Friday, May 30, 2014

பிரசவம் வேதனை பிள்ளைகள் சாதனை




பிரசவம் வேதனை
பிள்ளைகள் சாதனை
வாழ்வே சோதனை 
விலகும் தீவினை

இரவும் பகலும்
கொண்டது நாளே
இன்பமும் துன்பமும்
இணை சேராதே

விழுந்தால் தானே
எழுந்திடத் தோன்றும்
வலிகள் தானே
வளம்பெற உதவும் 

வெற்றிக்கு படியே 
தோல்விகள் தானே
வென்றிடும் போது 
வேதனை பலியே

மின்னாது வைரம்
பட்டை தீட்டாது
ஜொலிக்காது தங்கம் 
தீயினில் வேகாது

ஏற்றம் இறக்கம்
உள்ளது வாழ்வு
எடுத்து வைத்து
பேசுதல் தவிரு

குற்றம் அற்றவர்
யாரும் இல்லை
குறைகள் கூற -உனக்
அருகதை இல்லை

வட்டம் இட்டால்
வாழ்வு தொல்லை
வாட்டம் கொண்டால்
வாழ்வின் எல்லை

விட்டுக் கொடுத்தால்
வேதனை இல்லை
பட்டுத் தெளிந்தால்
பாடுகள் இல்லை





30 comments:

  1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
    தங்களின் இந்த கவிக்கு பின்னால் இருக்கும் வேதனைகள் மாற இறைவனிடம் என் வேண்டுதல் தொடரும். அழகான வரிகள். சோகத்தில் இருப்பவரைத் தோள் தட்டி எழுப்பும் வரிகள். ஆம் சகோதரி குறைகள் இல்லாத மனிதனென்று இந்த புவியில் யாருமுண்டா? அப்படி இருக்கையில் அடுத்தவர்கள் குறை சொல்லி மேலும் மனதில் எதற்கு அழுக்கைச் சேர்க்க வேண்டும்? தங்களைப் போல் எல்லாரும் எண்ணி விட்டால் உலகம் அன்பால் தவழும். அமைதி பொங்கும். கருத்தான பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாண்டியரே !
      இன்பமும் துன்பமும் இல்லாத வாழ்வு இல்லை தான் இருந்தாலும் ஆண்டவன் கிருபையால் சோகம் என்று சொல்லும்படியாக இல்லை பொதுவாகத் தான் எழுதுகிறேன்.
      வறுமையில் பிச்சை எடுப்பவரை பற்றி எழுதுவதற்கு பிச்சை எடுத்தால் தான் எழுத முடியும் என்றில்லை அல்லவா எழுதக் கூடிய வல்லமை படைத்தவர்க்கு நிச்சயம் எதோ ஒரு புரிந்துணர்வு இருக்கும் என்று எண்ணுகிறேன். மேலும் சமூகத்தில் நடப்பவற்றையும் உன்னிப்பாக கவனிப்பார்கள் தானே. சிறுவயது முதலே திரைப்படம் பார்த்தாலும் கதை புஸ்தகம் படித்தாலும்.
      சோகக் காட்சிகளை கண்டாலும் விம்மி அழுவேன். வில்லனை கண்டால் கோபமும் எரிச்சலும் கொள்வேன். அதன் விளைவு தானோ இவை நானறியேன்.. பஞ்சாலி துகிலுரிய பார்க்க சகிக்காமல் கவிதை எழுத துவங்க சொல்லிக் கொண்டு போகும் போது தானாக வந்து விழுந்தவை தான் இவை, இதை பிரித்து தனியாக போட்டு விட்டேன். அவ்வளவு தான். மிக்க நன்றி !பாண்டியா வருகைக்கும் கருத்துக்கும் . வாழ்த்துக்கள் ...!

      Delete
  2. வணக்கம் சகோதரி
    தங்களிடம் இடையில் ஒரு உற்சாகம் குறைவதாக உணர்ந்து எனக்கு நீங்கள் அளித்த கருத்துரைக்கும் மறுமொழியில் கேட்டிருந்தேன். அது என்னவென்று பார்க்க
    http://pandianpandi.blogspot.com/2014/05/blog-post_2804.html#comment-form
    ------------

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் பாண்டியா உற்சாகம் குறைவது போல் தான் எனக்கே தோன்றுகிறது. இருந்தாலும் வேலைப்பளுவும் கொஞ்சம் அதிகமாகி விட்டது. சில கடமைகள் என்னை சுற்றி ....இருந்தாலும் முயற்சிக்கிறேன்.கவிதை எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன.
      சகோதரர் மதுவும் தொடர்ந்து எழுதும்படி ஊக்கப் படுத்தியமையாலேயே இதை அவசரமாக வெளியிட்டேன்.ஹா ஹா.... அவருக்கும் என் அன்பான நன்றியையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். தங்களை போன்ற அன்பு நெஞ்சங்களால் தான் என் கவிதை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது பாண்டியா. மிக்க நன்றி அப்பனே வாழ்த்துக்கள் ....!

      Delete
  3. --//வலிகள் தானே
    வளம்பெற உதவும் ////
    நன்று சொன்னீர்கள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  4. தத்துவ முத்துக்களை கொண்டு பின்னப்பட்ட கவிதை அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  5. வணக்கம்
    அம்மா

    சீர் கொண்டு பாபுனைந்தீர்கள்
    என் நெஞ்சமது சிலர்த்ததுவே
    சொல்லாலே வரிக்குவரி
    வேதனையை நான் கண்டேன்
    துயரமது போக்கிடவே
    ஆண்டவனை புகழ்ந்திடுவோம்

    அழகிய கவிதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  6. "விட்டுக் கொடுத்தால்
    வேதனை இல்லை
    பட்டுத் தெளிந்தால்
    பாடுகள் இல்லை" என்றவாறு
    குறைந்த சொல்களில்
    நிறைந்த பொருள் தரும்
    சிறந்த வழிகாட்டல் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  7. வணக்கம் சகோதரி,

    தங்கள் மானதுக்கள் ஏதாவது வேதனைகள் இருந்தால், அந்த இறைவன் அவற்றை கிள்ளி எரிந்து விடுவான். கவலைப்படாதீர்கள்.

    அப்படி எதுவும் இல்லை என்றால், மிகவும் மகிழ்ச்சி.

    வாழ்க்கையின் தத்துவத்தை மிகவும் எளிதாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...! இவை எல்லாம் சொல்லிக்கொண்டு போக தானாக வந்து விழுபவை தான் சகோ. மேலே இன்னும் விபரமாக எழுதியுள்ளேன் பாருங்கள்.

      Delete
  8. ஒவ்வொன்றை பற்றியும் ஒரு பதிவு எழுதலாம்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  9. இனியா செல்லம் நலமா?
    கவிதையில் விரிந்த பெண்களின் வலி
    கண்களை வேர்க்க ச்செய்கிறது !!
    அருமை தோழி!!
    தத்துவம் மழையாய் பொழிந்திருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. hey அம்முக்குட்டி வந்தாச்சா நலம் தானா? தங்கள் அன்பில் நான் என்றும் நலமே! நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். தங்களை இப்போது நேரில் கண்டது போலவே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன்.
      அடடா என் தோழிக்கு கண்ணே வியர்த்து விட்டதா என் கவிதையால்,எப்படி. இந்தக் கிண்டல் தானே வேணாங்கிறது. ஆமா எப்படி இப்படி எல்லாம் ஐடியா, போன இடத்தில் இருந்து நிறைய விடயம் கை வசம் கொண்டு வந்துள்ளீர்கள் என்று புரிகிறது. தயார் நிலையிலேயே உள்ளேன், தாரளமாக கொட்டுங்கள் ஏந்த நான் ரெடி.
      மிக்க நன்றி! தோழி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள்.....!

      Delete
  10. வணக்கம் தொடரும் வீட்டு புத்தாக்க வேலைகளால் உங்களுடன் பேச இயலவில்லை.இனி தொடருவேன்.சோதனைகளை சாதனைகளாக்க...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வணக்கம்! நலம் தானே தோழி ! தங்கள் வருகையில் மிக மகிழ்ந்தேன், புத்துணர்வு பெற்றேன் .மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.வாழ்த்துக்கள் ...!

      Delete
  11. நலமா சகோதரி,
    கவிதை அருமை சகோதரி,
    தொடர்க...
    இடைவெளி உங்கள் கவித்திறனை மேம்படுத்தியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நலம் தான் சகோதரா ! தங்கள் வருகையும். தரும் ஊக்கமும் ஆசியும் தான் என் வளர்சிக்கு உரம். தங்கள் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ....!

      Delete
  12. கருவோடு நம்பிக்கை காட்டிநீ பெற்றால்
    விருப்போடு வாழும் விரைந்து !


    தாயாகி நிற்போரின் தவிப்புக்கள்
    செய்வாழும் போதுதான் மறக்கப்படுகின்றன
    அருமை சகோ வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சீராளா! இருந்தாலும் சேய் மட்டும் என்றில்லை இல்லை சீராளா எமை சார்ந்த அனைவரும் வாழவேண்டும் எனும் தவிப்பு இருக்கத்தானே செய்கிறது.
      வருகையில் உற்சாகம் பெறும் என் உள்ளம். தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! வாழ்க நீடூழி வளங்கள் பல பெற்று....!
      என்ன கவிதையை காணவில்லை நீண்ட இடைவெளி வேண்டாமே. போடுங்கள் பதிவை ஆவலோடு காத்திருக்கிறேன்.

      Delete
  13. Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. நல்ல கவிதை!
    அனுபவப் பாடுபொருள்.!
    எழுதுக இன்னும் இன்னும் இன்னும்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! நிச்சயமாக முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!
      தொடர வேண்டுகிறேன்! வாழ்க வளமுடன்....!

      Delete
  15. அனுபவக்கவிதை.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ''..விட்டுக் கொடுத்தால்
    வேதனை இல்லை
    பட்டுத் தெளிந்தால்
    பாடுகள் இல்லை
    nanru sis
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.