்க கெடச்சது?! ஜஸ்ட் கிடிங், இனியா! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் !\\\\கரும்பு எங்க கெடச்சது?! ////கரும்பு காட்டுக்குள்ள தான். வேறு எங்க வந்த உடனேயேவா .... ? நன்றி வருண் வருகைக்கும் வாழ்த்திற்கும். சீக்கிரம் தளத்திற்கு வருகிறேன்.

      Delete
  8. சகோதரி,
    தங்களைப் போன்றோரின் அன்பினுக்கு நெகிழ்கிறேன்.
    தாங்களுட்படத் தங்களால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் அனைவருமே நான் மதிக்கக் கூடியவர்கள் தான்.
    ஒருவேளை இவ்விருதை நான் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் இவர்களோடு பகிர்ந்திருப்பேன்.
    //அப்போ பேசினால் எப்படி இருக்கும் சொல்லுங்க// பேசுறதா?? உலகத்திலேயே பயமான விஷயம்னா அதுதான்!!
    மேடைப் பேச்சைச் சொல்றேன் சகோ!

    தங்களின் அன்பினுக்கு மீண்டும் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா என்ன சகோ !என்னமா பாடுகிறீர்கள் பிறகு ஏன் பேசுவதற்கு பயப்பிட வேண்டும் அதுவும் ஆசிரியர் ஆயிற்றே.... உங்களுக்கும் பயமா ஆச்சரியமாக இருக்கிறதே. நான் என்றால் சொல்லுங்கள் அம்மாடியோ அதற்கு ஒரு தில்லு வேணுமில்ல. ம்..ம்..ம்..மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  9. வணக்கம் தோழி!

    திருமணநாள் தன்னைச் சிறப்பித்தோ வந்தீர்!
    பெருமகிழ்வாய் வாழ்த்துகிறேன்! பெற்றிடுவீர்! - தேறும்
    விருதையும் நீரடைந்தீர்! மிக்க உவப்பே!
    பெருகட்டும் பற்பல பேறு!

    இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்னும் பல விருதுகள் பெற்றிடுங்கள்!
    இனிதே யாவும் அமைய வாழ்த்துகிறேன் தோழி!

    என்னை உயர்வாக்கி இங்கீந்தாய் நல்விருது!
    பொன்னின் நிகரான பூந்தமிழே! - உன்றனிவ்
    அன்பில் உறைந்தே அமர்ந்தேன்! இனியாவே!
    நன்றிபல சொன்னேன் நயந்து!

    உங்கள் அன்பில் நெகிழ்ந்திட்டேன் தோழி நான்!..
    என்னை இத்தனை உயர்வாக
    உங்கள் மனதிற் கொண்டமைக்கு
    என்ன சொல்வேன்?.. செய்வேன்?...
    கண்ணீரைப் பூக்களாகச் சொரிகின்றேன்!.
    இந்த அன்பு என்றும் நிலைக்க வேண்டுகிறேன்!
    அதுவே பெரும் வரம்!
    உங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி தோழி!
    என்னுடன் விருதினைப் பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    உடல் நலக் குறைபாட்டால் வைத்தியரிடம் சென்று
    மீண்டு வந்து இத்தனை தாமதமாகக் கருத்திட வேண்டியதாயிற்று!
    பொறுத்தருள்க!..

    ReplyDelete
    Replies
    1. உடல் நலக் குறைவா தோழி உண்மையில் மனம் வருந்துகிறது. முதலில் உடலை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றவை பின். தேறிய பிறகு வரலாமம்மா. துன்பமும் நோயும் தீருமே அருந்தமிழை உண்ணவும், அன்பென்ற மழையில் நனையவும்.
      மிக்க நன்றிம்மா வருத்தத்துடனும் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நெகிழ்கிறேன். வாழ்க பல்லாண்டு நோய் நொடியின்றி ....!

      Delete
  10. சகோதரி,

    நான் ரசித்து மதிக்கும் வலைஞர்களை நீங்கள் பட்டியலிட்ட சமயத்தில் இந்த சாமானியனும் உங்கள் நினைவில் வந்ததே பெரும்பேறு.

    நீங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் பற்றிய உங்களின் கருத்துகள் அனைத்தும் மிக சரியானவையே, என்னை தவிர (!)

    நன்றிகள் சகோதரி, ஒன்றுபட்டு தொடருவோம்.
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. ஆகா என்னொரு தன்னடக்கம் தங்களை தவிரவா ஹா ஹா ...
      மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  11. விருது பெற்ற தங்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி எப்படி இருக்கிறீர்கள். நலம் தானே. தளத்திற்கு வந்து வாழ்த்துகிறேன் தோழிபெற்ற விருதுக்கு. மிக்க நன்றிதோழி வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete

  12. ///அனைவரும் என்னை மன்னிப்பீர்கள் அல்லவா ?///

    மாட்டோம் மாட்டோம் உங்க பிள்ளைகள் உங்களுக்கு டிக்கெட் எடுத்தது போல நீங்களும் எங்களுக்கு எடுத்து தந்து எங்களையும் டூருக்கு அழைத்து போயிருக்கனும் அப்படி செய்யாததால் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ என்ன இப்படி சொல்லிட்டீங்க இந்த ஒரு தடவை மன்னிதுக் கொள்ளுங்கள். அடுத்த முறைபோகும் போது டிக்கெட் எடுத்தாப் போச்சு. நீங்கள் அதற்கிடையில் போனால் நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் நான் போனால் நான் எடுக்கிறேன் சரிதானே. அதற்காக சொல்லாமல் போகக் கூடாது ok வா. ஹா ஹா இது தான் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது என்று சொல்வது. இது எப்புடி.

      Delete
  13. ///கரும்பு தின்னக் கூலியா ///

    எவ்வளவு நாள்தான் இப்படி பழைய பழமொழியை எடுத்தாள்வது..

    உங்களுக்காக புதிய பழமொழி அறிமுகப்படுத்துகிறேன்

    சரக்கு அடிக்க கூலியா

    ReplyDelete
    Replies
    1. கல்லெறி வாங்கவா ஐடியா கொடுகிக்றீங்க சகோ.

      Delete
  14. வணக்கம் !

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே மென்மேலும் இது போன்ற விருதுகளைப் பெற்று மகிழ்வீர் !இனியாவின் அன்புக் கரத்தால் பெற்றுக்கொண்ட விருதுக்கு வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே !

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தோழி நலம் தானே! விரைவில் தளத்திற்கு வந்தே வாழ்த்துகிறேன்மா தங்கள் அன்பான வாழ்த்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றி அருமை தோழியே !

      அனைவருக்கும் கொடுக்கவே எனக்கு விருப்பம் ஆனால் நெடு நாட்கள் ஆகி விட்டனவே அது தான் வந்தவுடனேயே போட்டேன் பல வேலைகளுக்கு மத்தியில் அவசரமாக இட்டதால் சுருக்க வேண்டியதாயிற்று. இல்லையேல் இன்றும் போட்டிருக்க முடியாதே.

      Delete
  15. முக்கனியாய் மூன்று விருது
    முக்கோடியாம் பிள்ளைச் செல்வம்
    முகம் பிரகாசமாய் இனியாவாம்
    முத்தாய் வருமாம் அன்பு வார்த்தைகள்...!!!

    அன்பு சகோதரி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பல விருது மழைகள் பொழியட்டும். தாங்கள் பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. விடுமுறையின் பின் ரொம்ப மகிழ்வாக தெரிகிறீர்கள் இல்லையா. நன்றாக மகிழ்வாக களித்திருப்பீர்கள் போல. எப்படி இருவரும் சேம் டைம் ல் போய் இருக்கிறோம் இல்ல ம் ..ம்.. நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  16. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
    தொடருங்கள்

    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.
      விரைவில் வருகிறேன் தளத்திற்கு.

      Delete
  17. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

    ReplyDelete
  18. சகோதரி விருது கிடைத்தமைக்கும், அதைப் பகிர்ந்தமைக்கும், பகிரப்பட்டவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோ! விரைவில் வருகிறேன் தளத்திற்கு குறை நினைக்க வேண்டாம்.

      Delete
  19. வணக்கம்
    அம்மா.

    விருது பெற்றமைக்கும் தங்களுக்கு கிடைத்த விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.. மேலும் பல வெற்றிகள் வந்தடைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்! விருதை பகிர்ந்தமைக்கும் வந்து வாழ்த்தியமைக்கும். மேலும் பல விருதுகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

      Delete
  20. உங்களைப்பற்றி மிக அழகா கவி வடித்து சொல்லியிருக்கீங்க .
    வாழ்த்துக்கள் பலமுறை :) விருது பெற்றதற்கும் மற்றும் திருமண நாள் இரண்டுக்கும் சேர்த்து .

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.